முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத் திருத்தம் (MMDA Reform) தொடர்பான வாதம் மீண்டும் தலை தூக்கியுள்ளது. அத்துரலிய ரதன தேரரோ சட்டத் திருத்தம் என்ன, முஸ்லிம்களுக்கென தனியார் சட்டமே தேவையில்லை என்று பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை சமர்ப்பித்திருக்கிறார்.
இவ்வாறு முஸ்லிம் தனியார் சட்டத்தை அடிப்படையாக வைத்து முஸ்லிம்களை நெருக்கடிக்குள்ளாக்கி, இஸ்லாத்தை கொச்சைப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் இலங்கையில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இந்நிலையில் முஸ்லிம்கள் தமது மார்க்கத்தையும், அடையாளத்தையும் பாதுகாப்பதற்காக எடுத்து வைக்கும் அடிகள் அனைத்தும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
இன்றைய யதார்த்தம் எது? நிகழ்ச்சி MMDA விவகாரத்தின் உண்மைநிலை என்ன? அதனை நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றி ஆராய்கிறது.