• நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்
No Result
View All Result
  • நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்
No Result
View All Result
Darul Aman
No Result
View All Result
துருக்கிய சதிப்புரட்சியை அரங்கேற்றியது பத்ஹுல்லாஹ் குலனா? தைய்யிப் அர்துகானா? அல்லது மூன்றாவது சக்தியா?

காஷ்மீாின் விடுதலை வேட்கையை கிலாஃபத்தே வெற்றி வரை நகா்த்தும்!

துருக்கிய சதிப்புரட்சி - இவர் சொல்வது உண்மையானால்...? - உஸ்தாத் சஈத் ரித்வான் !

Home கட்டுரைகள் நடப்பு விவகாரம் செய்திப்பார்வை

துருக்கிய சதிப்புரட்சியை அரங்கேற்றியது பத்ஹுல்லாஹ் குலனா? தைய்யிப் அர்துகானா? அல்லது மூன்றாவது சக்தியா?

July 20, 2016
in செய்திப்பார்வை, நடப்பு விவகாரம்
Reading Time: 3 mins read
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பல முஸ்லிம்களின் உயிரைக் குடித்த மக்களின் இயல்பு வாழ்வில் வீணான குழப்பத்தை ஏற்படுத்திய அண்மைய துருக்கிய இராணுவ புரட்சி முயற்சியை முஸ்லிம்கள் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். புரட்சியின் வீரர்களாக மேற்குலக கைக்கூலி ஜெனரல்களால் களத்தில் இறக்கி விடப்பட்டு இன்று குற்றவாளிகளாக களங்கப்படுத்தப்பட்டிருக்கும் இராணுவச் சிப்பாய்களுக்காகவும் ஒரு கணம் எமது ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் அவர்களும் எடுப்பார் கைப்பிள்ளைகள் போன்று மேற்குலக அடிவருடிகளின் காய் நகர்த்தல்களுக்காக அடிக்கடி பலிக்காடாவாக்கப்படும் எமது உம்மத்தின் இளைஞர்களே!

கமாலிச, பிரத்தானிய விசுவாச அணிகளுக்கும், தற்போது இராணுவத்திற்குள் மிகப்பெரும்பான்மை செல்வாக்கிலுள்ள அமெரிக்க சார்பு – அர்துகான் அணிகளுக்கும் இடையான முறுகல் நிலை தொடர்ந்து இருந்து வருவது நாம் அறித்ததே. அதேபோல இன்று பத்ஹுல்லாஹ் குலன் சார்பினரே சதிப்புரட்சியின் சூத்திரதாரிகள் என அர்துகான் அணியினரால் அரசியல் நோக்கத்துடன் பரப்புரை செய்யப்படும் விடயம் அனேகமாக யதார்த்ததுடன் முரண்பட்டாலும், அமெரிக்க முகவரான பத்ஹ}ல்லாஹ் குலனின் ஆதரவு இராணுவ உளவுத்துறைக்குள்ளும், பொலிஸ்துறைக்குள்ளும், நீதித்துறைக்குள்ளும் கணிசமான அளவில் காணப்படுவதும் மறுப்பதற்கில்லை. இதற்கிடையே சிரியாவில், அமெரிக்காவும், ரஸ்யாவும், துருக்கியும் ஒரே இலக்குடன் ஒருக்கிணைக்கப்பட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கும் நி;லையில் நவம்பர் 2015 இல், சிரியா மீது தாக்குதல் நடாத்திய ரஸ்ய தாக்குதல் விமானம் ஒன்றை துருக்கிய விமானப்படை தன்னிச்சையாக சுட்டு வீழ்த்திய சம்பவத்தை நாம் அறிந்திருப்போம். அதிபர் அர்துகானினதும், அவருக்கு விசுவாசமான இராணுவ உயர் தலைமையினதும் அனுமதியில்லாமல் இடம்பெற்ற இதுபோன்ற நிகழ்வுகள் இராணுவத்திற்குள் அர்துகானுக்கு பதிலாக வேறேங்கோ தமது விசுவாசத்தை வைத்திருக்கும் சக்திகளும் இயங்கிக் கொண்டிருப்பதையும் காட்டி நிற்கின்றன.

இந்தப் பின்னணியில் எதிர்வரும் ஓகஸ்ட் 1ஆம் திகதி அதியுயர் இராணுவ சபையில் வருடாந்தக் கூட்டம் இடம்பெற இருந்த சூழலில் அர்துகானுக்கும், இராணுவத்துக்குள் சில அணிகளுக்கும் இடையேயான முறுகல் நிலை வலுவடைந்து இருந்தது. இதன் விளைவாக இராணுவத்தின் உயர் அதிகாரிகள் உட்பட பல இராணுவ அதிகாரிகள் தமது பதவியை கட்டாயமாக கைவிட வேண்டிய அல்லது சிக்கலான விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை தோன்றியிருந்தது. அதற்கு அஞ்சிய இராணுவ அதிகாரிகளின் அவசரத் தீர்மானமே இந்த சதிப்புரட்சி முயற்சியாக இருக்கலாம்  என ஊகிக்க முடிகிறது.

அர்துகானின் நீதிக்கும், அபிவிருத்திக்குமான கட்சி (AKP) யைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கானி டொரனும் இதுபோன்ற ஒரு கருத்தை அல்ஜெஸீராவுக்கு தெரிவித்திருந்தார்,

“ தற்போது சதிப்புரட்சி முயற்சியில் ஈடுபட்டவர்கள் சதிப்புரட்சி முயற்சி மேற்கொள்ளப்படுவதற்கு சற்று முன்னர் சதிப்புரட்சியினூடாக ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரால் வழக்கறிஞர்களால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் கைது செய்யப்பட இருந்தவர்கள்…” இதே கருத்தை இன்னுமொரு AKP அதிகாரி,

“ கடந்த சில மாதங்களாக இராணுவத்திற்குள் சதி புரட்சியொன்றை நடத்த முயற்சிக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலுள்ளவர்களை துருக்கிய அதிகாரிகள் அவதானித்து வந்தார்கள், எங்களுடைய கணிப்பின்படி சதி முயற்சியில் ஈடுபட்ட இந்தக்குழு, தாம் விசாரணைக்கு உட்படுத்தப்படப்போகிறோம் என்பதை உணர்ந்ததன் விளைவால் தோன்றிய பதற்றத்தாலேயே இவ்வாறு செயற்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்திருந்தார்.

இராணுவத்தின் அதியுயர் பீடத்தினதும், அதன் சிரேஷ்ட தலைமையினதும் ஆசிர்வாதம் இல்லாத நிலையிலும், சமூக மட்டத்தில் மக்கள் ஆதரவும், ஆணையும் தமக்கு சாதகமாக இருக்க முடியாத சூழலில் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானம் அரசியல் முதிர்ச்சியற்றது. எனினும் காலணித்துவ அரசுகளின் போலியான நம்பிக்கையூட்டல்கள் சதிப்புரட்சியில் ஈடுபட்டவர்களின் கண்களை மறைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. எனவே காலணித்துவ சக்திகளுக்கு விலைபோய் தமது சொந்த மக்களுக்கு எதிராகவே துப்பாக்கியை நீட்டும் குறைப்பிரவசப் புரட்சிகள் இவ்வாறு தோல்வியிலேயே முடியும் என்பது வியப்புக்குரியது அல்ல. இதேபோல காலணித்துவ சக்திகளின் தூண்டுதலின் பேரில் பல சதிப்புரட்சி முயற்சிகள் நவீன துருக்கிக்குள் இதற்கு முன்னரும் இடம்பெற்றிக்கின்றமை நாம் அறிந்த விடயமே.

துருக்கிய அரசு குற்றம் சாட்டுவதைபோல இந்த சதிப்புரட்சி முயற்சி துருக்கிய அரசுக்கு சமாந்தரமான கட்டமைப்பு என மிகைப்படுத்தி அழைக்கப்படும் குலன் இயக்கத்தின் (இது கிஷ்மத்  இயக்கம் எனவும் அழைக்கபடுவதுண்டு) வேலையாக இருக்க சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகும். 1999 இலிருந்து அமெரிக்கா, பென்சில்வேனியாவில் அடைக்களம் புகுந்திருக்கும் பத்ஹுல்லாஹ் குலனின் தலைமையில் இயங்கும் இந்த இயக்கத்தின் ஆளுமையை விட இந்த புரட்சி முன்னெடுப்பு பாரியது என்பதே அதற்கான காரணமாகும்.

“பென்சில்வேனியாவிலுள்ள ஒரு வீட்டிலிருந்து துருக்கியை இயக்க முடியாது” என்று கடந்த சனிக்கிழமை பத்ஹுல்லாஹ் குலனை புரட்சியுடன் தொடர்புபடுத்திச் சாடிய அர்துகான், அமெரிக்கா அவரை தம்மிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

மேலும் துருக்கிய பிரதமர் பின்னலி யில்டிரிம் குலனுக்கு ஆதரவளிக்கும் எந்தவொரு நாட்டையும், துருக்கியுடன் போர் பிரகடனம் செய்த நாடாகவே துருக்கி கருதும் என்றும் எச்சரித்திருந்தார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை பத்ஹுல்லாஹ் குல்லன் திட்டவட்டமாக நிராகரித்து “கடந்த ஐந்து தசாப்த்தங்களாக பல இராணுவப்புரட்சிகளால் பாதிக்கப்பட்டவனாக இருக்கின்ற என்னை இந்த புரட்சி முன்னெடுப்புடன் தொடர்புபடுத்தி குற்றம் சுமத்துவது என்னை விசேடமாக கேவலப்படுத்தும் ஒரு செயலாகும். நான் அதனை திட்டவட்டமாக நிராகரிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த சதிப்புரட்சி சிவில் சக்திகளின் சுதந்திரத்தை முடக்கவும், நீதித்துறையையும், இராணுவத்தையும் தனக்கு சார்பாக ஒடுக்கவும், அர்துகான் கனவு காணுகின்ற  நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கான நியாயாதிக்கத்தை உருவாக்கவும் அர்துகானே ஏற்பாடு செய்த நாடகமென பழியை அர்துகான் பக்கமே திருப்பியிருந்தார். அமெரிக்காவும் சதிப்புரட்சியின் பின்னணி எதுவும் தெரியாததுபோல நீழிக்கண்ணீர் வடித்த வண்ணம் குலனுக்கு இந்த சதிவேலையில் சம்பந்தம் இருக்கும் பட்சத்தில் அதற்கான ஆதாரத்தை முன்வைக்குமாறு துருக்கியிடம் கேட்டிருந்தது. ஒரு வாதத்திற்கு குலனுக்கு இச்சதியுடன் சம்பந்தம் இருந்தாலும் கூட குலனும் ஒரு அமெரிக்க முகவர் என்ற அடிப்படையில் அது அமெரிக்காவுக்கு தெரியாதிருக்க எந்தச் சாத்தியமும் இல்லை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

பத்ஹுல்லாஹ் குலன் குற்றம் சாட்டுவதைப்போல அர்துகானே அமெரிக்க ஒத்துழைப்புடன் இந்த சதி நாடகத்தை நடாத்தியிருப்பதற்கான சாத்தியப்படுகளும் இல்லாமல் இல்லை.

காலணித்துவ சக்திகளின் தீய அரசியல் நோக்கங்களுக்காக துருக்கியில் அண்மைக்காலமாக திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்களும், அதனை அடிப்படையாக வைத்து இன்று பிரான்ஸிலும், ஏனைய மேற்குலக நாடுகளிலும் செய்யப்படுவதைப்போல “தீவிரவாதத்திற்கு எதிராக(அரசியல் இஸ்லாத்திற்கு) முழு உலகுமே அணி திரள வேண்டும”; என்ற பிரச்சாரத்தை முன்வைத்து தமது மதச்சார்பற்ற மிதவாதப்போக்கை தூக்கிப்பிடித்து, பிராந்தியத்தில் தீவிரவாத்திற்கு எதிரான போராட்டத்தில் தாம் முன்னணி வீரர்கள் என்பதை நிறுவ நினைக்கும் துருக்கிய அரசின் பரப்புரைகளும் இனிவரும் காலங்களில் துருக்கிய அரசியலின் திசையையும், அது பிராந்தியத்தில் வகிக்க இருக்கும் வகிபாகத்தையும் துல்லியமாகக் காட்டி வந்தன.

மேலும் அரைத் தசாப்பதங்களையும் தாண்டி தொடர்கின்ற சிரிய மக்கள் புரட்சியில் அமெரிக்க நலன்களை பாதுகாப்பதற்கு பஷாருக்கு பின் தனக்கு விசுவாசமான ஒரு முகவரை இன்று வரை இனம்காண முடியாது பதறிப்போயிருக்கும் அமெரிக்கா, தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து பார்த்து விட்டது. சவூதி, ஜோர்தான், ஈரான், துருக்கி என அனைவரும் அமெரிக்காவுக்காக முண்டியடித்து முயன்று பார்த்தாகி விட்டது. ரஸ்யாவும் அமெரிக்காவுக்கு ஊழியம் செய்ய மூக்கை நுழைத்தும் பார்த்து விட்டது. எனினும் அல்லாஹ்(சுபு) புரட்சியின் தூய்மையை காலணித்துவ சதிவலையில் அகப்படாது இன்று வரை பாதுகாத்து வருகிறான். இந்த நிலையில் இனிவரும் காலங்களில் சிரிய புரட்சியின் திசையும், அதனால் விரியும் அரசியல் களமும் முற்றுமுழுதாக தனது கட்டுப்பாட்டுக்குள் தங்குவதற்கு துருக்கியின் வகிபாகமும் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமாகும். இன்னும் சொல்லப்போனால் ஏனையோர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது துருக்கிக்கு சிரிய புரட்சியாளர்களுக்குள்ளும், முஜாஹிதீன்களுக்குள்ளும் ஆதரவைத் திரட்டும் ஆற்றல் அதிகமாகவே உள்ளதால் அதன் பகிவாகம் எதிர்காலத்தில் மிகவும் அதிகமாகவே இருக்கப் போகிறது.

எனவே அமெரிக்கா சொல்கின்ற திசையில் துருக்கி இயங்குவதற்கு வழிவிடுவதற்கு அர்துகானுக்கு இரு முக்கிய சவால்கள் உள்ளன. முதலாவது, உள்நாட்டுக்குள் கணிசமான ஆதரவை அவர் தன்வசப்படுத்த வேண்டும். அது துருக்கியின் அரசியலைப் பொருத்த மட்டில் துருக்கிய இராணுவத்தின் பூரண ஆதரவு இல்லாது சாத்தியமேயில்லை. எனவே அந்த ஆதரவுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய எதனையும் அர்துகான் விட்டு வைக்க முடியாது. மேலும் மக்கள் ஆதரவை தன் பக்கம் வளைத்து வைத்திருப்பதற்கு அரசியல் களத்தில் தனது எதிர் சக்திகளை நசுக்க வேண்டிய தேவை அவருக்கு இருக்கின்றது. அதற்கு என்றோ ஒருநாள் தானும் துருக்கிய அதிபர் கதிரையில் அமரலாம் என நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்  பத்ஹ}ல்லாஹ் குலனின் கட்டமைப்பின் செல்வாக்கை நாட்டில் தரைமட்டமாக்குவது அர்துகானுக்கு மிகவும் அவசியமாகும். அதனையே இந்த சதிபுரட்சியுடன் பத்ஹுல்லாஹ் குலனை வலிந்து முடிச்சுப்போடுவதன் மூலமாக அர்துகான் செய்து வருவதையும் நாம் காண்கிறோம்.

இரண்டாவது பிராந்தியத்திலும், அண்டை நாடுகளிலும் அர்துகானின் இயக்கத்திற்கு பாரிய தடைகள் எதுவும் இருக்கக் கூடாது. அந்த வகையில் அமெரிக்கா சைக்கினை செய்தால் ஈரானோ, ஈராக்கோ, சவூதியோ அதற்கு தடையாக இருக்கப்போவதில்லை. எனினும் இஸ்ரேலுடனான உறவை மாத்திரம் மீள் புதுப்பித்துக் கொள்வது இந்தக்கட்டத்தில் தவிர்க்க முடியாதது. அர்துகானின் ஆட்சிக்காலங்களில் அர்துகான் அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சிற்சில சர்ச்சைகள் தவிர்க்க முடியாது தோன்றினாலும் கூட பொதுவாகப் பார்த்தால் தேசிய நலன் கருதிய பரஸ்பர நல்லுறவே அவர்களிடையே இருந்து வந்துள்ளது. எனினும் இம்முறை சிரிய புரட்சினால் உருவாகியிருக்கும் அமெரிக்க நலன் சார்ந்த களவேலையை, துருக்கி இடைஞ்சல்கள் எதுவுமில்லாது செய்வதற்கு இஸ்ரேலுடனான உறவு மீள் சீரமைக்கப்பட்டு மென்மேலும் உறுதிப்படுத்தப்படுவதன் தேவை உள்ளது. அதன் வெளிப்பாடுதான் இஸ்ரேலுடனான நல்லுறவை புதுப்பொலிவுடன் புதுப்பித்து அதனை வெளிப்படையாகவே அறிவித்து, அமெரிக்க நலன்களுக்காக அவர்களுடன் பிராந்தியக் கூட்டாளிகளாக இயங்கும் முடிவினை அர்துகான் அண்மையில் எடுத்திருந்தார். அவரின் சியோனிஸத்தினுடனான உறவு உள்நாட்டிலும், பிராந்தியத்திலும் அவர் மீதான ஆதரவை கேள்விக்குறியாக்கியிருந்தது.

அமெரிக்க காலணித்துவ நலனையும், பிராந்தியத்தில் துருக்கியின் இராஜ தந்திர வெற்றியையும், அர்துகானின் அரசியல் எதிர்காலத்தையும் தீர்மானிக்கக் கூடிய ஒரு முக்கியமான சந்தியில்தான் இந்த சதி முயற்சி அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதால் அர்துகான் மீதும் சந்தேகம் எழுவதில் தவறில்லை. இராணுவ கட்டமைப்புக்குள் கொந்தளித்துக்கொண்டிருந்த அணி முரண்பாடுகளும், சிரியா உட்பட பிராந்தியத்தில் காணப்படும் களநிலை மாற்றங்களால் இராணுவத்திற்குள் அரசியற் தலைமையை மீறி இயங்க நினைக்கும் போக்கின் வளர்ச்சியும், இராணுவ கட்டமைப்புக்குள் களையெடுப்பு ஒன்றிற்கான அல்லது இராணுவ உயர் நிலைகளில் அதிபர் அர்துகான் சார்பான மேலதிக சுத்தப்படுத்தல் ஒன்றின் அவசியத்திற்கான காலநிலையை தோற்றுவித்திருந்த நிலையிலேயே இந்த சதி முயற்சி நடந்தேரியிருப்பதையும், சதிப்புரட்சி  முறியடிப்புடன் அர்துகான் இராணுவ உயர் பீடங்கள் உட்பட, நீதித்துறை உட்பட சிவில் சேவை அதிகாரிகளில் ஆயிரக்கணக்கானோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துவரும் பின்னணியையும் வைத்துப்பார்த்தால் குலன் சொன்னதில் உண்மையேதும் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இங்கே முஸ்லிம்கள் சில முக்கிய விடயங்களை கருத்திற் கொள்ள வேண்டும். இராணுவ புரட்சி ஒன்றின் ஊடாக அல்லது மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகளின் புரட்சிகர தீர்மானம் ஒன்றின் ஊடாக நடைமுறையில் இருக்கின்ற ஆட்சியை மாற்ற நினைக்கும் முயற்சி அடிப்படையில்  தவறானது அல்ல. அல்லது ஜனநாயம் என்ற தீய குப்ரிய அரசியல் வழிமுறையினூடாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சடவாத ஆட்சியை பலத்தை பயன்படுத்தி மாற்ற நினைப்பதும் தவறானது அல்ல. அதேபோல தொடர்ந்து தமது சுயநல அரசியலுக்காக காலணித்துவ சக்திகளின் கால்களில் மண்டியிட்டு தமது தீனையும், நாட்டையும், மக்களின் வாழ்வையும் அற்ப கிரயத்திற்கு விற்றுவரும் தலைமைகளுக்கு எதிராக முதுகெழும்புள்ள வீரர்களாக எழுந்து நிற்பதிலும் தவறில்லை.    அந்தவகையில் அர்துகானின் அரசை தூக்கி எறிய யாரேனும் முயன்றிருந்தால் அதனை நாம் வரவேற்க வேண்டும். எனினும் இன்று துருக்கியில் நடந்து முடிந்திருப்பது அர்துகானின் காலணித்துவ நலன் பேணுகின்ற ஒரு குப்ரிய சடவாத அரசைக் கவிழ்த்து “துருக்கியின் சடவாத அரசியலமைப்பையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கப் போகிறோம்” என்ற போலி வாக்குறுதியுடன் இடம்பெற்ற இன்னுமொரு காலணித்துவ சடவாத முன்னெடுப்பு. எனவே இந்த இழி இலக்கிற்காக எமது உம்மத்தின் தூய இரத்தம் சிந்தப்படுவது  எவ்வகையிலும் அனுமதிக்கப்பட முடியாதது. 1924ஆம் ஆண்டில் கிலாஃபத்திற்கு எதிராக சதிப்புரட்சியை மேற்கொண்ட முஸ்தபா கமாலின் காலத்திலிருந்து இன்று வரை துருக்கியில் இடம்பெறுவது இத்தகைய இழிப்புரட்சிகள்தான். எனவே அவை எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக நாம் எதிர்த்தாக வேண்டும்.

மாறாக அல்லாஹ்(சுபு)வும், அவனது தூதர்(ஸல்) அவர்களும் விரும்பக்கூடிய தூயதொரு இஸ்லாமிய புரட்சியே துருக்கி போன்ற உயர்ந்த வரலாற்று தேசத்திற்கு பொருத்தமானது. காலணித்துவ தலையீடுகளை வேரடி மண்ணோடு பிடுங்கியெறிந்து ஷரீஆவை முழுமையாக நிலைநாட்டும் தன்மானம் உள்ள ஓர் தலைமையே அதற்கு தேவையானது. எவ்வாறு முஹம்மத்(ஸல்) அவர்களின் மதீனத்துப் புரட்சிக்கு அவ்ஸ், ஹஸ்ரஜ் கோத்திரத்தலைமைகள் தமது கழுத்தை பணயம் வைத்து ஆதரவு தந்தனரோ அதேபோன்றதொரு இஸ்லாமிய புரட்சிக்கு ஆதரவு தருவதே துருக்கிய இராணுவம் போன்றதொரு புகழ்பெற்ற முஸ்லிம் இராணுவத்திற்கு தகுதியானது.

மக்கள் ஆணைக்கு முன்னால் பீரேங்கிகள் ஒரு பொருட்டே இல்லை என சதிப்புரட்சியை முறியடிக்க வீதிக்கிறங்கிய துருக்கிய முஸ்லிம்கள் ஜனநாயகத்தையோ, சடவாதத்தையோ பாதுகாக்கவல்ல களத்தில் வந்து நின்றனர்;. மாறாக மஸ்ஜித்களிலே அதான் ஒலி முழங்கி நாட்டைக் காக்க புறப்பட்டு வாருங்கள் என அர்துகான் அழைப்பு விடுத்ததும் அவர்கள் “யா அல்லாஹ்! யா அல்லாஹ்! அல்லாஹஹு அக்பர்” எனக் கோஷமிட்டபடி வெற்று மார்புடன் டாங்கிகளுக்கு முன்வந்து நின்றது காலணித்துவ சதிகளுக்கு எதிராக இஸ்லாத்தை பாதுகாக்கிறோம் என்ற நம்பிக்கையிலேயே என்பதை நாம் யாரும் மறந்துவிடக்கூடாது. அர்துகானையும் AKP கட்சியையும் இஸ்லாத்தின் காலர்களாக நினைப்பது குருட்டுத்தனமானது என்றாலும் மக்களின் நோக்கம் உயரியது, அவர்களது குறிக்கோள் தெய்வீகமானது.

எனவே துருக்கிய இராணுவத் தளபதிகளும், வீரமிக்க துருக்கிய பொதுமக்களும் எவ்வாறு சதிப்புரட்சிக்கு எதிராக துணிகரமாக செயற்பட்டார்களோ அதைவிட பல மடங்கு தூய்மையுடனும், தியாகத்துடனும் அல்லாஹ்(சுபு)வின் ஷரீயத்தை தமது மண்ணில் நிலைநாட்டும் புரட்சிக்கு வித்திட வேண்டும். அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய காலணித்துவ சக்திகளின் பிடியிலிருந்து தமது இராணுவத்தையும், நாட்டையும் பாதுகாக்க களத்தில் குதிக்க வேண்டும். அவர்களின் கைக்கூலிகளாக இயங்கும் கட்சிகளையும், தலைமைகளையும் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கியெறிய துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும். ‘துருக்கிய தேசம்’ என்ற குறுகிய குப்ரிய தேசிய சிந்தனையிலிருந்து விடுபட்டு ‘ஓர் உம்மத்’ என்ற அகீதா வழியமைந்த கோட்பாட்டில் நின்று அஷ்ஷாமையும், முழு முஸ்லிம் உலகையும் விடுதலை செய்யப்; புறப்பட வேண்டும்.

அப்போது இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பாதுகாக்கிறோம் என்ற நம்பிக்கையில் வீதிக்கிறக்கிய முஸ்லிம்கள் இரு நாட்கள் கழித்து இவை போன்ற செய்திகளை வாசிக்க மாட்டார்கள்.

அப்போது சதிப்புரட்சியை அடக்கிய சூடு தணிய முன்னரே எமது தலைமைகள் எம்மை ஏலமிடும் இவைபோன்ற அவலமும், அவமானமும் எமக்கு ஏற்படாது.

வெள்ளியன்று சதிப்புரட்சி முயற்சிக்கப்படுகிறது…

ஞாயிறன்று…

“இன்சேர்லிக் இராணுவ விமானத்தளத்திலிருந்து அமெரிக்க யுத்த விமானங்கள் சிரியாவுக்குள்ளும், ஈராக்குக்குள்ளும் தாக்குதல் நடாத்தும் அனுமதியை அர்துகானின் அரசு மீள வழங்கியுள்ளது.”

(17-07-2016 பென்டகன் அறிவிக்கிறது)

இருநாள் கழித்து செவ்வாய் அன்று…

“செவ்வாய்க்கிழமை ISIL போராளிகள் என நினைத்து தவறுதலாக நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் அமெரிக்க விமானத்தாக்குதலில் சிறுவர்கள் உட்பட சுமார் 60 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்…”

…தோற்கடிக்கப்பட்ட சதிப்புரட்சியுடன் மூடப்பட்ட இன்சேர்லிக் இராணுவ விமானத்தளம் மீளத்திறக்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக பறந்த விமானங்களைக் கொண்டே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது… (19-07-2016 டெலிகிராஃப் செய்தி வெளியிடுகிறது)

அர்துகானின் துருக்கி எங்கு பயணிக்கிறது புரிகிறதா?

Related Posts

‘அன்புள்ள தய்யிப்’ : மக்ரோன், எர்டோகன் கடிதங்கள் பரிமாற்றம்!

‘அன்புள்ள தய்யிப்’ : மக்ரோன், எர்டோகன் கடிதங்கள் பரிமாற்றம்!

January 16, 2021
இஸ்ரேலுடனான உறவை மேம்படுத்த வேண்டும் – எர்டோகன்!

இஸ்ரேலுடனான உறவை மேம்படுத்த வேண்டும் – எர்டோகன்!

December 28, 2020

பிரெஞ்சுப் பொருட்கள் புறக்கணிப்பை நிறுத்துங்கள் – மக்ரோன் வற்புறுத்தல்!

October 28, 2020

துருக்கி – கிரீஸ் முறுகல்: மத்தியதரைக் கடலில் மீண்டும் எரிசக்தி அகழ்வு!

August 8, 2020
Next Post
துருக்கிய சதிப்புரட்சி – இவர் சொல்வது உண்மையானால்…? – உஸ்தாத் சஈத் ரித்வான் !

துருக்கிய சதிப்புரட்சி - இவர் சொல்வது உண்மையானால்...? - உஸ்தாத் சஈத் ரித்வான் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

சமீபத்திய இடுகைகள்

  • உசூலுல் ஃபிக்ஹிற்கும், அல் கவாஇத் அல் ஃபிக்ஹிய்யாஹ்வுக்கும் இடையான வேறுபாடு
  • இலங்கையின் பொருளாதார நெருக்கடி முஸ்லிம்களின் கண்களைத் திறக்குமா?
  • தீவிர இந்துத்துவா பாதையிலா திருமலை சண்முகா கல்லூரி?
  • சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!
  • இந்திய முஸ்லிம்களின் ‘இனப்படுகொலை’ ஐ இனி எதிர்பார்க்கலாம் – Dr. Gregory Stanton!

சமீபத்திய கருத்துகள்

  • Face to true on கொரோனா வைரஸ் மரணங்களுக்கு தகனத்தை கட்டாயமாக்கியது இலங்கை!
  • Fareed on கிலாஃபா மட்டுமே மக்கள் நல அரசு!
  • Nizamhm on இலங்கையில் முஸ்லிம் விரோத பிரச்சாரத்திற்கு சீனா தலைமை! தெரண களத்தில்!
  • Abdullah on கொரோனா வைரஸ் மரணங்களுக்கு தகனத்தை கட்டாயமாக்கியது இலங்கை!
  • Admin on இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களும் தகனம் செய்யப்படலாம்!

காப்பகம்

  • June 2022
  • April 2022
  • February 2022
  • January 2022
  • December 2021
  • September 2021
  • August 2021
  • July 2021
  • June 2021
  • April 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020
  • October 2020
  • September 2020
  • August 2020
  • July 2020
  • June 2020
  • May 2020
  • April 2020
  • March 2020
  • February 2020
  • January 2020
  • December 2019
  • October 2019
  • September 2019
  • May 2019
  • April 2019
  • February 2019
  • July 2018
  • May 2018
  • March 2018
  • January 2018
  • December 2017
  • October 2017
  • February 2017
  • January 2017
  • November 2016
  • September 2016
  • August 2016
  • July 2016
  • June 2016
  • May 2016
  • April 2016
  • March 2016
  • February 2016
  • January 2016
  • December 2015
  • November 2015
  • October 2015
  • August 2015
  • March 2015
  • September 2014
  • August 2014
  • July 2014
  • May 2014
  • April 2014
  • March 2014
  • February 2014
  • November 2013
  • October 2013
  • September 2013
  • March 2013
  • February 2013
  • July 2012
  • December 2011

பிரிவுகள்

  • Uncategorized
  • YouTube சேனல்
  • அகீதா
  • அறிக்கைகள்
  • ஆய்வு
  • உசூலுல் பிக்ஹ்
  • எண்ணக்கரு
  • ஒலி
  • ஒளி
  • கட்டுரைகள்
  • கிலாஃபா
  • சிந்தனை
  • செய்திகள்
  • செய்திப்பார்வை
  • தஃவா
  • நடப்பு விவகாரம்
  • நிகழ்வுகள்
  • பிக்ஹ்
  • பிரசுரங்கள்
  • பொருளாதாரம்
  • யதார்த்தம் எது ?
  • வரலாறு
  • வலையொலி

சமீபத்திய இடுகைகள்

  • உசூலுல் ஃபிக்ஹிற்கும், அல் கவாஇத் அல் ஃபிக்ஹிய்யாஹ்வுக்கும் இடையான வேறுபாடு
  • இலங்கையின் பொருளாதார நெருக்கடி முஸ்லிம்களின் கண்களைத் திறக்குமா?
  • தீவிர இந்துத்துவா பாதையிலா திருமலை சண்முகா கல்லூரி?
  • சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!
  • இந்திய முஸ்லிம்களின் ‘இனப்படுகொலை’ ஐ இனி எதிர்பார்க்கலாம் – Dr. Gregory Stanton!

பிரிவுகள்

Uncategorized YouTube சேனல் அகீதா அறிக்கைகள் ஆய்வு உசூலுல் பிக்ஹ் எண்ணக்கரு ஒலி ஒளி கட்டுரைகள் கிலாஃபா சிந்தனை செய்திகள் செய்திப்பார்வை தஃவா நடப்பு விவகாரம் நிகழ்வுகள் பிக்ஹ் பிரசுரங்கள் பொருளாதாரம் மல்டி மீடியா யதார்த்தம் எது ? வரலாறு வலையொலி
No Result
View All Result
  • நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்

© 2020 www.darulaman.net