கடந்த செம்டெம்பர் 19ம் திகதி தனது அண்டை நாடான வங்கதேசத்தை நோக்கி நான்கு இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் இடம்பெயர்ந்திருப்பது குறித்து ஆங் சான் சூகி முதல் முதலில் கருத்துத் தெரிவித்திருந்தார். அவரது உரையில் இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்கள் குறித்தும் ஏனைய மக்கள் குறித்தும் தான் பெரும் “அக்கறை-Concern” கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மியன்மாரில் இராணுவ ஜுன்டாக்களின் ஆட்சி நீங்கி ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக போராடி, அதற்காக நோபல் பரிசும் பெற்ற சூகியின் ஆட்சியின் கீழ் ஐக்கிய நாடுகள் சபை கூட ‘இனச்சுத்திகரிப்பு – Ethnic Cleansing’ என வர்ணிக்கும் அளவுக்கான பாரிய இடம்பெயர்வு நிகழ்ந்துள்ளமை சர்வதேச கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. அந்த நிலையிலேயே இந்த உரையில் அவர் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் முக்கியத்துவம் பெருகின்றன.
மேலும் அவரது உரையில் நடந்தேறியிருக்கின்ற சம்பவங்களுக்காக “மியன்மார் அரசாங்கத்தை குற்றம் சாட்டவோ அல்லது பொறுப்பிலிருந்து விடுவிக்கவோ விருப்பமில்லை.” எனவும், ரோஹிங்கியா நெருக்கடி மீதான “சர்வதேச கண்காணிப்பு” குறித்து மியன்மார் பயப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் “கட்டுப்பாட்டைப் பேணுவதற்கும், மேலதிகமான சேதங்களை தவிர்ப்பதற்கும், பொதுமக்கள் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அதற்கான நடத்தை ஒழுங்குகளை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் “தனது நாடு கடந்த மாதத்தில் வன்முறையிலிருந்து தப்பியோடிய ரோஹிங்கியா மக்களின் நிலையை ஆராய்வதற்கும், மீள்குடியேற்றத்திற்கு தகுதியானவர்கள் மீண்டும் திரும்பி வருவதற்கான சூழலை சீர்தூக்கிப் பார்ப்பதற்கும் “எந்த நேரத்திலும்“தயார்நிலையில் இருந்தது” எனவும் தெரிவித்துள்ளார். (தகவல்: அல்ஜஸீரா)
எமது அவதானமும் கருத்தும்:
ஒரு காலத்தில் மேற்குலகின் போஸ்டர் பெண்ணாகவும், மனித உரிமைகள் சாம்பியனாகவும் பாராட்டப்பட்டு வந்த மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி மியன்மாரில் இடம்பெற்ற ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக காத்திரமான கருத்துக்களை முனவைப்பார் என எதிர்பார்த்தவர்களுக்கு அவரது உரை பாரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசின் முழுமையான அனுசரணையுடன் அதன் பாதுகாப்புப் படையினரால் சில வாரங்களாக தொடர்ந்து இடம்பெற்ற கண்மூடித்தனமான படுகொலைகள், ஈவிரக்கமற்ற கற்பழிப்புக்கள், வர்ணிக்கமுடியாத சித்திரவதைகளினால் சுமார் 50 இற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 400,000 க்கும் அதிகமான ரோஹிங்கிய முஸ்லிம்கள் வங்கதேசத்திற்கு அகதிகளாக தப்பிச்சென்ற மனித அவலம் குறித்து சூகி தெரிவித்த கருத்துகள், அவரின் சுயரூபத்தை இனம் காட்டியுள்ளது. அவரது உரை முழுக்க முழுக்க தனது பாதுகாப்புப்படையினரின் கோரத்தாண்டவத்தை மூடிமறைத்து அவர்களின் இரத்தக்கறை படிந்த கரங்களை கழுவுகின்ற முயற்சியாகவே இருந்தது என விமர்சகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அவரின் முழுமையான அரை மணிநேர உரையில் ‘ரோஹிங்கியா’ என்ற வார்த்தையைக்கூட, அவரது அரசால் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு காரணமானவர்கள் என்று தெரிவிக்கப்படும் அரகான் ரோஹிங்கிய மீட்புப்படை (ARSA) என்ற இராணுவக் குழுவின் பெயரைக் குறிப்பிடும்போது மட்டுமே தவிர, மேலதிகமாக ஒரு தடவையேனும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாபெரும் பங்கரவாதிகள் என சூகியின் அரசால் வர்ணிக்கப்படும் அரகான் ரோஹிங்கிய மீட்புப்படை பற்றி மியன்மாரிலிருந்து ஏற்கனவே நாடுகடத்தப்பட்டிருந்த புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலரான டாக்டர் மவுங் ஸார்னி கருத்து இங்கே முக்கியமானது. அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“மியன்மார் இராணுவம் தனது பாரியளவிலான பாதுகாப்பு சுத்திகரிப்பு நடவடிக்கையை முடுக்கிவிடுவதை நியாயப்படுத்துவதற்கான ஒரு சாட்டாக, கோபாவேசத்துடனுள்ள ரோஹிங்கிய இளைஞர்களைத் தூண்டும் விதத்தில் அவர்களுக்கு எதிராக உண்டாக்கிய “பொறிதான்” பேர்மிய இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுகளுடனும், சோதனைச் சாவடிகளுடன் தொடர்புபட்ட ஒரு பிராந்தியத்தில் எல்லைக் காவலரண்களை உருவாக்கியது.” என அவர் மிகத் தெளிவாக் கூறுகிறார்.
மேலும் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீள்குடியேறுவதற்கான செயல்முறைகளை தொடங்குவதற்கு அவர்களின் அடையாளத்தை பரிசீலனை செய்தல் பற்றி சூகி தெரிவித்த கருத்து பற்றி மவுங் சார்னி கூறுகையில்,
“சூகி சர்வதேச அழுத்தத்தைத் ஒத்தி வைப்பதற்கான காலம் தாழ்த்தும் நடவடிக்கைiயாகவே அதனை மேற்கொண்டு வருவதுடன், அதிலே அவர் நேர்மையானவராக இல்லை. ஏனெனில் தம்மை அடையாளப்படுத்தும் பொறிமுறை என்பது ஒவ்வொருவரும் தமது அடையாள அட்டைகளை காட்டுவதன் மூலமாகவே மேற்கொள்ள முடியும். எனினும் 99% ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு அடையாள அட்டை இல்லாத நிலையே உள்ளது. ஏற்கனவே அரசாங்கம் அவர்களது அடையாள அட்டைகளை பறிமுதல் செய்து அவற்றை மதிப்பிழக்கச் செய்து விட்டது.” என விளக்கி சூகியின் அரசாங்கத்தின் பித்தலாட்டத்தனங்களை மிகக்கடுமையாக விமர்சிக்கிறார்.
சரி, ரோஹிங்கிய முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்புக்கு சூகியை மாத்திரம் நாம் குற்றம் சாட்ட முடியுமா? அவ்வாறானால் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் முதுகெழும்பற்ற முஸ்லிம் ஆட்சியாளர்களின் நிலை பற்றி என்ன சொல்வது? ஏனைய முஸ்லிம் அல்லாத உலக நாட்டுத் தலைவர்களினதும் நிலை பற்றி என்ன சொல்வது? இந்த இனப்படுகொலையும், இனச்சுத்திகரிப்பும் சத்தமில்லாமல் அரங்கேறிக் கொண்டிருந்த வேளைகளில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலற்ற மந்த நிலை பற்றி என்ன கூறுவது? சம்பந்தமில்லாத சம்வங்களையெல்லாம் தீவிரவாதமாகச் சித்தரிக்கும் சர்வதேச ஊடகங்கள் மியன்மார் விசயத்தில் அடக்கி வாசித்த இரட்டை வேடம் பற்றி என்ன கூறுவது?
ஷார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின்னர் உலக நாட்டுத்தலைவர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர்? 12 பேர் மாத்திரம் கொல்லப்பட்ட அச்சம்பவத்திற்காக பெரும்பெரும் உலகத்தலைகள் எல்லாம் பிரான்சுடன் கைகோர்த்து நின்று, பேரணி சென்று அந்த சம்பவத்தை ஒரு காட்டுமிராண்டித்தனமான சம்பவமாக வர்ணித்து, அதனை வண்மையாகக் கண்டித்து, இத்தகைய தாக்குதல்களுக்கு காரணமான பயங்கரவாதத்தை தாம் பிரான்ஸிய மக்களுடன் தோலோடு தோல் நின்று எதிர்கொள்வோம் என சூலுரைத்ததை நீங்கள் இன்னும் மறந்திருக்க மாட்டீர்கள்!
இரு வளைகுடா யுத்தங்களினாலும், ஐ.நா பாதுகாப்பு சபையின் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக விதிக்கப்பட்ட கடுமையான பொருளாதாரத் தடையினாலும் 5 இலட்சத்திற்கும் அதிகமான உயிர்களை ஏற்கனவே பரிகொடுத்திருந்த ஈராக்கின் மீது, அங்கே மனிதப்பேரழிவுக்கான ஆயுதங்கள் இருப்பதாகக் கதை புணைந்து அமெரிக்க – ஆங்கிலப்படைகள் படையெடுத்ததும், அதனை ஏனையோர்கள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததையும் நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம்!
எனினும் இன்று மியன்மாரின் என்ன நடக்கின்றது? அங்கே பயங்கரவாதத்திற்கு பாடப்புத்தக விளக்கமாக, கொத்து கொத்தான கொலைகளும், சித்திரவதைகளும், கொடூரமான கற்பழிப்புகளும் கண்ணுக்கு முன்னே இடம்பெற்று வருகின்ற போது கூட கிழக்கிலும் மேற்கிலும் உள்ள உலகத்தலைமைகள் முண்டியடித்து முன்வந்து இது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை என்றோ, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கு எதிரான தாக்குதல் என்றோ, பயங்கரவாதத்தின் உச்சகட்டம் என்றோ பறை சாட்டவில்லையே!
இத்தலைவர்கள் எவரும் வீதிக்கு வந்து, ஒன்றாகக் கைகோர்த்து நின்று, பேரணி சென்று இத்தகைய பயங்கரவாத்தை தடுத்து நிறுத்த திடசங்கற்பம் பூணவில்லையே! ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு தத்தமது நாடுகளில் அபயமளிக்க தயார் என்றோ அல்லது மியன்மார் அரசுக்கு எதிராக கூட்டிணைந்து போராடத்தயார் என்றோ சூலுரைக்கவில்லையே!
ஐ.நாவின் கூற்றுப்படியே அங்கே நடப்பது இனச்சுத்திகரிப்பென்றால், அங்கே நடப்பது இனப்படுகொலைகள் என்றால் இந்த நேரத்தில் மாத்திரம் பொருளாதாரத் தடைகளுக்கு அவசியமில்லையா? குறைந்தது மியன்மார் மீது தடை விதிப்பதற்கான ஒரு முன்மொழிவைத்தானும் ஐ.நா ஏன் இன்னும் பிரேரிக்கவில்லை?
இந்த நேரத்தில் மாத்திரம் ஏன் அமெரிக்க-ஆங்கிலப் படைகளின் அல்லது பயங்கரவாத்திற்கு எதிரான சர்வதேச இராணுவக் கூட்டணிகளின் இராணுவத் தலையீடுகள் இடம்பெறவில்லை?
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற எவ்வித வேறுபாடுமின்றி ஆயிரக்கணக்கான அப்பாவி ரோஹிங்கியா முஸ்லிம்கள் பௌத்தப் பயங்கரவாதிகளின் கைகளினால் கண்மூடித்தனமாக படுகொலை செய்யப்பட்ட காட்சிகளை அணுவணுவாக அவதானித்து வந்த சர்வதேச ஊடகங்கள் எவையும், ‘பௌத்தமதம்’ ஒரு பயங்கரவாத மதம் என்றோ அல்லது ‘பௌத்தர்கள்’ உலகமகா தீவிரவாதிகள் என்றோ அல்லது பௌத்தர்கள் மனிதகுலத்திற்கும் எதிரான பாரிய அச்சுறுத்தல் என்றோ ஏன் செய்திகள் வெளியிடவில்லை?
முழு உலகினதும் இந்த இரட்டை நிலைப்பாட்டுக்கு அடிப்படைக் காரணம் என்ன என்பதை உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
சரி, எமது அவலங்கள் இன்றுவரை தீர்க்கப்படாமல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து செல்வதற்கான காரணம் என்ன? எமது தலைமைகளும், முழு உம்மத்தும் என்ன செய்து கொண்டிருக்கிறது?
துரதிஷ்டவசமாக முதுகெழும்பற்ற முஸ்லிம் உலகத்தலைமைகள் உம்மத்தின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடம் மண்டியிட்டு காத்திருப்பதே அல்லது காத்திருப்பது போல் நடிப்பதே பாரம்பரியமாக மாறிவிட்டது. எனினும் ஐக்கிய நாடுகள் சபையோ ஒவ்வொரு முறையும் உம்மத்தின் முதுகில் குத்தியதும், துரோகமிழைத்ததுமே வரலாறு என்பதை நன்றாக உணர்ந்திருந்தும் கூட அதனையே உம்மத்தின் முன் அவர்கள் தீர்வாக முன் வைக்கிறார்கள். அல்லாஹ்(சுபு) யூதர்களையும், கிருஸ்தவர்களையும் உங்களது உற்ற தோழர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனக் கண்டிப்பாக கட்டளையிட்டிருந்தும் கூட அமெரிக்கா, பிரித்தானியா, ரஸ்யா, இஸ்ரேல், சீனா அல்லது இந்தியா போன்ற இஸ்லாத்தின் தீவிர எதிரி நாடுகளையே எமது தலைவர்கள் தமது உற்ற நண்பர்களாகவும், பாதுகாவலர்களாகவும் எடுத்துக்கொண்டுள்ளனர். இந்நிலை தொடரும் வரை எவ்வாறு நாம் எமது அவலங்களிலிருந்து மீள்வது?
எமது தலைமைகளில் இன்னுமொரு சாரார் இருக்கின்றனர். அவர்கள் உலகமகா நடிகர்கள். ஒஸ்கார் விருதுக்கு மேல் ஒரு விருதை இவர்களுக்காக மாத்திரம் தயார்படுத்த வேண்டும். இத்தகைய கட்போர்ட் வீரர்களினதும், கதை மன்னர்களினதும் முதலைக்கண்ணீர் இரசாயனக் குண்டுகளை விட ஆபத்தானவை. உம்மத்தின் ஒரு சிறந்த பகுதியினர் இந்த கானல் நீர் கதாநாயகர்களின் பின்னால் செல்லும் வரையும் உம்மத்திற்கு விமோசம் கிடைக்காது. எனவே அது குறித்தும் உம்மத் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
எனவே ரோஹிங்கியா முஸ்லிம்களுக்காக நீழிக்கண்ணீர் வடிக்கின்ற முஸ்லிம் தலைமைகள் மீதும், மேற்குலகத் தலைவர்களின் வெற்று வாக்குறுதிகள் மீதும், ஐ.நாவின் கபட நாடங்களின் மீதும், குறிப்பாக ஆங் சான் சூகி தனது பாதுகாப்புப்படையினர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக நியமிப்பதாகச் சொல்லும் ‘தேசிய விசாரணைக்கொமிஷன் – National enquiry commission’ மீதும், ரோஹிங்கிய முஸ்லிம்களை வங்கதேசத்திலிருந்து திருப்பி அழைப்பதற்கான ‘அடையாள உறுதிப்படுத்தல் பொறிமுறை ‘Verification process’ மீதும் நம்பிக்கை வைத்து முட்டாளாகாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மாறாக முஸ்லிம்கள் தமது விழிகளை அகலமாகத் திறந்து வைத்த நிலையில் அல்லாஹ(சுபு)வின் மீதும், அவனது வாக்குறுதியின் மீதும் மாத்திரமே முழுமையாக நம்பிக்கை வைக்க வேண்டும்.
وَمَنْ يَتق الله يجْعَلْ لَهُ مَخْرَجاً
எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.(65:2)
அல்லாஹ்(சுபு)வின் வாக்குறுதிக்கு இணங்க இந்த உம்மத் மிகச் சீக்கிரத்தில் இரண்டாவது கிலாஃபா அர்ராஷிதாவை இந்த உலகில் நிலை நாட்டும். அந்த அல்லாஹ்(சுபு)வின் அரசு அதன் வலிமைமிக்க இராணுவத்தை உலகின் எல்லா மூலைகளுக்கும் அனுப்பி அடக்குமுறைக்குட்பட்ட அனைத்து மனிதர்களையும் விடுவிக்கும். அப்போது ரோஹிங்கியா முஸ்லிம்கள் மாத்திரமல்லாது, சிரியா, ஈராக், உய்குர், செச்னியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, பலஸ்தீன் மற்றும் காஷ்மீர் போன்ற அனைத்து பிராந்திய முஸ்லிம்களும் கொடிய குஃப்பார்களின் கரங்களிலிருந்து அந்த பிராந்தியங்கள் உள்ளடங்களாக மீட்கப்படுவார்கள். அது வரையில் ஆழ்ந்த அரசியல் விழிப்புணர்வுடனும், அசைக்க முடியாத தவக்குலுடனும் நாம் நிலைகுழையாமல் பயணிக்க வேண்டும் என்பதே உம்மத்தின் அதியுயர் கடப்பாடாகும். இன்ஷா அல்லாஹ்!