கடந்த டிசம்பர் 7ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜெரூசலத்தை சியோனிச அலகின் (Zionist entity) அதாவது இஸ்ரேலின் தலைநகராக அறிவித்து தமது அரசினது நிலைப்பாட்டை வெளியிட்டார். இதன் மூலம் அமெரிக்காவை உத்தியோகபூர்வ பாதுகாவலனாக வெளிப்படையாக பிரகடனப்படுத்தினார். அது மாத்திரமல்லாது தமது இந்த நிலைப்பாட்டுக்கு முஸ்லிம் நாடுகள் ஒத்துழைப்பு வழங்குவதுடன் தனது திட்ட முன்னெடுப்பில் அவைகள் பக்கபலமாக இருக்கின்றன என்பதனையும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தச் சூழலில் அல் குத்ஸின் மீட்சிக்காக நாம் என்ன செய்யலாம்?
1. சத்தியத்தை பகிரங்கப்படுத்தல்:
அநியாயத்திற்கு முன்னால் அமைதி காத்தல் என்பது ஒரு தீர்வாக மாட்டாது. அல்குத்ஸ் எமது ஈமானுடன் சம்பந்தப்பட்ட ஒன்று. இவ்விடயத்திலும் இதுபோன்ற ஏனைய விடயங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுப்பது சகல முஸ்லிம்களதும் கடமையாகும். தீய சியோனிச அலகிற்கு எதிராக வாய் திறப்பதை இன்றுள்ள அரசுகள் தீவிரவாதமாக பார்த்தாலும் முஸ்லிம்கள் இவ்விடயத்தில் அமைதி காக்க முடியாது.
2. ஆர்பார்பாட்டங்களை ஒழுங்கு செய்தல்:
அல்குத்ஸ் உட்பட முழுமையான பலஸ்தீனின் விடுதலைக்காகவும், பலஸ்தீன விடுதலைக்கு வெற்று ஒப்பந்தங்களோ, இரு-அரசு தீர்வுகளோ வேறு எந்த போலி நாடகங்களோ தீர்வாக அமையாது என்ற செய்தியை மக்கள் மயப்படுத்தியும் அமைதி ஆர்பாட்டங்கள் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஒழுங்கு செய்தல்.
3. முஸ்லிம் ஆட்சியாளர்களை கேள்விக்குட்படுத்தல்:
முஸ்லிம் ஆட்சியாளர்கள்தான் சியோனிச அலகின் உண்மையான பாதுகாவலர்கள். அவர்களின் துணையில்லாது சியோனிச அரசு அரபுலகில் ஒரு நாளிகையைக் கூட கடக்க முடியாது. இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளையும், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டு இன்றுவரை பேணிவரும் இவர்களின் வீராப்புப் பேச்சுக்களால் நாம் ஏமாந்து விடக்கூடாது. சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து, பகிஸ்தான் மற்றும் ஏனைய முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவின் பகையை அஞ்சுகின்றனவேயொழிய அல்லாஹ்வுக்கு (சுபு) அஞ்சுவதாக இல்லை. இவர்கள் நினைத்தால் இவர்களது இராணுவங்களைக் கொண்டு இந்த சியோனிச அடாவடித்தனத்திற்கு மிக இலகுவாக முடிவு கட்டி விடலாம். எனினும் அதனைச் செய்கின்ற திராணி இவர்களிடம் இல்லை. எனவே முஸ்லிம் இராணுங்களே! அல்லாஹ்வுடைய அழைப்புக்கு செவிசாயுங்கள். பலஸ்தீனை விடுவிக்க அணிதிரளுங்கள் என்ற அழைப்பை நாம் தொடர்ந்தும் முன்வைக்க வேண்டும்!
4. ஆட்சியாளர்களின் தோலுரித்தல்:
காலனித்துவ சக்திகளது திட்டங்களை தோலுரிப்பது மிக முக்கியமானது. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற காலனித்துவ நாடுகளது உண்மையான முகம் என்ன என்பதையும், அவர்களின் அக்கறையெல்லாம் எதிலே குவிந்துள்ளது என்பதையும் முஸ்லிம் உம்மத்திற்கு படம்பிடித்துக் காட்ட வேண்டும். முஸ்லிம் உம்மத்தில் தமது பாதத்தை உறுதிப்படுத்திய நிலையில் அங்குள்ள வளங்களை உறிஞ்சுவதும் முஸ்லிம்களது இரத்தத்தை ஓட்டுவதுமே இவர்களது உண்மையான குறிக்கோள் என்பதனை நாம் பட்டவர்த்தனப்படுத்த வேண்டும்.
5. சர்வதேச அழைப்பிலே இணைந்து கொள்ளல்:
கிலாஃபா ராஷிதாவினால் மாத்திரமே அல்-குத்ஸ், காஸ்மீர் மற்றும் ஏனைய ஆக்கிரமிக்கப்பட்ட முஸ்லிம் நிலங்கள் விடுவிக்கப்பட முடியும் என்பதே யதார்த்தம். எனவே கிலாஃபத்தை மீள நிலைநாட்டுவதற்கான சர்வதேச அழைப்புப்பணியுடன் இணைந்து கொள்வதும், அதற்கு இயலுமான ஆதரவை வழங்குவதும் எம் அனைவர் மீதும் கட்டாயக் கடமையாகும்.