ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷாவின் ‘வியத்மக’ த்தின் உறுப்பினரான வைஸ் அட்மிரல் (Rtd) மோகன் விஜேவிக்ரமா, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் இலங்கை தூதர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இவர் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிட்ட டுவிட்டர் பதிவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. முன்னாள் கிழக்கு மாகாண முதல்வரான வைஸ் அட்மிரல் (Rtd) மோகன் விஜேவிக்ரமா இந்திய அரசியல்வாதியும், தீவிர இந்து வலது சாரியுமான சுப்பிரமணிய சுவாமி
“முஸ்லீம் படையெடுப்பாளர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினரின் கைகளில் நாங்கள் அனுபவித்த 700 ஆண்டுகால மிருகத்தனத்தை ஒதுக்கி வைத்து விட்டு பாரத மாதாவின் 1/3 பகுதியை பாக்கிஸ்தானுக்கு பிரித்து வழங்கிய செயலானது, தாரிக் ஃபதா, தஸ்லீமா போன்ற மனட்சாட்சியுள்ள கிளர்ச்சிக்காரர்களைத் தவிர வேறு எந்தவொரு சட்டவிரோத புலம்பெயர்ந்த முஸ்லிம்களையும் நாங்கள் நிராகரிப்பதற்குரிய உரிமையை எங்களுக்கு வழங்குகிறது.” என்று வெளியிட்ட டுவிட்டர் பதிவுக்கு ஆதரவாக,
மோகன் விஜேவிக்ரம தனது டுவிட்டரில்,
“பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள், முஸ்லிம் நாடுகளாக மாறிய நிலையைப்போல் தெற்காசியவிலுள்ள மீதமுள்ள நாடுகளான இலங்கை, நேபாளம், மற்றும் பூட்டான் போன்ற நாடுகள் முஸ்லிம் நாடுகளாக மாறுவதிலிருந்து இந்து இந்தியா பாதுகாக்கும்.”
என்று எழுதியிருந்த பதிவே இவ்வாறு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
Why isnt Imran Khan and his team not aware of this?