கசேம் சொலைமானியின் படுகொலைக்கு பழிவாங்குவதற்காக 13 வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் அதி உயர் தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலாளர் அலிசம்கானி இதனை தெரிவித்துள்ளார்.
சொலைமானியின் கொலைக்கான பழிவாங்கலில் ஈடுபடும்போது நாங்கள் தனியொரு வழிமுறையை பின்பற்றமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் 13 வழிமுறைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்,அதில் ஒன்றிற்கு அவர்கள் அனுமதியளித்தால் கூட அது அமெரிக்காவிற்கு ஒரு வரலாற்று கொடுங்கனவாக விளங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அதி உயர் தேசிய பாதுகாப்பு பேரவை 13 வழிமுறைகள் குறித்து ஆராய்ந்துள்ளது அதில் பலவீனமான வழிமுறை கூட அமெரிக்காவிற்கு ஒரு வரலாற்று கொடுங்கனவாக விளங்கும் என்பதை அமெரிக்கா அறிந்துகொள்ளவேண்டும் எனஅவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படையினர் எங்கள் பிராந்தியத்திலிருந்து தாமாகவும் நேராகவும் வெளியே மறுத்தால் நாங்கள் அவர்களை செங்குத்தாக கொண்டுசெல்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.