• நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்
No Result
View All Result
  • நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்
No Result
View All Result
Darul Aman
No Result
View All Result
டோனால்ட் டரம்பின் பிரகடனம் முஸ்லிம் ஆட்சியாளர்களின் முதுகில் விழுந்த பலத்த அடி!

ஒட்டு மொத்த பாலஸ்தீனை மீட்டெடுத்தலே அல்குத்ஸுக்கான இஸ்லாமிய தீர்வாகும் !

ஜெரூசலம் சியோனிச அலகின் (Israel) தலைநகராக பிரகடனம் செய்யப்பட்டமை குறித்து முஸ்லிம்கள் செய்யக்கூடிய 5 முக்கிய விடயங்கள்!

Home கட்டுரைகள் நடப்பு விவகாரம் செய்திப்பார்வை

டோனால்ட் டரம்பின் பிரகடனம் முஸ்லிம் ஆட்சியாளர்களின் முதுகில் விழுந்த பலத்த அடி!

December 11, 2017
in செய்திப்பார்வை, நடப்பு விவகாரம்
Reading Time: 2 mins read
0
0
SHARES
66
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் புதன் கிழமையன்று வெள்ளை மாளிகையிலிருந்து அனுப்பிய கடிதத்தின் மூலம்  இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை பிரகடனப்படுத்தியுள்ளதோடு,  அரசு திணைக்களத்தை டெல் அவிவிலிருந்து ஜெரூசலத்திற்கு மாற்றம் செய்ய ஆயத்தமாகுமாறும் கட்டளை பிறப்பித்தது நாம் அறிந்ததே.  இந்த கட்டளையினை பிறப்பித்ததன் மூலம் முஸ்லிம் ஆட்சியாளர்கள் கட்டியிருந்த கோவணமும் உருவப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை விடுத்ததன் பின்னால்,

“உங்களுக்கு பல முன்னாள் ஜனாதிபதிகள் பல முறை  வாக்களித்தும்  கையளிக்க தவறிய ஒன்றை  நான் கொடுகின்றேன்” (arabia.net 06/12/2017) என்று மார்தட்டியிக்கிறான் ட்ரம்ப். இதில் கேவலம் என்னவென்றால் அல்குத்ஸ், அல் அக்ஸா என்று போலிக்கூக்குரலிட்ட சல்மான், அப்பாஸ், அப்துல்லாஹ், அல் சீசி போன்ற அனைவரும் ட்ரம்பின் உரையின் இறுதியில் அவன் இந்த பிரகடனத்தை மேற்கொள்ள இருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தும் கூட ஒன்றுமே செய்ய முடியாத பிணங்களாக இருந்திருக்கின்றார்கள்.

முதல் கிப்லாவான, மிஹ்ராஜின் பூமியான, முஸ்லிம்களின் மூன்று புனித தளங்களில் மூன்றாவது புனித தளத்தினை கொண்டிருக்கின்ற இடமான, (கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்ட) ஜெரூசலத்தினை டொனால்ட் ட்ரம்ப் யூத சியோனிசத்தின் தலைநகராக பிரகடனப்படுத்தியுள்ளான்.  ட்ரம்ப் முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஜெருசலத்திற்கு பெயரளவிலாவது கொடுக்கின்ற பெறுமானம் எதையுமே பொருட்படுத்தாமல் தனது நிலைப்பாட்டை அவர்களுக்கு வெறும் தொலைபேசி அழைப்பினூடாக அறிவித்த பின்னரே உலகுக்கு அறிவித்துள்ளான். அவர்களின் அடிமை வாழ்வை இன்னும் அம்பலப்படுத்தும் விதமாக இது குறித்து நல்லெண்ணத்தையும், மகிழ்ச்சியையும் பரிமாரிக்கொள்வதற்காக தனது உப ஜனாதிபதியான மைக் பென்சை முஸ்லிம் ஆட்சியாளர்களிடம் விரைவில் அனுப்பவிருப்பதாகவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ கொடுங்கோலன் டோனல்ட் ட்ரம்ப் சியோனிச காட்டேறிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறான். நம்பிக்கைகள் வேறுபட்டாலும் இறை நிராகரிப்பு என்று வரும் போது அவை அனைத்தும் ஒரே கொள்கைதான் என்பதை இது மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறது. எனவே அனைத்து நிராகரிப்பாளர்களும் ஒரு அணியில் கூடுவது ஆச்சரியமானதல்ல. எனினும் வேதனையான விடயம் என்னவென்றால் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள் எனக்கூறிக்கொள்ளும் முஸ்லிம் ஆட்சியாளர்கள் எந்தப்பிரச்சினையுமின்றி இறை நிராகரிப்பாள காலணித்துவவாதிகளை அப்படியே பின்பற்றுவதுதான்.

அல்லாஹ்(சுபு) திருமறை குர்ஆனிலே கூறுகின்றான் :

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْيَهُوْدَ وَالنَّصٰرٰۤى اَوْلِيَآءَ ‌ؔۘ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ؕ وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏

முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.(அல்மாயிதா:51)

முஸ்லிம்களே!

அமெரிக்கா, 1948  இல் சியோனிச அலகை அங்கீகரித்து அதற்கு அனைத்து விதமான ஆதரவும் வழங்கிய போதே இந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமெரிக்காவுடன் நட்புறவும் பேணினார்கள். அன்றே இந்த ஆட்சியாளர்கள் கண்ணியமிழந்தார்கள்.  அவமானத்தை சுமந்து கொண்டார்கள்.

யூத அரசு மீதமிருந்த பாலஸ்தீனையும், அல்குத்சையும் 1967 யில் மென்மேலும் ஆக்கிரமித்தது. இவ்வாக்கிரமிப்பின் போதும்  இந்த வேகலம் கெட்ட ஆட்சியாளர்கள் மௌனிகளாக இருந்தார்கள். அமெரிக்கா எவ்வித சங்கடமும் இல்லாமல் யூதர்களுக்கு அரவணைப்புக் கொடுத்தது. அப்போதும் இந்த ஆட்சியாளர்கள் வெறுமனவே அமெரிக்க விசுவாசிகளாகவும் யூத அரசுடனான மத்தியஸ்தர்களாகவுமே  காணப்பட்டார்கள். அன்றே இந்த ஆட்சியாளர்கள் கண்ணியமிழந்தார்கள்  அவமானத்தை சுமந்து கொண்டார்கள்.

இராணுவ நீக்கம்(Demilitarization)  செய்யப்பட்டாற்கூட கிழக்கு ஜெரூசலம் தலைநகராக இருக்குமென்றும், அமெரிக்கா யூத அலகுக்கு அழுத்தம் வழங்கி முஸ்லிம்களுக்கு ஏதாவது பெற்றுத்தருமென்றும் மக்களை குழப்பியும், ஏமாற்றியும், பிழையாக வழி நடாத்தியும் வந்தார்கள் இந்த ஆட்சியாளர்கள். உண்மையில் இவர்கள் வேறு யாரையும் ஏமாற்றவில்லை. தூரநோக்கில்லாமல் அவர்களே அவர்களை ஏமாற்றிக்கொண்டார்கள். அன்றே இந்த ஆட்சியாளர்கள் கண்ணியமிழந்தார்கள்  அவமானத்தை சுமந்து கொண்டார்கள்.

முஸ்லிம்களே!

யூதர்களின் கோரப்பிடியிலிருந்து பாலஸ்தீனை எவ்வாறு மீட்கலாம் என்பதிலும்,  அமெரிக்காவையும், அதோடு சேர்ந்த யூத ஆதரவு தேசங்களையும் எவ்வாறு எதிர்கொள்வதென்பதில் அறிவுள்ள இருவர் முரண்பட இயலுமா ?

பாலஸ்தீனின் விடுதலை முஸ்லிம் தேசங்களின் இராணுவங்களை ஒன்று திரட்டி நேரடியாக மோதி, யூத இராச்சியத்தின் முதுகெலும்பை உடைத்துத்தான் பெறப்பட முடியும் என்பதில் எவருக்கும் சந்தேகமிருக்க முடியுமா?

அல்லாஹ்(சுபு))திருமறை குர்ஆனிலே கூறுகின்றான்:

قَاتِلُوْهُمْ يُعَذِّبْهُمُ اللّٰهُ بِاَيْدِيْكُمْ وَيُخْزِهِمْ وَيَنْصُرْكُمْ عَلَيْهِمْ وَيَشْفِ صُدُوْرَ قَوْمٍ مُّؤْمِنِيْنَۙ‏

நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்; உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்.

(அத் தவ்பா: 14)

பாலஸ்தீனின் உண்மை விடுதலை இஸ்லாமிய தீர்வான இஸ்லாமிய அரசின் இராணுவத்தைக்கொண்டு யூத அலகையும், அதன் ஆதரவு அரசுகளையும்  துவம்சம் செய்து மீட்டெடுப்பதல்லவா ? இஸ்லாத்தின் பூமியை ஆக்கிரமித்து அட்டூழியம் புரியும் அயோக்கியர்களை துரத்தியடிப்பது ஞானம் நிறைந்த அல்லாஹ்(சுபு) வின் கட்டளையல்லவா?

ْ وَاَخْرِجُوْهُمْ مِّنْ حَيْثُ اَخْرَجُوْكُمْ‌ ‏

அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்;…

(அல் பகறா :191)

முஸ்லிம்களின் நிலத்தை ஆக்கிரமித்து அங்குள்ள மக்களை விரட்டியடித்த  யூதர்களுக்கு துணை போகும் நாடுகள் பற்றி அல்லாஹ்வின் கட்டளை என்ன தெரியுமா?

اِنَّمَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ قَاتَلُوْكُمْ فِى الدِّيْنِ وَاَخْرَجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ وَظَاهَرُوْا عَلٰٓى اِخْرَاجِكُمْ اَنْ تَوَلَّوْهُمْ‌ۚ وَمَنْ يَّتَوَلَّهُمْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏

நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் – எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள் (அல் மும்தஹினா:9)

முஸ்லிம் இராணுவத்தினரே!

1948 இல் யூதர்களால்  பாலஸ்தீனத்தின் பாரிய பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டபோது இந்த ஆட்சியாளர்கள் கொண்டிருந்த மௌனமும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க முஸ்லிம் இராணுவத்தை ஒன்று திரட்டாமல் போனதும் அடிப்படையில் மிகப்பெரும் குற்றமாகும். 1967 இல் மேலும் பாலஸ்தீன பூமி அபகரிக்கப்பட்ட போது இராணுவத்தை சுருட்டி வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தையும் மீட்காமல் போனது அதை விட பாரதூரமான குற்றமாகும். அதேபோல யூத ஆதரவு நாடுகளுடன் யுத்தம் செய்யாததும்  எந்தளவிலும்   குறைத்து மதிப்பிட முடியாதவை. மேலும் இந்த ஆட்சியாளர்களுக்கு இருக்கும் எதிரி தேசங்களுடனான விசுவாசமும், நல்லுறவும்  அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், மற்றும் விசுவாசிகளுக்கும் செய்த பெரும் துரோகமாகும் .

தற்போது, ட்ரம்ப் இந்த ஆட்சியாளர்களது நிர்வாணத்தை மறைத்துக்கொண்டிருந்த கடைசி துண்டையும் உருவி விட்டிருக்கிறான். இவர்களது சுயரூபத்தை முஸ்லிம்களுக்கு காண்பித்திருக்கின்றான்.

இந்த கையாலாகாத ஆட்சியாளர்கள் முறையானதும், முழுமையானதுமான ஜிஹாதை மேற்கொண்டு ஆக்கிரமிப்பிலிருந்து பாலஸ்தீனை விடுவிக்காது போய்விடின் இந்த ஆட்சியாளர்களை மீறி முஸ்லிம் இராணுவம் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து புனித பூமியை மீட்டெடுக்கட்டும் . இந்த ஆட்சியாளர்களை அவர்களின் சிம்மாசனங்களிருந்து தூக்கி வீசி, மீளவும் கிலாஃபா ராஷிதாவினை நிறுவட்டும். அதுவே காலணித்துவ காபிர்களுக்கு முஸ்லிம்களை அண்டுவதற்கும் தொடை நடுங்கச் செய்யும்.

அல்லாஹ் (சுபு )திருமறை குரானிலே கூறுகின்றான் :

وَاِنْ يُّقَاتِلُوْكُمْ يُوَلُّوْكُمُ الْاَدْبَارَ

ثُمَّ لَا يُنْصَرُوْنَ

அவர்கள் உங்களிடம் போரிட வந்தாலும், அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டி (ஓடி) விடுவார்கள்(ஆல இம்ரான் :111)

முஸ்லிம் இராணுவத்தினரே ! இதன் பிறகும் ஆட்சியாளர்களின் பொய் புறட்டால் ஏமாற்றப்படவேண்டாம்! அவர்கள் மேற்கொள்ளும் துரோகத்தை பார்த்துக்கொண்டு மௌனித்திருப்பது பெரும் பாவமும் குற்றமுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! இந்த மௌனத்தின் விளைவாக  பாலஸ்தீனத்தை மாத்திரம் நாம் இழக்கப்போவதில்லை. அதையும்  தாண்டி பாரிய விளைவுகளை இது கொண்டு வரும் . புனித பூமியை மீட்க தடையாக இருக்கும் அநியாயக்கார ஆட்சியாளர்களின் கட்டளைக்கு செவி சாய்ப்பதும், அடிபணிவதும் மன்னிக்க முடியாத குற்றமாகும் . இஸ்லாத்தின் பூமியை மீட்டெடுக்க தடையாக இருக்கும் அவர்களுக்கு இவ்வாறான நேரத்தில் கட்டுப்படுதல் உங்களை இவ்வுலகிலும், மறுமையிலும் இழிவுபடுத்தி விடும். மேலிடத்திலிருந்து கட்டளை வந்தால் செயற்படுவோம் என்ற சிந்தனை உங்களுக்கு எதுவித நன்மையையும் அளிக்கப்போவதில்லை. அது மிகவும் தவறான கூற்று நிலைப்பாடுமாகும்.

وَقَالُوْا رَبَّنَاۤ اِنَّاۤ اَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَاَضَلُّوْنَا السَّبِيْلَا‏

“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள் (அல் அஹ்ஸாப்:67)

உண்மையில் முட்டாள் ஆட்சியாளர்களுக்கான அடிபணிதல் இம்மையிலும் ,மறுமையிலும் கைசேதத்தையே ஏற்படுத்தும். இவர்கள் பொய்யிலும் துரோகத்திலும் திழைத்திருப்பவர்கள் என்பது உங்களுக்கு தெரியாதா?

கஹ்ப் பின் உஜ்ராவிடம், ரசூலுல்லாஹி (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்கள் பின்னவருமாறு கூறினார்கள் :

“முட்டாள் ஆட்சியாளனிடமிருந்தும் உமக்காக நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்” என்று கூறினார்கள் நபியவர்கள். அதற்கு முட்டாளின் ஆட்சி என்றால் என்ன என்று அவர்கள் வினவ பின்வருமாறு கூறினார்கள் :

“எனக்கு பின்னால் எனது வழிகாட்டல்களையும் ,சுன்னாவையும் பின்பற்றாத ஆட்சியாளர்கள் வருவார்கள் .அவர்களது பொய்களை உறுதி செய்த வண்ணம் அவர்களின் அடக்குமுறையில் யார் அவர்களுக்கு துணை போகின்றார்களோ அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள்  அல்ல! நானும் அவர்களை சார்ந்தவன் அல்ல . சுவர்க்கத்தில் நான் நீரருந்தும் இடத்தில் அவர்கள் என்னை  சந்திக்க மாட்டார்கள் .யாரெல்லாம் அவர்களின் பொய்களை ஏற்று அடக்குமுறையில் அவர்களுக்கு துணை போகவில்லையோ அவர்கள்தான் என்னை சார்ந்தவர்கள். நானும் அவர்களில் ஒருவன். அவர்கள் சுவர்க்கத்தில் நான் நீர் அருந்தும் இடத்தில் என்னை சந்திப்பார்கள் “

இறுதியாக, முஸ்லிம்களே! அநியாயக்கார ஆட்சியாளர்களின் அதிகாரத்தை நீக்க கடுமையாக உழைத்து இவ்வுலகில் இஸ்லாத்தின் அதிகாரத்தை நிறுவி, இம்மையிலும் மறுமையிலும் வெற்றியாளர்களாக மாறுவதற்கு முயற்சிப்தே எம்மை நிச்சயம் உய்விக்கும் என்பதை நீங்கள் ஒரு கணப்பொழுதும் மறந்து விடலாகாது!

وَيَوْمَٮِٕذٍ يَّفْرَحُ الْمُؤْمِنُوْنَ

بِنَصْرِ اللّٰهِ‌ؕ يَنْصُرُ مَنْ يَّشَآءُ ؕ وَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُۙ‏

அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள். அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் – மேலும், (யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன். (அர்ரூம்:6)

Related Posts

இஸ்ரேலுடனான இயல்பாக்கம் பிராந்தியத்துக்கு பயனளிக்குமாம் – சவூதி இளவரசர்!

இஸ்ரேலுடனான இயல்பாக்கம் பிராந்தியத்துக்கு பயனளிக்குமாம் – சவூதி இளவரசர்!

April 3, 2021
ட்ரம்பின் மனநிலையில் கோளாறு? பதவிக்கு தகுதியற்றவர் என்று அறிவிக்க முயற்சி!

ட்ரம்பின் மனநிலையில் கோளாறு? பதவிக்கு தகுதியற்றவர் என்று அறிவிக்க முயற்சி!

January 7, 2021

2 வருடங்களுக்குப் பிறகு இஸ்ரேலுக்கான தூதரை நியமித்தது துருக்கி!

December 17, 2020

அணுசக்தி விஞ்ஞானி ஃபக்ரிசாதேவை இஸ்ரேலே கொன்றது – ஈரான் குற்றச்சாட்டு!

December 2, 2020
Next Post
ஜெரூசலம் சியோனிச அலகின் (Israel) தலைநகராக பிரகடனம் செய்யப்பட்டமை குறித்து முஸ்லிம்கள் செய்யக்கூடிய 5 முக்கிய விடயங்கள்!

ஜெரூசலம் சியோனிச அலகின் (Israel) தலைநகராக பிரகடனம் செய்யப்பட்டமை குறித்து முஸ்லிம்கள் செய்யக்கூடிய 5 முக்கிய விடயங்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

சமீபத்திய இடுகைகள்

  • உசூலுல் ஃபிக்ஹிற்கும், அல் கவாஇத் அல் ஃபிக்ஹிய்யாஹ்வுக்கும் இடையான வேறுபாடு
  • இலங்கையின் பொருளாதார நெருக்கடி முஸ்லிம்களின் கண்களைத் திறக்குமா?
  • தீவிர இந்துத்துவா பாதையிலா திருமலை சண்முகா கல்லூரி?
  • சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!
  • இந்திய முஸ்லிம்களின் ‘இனப்படுகொலை’ ஐ இனி எதிர்பார்க்கலாம் – Dr. Gregory Stanton!

சமீபத்திய கருத்துகள்

  • Face to true on கொரோனா வைரஸ் மரணங்களுக்கு தகனத்தை கட்டாயமாக்கியது இலங்கை!
  • Fareed on கிலாஃபா மட்டுமே மக்கள் நல அரசு!
  • Nizamhm on இலங்கையில் முஸ்லிம் விரோத பிரச்சாரத்திற்கு சீனா தலைமை! தெரண களத்தில்!
  • Abdullah on கொரோனா வைரஸ் மரணங்களுக்கு தகனத்தை கட்டாயமாக்கியது இலங்கை!
  • Admin on இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களும் தகனம் செய்யப்படலாம்!

காப்பகம்

  • June 2022
  • April 2022
  • February 2022
  • January 2022
  • December 2021
  • September 2021
  • August 2021
  • July 2021
  • June 2021
  • April 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020
  • October 2020
  • September 2020
  • August 2020
  • July 2020
  • June 2020
  • May 2020
  • April 2020
  • March 2020
  • February 2020
  • January 2020
  • December 2019
  • October 2019
  • September 2019
  • May 2019
  • April 2019
  • February 2019
  • July 2018
  • May 2018
  • March 2018
  • January 2018
  • December 2017
  • October 2017
  • February 2017
  • January 2017
  • November 2016
  • September 2016
  • August 2016
  • July 2016
  • June 2016
  • May 2016
  • April 2016
  • March 2016
  • February 2016
  • January 2016
  • December 2015
  • November 2015
  • October 2015
  • August 2015
  • March 2015
  • September 2014
  • August 2014
  • July 2014
  • May 2014
  • April 2014
  • March 2014
  • February 2014
  • November 2013
  • October 2013
  • September 2013
  • March 2013
  • February 2013
  • July 2012
  • December 2011

பிரிவுகள்

  • Uncategorized
  • YouTube சேனல்
  • அகீதா
  • அறிக்கைகள்
  • ஆய்வு
  • உசூலுல் பிக்ஹ்
  • எண்ணக்கரு
  • ஒலி
  • ஒளி
  • கட்டுரைகள்
  • கிலாஃபா
  • சிந்தனை
  • செய்திகள்
  • செய்திப்பார்வை
  • தஃவா
  • நடப்பு விவகாரம்
  • நிகழ்வுகள்
  • பிக்ஹ்
  • பிரசுரங்கள்
  • பொருளாதாரம்
  • யதார்த்தம் எது ?
  • வரலாறு
  • வலையொலி

சமீபத்திய இடுகைகள்

  • உசூலுல் ஃபிக்ஹிற்கும், அல் கவாஇத் அல் ஃபிக்ஹிய்யாஹ்வுக்கும் இடையான வேறுபாடு
  • இலங்கையின் பொருளாதார நெருக்கடி முஸ்லிம்களின் கண்களைத் திறக்குமா?
  • தீவிர இந்துத்துவா பாதையிலா திருமலை சண்முகா கல்லூரி?
  • சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!
  • இந்திய முஸ்லிம்களின் ‘இனப்படுகொலை’ ஐ இனி எதிர்பார்க்கலாம் – Dr. Gregory Stanton!

பிரிவுகள்

Uncategorized YouTube சேனல் அகீதா அறிக்கைகள் ஆய்வு உசூலுல் பிக்ஹ் எண்ணக்கரு ஒலி ஒளி கட்டுரைகள் கிலாஃபா சிந்தனை செய்திகள் செய்திப்பார்வை தஃவா நடப்பு விவகாரம் நிகழ்வுகள் பிக்ஹ் பிரசுரங்கள் பொருளாதாரம் மல்டி மீடியா யதார்த்தம் எது ? வரலாறு வலையொலி
No Result
View All Result
  • நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்

© 2020 www.darulaman.net