ஒரு முஸ்லிம் எவ்வாறு மறுமலர்ச்சிக்காக போராடுவது? முதலில் அவர் இஸ்லாமிய சித்தாந்தத்தை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். இஸ்லாமிய சித்தாந்தத்தை விளங்குவதென்றால் என்ன?
அதாவது முதலாளித்துவத்துக்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான வேறுபாட்டை மிகவூம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். மனித வாழ்வை நெறிப்படுத்த இஸ்லாம் எவ்வாறு ஒரு வாழ்க்கை நெறியாக, முறைமையாக செயற்படவல்லது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மாறாக இஸ்லாத்தை வணக்கமும், வழிபாடுகளும் நிறைந்த சமயமாக மாத்திரம் நோக்கும் பார்வை மாற்றப்பட வேண்டும்.
இரண்டாவது, இஸ்லாத்தை ஒரு சித்தாந்தமாக விளங்கிக் கொண்டதன் பின்னால் மக்கள் மத்தியில் இஸ்லாம் தொடர்பாகவூள்ள பிழையான விளக்கங்களை மாற்றி, அது ஒரு சித்தாந்தம் என்ற நிலைப்பாட்டிற்கு அவர்களை கொண்டு வரவேண்டும். அதற்கான பிரச்சாரத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் இஸ்லாம் தொடர்பான வலிமையான, தெளிவான, ஆழமான புரிதல் மக்கள் மத்தியில் ஏற்படும்;. பிழையான பலகீனமான, முரண்பாடான புரிதல்கள் அவர்களிடமிருந்து களையப்படும். அல்லது திருத்தப்படும். இஸ்லாமிய சித்தாந்ததிற்கான பிரச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வினைத்திறனுடன் மேற்கொள்ளப்பட்டால் சமூகத்துக்கு மத்தியில் இஸ்லாமிய அரசு நிறுவப்படும் நிலை இயல்பாகவே ஏற்படும். அதன் மூலமாக நாம் எதிர்பார்க்கும் மறுமலர்ச்சியை அடைவது சாத்தியமாகும்.
மூன்றாவது, மறுமலர்ச்சிக்காக உழைப்பதற்கு கூட்டமைப்புக்கள் அல்லது இயக்கங்கள் தேவை. இந்த இயக்கங்கள் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை, சவால்களை மேற்கோள் காட்டி அவற்றை இஸ்லாமிய சிந்தனையூடன் தொடர்ந்தர்ச்சையாக தொடர்புபடுத்துவதன் மூலம் இஸ்லாமிய சிந்தனையின்பால் மக்களை அழைக்க வேண்டும். இப்பணி இயல்பில் அரசியல் பணியாக இருக்க வேண்டும். இந்த இயக்கங்கள் இந்தப்பணி தனிநபர்களை சீர்திருத்தம் செய்தல், கல்வி நிறுவனங்களை நிறுவி போதித்தல், இலக்கியப்படைப்புக்களை(புத்தங்களை, சஞ்சிகைகளை) வெளியிடுதல், மேலெழுந்த ரீதியாக பொதுவான அடிப்படையில் நன்மைகளின் (ஹைராத்கள்) பால் அழைத்தல் போன்ற செயற்பாடுகளை மையப்படுத்தி இயங்குதல் மறுமலர்ச்சியை நோக்கி எம்மை அழைத்துச் செல்லாது என்பதை ஐயமற தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கே அரசியல் பணி என்பது ஆட்சியாளர்களின் மோசடிகளையூம், மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையூம் இஸ்லாமிய சிந்தாந்தத்தின் அடிப்படையில் கேள்விக்குற்படுத்துவதாகும். உதாரணமாக பாகிஸ்தானை எடுத்துக்கொண்டால் அங்கே எரிவாயூவின் விலை எல்லையற்றமுறையில் உயர்ந்து செல்வது, அமரிக்க உளவமைப்பு எப.;பி.ஐ இன் அலுவலகங்கள் நிறுவப்படுவது, அமரிக்க இராணுவ முகாம்களை பாகிஸ்தானுக்குள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை, காஸ்மீர்; விவகாரத்தில் செய்யப்பட்டு தொடர்ச்சியான துரோகங்கள் போன்ற அரசியல் விடயங்கள் அடையாளப்படுத்தி விவாதிப்பதை உதாரணங்களாகக் கொள்ளலாம்.
மறுமலர்ச்சிக்காக உழைக்க விரும்பினால் இந்த விடயங்கள் குறித்து நாம் கலந்துரையாடும்போது இந்தப்பாரிய பிரச்சனைகள் அனைத்தும் இஸ்லாம் ஒரு சித்தாந்தமாக நடைமுறையில் இல்லாததாலும், குப்ரின் ஆட்சி இஸ்லாமிய கிலாஃபாவூக்கு பகரமாக நீண்டகாலமாக எமது நிலங்களில் நிறுவப்பட்டு இருப்பதாலுமே நீடிக்கின்றன என்ற அடிப்படை உண்மையை மையப்படுத்தியே எமது அழைப்பு அமைய வேண்டும். இஸ்லாத்தை ஒரு சித்தாந்தமாக திரும்பத் திரும்ப முன்வைப்பதன் மூலம் முழு வாழ்க்கை தொடர்பான இஸ்லாத்தின் பார்வை சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் சிந்தனையாக மாற்றப்பட வேண்டும்.
இந்த அழைப்புப்பணி அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும். ஏனெனில் இஸ்லாத்தின் சிந்தனைகளும், சட்டங்களும் வாழ்க்கை விவகாரங்களில் நடைமுறையில் அமுல்படுத்தப்படாதவரை அது மக்களை மாற்றும் விடயத்தில் திறன்படச் செயற்படாது. குறிப்பாக ஒரு சமூக மாற்றம் குறித்து சிந்திக்கும்போது இவ்விடயம் மிகவூம் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். அழைப்புப்பணி, மக்கள் தாம் இன்று கொண்டுள்ள சிந்தனைகளைக் கைவிட்டு, அதற்கு பகரமாக இஸ்லாமிய சிந்தனைகளை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளும் அழுத்தத்தை பிரயோகிக்கும் வண்ணம் அமைய வேண்டும். இதன் அர்த்தம் தனிநபர் சீர்திருத்தத்தை, தனிநபர்களை புடம்போடும் பணியை அலட்சியம் செய்வதல்ல. மாறாக இஸ்லாமிய சித்தாந்தம் தனிநபர்களில் மிக ஆழமாக பாதிப்பை ஏற்படுத்தாத நிலையில் அவர்கள் சமூகத்தை நோக்கி இவ்வழைப்பை கொண்டு செல்ல முடியாது. இந்த உண்மையை ரஸூல்(ஸல்) அவர்களின் வழிகாட்டலில் நாம் தெளிவாகக் காணலாம். மக்கள் அவரது(ஸல்) தூதை விளங்கினார்கள். அதனை முழுமையாக உள்வாங்கிக் கொண்டார்கள். தூது அவர்களிடம் ஆணித்தரமாக பதிக்கப்பட்டது. அவர்கள் தலை கீழாக மாறினார்கள். அவர்கள் அந்த தூதை ஏனையவர்களிடம் காவிச்சென்றதுடன் முழு மக்கா சமூகத்துக்கும் அந்தத் தூதை எத்தி வைக்க ஒரு இயக்கமாகச் செயற்பட்டார்கள்.
எனவே மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென்றால் தனிநபர்களை இஸ்லாமிய சித்தாந்தத்தை ஆழமாக புரிந்து ஜீரணித்துக்கொண்ட நிலைக்கு உருவாக்க வேண்டும். பின் அவர்கள் இயக்கமாக இணைந்து மறுமலர்ச்சியூடன் தொடர்பான விவகாரங்களை முன்நிறுத்தி பணியாற்ற வேண்டும். இத்தகைய இயல்புகளைக் கொண்ட அழைப்புப் பணி பல தசாப்தங்களாக உலகில் இடம்பெற்று வருவதால் அது மிக விரைவில் கிலாஃபா ராஸிதாவை உதயமாக்க வேண்டும் என நாம் அல்லாஹ்வை பிரார்த்திப்போம். அந்த கிலாஃபாவின் ஊடாக அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் எமது உம்மத் மீண்டும் மறுமலர்ச்சி அடையூம் காலம் கணிந்து வரட்டும். இன்ஷா அல்லாஹ்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تَنصُرُوا اللَّهَ يَنصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்”(47:7)