இஸ்லாமிய அரசு நான்கு அடிப்படைக்கோட்பாடுகளை கொண்டுள்ளது.
1. இறைமையும் சட்டமியற்றுதலும் இறைவனுக்குரியது
முஸ்லிம்களை கட்டுக்குள் வைத்திருப்பது தனிமனிதனின் கொள்கைகளல்ல, மாறாக அலலாஹ்(சுபு)வின் கட்டளைப்படியே அவர்களது ஒவ்வொரு அசைவும் அமைகிறது.
“உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுப் பின்னர் நீர் திர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாத வரையில் அவர்கள் நம்மை ஈமான் கொண்டவர்கள் ஆகமாட்டதர்கள்” (அல்குர்ஆன் 4:65)
“மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்ராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்” (அல்குர்ஆன் 33:36)
“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள் இன்னும் (அல்லாஹ்வின்)தூதருக்கும் உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் அதை அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள் இதுதான்(உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்” (அல்குர்ஆன் 4:59)
“எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்) படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பவர்களாவார்கள்”
(அல்குர்ஆன் 5:44)
(அல்குர்ஆன் 5:44)
“எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் தான் அநியாயக்காரர்களாவார்கள்” (அல்குர்ஆன் 5:45)
“எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்” (அல்குர்ஆன் 5:47)
எனவே இறைமை பரிபூரணமாக அல்லாஹ்வின் கட்டளைகளாகிய இஸ்லாமிய ஷரிஆவிற்கு மாத்திரமே சொந்தமானது என்பது மிகத்தெளிவாக விளங்குகிறது.
எனவே இறைமை பரிபூரணமாக அல்லாஹ்வின் கட்டளைகளாகிய இஸ்லாமிய ஷரிஆவிற்கு மாத்திரமே சொந்தமானது என்பது மிகத்தெளிவாக விளங்குகிறது.
2. அதிகாரம் என்பது முஸ்லிம் உம்மாவிற்குரியது
இஸ்லாமிய ஆட்சியின் அதிகாரம் முழுமையாக முஸ்லிம் உம்மாவினிடமே காணப்படும். ஏனென்றால் கிலாபாவை நடைமுறைபடுத்துவதற்காக நியமிக்கப்படும் கலீஃபா என்பவர் முஸ்லிம்களால் சத்தியப்பிரமாணம் (பையத்) கொடுக்கப்பட்டு தம்மீது ஷரீஆவினை நடைமுறைப்படுத்துங்கள் என்ற நிபந்தனையுடன் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் மட்டுமே. எனவே அதிகாரம் முழுமையாக முஸ்லிம் உம்மத்திடமே காணப்படும்.
உபைதா இப்ன் உல் சாமித் (ரழி) அறிவிக்கிறார்கள்
“நாங்கள் கஷ்டத்திலும், இலகுவான நிலையிலும் ரஸுலுல்லாஹ்விற்கு முற்றிலும் செவிசாய்த்தும், கட்டுப்பட்டும் நடப்பதாக உறுதியளித்தோம்” எனக் கூறுகிறார்கள்.
“நாங்கள் கஷ்டத்திலும், இலகுவான நிலையிலும் ரஸுலுல்லாஹ்விற்கு முற்றிலும் செவிசாய்த்தும், கட்டுப்பட்டும் நடப்பதாக உறுதியளித்தோம்” எனக் கூறுகிறார்கள்.
ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அறிவிக்கிறார்கள்
“நாங்கள் ரஸுலுல்லாஹ்விற்கு முற்றிலும் செவிசாய்த்தும், கட்டுப்பட்டும் நடப்பதாகவும், ஏனையோருக்கு அறிவுரை அளிப்பதாகவும் அவரிடம் பையத் செய்தோம்” எனக் கூறுகிறார்கள்.
“நாங்கள் ரஸுலுல்லாஹ்விற்கு முற்றிலும் செவிசாய்த்தும், கட்டுப்பட்டும் நடப்பதாகவும், ஏனையோருக்கு அறிவுரை அளிப்பதாகவும் அவரிடம் பையத் செய்தோம்” எனக் கூறுகிறார்கள்.
எனவே இங்கு வாக்குறுதி மக்களால் கலீபாவிற்கு கொடுக்கப்படுகிறதே தவிர கலீபா மக்களுக்கு கொடுக்கவில்லை. அவர்களில் வாக்குறுதி யாருக்கு கொடுக்கப்படுகிறதோ அவரே அவர்களுக்கு ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்;. எவருக்கு வாக்குறுதி கொடுக்கப்படுகிறதோ அவர்தான் கலீஃபாவாக வரமுடியும். குலஃபா ராஷிதீன்கள் மக்களிடையே சத்தியப்பிரமாணம் வாங்கிய பின்னரே கலீஃபாவாக ஆகினர்.
அப்துல்லாஹ் இப்ன் உமர் அறிவிப்பதாக நஃபாஅ குறிப்பிடுகிறார்கள்
“எவரொருவர் கட்டுப்பாட்டிலிருந்து தனது கையினை விலக்கிக்கொள்கிறாரோ அவர் நாளை மறுமை நாளில் அல்லாஹ்வின் முன்னிலையில் தனக்கான எத்தகைய ஆதாரமுமின்றி இறைவனை சந்திப்பார். மேலும் எவர் தனது கழுத்தில் பையத் இல்லாத நிலையில் மரணிக்கிறாரோ அவர் ஜாஹிலிய்யாக்கால (அறியாமைக்கால) மரணத்தையே அடைகிறார்”

நபிகளார்(ஸல்) கூறியதாக இப்ன் அப்பாஸ் அறிவிக்கிறார்கள்.
“அமீரினிடத்தில், தமக்கு விருப்பமில்லாத ஒரு செயலை ஒருவர் கண்டால் அவர் பொறுமையுடன் இருக்கவேண்டும். எவர் ஒருவர் ஒரு கைப்பிடி அளவேனும் இமாமை விட்டு பிரிந்து சென்ற நிலையில் மரணித்து விடுகிறாரோ, அவர் ஜாஹிலிய்ய மரணத்தையே அடைகிறார்.”

எனவே மேற்கூறிய விடயங்களிலிருந்து உம்மாவிடம் பைஅத் பெற்றபின்னரே ஒருவர் கலீஃபாவாக முடியும் என்பதும், அவ்வாறு அமீரினை தேர்ந்தெடுக்கின்ற அதிகாரமும் உம்மாவிடமே உள்ளது என்பதும், எனினும் தெளிவான குப்ரினை அந்த அமீர் செயற்படுத்தும் வரையில் தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக நாம் அவரின் அதிகாரத்திலிருந்து பிரிந்து செல்ல முடியாது என்றும் தெளிவாகிறது.
3. ஒரே ஒரு கலீஃபாதான்
தம்மை ஆளும் பிரதிநிதியாக ஒரு கலீஃபாவை நியமிப்பது முஸ்லிம்களின் மீது கடமையாகும். கலீபாவின் ஒருமை குறித்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன.
ஸஹீஹ் முஸ்லிமில் பின்வரும் ஹதீஸ் பதியப்பட்டுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிமில் பின்வரும் ஹதீஸ் பதியப்பட்டுள்ளது.
“இரண்டு கலீஃபாக்களுக்கு பைஅத்(சத்தியப்பிரமாணம்) கொடுக்கப்பட்டால், அவர்களில் இரண்டாமவரை கொன்றுவிடுங்கள்” என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
4. இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் உரிமை கலீஃபாவுக்கு மட்டுமே உண்டு
கலீபாவிற்கு மாத்திரமே இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.
கலீஃபாவால் மட்டுமே முழுமையாகவும், முறையாகவும் அல்லாஹ்வின் சட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் இஸ்லாமிய ஆட்சியை நிலைநிறுத்த முடியும். இஜ்மா-அஸ்-ஸஹாபா (சகாபாக்களின் ஏகோபித்த தீர்மானம்) விலிருந்து கலீபாவால் மட்டுமே இஸ்லாமிய சட்டங்களை நிறைவேற்றமுடியம் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
இஜ்மா-அஸ்-ஸஹாபாவின்படி,
“ஒரு இமாமினுடைய கருத்து மாத்திரமே வேறுபாடுகளை களைகிறது”, “ஒரு இமாமின் கருத்து மட்டுமே கட்டளையாக கொள்ளப்படுகிறது”, “ இமாம் மாத்திரமே சமூகத்தில் தோன்றுகின்ற புதிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தீர்மானித்து அமுல்படுத்தும் உரிமையை பெற்றிருக்கிறார்.” போன்ற அடிப்படைகளை நாம் இஸ்லாத்தில் புரிந்து கொள்ள முடிகிறது.

கிலாபா என்கிற புத்தகம் கிடைக்குமா?
(தமிழ்)