அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முக்கிய அதிகாரி கசேம் சொலைமானியின் இறுதிஊர்வலத்தில் ஏற்பட்ட சனநெரிசல் காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரானிய நகரமான கெர்மானில் தற்போது இறுதி ஊர்வலம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
சுமார் 48 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீதியில் உயிரிழந்த பலர் காணப்படுவதையும் மக்கள் உதவிக்காக அலறுவதையும் காண்பிக்கும் படங்கள் சமூகஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
பெருமளவு பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டதால் சனநெரிசல் ஏற்பட்டது இதன் காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.