தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க முதன்மை துணை உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் ஜனவரி 13-22 வரை இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வார்.
ஜனவரி 13-14 முதல், அவர் இலங்கையின் கொழும்பில் இருப்பார். மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்களைச் சந்தித்து. இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இருக்கும் அவர், சுயாதீன மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எல்லோராலும் பகிரப்படும் நலன்கள் உட்பட ஜனநாயகம், சுபீட்சம், நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்தும் கலந்துரையாடுவார்.
மேலும், ஜனவரி 15-18 முதல் ரைசினா உரையாடலில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் புது தில்லிக்குச் செல்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2019 இன் அமெரிக்க-இந்தியா 2 + 2 மந்திரிகளுக்கிடையிலான உரையாடலின் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க-இந்தியா மூலோபாய உலகளாவிய கூட்டுறவை முன்னேற்றுவதற்காக மூத்த அரசாங்க அதிகாரிகளையும் அவர் சந்திப்பார். மேலும் வணிக மற்றும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்களுடன் பரஸ்பர ஆர்வமுள்ள தலைப்புகளைப் பற்றி விவாதிப்பார்.
இறுதியாக, முதன்மை துணை உதவி செயலாளர் வெல்ஸ் ஜனவரி 19-22 வரை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்கு பயணம் மேற்கொள்வார்.
இருதரப்பு மற்றும் பிராந்திய அக்கறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களை அவர் அங்கே சந்திப்பார்.