புதிய யுத்த நிறுத்தம் ஒன்றை ரஸ்யா சாத்தியப்படுத்தினாலே ஒழிய சிரியாவின் இரண்டாவது பெரும் நகரமான அலெப்போ ‘சிற்சிறு துகள்களாக’ சிதைக்கப்படும் ஆபத்தை தவிர்க்க முடியாது என சென்ற திங்கள் கிழமை (31/10/2016) ஜொன் கெரி தனது பிரித்தானிய விஜயத்தின்போது கூறியிருந்தார்(தி காடியன் – 01/11/2016).
ரஸ்யா மத்தியதரைக் கடற்பரப்பிற்குள் தனது கடற்படை மீள் வலுவூட்டலுக்காக இராணுவக் களங்களை நகர்த்தியிருக்கும் நிலையில் அலெப்போவில் இதுவரை காணாத பாரிய தாக்குதலை அது மேற்கொள்ளவிருக்கிறது என பல அவதானிகள் கூறியிருக்கும் நிலையிலேயே ஜோன் கெரியும் இந்தக் கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இரண்டாவது முறையாகவும் அலெப்போவை முற்றுகைக்குள் கொண்டு வந்திருக்கும் சிரிய இராணுவத்தின் நிலைகளை உடைத்தெறிந்து அலெப்போவுக்குள் அகப்பட்டுள்ள 250,000 இற்கும் மேற்பட்ட பொது மக்களை பாதுகாப்பதற்கான முற்றுகை முறிப்புச் சமரில் சிரிய எதிரணிப்படைகள்(முஜாஹிதீன்கள்) சென்ற வெள்ளிக் கிழமை தொடக்கம் ஈடுபட்டு வருகின்றனர். மறுபக்கத்தில் முற்றுகையை தக்க வைத்துக்கொள்வதற்கான பலந்த பிரயத்தனத்தில் சிரிய அரச படைகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அண்மிய காலம் வரை அலெப்போவில் ரஸ்யா மிக மூர்க்கத்தனமான விமானத்தாக்குதல்களில் ஈடுபட்டு வந்திருந்தாலும் இந்த இரண்டாவது முற்றுகையைத் தொடர்ந்தும், ஒருதலைப்பட்சமாக அறிவிக்கப்பட்டிருந்த யுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்தும் தனது தாக்குதல்களின் வீரியதை குறைத்திருந்தது. எனினும் யுத்த நிறுத்ததை ஏற்றுக்கொள்ளத அலெப்போ போராளிகளின் நிலைப்பாட்டின் விளைவாக மிகப்பாரிய தாக்குதல் நடிவடிக்கை ஒன்றுக்கு ரஸ்யா ஏற்கனவே தயாராகி வருகின்றது என்பதை கள அசைவுகள் காட்டுகின்றன.
கடந்த இரு வாரங்களாக நாம் விமானத்தாக்குதல்களில் ஈடுபடவில்லை என அறிவித்திருக்கும் ரஸ்யா இனிமேல் தம்மாலான அனைத்து வழிகளிலும் போராடத் தயாராக இருப்பதாக தெரிவித்திருப்பது அதற்கான சமிக்ஞைதான். மேலும் ரஸ்யாவின் இந்த நிலைப்பாடும் எதிர்பார்க்கப்பட்டதுதான்.
எது எப்படியோ இதுவரை அலெப்போ மிகப்பலத்த தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளது. இனிமேலும் அதிலே பாரிய மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை. சிரிய-ரஸ்ய விமானப்படைகளின் குண்டுகள் அந்நகரை ஏறத்தாழ சுடுகாடாக மாற்றி விட்டன. அவர்கள் வகை வகையான குண்டுகளை பாவித்து பார்த்து விட்டார்கள். இதுவரை பாவிக்காத குண்டு வகைகளையும் சோதிக்கும் ஆய்வு கூடமாக அலெப்போ மாறியிருக்கிறது. உதாரணமாக இலக்கைத்தாக்கும் வரைக்கும் எந்தவொரு சத்தத்தையும் ஏற்படுத்தாத அமைதி ஏவுகணையை(Silent Missiles) ரஸ்யா, அங்கேதான் அண்மையில் சோதித்துப் பார்த்தது.
மக்கள் குடிமனைகள், சந்தைகள், மருத்துவமனைகள், பள்ளிவாசல்கள் என எதனையும் விட்டு வைக்காது மக்களுடன் சேர்த்து அனைத்தையும் துவம்சம் செய்கின்ற கொடூரத் தாக்குதல்களுக்கு அலெப்போ பழகிப்போய்விட்டது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பாகுபாடில்லாது அனைவரையும் உள்ளடக்கிய பாரிய மனிதப்படுகொலைகள் அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்க முழு உலகும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலை. இந்த மனித அவலத்தை தடுத்து நிறுத்துவதன் பால் குவிய வேண்டிய ஊடகக் கவனம் சிரியா விடயத்தில் அமெரிக்காவும், ரஸ்யாவும் மோதிக் கொண்டிருக்கிறார்கள் என்ற போலியான தோற்றப்பாட்டை சுற்றி சூழன்று கொண்டிருக்கின்றன. ரஸ்யா நடாத்துகின்ற தாக்குதல்கள் ஏதோ அமெரிக்காவை மீறி இடம்பெறுவதைப்போன்ற ஒரு காட்சி தோற்றுவிக்கப்படுகிறது.
எனினும் உண்மை இதற்கு நேர் எதிரானது. 29/09/2015 இல் வாசிங்டனில் ஒபாமாவுடன் புடின் மேற்கொண்ட பேச்சுக்களைத் தொடர்ந்தே மறுநாள் 30/09/2015 இல் ரஸ்யா சிரியா மீதான தாக்குதலை ஆரம்பித்தது. அன்றிலிருந்து இன்று வரை வாசிங்டனும் – மொஸ்கோவும் நெருங்கிய கூட்டுறவுடன் தான் இந்த தாக்குதல்கள் அனைத்தையும் செய்கின்றன என்பதை அவர்களின் தாக்குதல் நடவடிக்கைகள் தொடக்கம், அரசியல் பேச்சுக்கள் வரைக்கும் மிகத் துல்லியமாகக் காட்டுகின்றன.
தந்தை ஹாஃபிஷ் அல் அஷதுடைய காலத்திலிருந்து சிரியா அமெரிக்க முகவரகாக செயற்பட்டு வந்தது அரசியல் ஞானமுடைய அனைவருக்கும் தெரியும். எனவே புரட்சியின் விளைவால் ஒருவேளை பஷார் அல் அஷத் தூக்கி வீசப்படும்போது தன் சார்பான ஆட்சியொன்றை அங்கே ஸ்தாபித்துவிட வேண்டும் என்ற விடயத்தில் அமெரிக்கா ஆரம்பம் முதலே மிகக் கவனமாக செயற்பட்டு வந்தது. ஐரோப்பாவைக் கூட அந்த களத்துக்குள் நுழைவதற்கு அமெரிக்கா இடம்கொடுக்கவில்லை. எனினும் அரைச் தசாப்பத்தைத்தாண்டியும் அமெரிக்காவால் அதனைச் சாத்தியப்படுத்த முடியவில்லை.
பஷாரின் சரிவை தடுத்து நிறுத்துவதற்கு அமெரிக்கா பாவித்த முதலாவது துரும்பு ஈரான். ஈரான் தான் நேரடியாகவும், தனது பூரண செல்வாக்குடன் இயங்கும் ஹிஸ்புல்லாஹ்வினூடாகவும் பஷாருக்கு இறுதி வரை உதவிப்பார்த்தது. எனினும் மக்களின் தியாகத்திற்கும், உறுதிக்கும் முன்னால் ஈரானின் உதவி பஷாருக்கு கைகொடுக்கவில்லை. உடனே அமெரிக்கா பஷாரின் உடனடிச் சரிவை சரிசெய்யும் தனது அடுத்த காய்நகர்த்தலாக ரஸ்யாவை களத்துக்குள் இறக்கியது. ரஸ்யா தனது வழமையான பாணியில் மிக மூர்க்கத்தனமாக சிரிய முஸ்லிம்களை கொன்றழிக்க ஆரம்பித்தது. அது தனது தரை மற்றும் கடற் தளங்களைப் பாவித்தும், ஏவுகணை மற்றும் வான்வெளித்தாக்குதல்களைக் கொண்டும் மிகக்கடுமையான தாக்குதல்களை மக்கள் மீதும் கிளர்ச்சியாளர்கள் மீதும் மேற்கொண்டது. ரஸ்யாவின் தாக்குதல்கள் பாரிய சேதத்தை ஏற்படுத்தியதும், அது போராளிகளுக்கு பெரிய பலப்பரீட்சையாக இருந்தது என்பதும் உண்மையென்றாலும், ரஸ்யாவால் அவர்களை அடிபணியச் செய்ய முடியவில்லை. குறிப்பாக அலெப்போவில் ரஸ்யாவின் உதவியோடு சிரிய அரசு மேற்கொண்ட முற்றுகையை 26/07/2016 இல் முஜாஹிதீன்கள் உடைத்தெறிந்த விதம் ரஸ்யாவுக்கும், அதன் பின்னணியில் நின்று இயக்கிய அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனவே அலெப்போ மக்களுக்கும், போராளிகளுக்கும் பாடம் புகட்டி அவர்களின முதுகெழும்பை உடைப்பது மொத்த சிரியப்புரட்சியையும் நசுக்குவதற்கு அடிப்படையானது என்ற ஒரு கருத்துக்கு அவர்கள் வந்தார்கள். எனவே அதனைச் சாத்தியப்படுத்த அலெப்போ இதுவரை காணாத தாக்குதல்களை மேற்கொண்டு அதன் ஆன்மாவை பலகீனப்படுத்துவது. அதனை மீண்டும் பூரண முற்றுகைக்குள் கொண்டு வருவது. அவை ஏற்படுத்தும் தாங்க முடியாத அழுத்தத்தினால் புரட்சியாளர்களை அமெரிக்கா விரும்பும் அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களுக்குள் நுழைவிப்பது என்பதுதான் அவர்களின் திட்டம்.
ரஸ்யா, ஈரான் மற்றும் அதன் கூலிப்படைகளைக் கொண்டு மீண்டும் அலெப்போவை முற்றுகைக்குள் கொண்டு வருவதற்கான தீவிரமான போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இது போதாதற்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் முக்கிய முகவரான துருக்கி, முஜாஹிதீன்கள் மத்தியில் இருந்த தனது ஆதரவுப்படைகளை அலெப்போ சமர் முனையிலிருந்து வெளியேற்றி ஜரப்லொஸ் முனையை நோக்கி நகர்த்தியதன் ஊடாக மிக முக்கியமானதொரு தருணத்தில் அலெப்போ புரட்சியாளர்களை கைவிட்டது. விளைவு, ஏற்கனவே வளப்பற்றாக்குறையுடன் இருந்த போராளிகளின் அலெப்போ முனை மென்மேலும் பலகீனப்பட்டது. இந்த காய்நகர்த்தல்கள் அனைத்தும் இணைந்து இறுதியில் 04/09/16 இல் அலெப்போ மீண்டும் பஷாரின் முற்றுகைக்குள் வந்தது.
“மேலும் சிரிய அரச படைகள் அலெப்போவின் எதிரணியினரின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை மீண்டும் முழுமையான முற்றுகை இட்டனர். சென்ற மாதம் ஆறாம் திகதிக்கு முன்னர் இருந்த நிலையை அது மீண்டும் தோற்றுவித்துள்ளது…” ( அல்அரபி அல் ஜதீத் 04/09/2016)
அமெரிக்கா திட்டமிட்டதற்கு இணங்க மிகக் கொடூரமான தாக்குதல்கள், மீண்டும் முழுமையான முற்றுகை, என்பவற்றுக்குள் அகப்படும் மக்களின் ஆன்ம பலம் இலகுவில் உடைக்கபட்டுவிடும் என எல்லோரும் எதிர்பார்த்தனர். அந்த நம்பிக்கையுடன் 12/09/2016 ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தமொன்று அறிவிக்கப்பட்டது. நீழிக்கண்ணீர் வடித்துக் கொண்டு மக்கள் ஓரிரு பாதைகளினூடாக அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்து தம்மை முற்றுகைக்குள் இருந்து விடுவித்து கொள்ளலாம் என அரசு அறிவித்தது. மேலும் போராளிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு அரசியல் பேச்சுக்களின் ஊடாக ஒரு தீர்வை எட்டலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு எதிரணியினரை தாம் எதிர்பார்க்கின்ற யுத்த நிறுத்த நிபந்தனைகளுக்கு ஒடுக்குமுறையைக் கொண்டு உடன்படச் செய்துவிடலாம் என அமெரிக்காவும், ரஸ்யாவும், பஷாரும் நினைத்தனர். எனினும் போராளிகள் உடனேயே ஓருதலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை நிராகரித்து விட்டனர். மக்களோ வெற்றி அல்லது கௌரவமான சாவு என்ற அடிப்படையில் முற்றுகைக்குள்ளிருந்து வெளியேற மறுத்து விட்டனர். இந்த அதிர்ச்சியான தகவல் அமெரிக்க கூட்டணியின் தலையில் இடியாக விழுந்தது.
அமெரிக்காவைப் பொருத்தவரையில் இதுவரை பஷார் உள்ளடங்காத ஒரு அரசியல் தீர்வு பற்றியே அது பேசிவந்தது. எனினும் பஷாரை விட தனக்கு விசுவாசமான ஒரு கோடாரிக்காம்மை இனங்காண முடியாத நிலையில் அவனையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் எதிர்காலத்தை பற்றி மாத்திரமே தற்போது சிந்திக்க முடியும் என்ற யதார்த்தத்தை அது புரிந்து கொண்டுள்ளது. எனவே இன்று பஷாரையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வுக்கு கிளர்ச்சியாளர்கள் இணங்க வேண்டும் என்று வெட்கமில்லாமல் கேட்டு வருகின்றது.
அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி, எதிரணியினர் பஷார் அல் அஷாத்தின் பங்குபற்றுதலுடனான தேர்தலில் கலந்து கொள்ள வேண்டும். அதுதான் சிரியாவின் அரசியல் எதிர்காலத்திற்கு பொருத்தமானது என்ற கருத்தில் இருக்கிறார் (ரஸ்யா டுடே 01/10/2016)
அமெரிக்க இராஜாங்க அமைச்சர் கூட்டமொன்றில் சுட்டிக்காட்டிய நிலைப்பாடு, அதாவது அஷாத் உள்ளடங்கலான தேர்தலொன்றில் எதிரணியினரும் பங்குபற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு அமெரிக்க நிர்வாகம் அஷாத் இராஜினாமா செய்ய வேண்டும் என இதுவரை வலியுறுத்தி வந்த நிலைப்பாட்டுக்கு முரண்பட்டதாகும் (அல் ஜஸீரா 1/10/2016)
ஆனால் எதிரணியினரைப் பொருத்தமட்டில் பஷாரை உள்ளடக்கிய ஒரு தீர்வு என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத விடயம். எனினும் கொலைக்களமொன்றுக்குள் வைத்து அவர்களை அதற்கு இணங்கச் செய்துவிடலாம் என அமெரிக்க கூட்டாளிகள் நினைத்தனர். எனினும் அந்த எதிர்பார்ப்பு களைந்து போகவே தொடர்ந்து யுத்த நிறுத்தத்தை பேணுவது அவர்களுக்கு எதிர்மறையான அறுவடையையே வழங்கும். எனவே யுத்த நிறுத்தத்தை நிறுத்த வேண்டும்@ யுத்தத்தை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் எவ்வாறு செய்வது? யார் பொறுப்பேற்பது? என்ற சிக்கல் குறிப்பாக அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. ஏனெனில் தனது நச்சுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இதுவரை யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி வந்த அமெரிக்கா எவ்வாறு யுத்தத்தை திரும்ப ஆரம்பிக்கச் சொல்வது? கிளர்ச்சியாளர்களின் பக்கத்தில் நிற்பது போல பாசாங்கு செய்து வந்த அமெரிக்கா எவ்வாறு அவர்களை கூண்டோடு அழிக்க நினைக்கின்ற ஒரு போருக்கு பச்சைக் கொடி காட்டுவது? அதற்காக அது எடுத்து வைத்த அடிகளில் ஒன்றுதான் சிரியக்களத்தின் பின்னடைவுக்கு ரஸ்யாதான் காரணம்@ மேலும் அவர்கள் அத்துமீறி செயற்பட நினைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை கூறியபடி ரஸ்யாவும், பஷாரும் போராளிகளையும் மக்களையும் தான்தோன்றித்தனமாக கொலை செய்வதற்கு அனுமதியளிப்பதாகும்.
அதற்கிணங்கவே 19/09/2016 இல் யுத்த நிறுத்த முறிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிரியாவுக்கான தீர்வு விவகாரத்தில் ரஸ்யாவுடன் பேசிப்பலனில்லை என்று அமெரிக்கா அறிவித்தது.
“இது தொடர்பாக வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜோஸ் ஏர்னஸ்ட் “ரஸ்யா விடயத்தில் எல்லோரும் பொறுமை இழந்து விட்டனர்… சிரியா விடயத்தில் இனி ஐக்கிய அமெரிக்காவும் ரஸ்யாவும் கதைப்பதற்கு ஒன்றுமில்லை” அதாவது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.(மத்திய கிழக்கு ஓன்லைன், 3/10/2016)
இதன்படி முன்பை விட கொடூரமான நரவேட்டை ஆரம்பிக்க இருக்கின்றது என்று தெரிகிறது. முன்பு எதிரணியினரை திருப்திப்படுத்துவதற்காகவேனும் ரஸ்யாவின் மிருகத்தனமான தாக்குதல்களை தளர்த்துவதற்கு தாம் முயற்சிப்பதைப்போன்ற ஒரு நாடகத்தை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டியிருந்தது. எனினும் இம்முறை 2017 ஜனவரியில் நிறைவு பெற இருக்கின்ற ஒபாமாவின் பதவிக்காலத்திற்குள் சிரியக் களமுனையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்றை தாம் சாதித்தோம் என்ற ஒரு வரலாற்றுப் பதிவை ஏற்படுத்திவிட வேண்டும் என்ற அவசரம் அவர்களிடம் காணப்படுவது தெரிகிறது. எனவே மக்களை அடிபணியச் செய்ய ரஸ்யா மேற்கொள்ளக்கூடிய எத்தகைய தீவிரமான தாக்குதல்களையும் அமெரிக்கா கண்டு கொள்ளப்போவதில்லை.
ஒரு பக்கத்தில் அமெரிக்காவும் ரஸ்யாவும் யுத்த நிறுத்த முறிவுக்கான காரணத்தை ஒருவர் மீது ஒருவர் கடுமையான தொணியில் பழி சுமத்தினாலும் மறுபக்கத்தில் அவர்களே தாங்கள் ஒன்றாக ஒருங்கிணைந்து செயற்படுவதாகவும் அறிவித்திருக்கின்றனர். இதற்கு அண்மையில் கேர்பி சொல்லியிருந்தது சிறந்த சான்றாகும்.
“அதாவது சிரியாவின் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது தமது படைகள் ஒருவரின் வழியில் மற்றவர் குறிக்கிடாத வகையில் ஈடுபடுவதை உறுதிப்படுத்துவதற்காக ரஸ்யாவினதும், அமெரிக்காவினதும் இராணுவங்கள் தமக்கிடையே தொடர்பாடல் ஒழுங்கொன்றை வைத்திருக்கும்” ( மத்திய கிழக்கு ஓன்லைன் 3/10/16)
மேலும் அவர் ” நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் ரஸ்ய மற்றும் சிரிய துருப்புக்கள் நிலைகொள்வது உள்ளடங்களாக முன்புபோலவே நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் குரோதங்களை நிரந்தரமாக நிறுத்துவதற்காக நாம் முயற்சிப்போம்.” (ஏஎப்பி அரபு, 4/10/16)
இவை எல்லாவற்றிற்கும் நடுவே ஹெரியும், லவ்ரோவும் அடிக்கடி சந்திப்பதும் மிக நெருக்கமாக நட்புப் பாராட்டுவதும் வெளிப்படையாகவே நடக்கிறது. “நாங்கள் இணக்கம் கண்டுள்ள சிரியாவிற்கான தீர்வை அமூல்படுத்துவதிலே குறிக்கீடாக இருக்கின்ற தடைகளை அகற்றுவதற்காக நாம் முயற்சித்து வருகின்றோம்.” என தமது பொது வேலைத்திட்டத்தை லவ்ரோ குறிப்பிடும் அளவிற்கு இவர்களின் கூட்டுறவு காணப்படுகிறது. லவ்ரோ மேலும் தெரிவிக்கையில் தமது மற்றத்தரப்பான அமெரிக்காவுடன் ஒவ்வொரு நாளும் தான் உரையாடி வருவதாகவும் கடந்த சனிக்கிழமை மாத்திரம் மூன்று முறை தொலைபேசியூடாக பேசிக்கொண்டதாவும் தெரிவித்தார். (ரஸ்யா டுடே 3/10/16)
எனவே இவர்கள் சிரிய முரண்பாட்டிற்கான அமெரிக்க முகாமைத்துவ திட்டத்திற்கு இணங்க தமது பாத்திரங்களை மாற்றி மாற்றி இயக்கி வருகின்றனர் என்பதே உண்மை. அதாவது பஷாரின் சிறகுகளுக்கு கீழே அவனுடன் எதிரணியினர் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கின்ற தீர்வை நோக்கி களத்தை நகர்த்துகின்ற அமெரிக்க தீர்வுத்திட்டத்திற்காக கையாட்களாய் நின்று தொழிற்படுவதே ஏனையோரின் விகிபாகமாகும்.
சரி, இனி எமது முஸ்லிம் தலைவர்களும், வாய்சொல் வீரர்களும் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
இன்று முழு அளவிலான மனிதப்படுகொலையை சிரிய முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். சிரிய அரசும் அவர்களின் கூட்டணியும் ஒட்டு மொத்த மக்களையும் சேர்த்து கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக நிர்மூலமாக்கி வருகின்றார்கள். இத்தகைய அகோரக் காட்சிகள் சிரியாவிலே நடந்தேறிக் கொண்டிருக்கையில் சிரியாவின் அண்டை நாடுகளான முஸ்லிம் நாடுகளும் சற்றே தள்ளியிருக்கின்ற ஏனைய முஸ்லிம் நாடுகளும் இந்தக் கொடுமைகளுக்கு நேரடியாக துணைபோகின்ற, அல்லது மறைகரங்களாக இருக்கின்ற அல்லது குறைந்த பட்சம் மௌனமாய் இருந்து வேடிக்கை பார்க்கின்ற மிகக்கேவலமான பாத்திரத்திரங்களை வகித்து வருகின்றார்கள் என்பதே வேதனையான உண்மை. அவர்களின் இராணுவங்களோ முகாம்களுக்குள் முடங்கிக்கிடக்கின்றன. சில பொழுதுகளில் அவர்கள் வெளியில் வந்தால் கூட அது அல்லாஹ்(சுபு)வுக்கும், அவனது தூதருக்கும்(ஸல்), முஃமின்களுக்கும் துரோகமிழைக்கின்ற காரியங்களுக்காகவே வெளியில் வருகின்றன.
உதாரணமாக அண்டை நாடான துருக்கி என்ன செய்தது என்பதைக் கவனித்துப் பாருங்கள். அலெப்போவில் முஜாஹிதீன்களின் போராட்டம் உக்கிரமடைந்திருந்த தருணத்தில் அதற்கு கைகொடுப்பதற்காக தனது படைகளை அங்கே அனுப்பியிருக்க வேண்டிய துருக்கி அந்தத்தருணத்தை சரியாக தேர்ந்தெடுத்து “The shield of the Euphrates” அதாவது “யூப்ரடிஸின் கேடயம்” என்ற பெயரில் ISISக்கு எதிரான ஒரு இராணுவ முன்னெடுப்பை ஆரம்பித்தது. இது ஒரு அப்பட்டமான திசை திருப்பும் நடவடிக்கையாகும். அதற்காக தனது இராணுவத்தை வடக்கு சிரியாவை நோக்கி அணிவகுக்கச் செய்ததுடன் ஏற்கனவே அலெப்போவில் போராடிவந்த துருக்கி சார்பான போராளிக் குழுக்களை பிரதான களமுனையான அலெப்போவிலிருந்து வெளியேற்றி ஒப்பீட்டளவில் முக்கியத்துவமும் இல்லாத ஜரப்லஸ் நோக்கி அழைப்பு விடுத்தது.
இந்த நகர்வுகள் அலெப்போவில் முஜாஹிதீன்களின் பலத்தை பெருமளவில் பாதித்ததுடன் முறியடிக்கப்பட்ட முற்றுகையை 4ஃ9ஃ16 இல் பஷார் மீண்டும் நிலைநாட்ட துணை புரிந்தது. அலெப்போ சிரிய அரசிடமிருந்து கை நழுவுமானால் அது நிச்சயமாக வடக்கு சிரியாவையும் சேர்ந்து வீழ்த்திவிடும் என்பது துருகிக்கு தெரிந்திருந்தும், அதாவது அலெப்போவின் விடுதலை வடக்கு சிரியாவினதும் விடுதலையாகவே அமையும் என்பது அதற்கு நன்றாகவே தெரிந்திருந்தும் அது அலெப்போ நோக்கி தனது கரத்தை நீட்டாமல் தனியாக பிரிந்து நின்று முஜாஹீதீன்களை பலகீனப்படுத்தியது.
துருக்கி விரும்பியிருந்தால் அது அலெப்போவை நோக்கி தனது படையையும், ஆதரவு சக்திகளையும் அணிதிரட்டியிருக்கலாம். பலமும், எண்ணி;க்கையும் கொண்ட துருக்கிய இராணுவம் அலெப்போ முற்றுகையை மிக இலகுவாக முறியடித்திருக்கும். பஷாரின் கொடுமைகளிலிருந்து மக்களை விடுவித்து இஸ்லாத்தின் ஆளுகைக்குள் அதனை கொண்டு வந்திருக்கும். இதே கருத்தை முன்னாள் பிரித்தானிய வெளிவிககார அமைச்சர் லோர்ட் டேவிட் ஒவன் அண்மையில் வெளியிட்டிருந்தார். அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார். “துருக்கியால் சிரியாவில் ஒரு முக்கிய சமநிலைக் காரணியை உருவாக்க முடியும். தனது தரைப்படையையும், விமானப்படையையும் பயன்படுத்தி அவசர மனிதாபிமான முன்னெடுப்பு ஒன்றினை மேற்கொண்டு அலெப்போ மீதான முற்றுகையை அது முறியடிக்க முடியும். அலெப்போவை காப்பாற்றுவதற்கு தேவையான சாதகமான அரசியல் மற்றும் இராணுவத் தகுதி துருக்கிக்கு மாத்திரமே இருக்கின்றது…” (al watan site, 3/10/2016 )
“பஷாருடன் இணைந்த ஆட்சிப்பகிர்வு என்ற தீர்வு நோக்கி மக்களை நகர்த்துவதற்காக மக்கள் மீது பாரிய அழுத்தத்தை பிரயோகித்தல்” என்ற அமெரிக்க திட்டமிடலுக்கு இசைவாக துருக்கி இயங்கி வருவதுதான் இதற்கு காரணமாகும். இவையனைத்தையும் பஷார் ஒரு கொடுங்கோலன், துரோகி என அடிக்கடி வாய் கிழிய பேசிக்கொண்டும், இரண்டாவது ஹமா இடம்பெறுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என சவால் விட்டுக்கொண்டும் இருக்கின்ற அதே துருக்கிதான் செய்கின்றது. இன்று இரண்டாவது ஹமா அல்ல, மூன்று, நான்கு என பல ஹமாக்களை நாம் கண்டாகி விட்டது. “வெட்கம் இல்லையென்றால் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்” என்று சொல்ல தோன்றுகிறதல்லவா?
சிரியாவின் அண்டை நாடான ஜோர்தானை பொருத்தமட்டிலும் இதே நிலைதான். அதுவும் தனது இராணுவத்தை காப்பரண்களிலே பூட்டி வைத்துள்ளது. தர்ஆவிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் கொத்துக்கொத்தாக மக்கள் கொன்றொழிக்கப்பட்டபோதும், பாரிய குண்டுத்தாக்குதல்களுக்கு அவை முகம் கொடுத்தபோதும் வெறும் வேடிக்கை பார்க்கும் அனுமதி மட்டுமே அதற்கு வழங்கப்பட்டிருந்தது. பஷாரின் கொடுங்கோண்மையிலிருந்து அந்த மக்களை விடுதலை செய்ய அது முயற்சிக்கவில்லை. மாறாக இராணுவம் ஜோர்தானிய எல்லைகளையும், அரசின் நலன்களையும் மாத்திரமே கவனத்தில் எடுக்க அனுமதிக்கப்பட்டது. சிரிய அகதிகள் தமது நாட்டுக்குள் தஞ்சம் அடைவதை தடுப்பதற்காக மட்டுமே அது வெளியில் வந்தது. உதாரணமாக ‘அர்ருக்பான்’ என அழைக்கப்படும் சிரிய – ஜோர்தானிய எல்லை அருகில் தங்கி வாழ்ந்த மக்கள் சிரிய எல்லையைத்தாண்டி ஜோர்தானுக்குள் தஞ்சமடைய எத்தனித்த வேளையில் அவர்களை தடுத்து நிறுத்துவதற்குத்தான் இந்த இராணுவம் களத்தில் நின்றது. பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் தற்காலிகமான ஒரு மீட்சி நடவடிக்கையாக ஜோர்தானில் தஞ்சம் புகலாம் என நினைத்த வேளையில், அவர்களுடன் சேர்ந்து தீவிரவாத சக்திகளும் தமது நாட்டுக்குள் நுழைந்து விடலாம் என்பது போன்ற நொண்டிச் சாட்டுக்களைக்கூறி ஜோர்தான் தனது எல்லைகளை இழுத்து மூடி விட்டது. அர்ருக்பானிலே அகப்பட்டுப்போன மக்கள் அந்த பிராந்தியம் மூடப்பட்ட இராணுவ வலயம் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பட்ட கஷ்டங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. (24.ae site, 4/10/2016)
சிரியாவின் அண்டை நாடுகளான துருக்கியும், ஜோர்தானும் காஃபிர் காலணித்துவவாதிகளின் அறிவுறுத்தத்தல்களுக்கு இணங்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இவை. மரணத்தின் விழிப்பில் நின்ற மக்களை மீட்பதற்கு பதிலாக குறுகிய தேசிய நலன்களுக்காக மக்களை மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்காக பணயம் வைக்கின்ற நாடுகளாவே இவை தொழிற்படுகின்றன. அதே நேரத்தில் ஏனைய அண்டை நாடுகள் என்ன செய்கின்றன? ஈராக்கும், லெபனானும் ஈரானின் தேசிய பாதுகாப்புபடையும், ஈரானின் செல்லக்குழைந்தையான ஹிஸ்புல்லாஹ்வும் அதன் ஆதரவு சக்திகளும் சிரியாவுக்குள் நேரடியாக நுழைந்து பஷாருக்கு உதவி வருகின்றன. பஷாரின் கொலைவெறித்தாண்டவம் முறையே நடந்தேறுவதற்கு தேவையான அனைத்து ஒத்தாசைகளையும் வழங்குவதே இவர்களின் பணியாக இருக்கின்றது.
மேலும் சிரியாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் அருகிலிருக்கின்ற முஸ்லிம் நாடுகள் சிரிய முஸ்லிம்களுக்கு இழைக்கும் துரோகமும் புரக்கணிக்கத்தக்கதல்ல. உதாரணமாக சவூதி அரேபியா அமெரிக்க நலனை பாதுகாப்பதற்காக யெமனை நோக்கி ஓர் யுத்த முன்னெடுப்பை ஆரம்பித்து அங்குள்ள முஸ்லிம்களை கொன்றொழிப்பதிலே தனது இராணுவத்தை ஓய்வில்லாமல் ஈடுபடுத்தி வருகிறது. எனினும் அதே சவூதியால் பஷாரின் கொடுமையிலிருந்து சிரிய முஸ்லிம்களை பாதுகாக்க ஒரு சிப்பாயையேனும் அனுப்ப முடியவில்லை. மீதமிருக்கின்ற ஏனைய நாடுகளும் சிரியப் படுகொலைகளை தடுத்து நிறுத்த பல வழிகளில் முயற்சித்திருக்கலாம். அமெரிக்காவுடனும், ரஸ்யாவுடனும், ஈரானுடனும் தமது உறவை துண்டித்து உடனடியாக சிரிய மக்கள் மீதான தான்தோன்றித்தனமான தாக்குதல்கள் நிறுத்த நிர்ப்பந்திருக்கலாம். எனினும் அவை அவற்றை செய்ய முன்வரவில்லை.
சிரிய விவகாரத்தில் அரபு லீக்கும் இஸ்லாமிய கூட்டுறவுக்கான அமைப்பும் (OIC) தத்தமது கையாளாகத்தனத்தை மீண்டும் நிரூபித்துள்ளன. அரபு லீக் தனது உறுப்பு நாட்டுப்படைகளைத் அணிதிரட்டி உடனடியாக அலெப்போ மக்களை முற்றுகைக்குள்ளிருந்து வெளியேற்ற முயற்சிப்பதற்கு பதிலாக சர்வதேச சமூகத்தை நோக்கி ‘அவசரமான நிலைப்பாடு’ (ஸ்கை நியூஸ் அரேபியா, 2/10/16) ஒன்றிற்கு வாருங்கள் என்று வெட்டிப் பேச்சு பேசிக் கொணடிருக்கிறது. கண்ணெதிரே பல இலட்சம் மக்களை காவு கொடுத்ததன் பின்னால் இவ்வாறு ஒரு அழைப்பை விட்டுவிட்டால் தனது பங்களிப்பு முடிந்து விட்டதாக அது கருதுகின்றது. ஓஐசியும் தன் சார்புக்கு தனது கேவலத்தையும் நிரூபிக்க சிரியாவில் இடம்பெற்று வரும் மனிதாபிமான நெருக்கடியின் அளவு பற்றி ஆராய்வதற்காக கூட்டம் கூட்டினார்களாம். ஏதோ சிரியாவில் தொடரும் அவலம் பற்றி உலகுக்கு தெரியாது, அதற்கு ஒரு விசேட ஆய்வு தேவை என்பதைப்போல இவர்களின் வித்தை இருக்கிறது.
இவர்கள்தான் முஸ்லிம் தேசங்களின் தலைவர்கள், இவைதான் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள். காலணித்துவவாதிகள் மீது தாம் கொண்டிருக்கின்ற அடிமைத்தனமான விசுவாசத்திற்காக முஸ்லிம் உம்மத்திற்கு இவர்கள் செய்கின்ற துரோகங்கள் மிகக் கேவலமானதும், மன்னிக்க முடியாததுமாகும். அறிவுணர்ச்சியும் அற்று, உணர்வெழுச்சியும் அற்று இருக்கின்ற இவர்களிடம் தன்மானமும், வெட்க உணர்வும் மிஞ்சியிருக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. எனவே இவர்களிடமிருந்து விடிவோ, விமோசனமோ ஒருபோதும் வரப்போவதில்லை.
لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ
நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன – ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் – இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். (அல் அஃராஃப்:179)
தீர்வு எங்கிருந்து தோன்ற முடியும்?
எனவே காலணித்துவத்திற்கு கூஜா தூக்குகின்ற இத்தகைய தலைமைகளை உதறித்தள்ளிவிட்டு முஸ்லிம் இராணுவங்கள் இஸ்லாத்திற்கு நுஸ்ரா(உதவி) வழங்க முன்வருவதிலேயே அலெப்போவின் விடுதலை மாத்திரமல்லாது, முஸ்லிம் உம்மத்தின் ஒட்டு மொத்த விடுதலையும் தங்கியுள்ளது. இஸ்லாமிய சிந்தனைகளால் மாத்திரம் உந்தப்பட்ட, இஸ்லாத்தைக் கொண்டு மாத்திரம் ரோசம் பெற்ற, அல்லாஹ்(சுபு)க்காக மாத்திரம் ஜிஹாதிய களங்களில் போராடத் துணிவு பெற்ற தூய்மையான தளபதிகள் முஸ்லிம் இராணுவங்களுக்குள்ளிருந்து வெளிவர வேண்டும். இஸ்லாமிய உணர்வுகள் அவர்களுள் பொங்கியெழ வேண்டும். அப்பாவி முஸ்லிம்களின் இரத்தம் சிந்தப்படுவதைப் பார்த்து, பெண்களும், குழந்தைகளும் கூக்குரலிடுவதைக் கேட்டு, இஸ்லாத்தின் கண்ணியங்கள் களங்கப்படுவதை பார்த்து, பள்ளிவாசல்களும், மினரத்களும் சரிந்து விழுவதை பார்த்து அவர்களின் குருதி கொதிக்க வேண்டும். அவர்களின் நரப்புகள் புடைக்க வேண்டும். இஸ்லாமிய சிந்தனைகளாலும், இஸ்லாமிய உணர்ச்சியினாலும் அவர்கள் வேட்கை பெற வேண்டும். அப்போது அவர்களுக்குள்ளிருந்து ஒரு ஷஅத்தும், உசைத்தும், உக்பாவும், காலித்தும் வெளிவரவேண்டும். தாரிக்கும், அல் முஃதஸிம்மும், சலாஹுத்தீனும், சுலைமான் அல் கானூனியும், ஒரு அப்துல் ஹமீதும் தோற்றம் பெற வேண்டும்.
அத்தகைய நல்ல மனிதர்கள் தூய்மையான ஜிஹாதின் அழைப்புக்கு பதில் சொல்வார்கள். அப்போது காலணித்துவவாதிகளும், அவர்களை நக்கிப்பிளைக்கும் வேட்கம் கெட்ட முகவர்களும், நயவஞ்சகக் குள்ளநறிகளும் இஸ்லாமிய புதல்வர்களின் வீரத்தை பார்ப்பார்கள், உண்மையான முஸ்லிம் படையின் பலத்திற்கு முகம் கொடுப்பார்கள். அப்போது ஒரு தலைமையின் கீழ் முஸ்லிம் உம்மாஹ் அணிதிரண்டு நிற்கின்ற போது யாருடன் இதுவரை சேட்டை விட்டோம் என்பதை நினைத்து குஃபார்கள் கைசேதப்படுவார்கள். இன்ஷா அல்லாஹ்!
فَإِمَّا تَثْقَفَنَّهُمْ فِي الْحَرْبِ فَشَرِّدْ بِهِمْ مَنْ خَلْفَهُمْ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ
எனவே போரில் நீர் அவர்கள்மீது வாய்ப்பைப் பெற்று விட்டால், அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களும் பயந்தோடும்படி சிதறடித்து விடுவீராக – இதனால் அவர்கள் நல்லறிவு பெறட்டும்.
(அன்ஃபால்:57)