உலக அரங்கில் இறை மறுப்புக் கொள்கை பகுத்தறிவு வாதமாகவும், இறை விசுவாசம் வெறும் மூட நம்பிக்கையாகவும் பரப்புரை செய்யப்படும் ஒரு நூற்றாண்டில் நாம் வாழ்ந்து வருகின்றோம். இறைவன் இருக்கின்றானா? அவனை உங்களால் குருட்டு நம்பிக்கையைக் கடந்து அறிவார்ந்த ரீதியாக நிறுவ முடியுமா? என்ற கேள்வியை சந்திக்க எம்மில் பலர் தயங்குவதுண்டு. அத்தகைய கேள்விகளை அபத்தமான வினாக்கள் என்று கூறியோ அல்லது வேறு ஏதாவது சாட்டுப்போக்குகளைக் சொல்லியோ நாம் எதிர் கொள்வதில்லை. எனினும் இஸ்லாம் இந்த அடிப்படை வினாவுக்கு சரியான விடையினை தேடுவதின் ஊடாகத்தான் அல்லாஹ்(சுபு)வை ஈமான் கொள்ளுமாறு வேண்டுகிறது. இன்னுமொரு விதத்தில் கூறுவதானால் கண் மூடி ஈமான் கொள்வதை ஏனைய மதங்களைப் போன்று இஸ்லாம் அனுமதிப்பதில்லை. அந்த வகையில் அறிவார்ந்த ரீதியாக அல்லாஹ்(சுபு)வின் இருப்பை எவ்வாறு மிக இலகுவாக நிறுவலாம் என்பது தொடர்பாக இந்தக் காணொளி மிகச்சுருக்கமாக விளக்குகிறது.