ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஒரு சில நாட்களுக்கு முன்னால் வெளியிட்டுள்ள செய்தியில் சிறுவர்களின் நல்வாழ்வு தொடர்பான சர்வதேச சமூகத்தின் அர்ப்பணிப்பு உலகில் மறக்கப்பட்ட அல்லது புரக்கணிக்கப்பட்ட சிறுவர்கள் அனைவரது மீதும் வியாபிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
“மிக அதிகளவான சிறுவர்கள் சிறைகளிலும், மனநோய் இல்லங்களிலும், பல்வேறுபட்ட தடுப்புக்காவல்களிலும் அடைபட்டு வாடுகின்றனர்.”
“மேலும் பல சிறுவர்கள் அவர்கள் குடியேறிகளாய் இருப்பதாலும், அகதி அந்தஸ்த்து கோருபவர்களாகவும், வீடற்றவர்களாகவும், திட்டமிட்ட குற்றவாளிகளால் பாதிப்புக்குள்ளானவர்களாக இருப்பதாலும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். எப்படியான காரணங்கள் சொல்லப்பட்டாலும் சிறுவர்களின் சுதந்திரத்தைப் பறித்தல் என்ற அளவுகோல் மிகக்கடைசியான தேர்வாகவே இருக்க வேண்டும். அதுவும், குறுகிய காலத்திற்கு மாத்திரம் மட்டுப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பதையே (ஜெனிவா) மாநாட்டின் தீர்மானம் வலியுறுத்துகிறது.”
மேலும் ”சிறுவர்களின் மிகச் சிறந்த நலன்களை அடைவதையும், அவர்களின் சுதந்திரத்தை பறிக்காதிருத்தலையும், சிறைப்பிடித்தலுக்கு பகரமாக வேறு தீர்வுகளை அடைந்து கொள்வதையும்; சர்வதேச சமூகம் தனது இலக்காகக் கொள்ள வேண்டும்.” (மூலம்: UN.org)
விமர்சனம்:
ஒரு சத்தியமான சொல்லை சொல்வது என்பது, ஒரு சத்தியமான செயலை செய்ய நினைப்பதற்கு சமமாகுமா? இன்னொரு விதமாய் சொல்வதானால், பல சிறுவர்கள் “பல்வேறுபட்ட தடுப்புக்காவல்களில் அடைபட்டு வாடுகின்றனர்.” அல்லது போர், குடிப்பெயர்வு அல்லது அவர்களுக்கு எதிரான திட்டமிட்ட குற்றச்செயல்களால் “பாதுகாப்பற்ற நிலையில்” உள்ளனர் என்ற உண்மை தொடர்பாக பேசுவது என்பது, அந்தச் சிறுவர்கள் எதிர்நோக்கும் அநீதிக்கும், ஒடுக்குமுறைக்குமான காரணங்களை ஒப்புக்கொள்வதற்கு சமமாகுமா? அல்லது அதற்கும் மேலால் அந்த காரணங்களை ஒழித்து, ஒடுக்குமுறைகளிலிருந்து சிறுவர்களை மீட்பதற்கான வாக்குறுதியாக அதனைக் கொள்ள முடியுமா?
“பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.” (அல் பகறா:11)
சியோனிச அரக்கன் புனிதமிக்க பலஸ்தீன பூமியை ஆக்கிரமித்த காலத்திலிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதியில் (Palestinian occupied territory) வாழும் சிறுவர்கள் சியோனிச இராணுவ சட்டத்தின் கீழ் வாழ்ந்து வருவதுடன் அவர்கள் இராணுவ நீதிமன்றங்களால் விசாரிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு 2000ஆம் ஆண்டிலிருந்து குறைந்தது 8000 சிறுவர்கள் யூத சியோனிச இராணுவ தடுப்பு பொறிமுறையின் ஊடாக கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் பலஸ்தீனச் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வதிலும், சித்திரவதை செய்வதிலும் பெயர் பெற்றவர்கள் என்பதையும் நாம் மறந்து விடலாகாது.
ஏறத்தாழ 500-700 சிறுவர்கள் ஒவ்வொரு வருடமும் இவ்வாறு கைது செய்யப்படுவதுடன் இவர்களில் ஐந்து வயதே நிரம்பிய பாலகர்களும் அடங்குவர். இவ்வருடம் 2015, ஆகஸ்ட் மாதம் வரையில் 156 சிறுவர்கள் யூத அரச சிறைச்சாலையில் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிப்பவர்களாகவும், ஏனைய குற்றச்சாட்டுக்களின் பெயரிலும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 13 சிறுவர்கள் இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக வசிப்பதாகக்கூறி இஸ்ரேலிய சிறைச்சாலை சேவை மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த இஸ்ரேலிய சிறைச்சாலை சேவை இச்சிறார்களை கைதிகளாகவும், சட்டத்தை மீறியவர்களாகவும் கருதி தீவிரமாகக் கையாண்டு வருகிறது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள பெரும்பாலான சிறுவர்கள் கைற்களை வீசியெறிந்ததற்காகவே தடுக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் முக்கால்வாசிப்பேர் கைதின்போதும், சிறைமாற்றத்தின்போதும், விசாரணையின்போதும் பௌதீக வன்முறைகளையும், பாலியல் துஷ்பிரயோகங்களையும், வன்புணர்வுகளையும் சந்தித்துள்ளனர்.
இந்த சிறார்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் இவர்களில் 60 சதவீதமானோர் பலஸ்தீன ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து (Palestinian occupied territory), இஸ்ரேலுக்குள் அமைந்திருக்கும் சிறைகளுக்கு ஜெனீவா மாநாட்டின் நான்காவது தீர்மானத்தையும் மீறி மாற்றப்படுகின்றனர். இதன் காரணமாக இந்த சிறார்கள் தமது குடும்பங்களை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதாக அல்லது முற்றாக இல்லாத நிலை ஏற்படுகிறது. நடமாடுகின்ற சுதந்திரத்தில் இருக்கின்ற கட்டுப்பாடுகளாலும், சிறைகளுக்கு பார்வையிடச் செல்வதற்கான அனுமதியைப் பெறுவதிலுள்ள நீண்ட தாமதங்களாலும் இந்நிலை உருவாகின்றது. இங்கே சியோனிச சக்தியினால் எந்தவொரு காரணமுமின்றி கொல்லப்படும் சிறுவர்கள் பற்றிய விபரங்கள் பற்றி நாம் விளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்கள் என்ற அடிப்படையில், சியோனிச அரக்கனை எம்மீது திணித்து அதற்கு சட்ட அங்கீகாரத்தையும் கொடுத்த உலக முதலாளித்துவ சமூகத்திடமிருந்து எமது சிறுவர்களின் நல்வாழ்வுக்காக, விடுதலைக்காக நாம் எதனையும் எதிர்பார்க்கவில்லை. எமது இன்றைய இளம் தலைமுறைக்கோ அல்லது நாளைய தலைமுறைக்கோ நல்வாழ்வுக்கு வழிகாட்டும்படி ஐக்கிய நாடுகள் சபையிடமோ அல்லது ஏனைய குப்ர் சக்திகளிடமோ நாம் உதவி கோரப்போவதுமில்லை.
எமது நிலங்களிலிருந்து முதலாளித்துவ காலணித்துவ சக்திகளை வேரடிமண்ணோடு பிடிங்கியெறிந்ததன் பின்னால் “சிறுவர்களின் மிகச் சிறந்த நலன்களை அடைவதையும், அவர்களின் சுதந்திரத்தை பறிக்காதிருத்தலையும”, உறுதி செய்து அமைதியான, கண்ணியமான வாழ்வை பலஸ்தீனச் சிறுவர்களுக்கு மாத்திரமல்லாமல், சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், ஆபிரிக்கா, பேர்மா என உலகில் வாழும் அனைத்து சிறுவர்களுக்கும் உறுதிசெய்வதே கிலாஃபா ராஸிதாவின் முன்னுரிமைமிக்க பணியாக இருக்கும். ஆனால் அதற்கு முழு முஸ்லிம் உம்மத்தும் நபிவழியில் உருவாகும் கிலாஃபா ராஸிதாவுக்குப் பின்னால் ஒன்றாக அணிதிரள வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இல்லை அதற்காக அறைகூவுகிறோம். அந்த கிலாஃபா ராஸிதாதான் இந்த சியோனிச அரக்கனை துவம்சம் செய்யும். அதுதான் அதற்கு பிராணவாயுவைப் பாய்ச்சும் முதலாளித்துவ சக்திகளை விரட்டியடிக்கும். அதுதான் முஸ்லிம் உம்மத்தினதும் அதன் சிறார்களினதும் உண்மை காப்பரணாக விளங்கும்.
“அல்லாஹ்(சுபு)வின் கயிற்றை பற்றிப்படித்துக்கொள்ளுங்கள். அதிலே பிரிந்து விடாதீர்கள்.” (சூரா ஆல இம்ரான்:103)
ஷஹ்ரா மாலிக்