• நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்
No Result
View All Result
  • நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்
No Result
View All Result
Darul Aman
No Result
View All Result
‘அத் தவ்லா’ – ‘அரசு’ பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

இரத்தம் வறண்டு மடிந்து கொண்டிருக்கும் அல் அஸாத்தின் அரசு!

தஃவா, களப்பணி, சிறை: ரிஷ்க் பற்றிய புரிதல்

Home கட்டுரைகள் கிலாஃபா

‘அத் தவ்லா’ – ‘அரசு’ பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

April 26, 2016
in கிலாஃபா
Reading Time: 3 mins read
0
0
SHARES
87
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘அத்தவ்லா’ என்ற அரபி வார்த்தைக்கு மொழியியல் ரீதியாக ‘கலப – மிகைத்துவிடுதல்’ என்று பொருளாகும். காலத்தின் மாறுதலை சுட்டிக்காட்டுவதற்கு இந்த வார்த்தையை பயன் படுத்துவதும் வழக்கத்தில் இருந்தது. ‘நாட்கள் மாற்றப்பட்டுள்ளன அல்லது சுழற்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன’ என்று மொழியியல் ரீதியாக கூறப்படுகிறது, இதற்கு நாட்கள் மாற்றமடைந்து விட்டன அல்லது அல்லாஹ்(சுபு) மக்களுக்கு மத்தியில் அவற்றை மாற்றுகிறான் போன்ற அர்த்தங்கள் உள்ளன. கருத்தாக்கங்களில் (concepts) ஏற்படும் மாற்றங்கள், காலத்தால் ஏற்படும் மாற்றங்கள், மக்களுக்கு மத்தியில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அரசுகள் மாற்றம் அடைகின்றன. ‘அரசு’ என்ற மொழிவழக்கு ரீதியான வார்த்தை குறிப்பிட்ட நிலப் பரப்பில் வாழும் மக்கள் கூட்டத்தின் மீது ஏவல் மற்றும் விலக்கல் தொடர்பான ஆணைகளை பிறப்பிப்பதற்கு அதிகாரம் பெற்றுள்ள அமைப்பை குறிப்பிடுகிறது. எனினும் சமுதாயங்களின் எதார்த்த நிலையை பொருத்தும் அவர்களின் கண்ணோட்டங்களை பொருத்தும் ஏற்படும் வேறுபாடுகளின் காரணமாக ‘அரசு’ தொடர்பான வரையறைகள் மாறுபடுகின்றன.

உதாரணமாக மேற்கத்திய மக்கள் அரசின் எதார்த்தநிலை குறித்தும் அரசு அமல்படுத்தும் சட்டங்கள் குறித்தும் மாறுபட்ட கண்ணோட்டங்களை கொண்டிருக்கிறார்கள். வரலாற்றின் மத்தியகால கட்டத்தில் நிகழ்ந்ததை போன்று அரசின் எதார்த்தநிலை மதச்சார்பு கொண்ட தாகவோ அல்லது சர்வாதிகாரத்தை கொண்டதாகவோ அல்லது ஜனநாயக முறையை கொண்டதாகவோ இருக்கலாம். எனினும் அரசு அதன் நிலப்பரப்பிலும் அதன் மக்கள் கூட்டத்திலும் அதன் ஆட்சியாளரிலும் எதிரொலிக்கிறது என்பதை பொருத்தும், இம்மூன்று அம்சங்களும் அரசின் அடித்தளமாக விளங்குகின்றன என்பதை பொருத்தும் மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்தையே கொண்டிருந்தார்கள். மேற்கத்திய மக்களை பொருத்தவரை, அரசு என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிறுவப்படுகிறது என்றும் அதில் குறிப்பிட்ட மக்கள் கூட்டம் நிரந்தரமாக வசித்துவருகிறது என்றும் ஆட்சியதிகாரம் பெற்ற ஆட்சியாளர் ஒருவர் அவர்களுக்கு தலைமையேற்று வழிநடத்துகிறார் என்றும் கருதுகிறார்கள்.

இஸ்லாமிய அரசை பொருத்தவரை அது ஷரீஆ சட்டங்களின் அடிப்படையில் குடிமக்களின் விவகாரங்களை மேலாண்மை செய்யும் அரசியல் மையமாகவும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுள்ள அமைப்பாகவும் விளங்குகிறது. வேறுவகையில் கூறினால், அல்லாஹ்(சுபு) அருளியவற்றை கொண்டு ஆட்சிசெய்தல் மற்றும் இஸ்லாத்தின் செய்தியை உலக முழுவதற்கும் எடுத்துச்செல்லுதல் ஆகிய பணிகளை நிறைவேற்றுகின்ற அரசாக கிலாஃபா விளங்குகிறது, ஏனெனில் இஸ்லாமிய நிலப்பரப்புகளில் ஷரீஆ சட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கும், இஸ்லாம் முழு உலகிற்கும் ஒளியாகவும் நேர்வழி காட்டுகின்ற மகத்தான செய்தியாகவும் விளங்குகிறது என்பதால் அதை தஃவா மூலமாகவும் ஜிஹாது மூலமாகவும் எடுத்துச்செல்வதற்கும், உரிய வழிமுறையாக (தரீக்கா) இஸ்லாமிய அரசு திகழவேண்டும் என்று அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டுள்ளான்.

இஸ்லாமிய அரசு குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிறுவப்பட்டிருந்தபோதும், தன்னுடைய குடிமக்களின் விவகாரங்களை மேலாண்மை செய்தற்குரிய பொறுப்பை சுமந்து கொண்டிருந்த போதும், அதன் நிலப்பரப்பின் அளவையோ அல்லது அதன் குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கையையோ அது அடித்தளமாக கருதுவதில்லை. எனினும் எல்லா காலகட்டங்களிலும் அதன் குடிமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகிக்கொண்டுதான் இருந்தது! இனத்திலும் நிறத்திலும் மொழியிலும் வேறுபட்ட மக்கள் அதன் குடிமக்களாக விளங்கினார்கள். நிலப் பரப்பை பொருத்தவரை குறிப்பிட்ட பகுதிக்குள் கட்டுப்பட்டிருக்கும் வகையில் அது சுருங்கிய தாகவோ குறுகிய எல்லைகளை கொண்டதாகவோ இருக்கவில்லை மாறாக எப்போதும் அதன் எல்லைகள் விரிந்துகொண்டேயிருந்தது ஏனெனில் அது உலகளாவிய மகத்தான செய்தியை தன்னிடத்தே கொண்டுள்ளது! அதை முழு உலகிற்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் உலக மக்கள் அனைவரையும் அதன்பால் அழைக்கவேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ்(சுபு) ஹகட்டளையிட்டுள்ளான்! வெள்ளையராக அல்லது கருப்பராக இருந்தபோதும், அரபுகளாக அரபல்லாதவர்களாக இருந்தபோதும், ஐரோப்பியர்களாக அமெரிக்கர்களாக ரஷ்யர்களாக இருந்தபோதும் அல்லாஹ்(சுபு)வுடைய மார்க்கத்தை தழுவிக்கொள்ளும் வகையில் அனைவருக்கும் இஸ்லாத்தின் செய்தியை எத்திவைக்க வேண்டும் என்று அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டுள்ளான்! ஆகவே எந்த சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் இஸ்லாத்தின் அழைப்பிற்கு செவி சாய்த்து அல்லாஹ்(சுபு)வுடைய மார்க்கத்தில் இணைந்துவிட்டால் பிறகு அவர்கள் அனைவரும் இஸ்லாமிய அரசின் குடிமக்களில் ஒருபகுதியினராக ஆகிவிடுவார்கள், அவர்களின் நிலப்பரப்புகள் இஸ்லாமிய அரசின் நிலப்பரப்புகளாக ஆகிவிடும்! இஸ்லாத்தின் செய்தியை எடுத்துச்செல்லும் பொருட்டு எந்த நிலப்பரப்பை ஜிஹாது மூலமாக அரசு வெற்றிகொள்கிறதோ அதுவும் இஸ்லாமிய அரசின் நிலப்பரப்புகளின் ஒருபகுதியாகவும் அதன் ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்டதாகவும் ஆகிவிடும், அதன் மக்கள் இஸ்லாத்தை தழுவினாலும் தழுவாவிட்டாலும் சரியே!

எந்தவொரு புதிய அரசும் அது தோன்றியுள்ள புதிய சிந்தனையின் மீதுதான் நிலை கொண்டிருக்கிறது. வெற்றி கொள்ளப்பட்ட நிலப்பரப்பின் அதிகாரம் கைப்பற்றப்பட்டு ஆட்சி யதிகாரம் மாறும்போது அரசு தொடர்பான மக்களின் சிந்தனைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. ஏனெனில் சிந்தனை கருத்தாக்கங்களாகவும் நம்பிக்கைகளாகவும் மாற்றமடையும்போது அவை ஒருவருடைய நடத்தை பண்புகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, அப்போது அவர் இந்த கருத்தாக்கங்களி னால் வடிவமைக்கப்படுகிறார். எனவே வாழ்வியல் தொடர்பான அவருடைய கண்ணோட்டம் மாறிவிடுகிறது, இதன்விளைவாக மற்ற மக்களுடன் கொண்டுள்ள உறவுகள் மற்றும் சுயநலம் சார்ந்த விருப்பங்கள் ஆகியவை தொடர்பான அவருடைய கண்ணோட்டமும் மாறிவிடுகிறது. மக்களின் விவகாரங்கள், அவர்களுக்கு மத்தியிலுள்ள உறவுகள், அவர்களுடைய நலன்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் பொருட்டுதான் எந்தவொரு ஆட்சியமைப்பும் நிறுவப்படுகிறது.

இரண்டாவது அகபா உடன்படிக்கையில் அன்ஸாரிகள் பைஆ அளித்தபின்னர் நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவை அடைந்தார்கள். அகாபாவில் அளிக்கப்பட்டது பாதுகாப்பு, போர் மற்றும் மதீனாவின் ஆட்சியதிகாரத்தை நபி(ஸல்) அவர்களுக்கு வழங்குதல் ஆகியவை தொடர்பான பைஆ என்பதால் மதீனாவை அடைந்த உடனேயே இஸ்லாமிய அரசை நிறுவும் பணியை நபி(ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள். இஸ்லாமிய அரசின் தோற்றம் என்பது இஸ்லாத்தின் புதிய அகீதாவும் நபி(ஸல்) அவர்கள் மீது ஈமான்கொண்டிருந்த மக்கள் ஏற்றுக்கொண்டிருந்த பல புதிய கருத்தாக்கங்களும் ஏற்படுத்திய விளைவுகளாகவே இருந்தது. இந்த கருத்தாக்கங்கள் நபி(ஸல்) அவர்களை பின்பற்றிய மக்களிடம் வாழ்வியல் பற்றிய புதியதோர் கண்ணோட்டத்தை ஏற்படுத்தியிருந்தது, இதன்விளைவாக மக்களுக்கு மத்தியிலுள்ள உறவுகள் மற்றும் சுயநலம் சார்ந்த விருப்பங்கள் ஆகியவை பற்றிய அவர்களுடைய கண்ணோட்டம் புதிய பரிமாணத்தை அடைந்திருந்தது.

சட்டவடிவங்கள் தொடர்பான வசனங்கள் அருளப்படாத நிலையில் இந்த அகீதாவின் அடிப்படையிலும் அதிலிருந்து தோன்றிய கருத்தாக்கங்களின் அடிப்படையிலும் நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் இஸ்லாமிய அரசை நிறுவினார்கள். எனவே இஸ்லாமிய அரசு என்பது புதிய அகீதா மற்றும் அதிலிருந்து தோன்றிய பல புதிய சிந்தனைகள், கருத்தாக்கங்கள் ஆகிய வற்றின் மீது கட்டமைக்கப்பட்ட புதிய அரசாக விளங்கியது.

அதன் இயல்பிலும் கட்டமைப்பிலும் அதன் இலட்சியத்திலும் அதன் அடித்தளத்திலும் முற்றிலும் மாறுபட்ட தனித்தன்மை கொண்ட ஓர் அரசாக இஸ்லாமிய அரசு விளங்கியது. உலகில் நிலைபெற்றிருந்த மற்ற அனைத்து அரசுகளிலிருந்து இயல்பிலும் அமைப்பிலும் முழுமை யாக வேறுபட்ட ஓர் அரசாக திகழ்ந்தது. இஸ்லாமிய அரசு ‘லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் & வணங்கிவழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹுவை தவிர வேறில்லை; முஹம்மது(ஸல்) அவனுடைய தூதராக இருக்கிறார்’ என்ற இஸ்லாமிய அகீதாவின் அடித்தளத்தை ஆதாரமாக கொண்டு தோன்றிய அரசாக இருந்தது. இஸ்லாத்தின் அகீதா என்பது வாழ்வியல் பற்றிய முழுமையான சிந்தனையாகும், அதனடிப்படையிலும் அதிலிருந்து தோன்றியுள்ள சிந்தனைகள் மற்றும் கருத்தாக்கங்கள் அடிப்படையிலும் வாழ்வியல் தொடர் பான முஸ்லிம்களின் கண்ணோட்டம் தீர்மானிக்கப்படுகிறது. இந்த கண்ணோட்டம், வாழ்வு என்பது படைப்பாளன் ஒருவனால் படைக்கப்பட்டுள்ளது அந்த படைப்பாளனின் ஏவல், விலக்கல் கட்டளைகள் அடிப்படையில்தான் அது நடத்திச்செல்லப்படுகிறது என்ற நம்பிக்கை யின்பால் மனிதர்களை இட்டுச்செல்கிறது. முஸ்லிம்களை பொருத்தவரை, அல்லாஹ்(சுபு) ஒருவனை தவிர்த்து சட்டம் வழங்குவதற்கு எவருக்கும் அதிகாரமில்லை என்பதும் இந்த வாழ்க்கையிலும் இஸ்லாமிய அரசிலும் அல்லாஹ்(சுபு)வின் சட்டத்தை தவிர்த்து உம்மாவிற்கும் அல்லது மக்களுக்கும் அல்லது ஆட்சியாளருக்கும் அல்லது வேறு எதற்கும் இறையாண்மை (sovereignty) கிடையாது என்பதும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய உண்மையாக இருக்கிறது.

ஆகவே எந்தவொரு சட்டத்தை இயற்றுவதற்கும் அல்லது அல்லாஹ்(சுபு)  தன்னுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளியவற்றிற்கு அந்நியமான ஹஎந்தவொரு செயலாக்க அமைப்பை (system) அல்லது விதிமுறையை உருவாக்குவதற்கும் உம்மாவிற்கோ அல்லது ஆட்சியாளருக்கோ அனுமதியில்லை. இஸ்லாமிய சட்டங்களுக்கு முரண்படுகின்ற ஏதேனும் ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு உம்மா பொதுவான முறையில் ஒப்புதல் தெரிவித்தபோதும் அந்த ஒப்புதலுக்கு எத்தகைய மதிப்பும் கிடையாது. எனவே உதாரணமாக, வட்டி அடிப்படையிலுள்ள வரவுசெலவுகள் இல்லாமல் பொருளாதாரமும் வர்த்தகமும் செழிக்காது என்ற கருத்தில் வட்டியை சட்டரீதியாக ஆக்குவதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது தனிமனித சுதந்திரம் என்ற அடிப்படையில் திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுகளை சட்ட ரீதியாக ஆக்குவதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது மனிதஉரிமை மீறல் என்ற அடிப்படையில் மார்க்கத்தை விட்டு வெளியேறியவரை கொலை செய்வதை தடைசெய்வதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது இஸ்லாமிய அரசு என்ற முறையில் இஸ்லாமிய அகீதாவிற்கு அப்பாற்பட்டு மற்றொரு அடிப்படை கோட்பாடு இருப்பதை அனுமதிப்பதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது ஆட்சியதிகாரத்தில் முஸ்லிம்களுக்கு பரம்பரை வாரிசுரிமை அளிப்பதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும் அல்லது ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் மதசார்பற்ற அரசியல் கட்சிகளை அமைப்பதற்கு உம்மா ஒப்புதல் அளித்தாலும், பொதுக்கருத்து என்ற அடிப்படையில் இதுபோன்ற எத்தகைய விவகாரங்களுக்கு ஒப்புதல் அளித்தாலும் அவையனைத்திற்கும் எத்தகைய மதிப்பும் கிடையாது அவற்றிற்கு சட்டரீதியாக எத்தகைய அங்கீகாரமும் கிடையாது, ஏனெனில் அல்லாஹ்(சுபு) மட்டுமே சட்டம் வழங்கு பவனாக (Legislator) இருக்கிறான் என்ற முறையிலும் சட்டம் வழங்குவதற்குரிய அதிகாரம் மனிதர்களுக்கு இல்லை என்ற முறையிலும் ஹஇவை இஸ்லாமிய சட்டங்களுக்கும் ஷரீஆவின் இறையாண்மைக்கும் அல்லாஹ்(சுபு)வின் மீதுள்ள ஈமானிற்கும் முரண்பாடாக இருக்கின்றன.

இஸ்லாமிய அகீதா இஸ்லாமிய அரசின் அடித்தளமாக விளங்குகிறது என்ற முறையில் மக்களுக்கு மத்தியிலுள்ள உறவுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்டத்தை இயற்று வதற்கோ அல்லது அரசியல் சாஸனம் அல்லது ஏதேனும் குறிப்பிட்ட செயலாக்க அமைப்பு அல்லது அரசாணை ஆகியவற்றை ஏற்று அமல்படுத்துவதற்கோ அல்லது அல்லாஹ்(சுபு) அருளியவற்றுஹக்கு அந்நியமான சட்டங்கள் எதனையும் இஸ்லாமிய அரசின் நடைமுறைப் படுத்துதலில் கொண்டுவருதற்கோ ஆட்சியாளர்களாக இருந்தாலும் நீதிபதிகள், அறிவுஜீவிகள், அரசியல் மேதைகள், ஷூரா கவுன்ஸில் உறுப்பினர்கள், மஜ்லிஸுல் உம்மா உறுப்பினர்கள், அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய எவருக்கும் சட்டரீதியான எத்தகைய அதிகாரமும் கிடையாது! மேலும் அரசு விவகாரங்களை நடத்திச்செல்லும் பொருட்டு மக்களை நிர்பந்தம் செய்வதிலிருந்தும், மனிதர்கள் உருவாக்கிய செயலாக்க அமைப்புகளையும் சட்டங்களையும் பின்பற்றுவதற்கு மக்களுக்கு தேர்வுரிமையை அளிப்பதிலிருந்தும் ஆட்சியாளர்கள் தடை செய்யப்பட்டுள்ளார்கள்.

கலீஃபா தனது சட்டரீதியான அதிகாரத்தின் அடிப்படையில் அரசியல் சாஸனத்தை அல்லது செயலாக்க அமைப்பை (system) அல்லது சட்டத்தை ஏற்று அமல்படுத்தும்போது அவற்றை அல்லாஹ்(சுபு)வின் வேதம் மற்றும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் சுன்னா ஆகியவற்றிலிருந்து தனது இஜ்திஹாத் மூலமாக எடுத்துக்கொள்ளவேண்டும் அல்லது முஸ்லிம் களிலுள்ள சட்டயியல் நிபுணர்கள் மற்றும் கற்றறிந்த அறிஞர்கள் ஆகியவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இஸ்லாமிய அரசின் அரசியல் சாஸனம், அதன் செயலாக்க அமைப்புகள், மற்றும் சட்டங்கள் ஆகியவற்றை அல்லாஹ்(சுபு) தனது தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளியவற்றிலிருந்து மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். அதாவதுஹ அல்லாஹ்(சுபு)வின் வேதம், அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் சுன்னா மற்றும் அவற்றிலிருந்து பெறப்பட்ட கியாஸ் (Analogy) ஆகியவற்றிலிருந்தும் ஸஹாபாக்களின் ஏகோபித்த முடிவுகளிலிருந்தும் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும்.

எனவே இஸ்லாமிய அகீதாவிலிருந்து தோன்றியிராத சிந்தனைகள் எதையும் பாதுகாப்ப திலிருந்தும் அல்லது அதுபோன்ற கருத்தாக்கங்கள், சட்டங்கள், அரசியல் சாஸனங்கள், விதி முறைகள் அல்லது அளவுகோல்கள் ஆகியவற்றை பரிசீலிப்பதிலிருந்தும் இஸ்லாமிய அரசு தடைசெய்யப்பட்டுள்ளது. அன்றியும் அல்லாஹ்(சுபு)வின் வேதம் மற்றும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் சுன்னா ஆகிவற்றிலிருந்து கொண்டுவரப்படாதவை மற்றும் சட்ட ரீதியான கியாஸ் அல்லது ஸஹாபாக்களின் ஒருமித்த முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கொண்டுவரப்படாதவை ஆகியவற்றை ஏற்று அமல்படுத்துவதிலிருந்தும் அது தடைசெய்யப் பட்டுள்ளது. எனவே ஜனநாயகத்தின் அடிப்படையிலுள்ள வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்வதிலிருந்தும் பன்முக நம்பிக்கைகள், முஸ்லிம்கள் பரம்பரை அடிப்படையில் ஆட்சி அதிகாரத்தை பெறுதல், மதச்சார்பின்மை கோட்பாடுகளில் நம்பிக்கை கொள்ளுதல் அல்லது பல்வேறு வகையான சுதந்திரங்கள் போன்ற ஜனநாயம் அழைப்புவிடுக்கும் ஆட்சியமைப்பு அம்சங்கள் எவற்றையும் ஏற்றுக்கொள்வதிலிருந்தும் இஸ்லாமிய அரசு தடைசெய்யப்பட்டுள்ளது ஏனெனில் இவையனைத்தும் இஸ்லாமிய ஷரீஆவிற்கும் இஸ்லாமிய சட்டங்களுக்கும் முரணாக இருக்கின்றன. மேலும் தேசியவாதம், தேசப்பற்று, சுயஆட்சி போன்ற கருத்தாக்கங்களை பரிசீலனை செய்வதிலிருந்தும் இஸ்லாமிய அரசு தடைசெய்யப்பட்டுள்ளது ஏனெனில் இந்த கருத்தாக்கங்கள் இஸ்லாமிய அகீதாவிலிருந்து தோன்றவில்லை என்பதோடு இவை ஷரீஆ சட்டங்களுக்கு முரண்பாடாக இருக்கின்றன. அன்றியும் இவற்றை இஸ்லாமிய ஷரீஆ ஆழமாக வெறுக்கிறது என்ற முறையிலும் இவற்றை ஏற்று அமல்படுத்துவது குறித்து கடுமையாக எச்சரித்திருக்கிறது என்ற முறையிலும் இவை முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. மன்னராட்சி, குடியரசு ஆட்சி, சர்வாதிகார ஆட்சி மற்றும் ஏகாதிபத்திய ஆட்சி போன்ற ஆட்சியமைப்பு தொடர்பான கருத்தாக்கங்களை ஏற்றுக்கொள்வதிலிருந்தும் இஸ்லாமிய அரசு தடைசெய்யப் பட்டுள்ளது, ஏனெனில் இஸ்லாமிய அகீதாவிலிருந்து தோன்றவில்லை என்பதோடு இவை ஷரீஆவிலிருந்து எடுக்கப்படவில்லை என்ற அடிப்படையில் இஸ்லாமிய சட்டங்களுக்கு முரண்பாடாக இருக்கின்றன.

இஸ்லாத்திற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று ஆட்சியாளர்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களுக்கும் அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டுள்ளான் என்பதால், இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களையும் ஆட்சியாளர்கள் முழுமையான முறையிலும் எவ்வாறு அருளப்பட்டுள்ளதோ அதேமுறையிலும் நடைமுறைப்படுத்தவேண்டியது கட்டாயமாகும். ஏனெனில்

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

وَمَا آَتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். (அல்ஹஷ்ர் : 7)

இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள ‘مَا’ என்ற அரபி வார்த்தை பொதுவான அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது, எனவே நபி(ஸல்) ஏவியுள்ள அனைத்து கட்டளைகளையும் ஏற்று செயல்படுத்தவேண்டும் என்பதும் அவர்கள்(ஸல்) தடைசெய்துள்ள அனைத்திலிருந்தும் விலகிக் கொள்ளவேண்டும் என்பதும் கட்டாயமாகும்(வாஜிபாகும்). இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள ஏவல் மற்றும் விலக்கல் தொடர்பான வேண்டுகோள் திட்டவட்டமான கட்டளையாக உள்ளது ஏனெனில், இந்த வசனத்தின் இறுதியில் இடம்பெற்றுள்ள ‘அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கொண்டுவந்துள்ளவற்றை ஏற்று செயல்படாதவர்களுக்கும் அவர்கள் (ஸல்) தடைசெய்துள்ள விஷயங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளாதவர்களுக்கும் கடுமையான தண்டனை உண்டு’ என்ற சொற்றொடர் இந்த கட்டளை திட்டவட்டமானது என்பதற்குரிய கரீனாவாக விளங்குகிறது.

மேலும் அல்லாஹ்(சுபு) அருளியவற்றை கொண்டு தீர்ப்பளிக்கவேண்டும் என்று தனது தூதர்(ஸல்) அவர்களுக்கு அவன்(சுபு) கட்டளையிட்டுள்ளான்,

‎‎‎وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ ‎‎‎‎ ‎‎‎‎‎‎ ‎‎‎

இன்னும் அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக;  (அல்மாயிதா : 49)

அல்லாஹ்(சுபு) அருளியுள்ளவை ஏவல்கள் என்றாலும் விலக்கல்கள் என்றாலும் அவை தொடர்பான சட்டங்களின் அடிப்படையில் மட்டுமே ஆட்சிசெய்யவேண்டும் என்ற இந்த கட்டளை அல்லாஹ்(சுபு) அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்களுக்கு பின்னர் வருகின்ற அனைத்து முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் அளிக்கப்பட்ட திட்டவட்டமான கட்டளையாக உள்ளது, ஏனெனில் ‘مَا’ என்ற இந்த வார்த்தை பொதுவான அர்த்தம் கொண்டது என்பதால் அதில் அல்லாஹ்(சுபு) அருளிய அனைத்து சட்டங்களும் அடங்கும்.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களும் அவர்களுக்கு பின்னர் ஆட்சியதிகாரத்தை பெற்றுள்ள அனைத்து முஸ்லிம் ஆட்சியாளர்களும் மக்களின் மனஇச்சைகளை பின்பற்று வதிலிருந்தும் அவர்களுடைய அபிலாஷைகளுக்கு கட்டுப்படுவதிலிருந்தும் தடைசெய்யப்பட்டு இருக்கிறார்கள். ஏனெனில் அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,

وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْضِ مَا أَنْزَلَ اللَّهُ إِلَيْكَ

இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக;  (அல்மாயிதா : 49)

அல்லாஹ்(சுபு) அருளியவற்றில் சிலவற்றை நடைமுறைப்படுத்தும்போது மக்களின் களங்கமுற்ற கருத்தாக்கங்களுக்கு ஏற்ப நடந்துகொள்வது குறித்து நபி(ஸல்) அவர்களையும் அவர்களுக்கு பின்னர் வரும் முஸ்லிம் ஆட்சியாளர்களையும் அல்லாஹ்(சுபு) எச்சரிக்கை செய்கிறான். அல்லாஹ்(சுபு) அருளியவற்றுக்கு அந்நியமானவற்றை கொண்டு ஆட்சிசெய்வது கூடும் என்றோ அல்லது அல்லாஹ்(சுபு) அருளியவை சட்டரீதியானதல்ல என்றோ ஒருவர் கருதினால் அவர் நிச்சயமாக காஃபிர் என்று அல்லாஹ்(சுபு) விவரித்துள்ளான்!

وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ

எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம் (அல்மாயிதா : 44)

அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நியமானவற்றை கொண்டு ஆட்சிசெய்வது கூடும்  என்று நம்பிக்கை கொள்ளாத நிலையில் ஒருவர் அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நிய மானவற்றை கொண்டு ஆட்சி செய்தால் அவர் ஃபாஸிக் (வெளிப்படையாக பாவம் செய்பவர்) என்றும் ழாளிம் (அநீதம் இழைப்பபவர்) என்றும் அல்லாஹ்(சுபு) விவரித்துள்ளான்.

இஸ்லாத்தின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை முழுமையாகவும் விரிவாகவும் ஒரே சமயத்திலும் மேற்கொள்ளவேண்டுமே ஒழிய படிப்படியாக மேற்கொள்ளக்கூடாது ஏனெனில் படிப்படியான நடைமுறைப்படுத்துதல் என்பது இஸ்லாமிய சட்டங்களுக்கு வெளிப்படையான முறையில் முரண்பாடாக இருக்கிறது. இஸ்லாமிய சட்டங்களின் சட்டரீதியான மதிப்பில் நம்பிக்கை கொள்ளாத நிலையில் அல்லது இஸ்லாமிய சட்டங்களில் குறிப்பிட்ட சிலவற்றின் சட்டரீதியான மதிப்பில் நம்பிக்கை கொள்ளாத நிலையில் ஒருவர் அல்லாஹ்(சுபு) அருளிய அனைத்து சட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அல்லது சில சட்டங்களை நடைமுறைப்படுத்திவிட்டு மற்ற சில சட்டங்களை புறக்கணித்துவிட்டார் என்றால் அவர் காஃபிர் என்றே கருதப்படுவார். இஸ்லாத்தின் சட்டங்களில் நம்பிக்கை கொண்டிருக்கும் நிலையில் அவற்றை ஒருவர் நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அவர் பாவியாகவும் மாறு செய்தவராகவும் கருதப்படுவார்.

எனவே ஷரீஆ சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அலட்சியம்காட்டவும் கூடாது, சட்டங்களை படிப்படியாக நடைமுறைப்படுத்தவும் கூடாது, ஏனெனில் குறிப்பிட்ட ஒரு வாஜிபிற்கும் மற்றொரு வாஜிபிற்கும் இடையிலும், குறிப்பிட்ட ஒரு விலக்கலுக்கும் மற்றொரு விலக்கலுக்கும் இடையிலும், குறிப்பிட்ட ஒரு சட்டத்திற்கும் மற்றொரு சட்டத்திற்கும் இடையிலும் எத்தகைய வேறுபாடுகளும் கிடையாது! அல்லாஹ்(சுபு)வின் சட்டங்கள் அனைத்தும் சமமானவையாகும், எத்தகைய தாமதமோ அல்லது தள்ளிப்போடுதலோ அல்லது படிப்படியான நடைமுறைப்படுத்துதலோ எதுவுமின்றி அவையனைத்தையும் ஒரேநேரத்தில் முழுமையாகவும் விரிவாகவும் உடனடியாகவும் நடைமுறைப்படுத்தவேண்டும், இதற்கு மாறுபாடான முறையில் செயல்படுபவர் கீழ்க்கண்ட அல்லாஹ்(சுபு)வின் வார்த்தையின் அடிப்படையில் தண்டனைக்குரியவராகவே கருதப்படுவார்!

أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ‎‎‎‎

 நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. (அல்பகரா : 85)

ஆகவே இஸ்லாத்தின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆற்றலில்லை அல்லது நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான சூழல் ஏற்படவில்லை அல்லது ஷரீஆவை நடை முறைப்படுத்துவதற்கு உலகமக்களின் வெகுஜனக்கருத்து எதிராக உள்ளது அல்லது இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வல்லரசு நாடுகள் அனுமதிக்காது அல்லது இது போன்ற அற்பமான மதிப்பற்ற சாக்குப்போக்குகள் அடிப்படையில் இஸ்லாத்தின் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இஸ்லாமிய அரசு மனிதர்களை கொண்டுள்ள அரசாக உள்ளதே ஒழிய (தெய்வீகம் பொருந்திய) புனிதமான அரசல்ல; அதை நடத்திச்செல்லும் கலீஃபா அல்லது இமாம் மனிதராக இருக்கிறார் என்பதால் அவர் புனிதமானவராகவோ அல்லது மாசற்றவராகவோ (மஃஸும்) இருப்பதற்கு சாத்தியமில்லை. அவரை உம்மா நியமனம் செய்கிறதே ஒழிய அல்லாஹ் (சுபு) நியமனம் செய்வதில்லை ஏனெனில் ஆட்சியதிகாரத்தை அவன்(சுபு) உம்மாவுக்கு அளித்திருக்கிறான், எனவே உம்மாவின் சார்பில் கலீஃபா ஆட்சிசெய்யும் பொருட்டு பைஆ மூலமாக அவரை நியமனம் செய்யும் அதிகாரத்தை அல்லாஹ்(சுபு) உம்மாவிற்கேஹ அளித்து உள்ளான். அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ்(ரளி) அறிவித்திருப்பதாவது : நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன், ‘கைகளால் கைலாகு அளிப்பதின் மூலமும் இதயத்தால் நன்நம்பிக்கை கொள்வதின் மூலமும் எவரேனும் ஒருவர் ஓர் இமாமுக்கு பைஆ அளித்தால் பிறகு இயன்றவரையில் அவர் அவருக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும்’ அப்துல்லாஹ் இப்னு உமர்(ரளி) அறிவித்திருப்பதாவது : ‘நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிற்றுள்ளேன், ‘எவரேனும் தமது கழுத்தில் கலீஃபாவின் பைஆ இல்லாத நிலையில் மரண மடைந்தால் பிறகு அவருடைய மரணம் ஜாஹிலிய்யா (அறியாமை காலத்து) மரணமாகும்’ உம்மாவின் சார்பாக கலீஃபா ஷரீஆ சட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார், எனவே கலீஃபா பதவிக்கு நியமிக்கப்படும் நபரிடம் அவருக்குரிய ஆட்சியதிகாரம் தொடர்பான சட்டரீதியான அதிகாரங்களை அளிக்கவேண்டியது கட்டாயமாகும், தனது அபிப்ராயத்தின் அடிப்படையில் செயலாக்க அமைப்புகள், சட்டங்கள், விதிமுறைகள் ஆகியவற்றை ஏற்று அமல்படுத்துவதற்கு அவருக்கு உரிமையுண்டு. கலீஃபா பதவியை ஏற்றுக்கொள்ளும் நபர் மனிதராகவே இருக்கிறார், எனவே அவர் தவறிழைப்பதற்கும் ஞாபகமறதிக்கு உட்படுவதற்கும் பொய்யுரைப்பதற்கும் துரேகம் இழைப்பதற்கும் அல்லது மக்களுக்கு எதிராக கலகம் செய்வதற்கும் சாத்தியம் இருக்கிறது, அவர் பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கப்படும் வகையில் மாசற்றவராக இல்லை ஏனெனில் மாசற்ற நிலை என்பது முற்றிலும் நபிமார்களுக்கும் இறைத்தூதர்களுக்கும் மட்டுமே உரியதாகும்.

கலீஃபாவாக இருக்கும் இமாம் தவறு செய்யக்கூடும் என்றும் அவர் அநீதம் இழைப்பராகவோ அல்லது பாவம் செய்பவராகவோ இருக்கக்கூடும் என்றும் அதன்காரணமாக மக்கள் அவரை வெறுக்கவும் சபிக்கவும் கூடும் என்றும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) நமக்கு அறிவித்து கொடுத்துள்ளார்கள். மேலும் கலீஃபா வெளிப்படையான குஃப்ர் செயல்பாடுகளை மேற் கொள்ளக்கூடும் என்பதையும் அவர்கள்(ஸல்) நமக்கு அறிவித்துள்ளார்கள். இந்த தகவல்கள் அனைத்தும் இமாம் அல்லது கலீஃபா மாசற்ற நிலையில் தூய்மையானவராக இருக்கிறார் என்பதுடன் முரண்படுகின்றன என்பதோடு அவர் பாவம் செய்வதிலிருந்து பரிசுத்தமானவராக இருக்கிறார் என்பதையும் மறுக்கின்றன. நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரளி) அறிவித்துள்ள ஹதீஸ் முஸ்லிமில் பதிவுசெய்யப்பட்டுள்ளது, அதில் கூறப்பட்டிருப்பதாவது ‘அறிந்துகொள்ளுங்கள்! இமாம் என்பவர் கேடமாகும், அவருக்கு பின்னால் நின்று மக்கள் போரிடுவார்கள், அவரை கொண்டே தங்களை பாதுகாத்து கொள்வார்கள்’ நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அவ்ஃப் இப்னு மாலிக்(ரளி) அறிவித்துள்ள ஹதீஸ் முஸ்லிமில் பதிவு செய்யப் பட்டுள்ளது, அதில் கூறப்பட்டிருப்பதாவது : ‘உங்களுடைய இமாம்களில் சிறந்தவர் யார் எனில் நீங்கள் அவரை நேசிப்பீர்கள் அவரும் உங்களை நேசிப்பார்; நீங்கள் அவருக்காக துஆ செய்வீர்கள் அவரும் உங்களுக்காக துஆ செய்வார். உங்களுடைய இமாம்களில் மோசமானவர் யார் எனில் நீங்கள் அவரை வெறுப்பீர்கள் அவரும் உங்களை வெறுப்பார்; நீங்கள் அவரை சபிப்பீர்கள் அவரும் உங்களை சபிப்பார்’ உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரளி) அறிவித்ததாக புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது : ‘நபி(ஸல்) அவர்கள் எங்களை (பைஆ செய்வதற்கு) அழைத்தார்கள் எனவே நாங்கள் அவர்களிடம் பைஆ செய்தோம். ‘இன்பத்திலும் துன்பத்திலும் இலகுவிலும் கஷ்டத்திலும் நாங்கள் முழுமையாக கட்டுப்பட்டு நடப்போம் என்றும் அதிகாரத்தை பெற்றுள்ளவர்களுடன் சர்ச்சை செய்ய மாட்டோம் என்றும் ‘அல்லாஹ்(சுபு)விடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் அடிப்படையில் வெளிப்படையான குஃப்ரை கண்டால் ஒழிய’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்  பைஆ செய்தோம்’ இமாம் அல்லது கலீஃபா தவறு செய்யக்கூடும் என்பதற்கும் பாவம் செய்யக்கூடும் என்பதற்கும் இந்த ஹதீஸ்கள் தெளிவான ஆதாரங்களாக விளங்குகின்றன என்ற முறையில் இமாம் அல்லது கலீஃபா மாசற்றவராக (infallible) இல்லை என்பதை அவை சுட்டிக்காட்டுகின்றன.

ஆகவே முஸ்லிம்கள் ஆட்சியாளரை தட்டிக்கேட்கவேண்டும் என்று அல்லாஹ்(சுபு) கட்டளையிட்டுள்ளான் என்பதால் இது அவர்களுடைய உரிமையாக இருக்கிறது ஏனெனில் ஆட்சியாளர் ஆட்சியதிகாரத்தில் மக்களின் பிரதிநிதியாகவும் அதிகாரம் பெற்றவராகவும் இருந்தபோதும், மக்கள் அவரை பதவியில் அமர்த்துகிறார்கள் என்றபோதும் அவர் தவறு செய்யக்கூடும் என்பதாலும் பாவம் செய்பவராகவும் குஃப்ர் செயல்பாடுகளை மேற்கொள்ப வராகவும் இருக்கக்கூடும் என்பதாலும் அவர் புனிதமானவராக இருப்பதற்கோ அல்லது பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கப்படும் வகையில் மாசற்றவராக இருப்பதற்கோ சாத்தியமில்லை.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்,

‎‎‎وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ‎‎ ‎‎

மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர் (ஆலஇம்ரான் : 104)

‘சிறந்த ஜிஹாது எது’ என்று நபி(ஸல்) அவர்களிடம்

வினவப்பட்டபோது, ‘கொடுங்கோல் ஆட்சியாளரிடம் சத்தியத்தை உரைப்பதுதான் சிறந்த ஜிஹாதாகும்!’

என்று கூறினார்கள். மேலும் அவர்கள்(ஸல்) கூறியதாவது, ‘ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிபும்(ரளி) கொடுங்கோல் இமாம் முன்பாக நின்றுகொண்டு நன்மையை ஏவி தீமையை தடுத்து அதன்காரணமாக கொலை செய்யப்பட்ட மனிதரும் ஷுஹாதாவின் தலைவர் ஆவார்கள்’ அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது(ரளி) அறிவித்து ஸுனன் அபூதாவூதில் பதிவுசெய்யப்பட்ட ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது : நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘அல்லாஹ்வின்மீது ஆணையாக! நீங்கள் நன்மையை ஏவி தீமையை தடுக்கவேண்டும். அன்றியும் அநீதம் இழைப்பவரின் கைகளை நீங்கள் தடுத்து நிறுத்தவேண்டும்; (தீமை செய்வதிலிருந்து) அவரை தடுத்து சத்தியத்தின்பால் செலுத்தவேண்டும்’ இப்னு மஸ்வூது(ரளி) அறிவித்துள்ள மற்றொரு ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டிருப்பதாவது : ‘இல்லாவிடில் (பரஸ்ப்பர) பகைமையை கொண்டு அல்லாஹ் உங்களுடைய இதயங்களில் அடிப்பான்; அவர்களை சபித்ததுபோல் உங்களையும் சபிப்பான்!’

சில தருணங்களில் நாவைக்கொண்டு ஆட்சியாளர்களை தடுப்பதற்கு அப்பாற்பட்டு ஆயுத போராட்டம் மேற்கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் நமக்கு கட்டளையிட்டுள்ளது, கலீஃபா வெளிப்படையான குஃப்ர் செயல்பாடுகளை மேற்கொள்ளும் பட்சத்தில் பின்வரும் ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது போல் அவருக்கு எதிராக ஆயுதமேந்தி போர் செய்யவேண்டும் என்று அது நமக்கு கட்டளையிட்டுள்ளது, உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரளி)அறிவித்திருப்பதாவது : அல்லாஹ்விடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் அடிப்படையில் வெளிப்படையான குஃப்ரை அவர் மேற்கொள்ளாத வரையில் அதிகாரம் பெற்றுள்ளவர்களிடம் நாங்கள் சர்ச்சை செய்யமாட்டோம் (என்று பைஆ செய்தோம்)’

முஸ்லிம் சகோதரர்களே!

இதுதான் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து நிறுவவேண்டும் என்று அல்லாஹ் (சுபு) கட்டளையிட்டுள்ள இஸ்லாமிய அரசாகும்! நபித்துவத்தின் அடிச்சுவட்டின்மீது ‘கிலாஃபா ராஷிதாவை’ நிறுவும் பொருட்டும், ‘அதன்பின்னர் நபித்துவத்தின் வழிமுறையில் மீண்டும் கிலாஃபா ராஷிதா ஏற்படும்’ என்ற அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களின் நற்செய்தியை உண்மைப்படுத்தும் பொருட்டும் பணியாற்றுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்!

Related Posts

சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!

சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!

January 25, 2022
காதி நீதிமன்றத்தை ஒழித்து பின்னர் MMDA ஐயும் ஒழிப்பார்கள்!

காதி நீதிமன்றத்தை ஒழித்து பின்னர் MMDA ஐயும் ஒழிப்பார்கள்!

September 21, 2021

ஆப்கானிஸ்தான் உம்மாஹ்வின் ஒற்றுமையின் தொடக்கமாக இருக்க வேண்டும்!

August 17, 2021

முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக போர் செய்யலாமா?

August 8, 2021
Next Post
தஃவா, களப்பணி, சிறை: ரிஷ்க் பற்றிய புரிதல்

தஃவா, களப்பணி, சிறை: ரிஷ்க் பற்றிய புரிதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

சமீபத்திய இடுகைகள்

  • தீவிர இந்துத்துவா பாதையிலா திருமலை சண்முகா கல்லூரி?
  • சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!
  • இந்திய முஸ்லிம்களின் ‘இனப்படுகொலை’ ஐ இனி எதிர்பார்க்கலாம் – Dr. Gregory Stanton!
  • சவூதி தலைமையிலான கூட்டணி ஏமன் தலைநகரில் கடுமையான தாக்குதல்!
  • கஜகஸ்தான், அல்மாட்டியில் மோதல்கள்!

சமீபத்திய கருத்துகள்

  • Face to true on கொரோனா வைரஸ் மரணங்களுக்கு தகனத்தை கட்டாயமாக்கியது இலங்கை!
  • Fareed on கிலாஃபா மட்டுமே மக்கள் நல அரசு!
  • Nizamhm on இலங்கையில் முஸ்லிம் விரோத பிரச்சாரத்திற்கு சீனா தலைமை! தெரண களத்தில்!
  • Abdullah on கொரோனா வைரஸ் மரணங்களுக்கு தகனத்தை கட்டாயமாக்கியது இலங்கை!
  • Admin on இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களும் தகனம் செய்யப்படலாம்!

காப்பகம்

  • February 2022
  • January 2022
  • December 2021
  • September 2021
  • August 2021
  • July 2021
  • June 2021
  • April 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020
  • October 2020
  • September 2020
  • August 2020
  • July 2020
  • June 2020
  • May 2020
  • April 2020
  • March 2020
  • February 2020
  • January 2020
  • December 2019
  • October 2019
  • September 2019
  • May 2019
  • April 2019
  • February 2019
  • July 2018
  • May 2018
  • March 2018
  • January 2018
  • December 2017
  • October 2017
  • February 2017
  • January 2017
  • November 2016
  • September 2016
  • August 2016
  • July 2016
  • June 2016
  • May 2016
  • April 2016
  • March 2016
  • February 2016
  • January 2016
  • December 2015
  • November 2015
  • October 2015
  • August 2015
  • March 2015
  • September 2014
  • August 2014
  • July 2014
  • May 2014
  • April 2014
  • March 2014
  • February 2014
  • November 2013
  • October 2013
  • September 2013
  • March 2013
  • February 2013
  • July 2012
  • December 2011

பிரிவுகள்

  • Uncategorized
  • YouTube சேனல்
  • அகீதா
  • அறிக்கைகள்
  • ஆய்வு
  • உசூலுல் பிக்ஹ்
  • எண்ணக்கரு
  • ஒலி
  • ஒளி
  • கட்டுரைகள்
  • கிலாஃபா
  • சிந்தனை
  • செய்திகள்
  • செய்திப்பார்வை
  • தஃவா
  • நடப்பு விவகாரம்
  • நிகழ்வுகள்
  • பிக்ஹ்
  • பிரசுரங்கள்
  • பொருளாதாரம்
  • யதார்த்தம் எது ?
  • வரலாறு
  • வலையொலி

சமீபத்திய இடுகைகள்

  • தீவிர இந்துத்துவா பாதையிலா திருமலை சண்முகா கல்லூரி?
  • சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!
  • இந்திய முஸ்லிம்களின் ‘இனப்படுகொலை’ ஐ இனி எதிர்பார்க்கலாம் – Dr. Gregory Stanton!
  • சவூதி தலைமையிலான கூட்டணி ஏமன் தலைநகரில் கடுமையான தாக்குதல்!
  • கஜகஸ்தான், அல்மாட்டியில் மோதல்கள்!

பிரிவுகள்

Uncategorized YouTube சேனல் அகீதா அறிக்கைகள் ஆய்வு உசூலுல் பிக்ஹ் எண்ணக்கரு ஒலி ஒளி கட்டுரைகள் கிலாஃபா சிந்தனை செய்திகள் செய்திப்பார்வை தஃவா நடப்பு விவகாரம் நிகழ்வுகள் பிக்ஹ் பிரசுரங்கள் பொருளாதாரம் மல்டி மீடியா யதார்த்தம் எது ? வரலாறு வலையொலி
No Result
View All Result
  • நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்

© 2020 www.darulaman.net