இந்தியாவின் டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பஸ்ஸில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.
இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட அவர், ஓடும் பஸ்ஸிலிருந்து கீழே தள்ளி விடப்பட்டார். இந்த சம்பவத்தை 6 பேர் செய்தனர்.
இதன் பின்னர் வைத்தியசாலையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டெல்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் அதன்படி ஜனவரி 22 ஆம் திகதி காலை 7 மணிக்கு குற்றவாளிகளை தூக்கிலிடப்பட உள்ளனர்.
குற்றவாளிகளான பவன் குப்தா, முகேஷ், வினய் சர்மா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேர் இவ்வாறு மரண தண்டனையை நிர்பயா வழக்கில் எதிர்கொள்ள உள்ளனர்.