அமெரிக்காவின் இஸ்லாமிய செமினரியின் வேந்தராக இருக்கும் மற்றொரு இஸ்லாமிய அறிஞரான யாசிர் காதி ஜனவரி 9 ஆம் தேதி ஷாகிர் நாயக் தொடர்பாக பேஸ்புக்கில் ஒரு பதிவைப் பதிவேற்றினார்.
அதிலே “… காஷ்மீருக்கு எதிரான மோடியின் பிரச்சாரத்தை ஆதரித்தால் (இந்திய) அரசாங்கம் (அவருக்கு எதிரான) அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிட்டு முடக்கப்பட்ட அவரது சொத்துக்களை மீண்டும் வழங்கி அவரை இந்தியாவுக்குள் திரும்ப அனுமதிக்கும் என்று தெரிவித்து மோடி டாக்டர் ஜாகிருக்கு ஒரு தூதரை அனுப்பினார். இச்செயல் அவருக்கு எதிராக உண்மையான வழக்கு எதுவும் இல்லை என்பதையும் இது அரசியல் நோக்கம் கொண்டவை என்பதையும் காட்டுகிறது. “ என்று குறிப்பிட்டிருந்தார்.
யாசிர் காதி பேஸ்புக்கில் வெளியிட்ட இந்த இடுகைக்கு பதிலளிக்கும் வகையில் நாயக் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
அதிலே நாயக், குடியுரிமை (திருத்த) சட்டம் (என்ஆர்சி) பற்றி குறிப்பிட்டு “பல முஸ்லிம் தலைவர்கள்” தேசிய குடிமக்களின் பதிவேட்டை ஆதரித்ததாக விமர்சித்தார். இந்த முஸ்லீம் தலைவர்கள் பாஜக அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்று “மிரட்டப்படிருக்கலாம்”,அல்லது கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம்” என்று குற்றம் சாட்டினார்.
“அநியாயச் செயலை” ஆதரிப்பது “இஸ்லாமியமற்றது” என்றும் “உலகில் பாதுகாப்பிற்காக சொர்க்கத்தில் தங்களின் இடத்தை பண்டமாற்றம் செய்ய வேண்டாம்” என்றும் இந்திய முஸ்லிம்களுக்கான செய்தியுடன் நாயக் அந்த வீடியோவை முடித்தார்.
வீடியோவை பார்வையிட…⇓⇓⇓