அரபு தேசிய அரசுகளினதும் மற்றும் பாலஸ்தீன குழுக்களினதும் முதலைக் கண்ணீரோ,பலனற்ற ஆர்ப்பாட்டங்களோ அரைநூற்றாண்டுகால துரோகத்தை இல்லாமல் செய்துவிடாது. அல்குத்ஸ் இனிமேல் சியோனிச காட்டு மிராண்டி இராச்சியத்தின் (Zionist entity) தலைநகராக உத்தியோக பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்படவேண்டிய நேரம் இதுதான் என்று ட்ரம்ப் கூறிய பிறகுதான் திடீரென அரபு தலைமைகளுக்கு அல்குத்ஸ் புனிதமான பூமியாகத் தெரிகிறது. அதன் புகழ்பாட அவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள். கண்டன நாடகத்தை அரங்கேற்ற தடுமாறுகிறார்கள். ரெட் லைன் என்கிறார்கள். யல்லோவ் லைன் என்கிறார்கள்.
முஸ்லிம்களின் முதல் கிப்லாவும் , இறைதூதர் முஹம்மது நபி (ஸல் ) அவர்களின் இரவுப் பயணம் (மிஹ்ராஜ் ) இடம்பெற்ற புனித தளமான மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கொண்டிருக்கும் அல்குத்ஸ் உண்மையிலேயே அருள்பாலளிக்கப்பட்ட புனித பூமியாகும். அந்தவகையில் அல்குத்ஸ் மீது நாங்கள் கொண்டிருக்கும் நேசம், பற்று எல்லாம் அதனை முற்று முழுதாக சியோனிசக் காபிர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கும் அழைப்பையே வேண்டி நிற்கின்றன. நாம் அதை கிழக்கு, மேற்கு என்றெல்லாம் துண்டாட ஒருபோதுமே அனுமதிக்ககூடாது.
1960களின் நடுப்பகுதியில் பத்தாஹ் இயக்கம் தோற்றம் பெற்றது, அது ஆக்கிரமிப்பு சக்திகளை எதிர்த்து நின்று கிழக்கிலிருந்து மேற்கு வரை பாலஸ்தீனின் விடுதலையை உறுதிப்படுத்துவோம் என்றும் பிரகடனம் செய்தது. இந்த கோஷமும் விரைவில் உதிர்ந்து மறைந்து போனதோடு அது கிழக்கே ஆற்றையும் மேற்க்கே கடலையும் அதற்கிடைப்பட நிலங்களையும் தாரைவார்த்துக்கொடுத்தது.
இதன் யதார்த்தம் பற்றி 1964 இலே பலஸ்தீனத்திலே வெளியிடப்பட்ட ஹிஸ்புத் தஹ்ரீரின் துண்டுப்பிரசுரம் ஒன்று மிகத் தெளிவாகப் பேசியது. காஸாக்கும், மேற்குக்கரைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு பலஸ்தீன தேசத்தை நிறுவுதல் என்ற அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியே பலஸ்தீன (பிஎல்ஓ) விடுதலை இயக்கத்தின் (அல் பத்தாஹ்வும் பங்காளியாக இருந்த) வருகை, பில்ஓ இயக்கம் இறுதியில் சியோனிச அலகை அங்கீகரித்தே தீரும் என அது அன்றே எச்சரித்தது.
அந்தப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் பின்வருமாறு :
“எங்களுக்கு இஸ்லாத்தைக்கொண்டு அருள்புரிந்து ,எங்களது செயற்பாடுகளின் அளவுகோலாக ஹராம் , ஹலாலை ஆக்கிய அல்லாஹ் (சுபு )க்கு எல்லாப்புகழும் ! அல்லாஹ் இப்பூமிக்கு வழிகாட்டலுடனும் , எல்லா தூதுவர்களுக்கும் தலைவராகவும் ,இறுதி நபியாகவும் அனுப்பிவைத்த முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக !
“அஹமத் அல் சுஹைரியால் தலைமைதாங்கப்படும் பாலஸ்தீன “விடுதலை” முகவர் (அமைப்பு) நிறுவப்படுகின்ற நோக்கமானது மேற்கு கரையை ஜோர்தானிலிருந்து பிரித்தெடுத்து அங்கு அல் குத்சையும், (பைத்துல் லஹமையும்) உள்ளடக்காத இன்னுமொரு சுயாதீன அரசை தோற்றுவிப்பதென்பது சந்தேகத்திடமின்றி நிரூபணப்படுத்தப்பட்டுள்ளது. (இது ஜோர்தானின் மன்னன் மேற்கு கரையை ஒப்படைக்கும் முன்பு). இது அல்லாஹ் (சுபு) வின் முஸ்லிம் நிலங்களின் ஒருமித்த தன்மை மற்றும் , ஒற்றுமை தொடர்பான கட்டளைக்கு எதிரான போக்காகும். ஆகவே இந்த விடுதலை முகவரமைப்பின் நோக்கம் ஹராமான, படு குற்றமான ஒரு பெரும்பாவத்தை செய்வதே ஆகும் “
1960, 1970,1980,1990 களிலிருந்து இன்றுவரை பலஸ்தீனப்பிரச்சனைக்கான ஷரீஆவின் நிலைப்பாடு குறித்து ஹிஸ்புத் தஹ்ரீரின் பிரசுரங்களின் ஊடாக உறுதியாக வெளிக்காண்பிக்கப்பட்டு வருவதோடு பாலஸ்தீன மண்ணில் நிறுவப்படும் குழுக்களின் நோக்கத்தையும் அவர்கள் எவ்வாறு காலனித்துவ சக்திகளின் முகவர்களாகவும் தொழிற்படுகின்றார்கள் என்ற உண்மை இந்த உம்மத்திற்கு தெளிவூட்டப்பட்டு வருகின்றன.
ஹமாஸ் உருவாக்கம் பெற்ற வேளை அவர்களும் பாலஸ்தீனின் கிழக்கு மற்றும் மேற்கை விடுவிக்கப்போவதாக தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டார்கள். பிற்பாடு அவர்களும் 1967 (1967 border)களின் நிலப்பிராந்தியத்துக்குள் சியோனிச அரசுடன் இணைந்த பாலஸ்தீன் அரசு என்ற சிந்தனையை சரிகண்டு ஏற்றுக்கொண்டார்கள் .
சிலுவையுத்தக்காரர்கள் பாலஸ்தீனை ஆக்கிரமித்து இருநூறு வருடகால இராஜ்ஜியத்தை கொண்டிருந்தார்கள். ஆனால் அன்றைய முஸ்லிம்கள் இன்றுள்ள அரபுத்தலைமகள், பாலஸ்தீன தலைமகள் போன்று அவர்களோடு சமாதன ஒப்பந்தம் கைச்சாத்திடவுமில்லை, ஒரு அங்குல நிலத்தை விட்டுக்கொடுக்க்கவுமில்லை.
முஸ்லிம்கள் இறுதிவரை அவர்களுடன் சண்டையிட்டு தங்களது நிலங்களை விட்டு துரத்தியடித்தார்கள். அஷ்ஷாமில் இருந்த அவர்களது இராஜ்ஜியங்களை துவம்சம் செய்தார்கள் . ஜெருசலத்தையும் பாலஸ்தீனத்தையும் விடுவித்தார்கள் .
பாலஸ்தீனில் இரண்டு அரசுகளை(Two state solution) அங்கீகரித்தலோ, அல்குத்ஸ் இணைந்திருத்தல் அல்லது பிரிந்திருத்தல் என்பதோ இஸ்லாத்தின் பார்வையில் சியோனிச இராச்சிய இருப்பை ஒருபோதும் நியாயப்படுத்தாது. மேலும் ஹமாஸ் மற்றும் ஏனைய அரபு முஸ்லிம் அரசுகளின் நிலைப்பாடுகள் இஸ்லாத்தினையோ முஸ்லிம்களையோ பிரதிநிதித்துவம் செய்பவை அல்ல. பாலஸ்தீன் இந்த முஸ்லிம் உம்மத்திற்கு சொந்தமான அல்லாஹ்வால் அருள்பாளிக்கப்பட்ட பூமியாகும். அதனை எவரது குறுகிய நோக்கங்களுக்காகவும் தாரைவார்க்க முடியாது.
அல்குத்ஸ் என்றால் அது பூரண அல்குத்ஸ் தான். காலநித்துவ ஐக்கிய நாடுகள்கூறும் அதன் கிழக்குப்பகுதி மாத்திரமல்ல. அல்குத்ஸ் உற்பட மொத்த பாலஸ்தீனையும் நினைத்த மாதிரி சொற்பக் கிரயத்திற்கு விற்பதற்கு பத்தாவுக்கோ அல்லது ஏனைய பாலஸ்தீன குழுக்களுக்கோ அதிகாரம் கிடையாது. அது அவர்களுக்கு சொந்தமான பூமியல்ல. அல்லது தங்கள் மேற்கு எஜமானர்களை திருப்திப்படுத்த சியோனிஸ்டுக்களுக்கு கைச்சாத்திட்டு கொடுக்க ஊழல்மிக்க அரபு தேசிய அரசுகளுக்கு சொந்தமான இடமோ அல்ல . பாலஸ்தீன் அல் குர்ஆனிலும் சுன்னாவிலும் குறிப்பிடப்பட்ட புனித பூமி, அது உமர் (ரழி ) அவர்களுக்கு கிருஸ்துவத்தலைமைகளால் அவர்கள் மீது இஸ்லாமிய நீதியை பிரயோகிக்கும் வண்ணம் ஒப்படைக்கப்பட்ட பூமியாகும் .
இது பாலஸ்தீன்!! இதன் விடுதலை அமெரிக்காவுடன் கைகோர்த்து, சியோனிசஸ்டுக்களிடம் பேரம்பேசி பெறும் இரட்டை அரசு தீர்வில் அல்ல. 1967 அன்று ஆக்கிரமிக்கப்பட்ட சான் அளவு பாலஸ்தீனமாக இருந்தாலும் சரி 1948யில் ஆக்கிரமிக்கபட்ட சான் அளவு பாலஸ்தீன நிலமாக இருந்தாலும் சரி அவை இஸ்லாத்தின் பார்வையில் ஒன்றே. அர்துக்கானும்,அப்பாசும் கூறும் இந்த Redline, 1917லே பிரித்தானியாவின் சதிப்படி இஸ்லாமிய கிலாபாத்தை அழித்து, யூதக்குடிகளது தேசியமாக மாற்றியபோதே மீறப்பட்டுவிட்டது என்பதே இவர்கள் எம்மிடமிருந்து மறக்கடிக்க நினைக்கின்ற உண்மையாகும்.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَخُوْنُوا اللّٰهَ وَالرَّسُوْلَ وَتَخُوْنُوْۤا اَمٰنٰتِكُمْ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள்; நீங்கள் அறிந்து கொண்டே, உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்(அல்அன்பால்:27)