மனிதாபிமான மீட்பு நிதியம் (Humanitarian Relief Foundation) மற்றும் மேலும் பல துருக்கிய ஊடகங்களின் செய்திகளின்படி கடந்த ஜுலை 29ம் திகதியிலிருந்து இன்று வரை இஸ்தான்புலிலே இடம்பெற்ற தேடுதல் வேட்டைகளில் உஸ்பகிஸ்தான், கஷகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்கிஸ்தான் மற்றும் கவ்கஸஸ் போன்ற பிராந்தியங்களைச் சேர்ந்த சுமார் 450 பேர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது சொந்த நாடுகளுக்கு திருபபி அனுப்பும் வரை காத்திருக்கும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதுகள் ஜுலை 12ஆம் திகதி அதாவது துருக்கியில் அண்மையில் இடம்பெற்ற சதிப்புரட்சிக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட பெயர்பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டன.
முதலாவது தேடுதல் வேட்டையில் மாத்திரம் உஸ்பெக்கிஸ்தான் சேர்ந்த 29 நபர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் அவர்களில் 2 பெண்கள் உட்பட 7 பேர்கள் கும்கெபி (Kumkapi) தடுப்பு முகாமில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த 7 கைதிகளினதும் குடும்பங்கள் ஒரு மாத காலத்திற்குள் துருக்கியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த குடும்பங்களில் 15 சிறுவர்களும், 5 பெண்களும், 2 ஆண்களும் அடங்குவதுடன் அவர்களில் ஒருவர் 6 மாதம் நிரம்பிய கற்பிணித் தாயுமாகும். 7 வயது முதல் 80 வயது வரை எவ்வித வயது வித்தியாசமும் இன்றி மேற்கொள்ளப்படும் இத்தகைய கைதுகள் துருக்கியில் நடந்த வண்ணமே இருக்கின்றன. கைதுக்காக அவர்கள் தயாரித்த பட்டியலில் 1000 நபர்களின் பெயர்கள் வரை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கைது நடவடிக்கைகள் துருக்கிய – ரஸ்ய நல்லிணக்க செயல்முறையின் ஒரு அங்கமாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மத்திய ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த எமது சகோதர, சகோதரிகளை துருக்கியில் வைத்து இவ்வாறு கைது செய்வது என்பது புதியதொரு விடயமல்i. மாற்றமாக இஸ்லாத்துடன் என்றுமே தீராப்பகையுடன் இருக்கும் ரஸ்யாவை திருப்திப்படுத்துவதற்காக இது போன்றவை துருக்கியில் தொடர்ந்து நடந்தே வந்திருக்கிறது.
துருக்கிய முஸ்லிம்களே! நீதிக்கும், அபிவிருத்திக்குமான கட்சி (AKP) ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து இஸ்லாத்தின் பெயரால் பல விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளன என நீங்கள் நம்புகிறீர்கள். மீண்டும் திரும்பி வந்துவிடுவார்களோ என நீங்கள் அதிகம் பயப்படுகின்ற சடவாத குடியரசு மக்கள் கட்சி (CHP) யின் மனோபாவம் இன்றும் காணப்பட்டே வருகிறது என்பதை உங்களால் உணர முடியவில்லை. இன்று துருக்கிய குடியரசை ஆட்சி செய்பவர்கள் கூட குடியரசின் ஸ்தாபக கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டும், ஜனநாயகம், சடவாதம், அதன் நீதித்துறை போன்ற அல்லாஹ்(சுபு) அதிகமாக வெறுக்கின்றவற்றை உயர்த்திப் பிடிப்பதற்காகவே அரும்பாடுபடுகின்றனர். இத்தகைய சடவாத மனோபாவத்தின் அல்லது அடிப்படைகளின் ஒரு அம்சம்தான் வெறும் தேசிய நலன்களுக்காக எமது முஸ்லிம் பெண்களையும, குழந்தைகளையும் கொடுங்கோலர்களின் கைகளில் காணிக்கையாக படைப்பதாகும். இந்த மனோபாவம் (CHP) இன் மனோநிலையை ஒத்தது இல்லையா?!
அர்துகான் 2012 இல் சிரிய அகதிகளை துருக்கிக்குள் அனுமதித்த சந்தர்ப்பத்தில் அதற்காக விமர்சிக்கப்பட்டபோது CHP காலத்தில் நடந்த பொரால்டன் பாலச் சம்பவத்தை(Boraltan bridge incident) அவர் பின்வருமாறு நினைவுபடுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். “ 1944இல் 146 அஜெர்பைஜானிய முஸ்லிம் சகோதரர்களும் சகோதரிகளும் ரஸ்யாவின் கொடுமைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக துருக்கியில் அடைக்களம் புகுந்தனர். ஆனால் அன்றைய துருக்கி நடுநிலைபேணுதல்(in the name of neutralism and balances) என்ற பெயரில் அந்த 146 பேர்களையும் ஸ்டாலினின் துருப்புகளிடம் ஒப்படைத்தது. இந்த ஒப்படைப்பு நிகழ்ந்தது CHP இன் ஆட்சிக்காலத்தில் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே அவர்களின் வரலாறு அசிங்கமானது…எங்களது அஜெர்பைஜானிய சகோதரர்கள் பொரால்டன் பாலத்தை கடந்ததுதான் தாமதம், எமது இராணுவத்தினர் பார்த்துக் கொண்டு இருக்கும்போதோ அந்த முஸ்லிம்களை நோக்கி துப்பாக்கி ரவைகள் தீர்க்கப்பட்டன. கேவலம் CHP இனரே! உங்களுக்கு ஒழிந்து கொள்ள ஏதேனும் இடம் இருக்கிறதா? எங்களது அஜெர்பைஜானிய சகோதரர்களையும், சகோதரிகளையும் ஸ்டாலினிடம் விற்று விட்டு இன்று கூக்குரலிடுகிறீர்களா? மிரட்டுகிறீர்களா?…”
ஆனால் பாருங்கள்! இப்போதும் ஓர் பொரால்டன் பாலச் சம்பவம் மீட்டப்படுகிறது…
ஆனால் எவர் கையால்?
துருக்கிய தலைவர்களே! இந்த நிலைப்பாட்டுடன் எங்கு சென்று முகம் கொடுக்கப் போகிறீர்கள்? ரஸ்யாவை திருப்த்திப்படுத்துவதற்காக ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கும் உங்களுடைய இன்றைய செயலுக்கும், அன்று CHP எடுத்த நிலைப்பாட்டுக்கும் அல்லது இனொனு எடுத்த நிலைப்பாட்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது? மேலும், “சிரியாவில் ISISக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை” என்ற நாடகத்திற்கு உங்களது தாக்குதல் விமானங்களையும் ஈடுபடுத்த துணிந்துள்ள நீங்கள் இரத்தக் காட்டேறி பஷாரிடமிருந்து உம்மத்தை பாதுகாப்பதற்காக அவற்றை ஈடுபடுத்த ஏன் துணியவில்லை?
ரஸ்யாவுக்கு மனம் கோணாமல் நடப்பதற்காகவும், அமெரிக்காவுக்கு அடிபணிவதற்காகவும் உங்களை நம்பி வந்த ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களை சொற்பக் கிரயத்திற்கு விற்கின்ற எவ்வளவு கேவலமான ஒரு வியாபாரத்தில் நீங்கள் ஈடுபட்டு இருக்கிறீர்கள்? உங்களுடைய வீட்டிலே அடைக்களம் தேடி வந்த விசுவாசிகளை எதிரியின் கைகளில் தாரை வார்த்து விடுவது உம்மத்திற்கு செய்கின்ற அசிங்கமான துரோகமும், அல்லாஹ்(சுபு)வின் பார்வையில் பாரதூரமான பாவமுமாகும். முஹம்மத்(ஸல்) சொன்னார்கள்
«الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لاَ يَظْلِمُهُ، وَلاَ يُسْلِمُهُ»
“ஒர் முஸ்லிம் இன்னுமொரு முஸ்லிமுக்கு சகோதரராவார், அவர் அவரை ஒடுக்கவும் மாட்டார். ஒடுக்குகின்ற ஒருவரிடம் ஒப்படைக்கவும் மாட்டார்.” மேலும் தூதர்(ஸல்) சொன்னார்கள்,
«مَنْ أَعَانَ عَلَى قَتْلِ مُؤْمِنٍ بِشَطْرِ كَلِمَةٍ لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ آيِسٌ مِنْ رَحْمَةِ اللَّهِ»
“ஒருவர் ஓர் அரைச் சொல்லைக் கொண்டாயினும் ஒரு விசுவாசியை கொலை செய்வதற்காக உதவுவாராக இருந்தால் அவர் அவரது இரு கண்களுக்கும் இடையில் ‘அல்லாஹ்(சுபு)வின் அருள் கிடைக்கப் பெறாதவர்’ என்று எழுதப்பட்ட நிலையிலேயே அல்லாஹ்(சுபு)வை சந்திப்பார்”
முஸ்லிம்களை தாரைவார்க்கும் இச்செயலானது பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதோருக்கும் அடைக்களம் கொடுப்பதில் புகழ்பெற்றிருந்த உத்மானிய கிலாஃபத்தின் வரலாறுக்கு எதிராகச் செய்யப்படும் துரோகமாகும். எனவே இன்றிருக்கின்ற சடவாத துருக்கியைப் போலல்லாது நபிவழியில் அமைந்த கிலாஃபத் என்ற தூய்மையான தலைமையால் மாத்திரமே முஸ்லிம்களினதும், இஸ்லாத்தினதும் உண்மையான நலன்களை பாதுகாக்க முடியும். எனவே கிலாஃபத்திற்கு மாத்திரமே உம்மத்தின் ஆதரவு வழங்கப்பட வேண்டும். அந்த கிலாஃபத் எத்தகைய தாமதமும் இல்லாது நிலைநாட்டப்பட வேண்டும்.