1. பின்னணி
1968 ஆம் ஆண்டில் கிஸ்ஸிங்கர், நிக்சன் நிர்வாகத்திற்கு அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில், வளைகுடாவில் இருந்து தனது துருப்புக்களை விலக்க பிரிட்டன் முடிவு செய்த பின்னர், வளைகுடா பகுதியில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப அமெரிக்கா ஒரு வழியைத் தேடத் தொடங்கியது. மூலோபாய மற்றும் பொருளாதார காரணங்களுக்காக வளைகுடா பகுதியைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் திறனை எளிதாக்கும் இந்த பாத்திரத்திற்காக ஈரானைத் தயாரித்து பயன்படுத்துவதே அமெரிக்காவின் முடிவு. இந்த தீர்க்கமான பாத்திரத்திற்கு ஈரானைத் தயாரிப்பதன் ஒரு பகுதியாக ஒரு புரட்சியை உருவாக்கி ஆதரிப்பதும், பாத்திரத்தை நிறைவேற்றுவதற்கான பண்புகள் மற்றும் திறன்களைக் கொண்ட ஒரு புதிய ஆட்சியை நிறுவுவதும் அமெரிக்காவின் திட்டமாக இருந்தது. இவ்வாறாக அமெரிக்காவின் “ஒரு புரட்சியை ஏற்றுமதி செய்” என்ற நிகழ்ச்சி நிரலுடன் ஆயதுல்லாஹ் கோமெய்னின் ஆட்சி நிறுவப்பட்டு வளைகுடா ஒரு அரசியற் கொந்தளிப்பான பகுதியாக மாறியது.
வளைகுடாவில் அமெரிக்காவின் நலனுக்கு மிகப்பெரிய தடையாக ஈராக் இருந்தது. ஈராக் இப்பகுதியில் அதுவரை காலனித்துவ சக்தியாக இருந்த பிரிடிஷ்ஷின் நலன்களை பாதுகாக்கும் பாத்திரத்தை செய்து வந்தது. ஈராக்கை பலவீனப்படுத்த அமெரிக்கா ஈரானைப் பயன்படுத்தியது. பின்னர் ஈரானின் நேரடி உதவியுடன் அமெரிக்கா 1980 முதல் ஈராக்கில் சதாம் ஆட்சியை அகற்றவும், புதிய ஈராக் குடியரசை நிறுவவும் கடுமையாக முயன்று வந்தது. 2003 இல் சதாமின் ஆட்சி வீழ்த்தப்பட்டு ஈராக் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டு அமெரிக்க தூதர் ப்ரெமர் உருவாக்கிய அரசியலமைப்பைக் கொண்டு புதிய அரசு நிறுவப்பட்டதுடன் அந்த இலக்கு எட்டப்பட்டது.
2003 முதல் ஆக்கிரமித்துள்ள அமெரிக்கப் படைகளின் உதவியுடன் ஈராக்கில் ஈரானுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. பின்னர் சிரியாவில் புரட்சி வெடித்ததும், அசாத் சிரியாவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற கடுமையான கோரிக்கை வலுப்பெற்றதும், அசாத்தையும் அவரது ஆட்சியையும் பாதுகாக்க அமெரிக்கா ஈரானை பெரிதும் நம்பியிருந்தது. படுகொலை செய்யப்பட்ட காசிம் சுலைமானி தலைமையிலான ‘குட்ஸ் இராணுவம்’ மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் மூலம் ஈரான் தனது பாத்திரத்தை நேரடியாக நிறைவேற்றியது.
இப்போது ஈராக் மற்றும் சிரியாவில் ஈரான் வகித்த பாத்திரம் முடிந்துவிட்டது. குறைந்தபட்சம் அமெரிக்க கண்ணோட்டத்தில் இந்த பணி நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது.
அண்மை வரை ஈராக்கில் இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டங்கள் ஈராக்கில் ஈரானின் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வெளிப்படையாகக் கோரி வந்தன. இந்த பின்னணியில்தான் ஈராக் மற்றும் சிரியாவில் ஈரானிய ஆதிக்கத்தில் மிகவும் தீர்க்கமான கருவியாக தொழிற்பட்ட ஜெனரல் சுலைமானி கொல்லப்படுகிறார்.
2. ஈராக் மற்றும் சிரியாவில் ஈரானின் பாத்திரத்தை அமெரிக்கா ஏன் முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது?
முதலாவது, ஈரானுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பாத்திரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இரண்டாவது, அமெரிக்கா தற்போது வளைகுடா நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி கத்தார் குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் நிரந்தர இராணுவ தளங்களை நிறுவியுள்ள நிலையில் ஈராக்கிலும் அதன் அதிகாரத்திற்கு முற்றிலும் அடிபணிந்த நிறுவனங்களை கொண்ட ஒரு ஆட்சியை உருவாக்கி வைத்துள்ளது.
மூன்றாவது, மத்திய கிழக்கில் ஒரு பிராந்திய அரசு, அதாவது ஈரான் தனது சொந்த தேசிய எல்லைகளுக்கு வெளியே ஆதிக்கம் செலுத்துவதற்கும், செல்வாக்கு செலுத்துவதற்கும் அமெரிக்கா இடம்தர விரும்பவில்லை.
நான்காவதாக, மத்திய கிழக்கை மறுவடிவமைப்பதற்கும், பலஸ்தீனத்தில் மிகவும் சிக்கலான மோதலைத் தீர்ப்பதற்கும் தான் வைத்திருக்கும் திட்டத்தை அறிவித்துள்ள அமெரிக்கா, அதற்கு ஈரானை ‘யூத அரசு’ போலவே அவர்களின் தேசிய எல்லைகளுக்குள் அடைத்து வைக்க வேண்டும் என நம்புகிறது.
3. ஈரான் என்ன செய்யப் போகிறது?
அடிப்படையில் ஈரான் அதன் சொல்லாட்சியையும், வீராப்புப் பேச்சுக்களையும் முன்பைவிட அதிகம் உயர்த்தும்.
அது குறிப்பிட்ட அமெரிக்க இலக்குகளை நோக்கி மட்டுப்படுத்தப்பட்ட (ஏவுகணைத் தாக்குதல்கள் போன்ற) தாக்குதல்களைத் தொடுக்கலாம். ஆனால் நிச்சயமாக அமெரிக்கா அல்லது ஐரோப்பாவிற்குள் எத்தகைய தாக்குதல்களையும் அது மேற்கொள்ளாது.
பின்னர் ஈரான், ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து தனது பிரசன்னத்தைக் குறைத்து, அங்குள்ள தனது இருப்பை திரும்பப் பெறும்.
ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான புதிய இராஜ தந்திர பேச்சுகள் ஆரம்பிக்கும். இந்த பேச்சுக்கள் பிராந்தியத்தில் ஈரானின் புதிய பாத்திரத்தை வரையறுக்கும்.
4. இந்த நிகழ்விலிருந்து முஸ்லிம் தலைமைகளும், ஜெனரல்களும் கற்றுக்கொள்ள வேண்டிய உடனடி பாடம் என்ன?
எஜமானர்களால் கட்டளையிடப்பட்ட பணிகளைச் செய்தவுடன் அவர்களின் கதை முடிவடையும் என்பதை அனைத்து துரோகிகள், முகவர்கள், பினாமிகள் மற்றும் ஊமை வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதன் பணிகள் முடிந்ததும் அதன் முகவர்களையும், பினாமிகளையும், கருவிகளையும் அகற்றவதற்கு அமெரிக்கா எப்போதும் தயாராகவே உள்ளது. இந்த யதார்த்தம் இன்று, நேற்று உருவானதல்ல. இது எப்போதுமே இருந்துதான் வந்தது. வரலாற்றில் இதற்கான எடுத்துக்காட்டுகள் ஏராளமாக உள்ளன.
5. அடுத்தது என்ன? இந்நிலைக்கு மாற்று வழி ஏதும் இருக்கிறதா?
உலகிற்கு ஒரு புதிய உலக ஒழுங்கு தேவை. அந்த ஒழுங்கை ஆதிக்கம் செலுத்தும் அரசு (கள்) நீதி, நியாயங்களை கருத்தியல் ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தி உலகை அமைதி, செழிப்பு மற்றும் உயர்ந்த பெறுமானங்களை நோக்கி வழிநடத்த தகுதி படைத்தவையாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் கொடுங்கோலர்களின் கைகளால் அடக்குமுறை, காலனித்துவம், சுரண்டல், கொடுங்கோன்மை மற்றும் செல்வக் குவிப்பு இடம்பெறுவதை முற்றாக தடுக்கின்ற வல்லமையைப் பெற்றவைகளாக அவை இருக்க வேண்டும்.
6. அத்தகைய உலக ஒழுங்கு உருவாவது சாத்தியமானதா?
ஆம் அது நிச்சயம் சாத்தியமானதுதான். அது மாத்திரம்தான் இந்த அவலங்களுக்கெல்லாம் ஒரே தீர்வு. அல் குர்ஆன் சூரத்துல் ஹஜ்ஜின் குறிப்பிடும் இந்த வசனங்களைக் கவனியுங்கள்.
اۨلَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ اِلَّاۤ اَنْ يَّقُوْلُوْا رَبُّنَا اللّٰهُ ؕ وَلَوْلَا دَ فْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَـعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَّصَلَوٰتٌ وَّمَسٰجِدُ يُذْكَرُ فِيْهَا اسْمُ اللّٰهِ كَثِيْرًا ؕ وَلَيَنْصُرَنَّ اللّٰهُ مَنْ يَّنْصُرُهٗ ؕ اِنَّ اللّٰهَ لَقَوِىٌّ عَزِيْزٌ
“இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; “எங்களுடைய இறைவன் ஒருவன்தான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.” (22:40)
اَ لَّذِيْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ وَاَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ ؕ وَلِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ
“அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் – மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.” (22:41)
7. இறுதியாக,
அமெரிக்கா, சக்திவாய்ந்ததாக உலகில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் வரையில் அனைத்து வகையான கொடுமைகளும் அட்டூழியங்களும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கும். அனைத்து மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் எதிராக அது அழிவுகளை உருவாக்கிக் கொண்டுதான் இருக்கும். போர்களின் துயரங்களும், கொலைகளும், வெளியேற்றங்களும் இந்த உலகில் தவிர்க்கப்பட முடியாத நிதர்சனங்களாய் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அநீதிக்குள்ளாக்கப்பட்ட மக்களிடமிருந்து “அல்லாஹ், எங்களை இந்த கொடுங்கோலர்களிடமிருந்து எப்போது விடுவிப்பான்” என்ற கூக்குரல் கேட்டுக்கொண்டுதான் இருக்கும்.
எனவே நாம் இந்த ஒடுக்குமுறையை அகற்றுவதற்கும், உலகில் நீதியை நிலைநாட்டுவதற்கும் அயராது போராட வேண்டியது தவிர்க்கப்பட முடியாதது. மேலும் அது ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணினதும் கண்ணீர்த்துளிகளுக்கும், ஒவ்வொரு குழந்தையின் அழுகுரல்களுக்கும், அப்பாவிகளால் சிந்தப்பட்ட ஒவ்வொரு சொட்டு இரத்தத்துளிகளுக்கும் நாம் செய்யும் காணிக்கையாகும். இந்தப் போராட்டம் வெறும் வேட்கை மாத்திரமல்ல, சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட ஒரு அடிப்படைக் கடமையாகும்.
May allah keep safe the Muslims
Around the world and keep us strong on imam !
? more clear details nice article .