• நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்
No Result
View All Result
  • நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்
No Result
View All Result
Darul Aman
No Result
View All Result
யார் அந்த மிதவாத முஸ்லிம்?

எதிர்காலம் கிலாஃபத்திற்கே!

யார் தீவிரவாதி? முஸா(அலை)வா? பிர்அவ்னா?

Home கட்டுரைகள் சிந்தனை எண்ணக்கரு

யார் அந்த மிதவாத முஸ்லிம்?

March 5, 2015
in எண்ணக்கரு
Reading Time: 2 mins read
0
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

முகத்தை மறைத்து முஸ்லிம் பெண்கள் ஆடை அணிவது தீவிரவாத முஸ்லிம்களின் அடையாளம் என்ற கருத்து உலகமெங்கும் உலா வருகிறது. இலங்கையிலும் முஸ்லிம் பெண்களின் இஸ்லாமிய ஆடையில் கைவைப்பதற்கு பௌத்த தீவிரவாத சக்திகள் அண்மைக்காலமாக முயன்று வருகிறார்கள். கிலாஃபத் வீழ்த்தப்பட்ட தினமான மார்ச் 3ஆம் திகதி பொது பல சேனா கொழும்பில் நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கையில் புதிதாத நடைமுறைக்கு வந்திருக்கும் தலைக்கவச சட்டம் தொடர்பாக வினவப்பட்ட கேள்விக்கு அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு பதிலளித்தார்.

“தலைக்கவசம் தொடர்பில் சட்டம் கொண்டு வந்து, முழுமையாக முகத்தை மூடிய தலைக்கவசம் அணிவதை தடை செய்வதாயின் அதே சந்தர்ப்பத்தில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா, பர்தா வகை உடைகளையும் தடை செய்து பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும். சட்டம் என்பது அனைவருக்கும் பொருந்தக்கூடிய வகையில் அமைய வேண்டும். முஸ்லிம் தீவிரவாதத்திற்கு முன்னுரிமை கொடுத்து நாட்டை சிறிது காலத்திலேயே இஸ்லாமிய தேசமாக்கும் செயற்பாடு மறைமுகமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது…”

பொதுபலசேனா விதைத்துவரும் இத்தகைய நச்சுக்கருத்துக்கள் எந்தவித பின்னணியுமற்று செய்யப்படும் பிரச்சாரமாக நாம் கருதக்கூடாது. முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கைகளை, நடத்தைகளை தீவிரவாதச் செயற்பாடுகளாக போலிப் பிரச்சாரம் செய்வது இன்றைய உலகின் வாடிக்கையாய் மாறிவிட்டது. இது BBS போன்ற சில மதவெறியர்களின் பிதற்றல்கள் மாத்திரமே என்று நாம் நினைப்பது பாரிய தவறாகும். மாறாக இன்று உலகில் இஸ்லாத்திற்கு எதிராக நேர்த்தியாக திட்;டமிடப்பட்ட பனிப்போர் இடம்பெற்று வருகிறது. அந்த பனிப்போரின் முக்கிய தாக்குதல் முனைதான் முஸ்லிம்களுக்கு எதிரான போலிப்பிரச்சாரம். இந்த பனிப்போரை நடத்தும் சக்திகளின் தாக்குதல் முகாம்கள் உலகெங்கும் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பின்னணியிலிருந்தே இலங்கையையும் நாம் பார்க்க வேண்டும். இவர்கள் முன்வைக்கும் முக்கிய வாதங்களில் ஒன்றுதான் முஸ்லிம்களில் மிதவாத முஸ்லிம்கள் என்ற ஒரு பிரிவினரும், தீவிரவாத முஸ்லிம்கள் என்ற ஒரு பிரிவினரும் வாழ்கின்றனர். இன்றைய நவீன உலகிற்கு அச்சுறுத்தலானவர்கள் இந்த தீவிரவாத முஸ்லிம்களே. அவர்களின் அச்சுறுத்தல்களிலிருந்து உலகின் ஒவ்வொரு தேசத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதே அவர்களின் வாதமாகும். இத்தகைய பிரச்சாரங்கள் உலகின் வல்லரசுகளாலும், ஏனைய அரசுகளாலும், ஊடகங்களாலும் மிகவும் ஆழமாகவும், வேகமாகவும் பரப்புரை செய்யப்பட்டு வருவதால் அது பற்றிய தெளிவு முஸ்லிம்களிடம் இருக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

மிதவாத முஸ்லிம்: இஸ்லாத்தின் அளவுகோல் என்ன?

மிதவாத முஸ்லிம், தீவிரவாத முஸ்லிம் என்று பிறர் எம்மை வகைப்படுத்த முன்னர் அந்த அடையாளங்கள் குறித்த அறிவு எம்மிடம் இருக்க வேண்டும். மிதவாத முஸ்லிமாக இருப்பது என்றால் என்ன? யார் உண்மையில் தீவிரவாதிகள்? அவர்களை யார் இவ்வாறு வகைப்படுத்தியது? எந்த அடிப்படையில்? இவை நல்ல முஸ்லிம், கெட்ட முஸ்லிம் என்ற வேறுபாடா? இவ்வடையாளங்களை பயன்படுத்தினால்தான் என்ன? போன்ற மிக அடிப்படையான கேள்விகள் இன்றைய உலகில் வாழும் ஒவ்வொரு முஸ்லிம் பொதுமகனிடம் இயல்பாகவே எழக்கூடும்.

அல்குர்ஆன் அஸ்ஸுன்ஆவின் ஒளியில் இந்த வகைப்படுத்தலை ஆராய்ந்து பார்ப்பது இங்கு மிகவும் முக்கியமானது. ரஸுல்(ஸல்) மிதவாதிகள், தீவிரவாதிகள் என தமது தோழர்களை பிரித்துப் பார்த்தார்களா?

ஸஹாபாக்கள் மிதவாதி, தீவிரவாதி என்ற அளவுகோலை பயன்படுத்தி பிறரை அடையாளப்படுத்தினார்களா? அல்லாஹ்(சுபு) தனது திருமறையிலே குறிப்பிடுகிறான்,

“அல்லாஹ்வின் பார்வையில் உங்களில் மிகச்சிறந்தவர் மிக்க தக்வா (இறையச்சம்) உள்ளவரே” (49:13)

ஆகவே இஸ்லாத்தின் அளவுகோலின்படி மக்கள் தீவிரவாதிகளாகவும், மிதவாதிகளாகவும் பார்க்கப்படவில்லை. மாறாக இஸ்லாம் முஸ்லிம்களை தக்வாவின் அடிப்படையிலேயே வேறுபடுத்திப் பார்க்கிறது. மிதவாதம், தீவிரவாதம் என்ற பார்வையினூடாக முஸ்லிம்களை பகுப்பாய்வு செய்யும் பாங்கு காலங்காலமாக வந்த உலமாக்களால் செய்யப்படவில்லை. இந்த அடையாளப்படுத்தல் நவீன கால இஸ்லாமிய ஆய்வுகளிலேயே ஒரு பித்ஆத்தாக (புதினமாக) ஆங்காங்கே ஊடுருவியிருப்பதை நாம் காண்கிறோம்.

இஸ்லாத்தை விரும்பத்தகாத ஒன்றாக மாற்றுதல்:

முஸ்லிம்களை இவ்வாறாக பாகுபடுத்துவதன் நோக்கமே தூய இஸ்லாத்தை எம்மிடமிருந்து அந்நியப்படுத்தி அதனை ஒரு அச்சுறுத்தலாக மாற்றுதலாகும். உலகின் பிரதான ஊடகங்களும், சிந்தனை வட்டங்களும், அரசியல்வாதிகளும் இஸ்லாத்தை மிலிடண்ட்(இராணுவ) இஸ்லாம், ரெடிகல் (தீவிர) இஸ்லாம், எக்ஸ்ரீமிஸ்ட் இஸ்லாம் என பலவாறாக அடையாளப்படுத்தி முஸ்லிம்கள் தமது மார்க்கத்தை எப்போதும் பீதியுடன் பின்பற்றும் சூழலையை தோற்றுவித்து வருகிறார்கள். இதற்கு பல உதாரணங்களைக் கூறலாம்.

மது அருந்துவதை தவிர்த்தல்: முஸ்லிம் உலகிற்குள் மதுபான இறக்குமதியை தடைசெய்யும் செயற்பாட்டை ஒரு தீவிரவாத நடவடிக்கையாக சித்தரிக்கிறார்கள். CNN ஒருமுறை இவ்வாறு செய்தி சொன்னது. “அல்ஜீரிய பாராளுமன்றம் மதுபான இறக்குமதியை தடைசெய்யும் முடிவிற்கு வாக்களித்ததன் ஊடாக ஒரு மிதவாத முஸ்லிம் நாடு என்ற நிலையிலிருந்து விலகிச்சென்று மீண்டும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு திரும்பியுள்ளது.”

இந்த மேற்குலக ஊடகத்தின் பார்வையில் மதுபானம் அருந்துவது மிதவாத முஸ்லிம்களின் அடையாளம், மதுபானத்தை தடைசெய்வது தீவிரவாதம்.

ஹிஜாப் அணிதல்: ஜுலை 2014 இல் 24 வயது முஸ்லிம் பெண்ணொருவர் ஹிஜாப் தடைச்சட்டமானது தனது மத மற்றும் கருத்துச் சுதந்திர உரிமையை மீறுகிறது என்ற அடிப்படையில் மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்காடிய போதிலும் நீதிமன்றம் தடை தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்றே தீர்ப்பு வழங்கியது.

கனடாவின் இமிகிரேஷன் மந்திரி கிரிஸ் அலக்ஸ்ஸாண்டர் அண்மையில் தனது டிவிட்டரிலே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “நிகாப், ஹிஜாப், புர்கா, திருமண வேளையில் அணியும் முகத்திரை போன்ற ஆடைகளுக்கு பிறஜாவுரிமைக்கான சந்தியப்பிரமாணம் எடுக்கும் இடத்தில் அனுமதி கிடையாது”

இத்தகைய தடைகளை பிரான்ஸ், டென்மார்க், பெல்ஜியம் என மேற்குலகெங்கும் நாங்கள் காணலாம். எனினும் அல்லாஹ்(சுபு) பருவமடைந்த பெண்கள் தமது பொதுவாழ்வில் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்பதை மிகத்தெளிவாக வரையறுத்து அதனை அவர்கள் மீது கட்டாய கடமையாக்கி உள்ளான்.

“நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைக் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக. அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.” (33:59)

“இன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழங்காரத்தை அதினின்று(சாதாரணமாக வெளியில்) தெரியக்கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்…”(24:31)

கிலாஃபத் பற்றிய சிந்தனையை கைவிடச்செய்தல்: அமெரிக்க சிந்தனை மையங்களில் ஒன்றான RAND பதிப்பகம் ‘மிதவாத முஸ்லிம் வலைப்பின்னலை நிர்மாணித்தல்’ என்ற அறிக்கையில் பின்வருவாறு கூறுகிறது. “ஒரு அரசியல் தத்துவம் ஜனநாயகமயமானது எனக் கருதப்பட அது மேற்கத்தைய சிந்தனையிலிருந்தா, அல்லது குர்ஆனிலிருந்தா உருவானது என்பது பிரச்சனையில்லை – அது பன்மைத்துவத்தையும் (Pluralism) சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளையும் நிபந்தனையற்று ஆதரிக்க வேண்டும். ஜனநாயகத்திற்கு ஆதரளிப்பது என்பது இஸ்லாமிய அரசு (கிலாஃபா) பற்றிய சிந்தனையை எதிர்ப்பதாகும். கடவுள் சார்பில் எவரும் தனித்துப் பேச முடியாது. மாறாக எந்த விடயத்திலும் கடவுளின் விருப்பம் என்ன என்பதை – சுதந்திரமாக தெரிவிக்கப்பட்ட சமூகத்தின் ஏகோபித்த கருத்தின் (இஜ்மா) அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையே மிதவாத முஸ்லிம்கள் கொண்டுள்ளனர்.”

இந்த அறிக்கையும், இதுபோன்ற அறிக்கைகளும் இஸ்லாமிய வாழ்வொழுங்கின் அடிப்படையாக அமையும் கிலாஃபத் பற்றிய சிந்தனையை நேரடியாகவே தாக்குகின்றன. மதீனாவிலே இஸ்லாமிய அரசு முதலாவது நிறுவப்பட்ட காலத்திலிருந்து ஷரியத்தின் அடிப்படையில் ஆட்சிகள் தொடர்ந்தனவே தவிர மக்களின் கூட்டான மன இச்சையின் படி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆட்சி நடக்கவில்லை.

ஆகவே மிதவாத முஸ்லிம்கள் என மேற்குலகத் தலைமைகள் வரையறை செய்கின்ற முஸ்லிம்கள் யார் என்றால் மேற்குலக சடவாத அகீதாவிலிருந்து (Secularism) பிறக்கும் தாராண்மைவாத விழுமியங்களுக்கு (Liberal Values) எப்போது அல்லாஹ்வின் கட்டளைகள் முரணாக நிற்கிறதோ அவற்றை ஓரங்கட்டிவிட்டு மிச்சம் மீதியை மாத்திரம் பின்பற்ற விரும்பும் அரைவேக்காட்டு முஸ்லிம்கள். மறுபக்கத்தில் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழவிரும்பும் முஸ்லிம்கள் இவர்களின் பார்வையில் தீவிரவாதிகள்; சமூகத்தால் ஓரங்கட்டப்படவேண்டியவர்கள்; தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

சமரசம் செய்வது ஆபத்தானது

சமரசம் செய்வதிலுள்ள ஆபத்து குறித்து நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நாம் அரசுகளாலும், சமூகத்தாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக, இவர் தீவிரவாதியல்ல@ ஒரு சிறந்த மிதவாதி என இவர்கள் அழைக்க வேண்டும் என்பதற்காக, நாம் சில பொழுதுகளில் எமது உயிரிலும் மேலான இஸ்லாத்தை அதன் விபரீதம் தெரியாமல் சமரசம் செய்ய துணிந்து விடுவோம். எனினும் அதன் ஆபத்தை நபி(ஸல்) அவர்களுக்கு அவரது அழைப்புப்பணியின் ஆரம்பத்திலேயே அல்லாஹ் எச்சரித்துவிட்டான்.

“ஆகவே (நபியே! உம்மைப்) பொய்யாக்கக் கூடியவர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர். நீர் சமரசம் செய்தால், தாங்களும் சமரசம் செய்யலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.” (68:8-9)

மிதவாத முஸ்லிம்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம் கொடுத்து, அவர்களுக்கு சலுகைகள் வழங்கி அவர்களை உயர்த்திப்பிடிப்பது இன்று நேற்று உருவான காலணித்துவத் தந்திரமல்ல. மாறாக மிதவாத முஸ்லிம்கள் – அதாவது சடவாத முஸ்லிம்களை சமூகத்தின் முன்மாதிரிகளாக இனம்காட்டி சடவாதத்தை ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்விலும் அடிப்படை அளவுகோலாக மாற்றும் முயற்சியை இவர்கள் பல நூற்றாண்டு காலமாக செய்து வருகின்றார்கள்.

காலணித்துவப்பட்ட மனநிலையை (Colonized Mentality) சுதேசிகளின் (Natives) மனங்களில் ஏற்படுத்தும் இலக்கை இவர்கள் ஒரு நூற்றாண்டிற்கு முன்னரேயே தீர்மானித்திருந்தார்கள். 1854 ஆம் ஆண்டில் இந்தியாவில் கடமையாற்றிய பிரித்தானிய பிரபு மௌண்ட் ஸ்டுவட் எல்பின்ஸ்டனின் கருத்தில் இதனை தெளிவாகக் காணலாம். “முடிவிலாக் காலத்திற்கு அனைத்தையும் ஆதிக்கம் செலுத்தலாம் என நாம் கனவு காணக்கூடாது. நாம் இலாபம் அடையும் வண்ணம் சுதேசிகள் தம்மைதாம் ஆழக்கூடிய ஒரு மனோநிலையை அவர்களில் ஏற்படுத்தக்கூடிய வல்லமை எம்மில் ஏற்பட வேண்டும்”
எந்நிலையிலும் உறுதி தளராது இருந்தல்:

இன்றைய உலகில் முஸ்லிம்கள் பல்வேறுபட்ட அழுத்தங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் ஒரு பத்திரிகையை படித்தாலென்ன, தொலைக்காட்சியைப் பார்த்தாலென்ன, இணையத்தை திறந்தாலென்ன இஸ்லாத்திற்கு எதிராக, முஸ்லிம்களுக்கு எதிராக, முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு எதிராக நச்சுப்பிரச்சாரங்கள் அலையென திரண்டு வருவதை நாம் காண்கிறோம். இந்த பிரமாண்டமான அலைகளை சமாளிக்க முடியாமல் எங்களில் பலா, யார் இந்த பொய்பிரச்சாரங்களை தொடுக்கிறார்களோ அவர்களை ஏதோவொருவகையில் திருப்த்திப்படுத்தினால் தப்பித்து விடலாம் என எண்ணிச் செயற்படுவதை நாம் காண்கிறோம். அதனூடாக தம்மை ஒரு மிதவாதியென நிறுவி விடலாம் என இவர்கள் நம்புகிறார்கள். எனினும் இந்த தீய வளைக்குள் நாம் சிக்கிவிடக்கூடாது. மாறாக அல்லாஹ்வுடனும், அவனது தீனுடனும் எமது பிணைப்பை மிக வலிமையாக பலப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் இத்தகைய பித்னாவுடைய காலப்பகுதியில்;;; எவ்வாறு செயற்பட பணித்திருக்கிறான் என்ற எச்சரிக்கையை எமது வழிகாட்டியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

“(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்@ உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணைவைத்து வணங்குவோரிடமிருந்தும் நிபந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்@ ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடித் தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.” (3:186)

“அலிப், லாம், மீம். நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம் என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப் படாமல் விட்டுவிடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக்கொண்டார்களா? நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கிறோம் – ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்@ இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.” (29:1-3)

ரஸ}ல்(ஸல்) சொன்னார்கள்: ‘ஒரு காலம் வரும் அப்போது தீனில் உறுதியாக நிலைத்து நிற்பது என்பது எரிகின்ற நிலக்கரியை ஒருவருடைய கையில் பிடித்திருப்பதற்கு ஒப்பானது” (திர்மிதி)

எனவே சோதனை நிறைந்த இந்த காலகட்டத்தில் நாம் எமது ஈமானை விலைபேசிவிடாது, அடையாளத்தை இழந்துவிடாது தீனுல் இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்காக முன்னணியில் நின்று தொழிற்பட வேண்டும்.

அல்லாஹ்(சுபு) தனது திருமறையிலே தனது உதவி நிச்சயம் வரும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறான்.

“நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அல்லாஹ் நிச்சயம் உங்களுக்கு உதவி செய்வான்…” (47:7)

ஸஹாபாக்களின் முன்மாதிரியை எடுத்துப்பாருங்கள்@ எத்தகைய நிர்பந்தங்களை அவர்கள் சந்தித்தபோதிலும் இஸ்லாத்தில் அவர்கள் கொண்ட உறுதியையும், நிலைகுழையாமையையும் பார்த்து எதிரிகளே வியந்து பார்த்தார்கள். நாம் இப்போது எதிர்நோக்குவதை போன்று இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பிழையாக அடையாளப்படுத்தும் யுக்தியை அரபிக்காபிர்களும் மேற்கொண்டார்கள். வேதம் அருளப்பட்டவர்கள் இஸ்;லாத்தை தவறாகச் சித்தரிப்பதன் ஊடாக இஸ்லாத்தின் வளர்ச்சியில் குறுக்கே நின்றார்கள். அல்லாஹ் தனது திருமறையிலே இதுபற்றிச் சொல்கிறான்:

“நம்பிக்கை கொண்டோரே! வேதத்தையுடையோரில் ஒரு பிரிவோரை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை நீஙகள் ஈமான் கொண்டபின், காஃபிர்களாக திருப்பி விடுவார்கள்.” (3:100)

ரஸுல்(ஸல்) அவர்களையும், அவர்களுடன் சேர்ந்து இயங்கிய ஸஹாபாக்களையும் குறைஷிச் சமூகத்தில் தீவிரவாதக்கருத்தை பரப்பும் குழுவினராகவே காபிர்கள் பார்த்தார்கள். அப்போது அவர்கள் பாவித்த வார்த்தை பிரயோகங்கள் வேறாக இருந்தாலும், நோக்கம் ஒன்றாகவே இருந்தது. உதாரணத்திற்கு ஹஜ்ஜுக்காக பிற இடங்களிலிருந்து வருகின்ற யாத்திரீகர்களின் காதுகளில் முஹம்மத்(ஸல்) அவர்களின் தூது எட்டிவிடக்கூடாது என்பதற்காக முஹம்மத்(ஸல்) அவர்களை யாத்திரீகர்களிடம் எவ்வாறு தவறாக அறிமுகப்படுத்தலாம் என குறைஷித்தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசித்ததையும், அதன்போது ரஸ}ல்(ஸல்) அவர்களை கவிஞராக, சாத்திரக்காரராக, மந்திரக்காரராக, ஜின்களால் வசியம் செய்யப்பட்டவராக சித்தரிக்கலாம் என கூறிய போது இறுதியில் அல் வலீத் இப்னு முகீரா குடும்பங்களில் பிளவை ஏற்படுத்தக்கூடிய வார்த்தையில் சூனியத்தை கொண்ட நபர் என கூறலாம் என முடிவெடுத்து தமது தீய பிரச்சாரத்தை முடுக்கிவிட்டதை ஞாபப்படுத்திப் பாருங்கள்.

இவ்வாறு சிந்தனா ரீதியாகவும், பௌதீக ரீதியாகவும் பல அச்சுறுத்தல்களையும், அழுத்தங்களையும் சந்தத்தபோதிலும் முஹம்மத் (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் நிலைதடுமாறிவிடவில்லை; சமரசம் செய்ய துணிந்துவிடவில்லை; மாறாக அவர்கள் எதற்கும் தலைவணங்கா கொள்கை வீரர்களாக எழுந்து நின்றார்கள்; கொடுமைகளும், வீண் பழிசுமத்தல்களும் அதிகரிக்க, அதிகரிக்க அவர்களின் கொள்கைத் தெளிவும், துணிச்சலுமே இமயமென உயர்ந்தது.

அழைப்புப்பணியின் ஆரம்ப நாட்களில் அல் குர்ஆனை குறைஷித் தலைவர்களுக்கு முன் பகிரங்காக உரத்து முழங்க யார் தயார் என ஸஹாபாக்கள் ஆலோசிக்கிறார்கள். அச்சபையில் வெறும் பதின்னான்கு வயதே நிரம்பிய அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(றழி) தான் தயார் என எழுந்து நிற்கிறார்கள். உமது வயதோ சிறியது; உமது குடும்பமோ பலகீனமானது; எனவே உமக்கு இது பெரும் ஆபத்தை தேடித்தரும் என ஸஹாபாக்கள் சொல்கிறார்கள். எனினும் ஒரு காலையில் கஃபாவிற்கு முன்சென்று அல் குர்ஆனை குறைஷித் தலைவர்களின் காதுகளில் படும்படி ஓதுகிறார். தம் காதுகளில் விழுவது அல்குர்ஆன்தான் என புரிந்ததுடன் அத்தலைவர்கள் சேர்ந்து அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி) மிகக் கடுமையாக தாக்குகிறார்கள். அவர் ஸஹாபாக்களின் சபைக்கு வருகிறார். அவரை அந்த நிலையில் கண்ட ஸஹாபாக்கள் ‘இதைத்தான் நாங்கள் உங்கள் விடயத்தில் பயந்தோம் எனக்கூறிய போது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி)… ‘இன்று அல்லாஹ்வின் எதிரிகள் என் கண்ணில் பலகீனமாகத் தெரிவதைப்போன்று, இதற்கு முன்னர் எப்போதும் தெரிந்ததில்லை; நீங்கள் விரும்புவீர்களாக இருந்தால் நான் நாளைக்கும் சென்று இச்செயலைத் செய்யத் தயாராக இருக்கின்றேன்” எனக்கூறிய ஈமானிய வார்த்தைகள் எமது உள்ளத்தில் எத்தைகய உரத்தை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு ஈமானில் தோய்க்கப்பட்ட, தியாகங்களால் வார்க்கப்பட்ட ஸஹாபாக்களை இறுதியில் அல்லாஹ் அவர்களின் எதிரிகளின் முன் வெற்றிப்புருஷர்களாக மாற்றினான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மேலும் அவர்களை அல்லாஹ் பொருத்திக்கொண்டேன் சான்றுபகர்ந்து அவர்களின் மறுமைக்கும் உத்தரவாதமளித்தான்.

“இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கிறார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சிந்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும்.” (9:100)

எனவே எவ்வாறு ஆரம்ப காலங்களில் இஸ்லாமிய அரசும், பாதுகாப்பும் அற்ற நிலையில் முஹம்மத்(ஸல்) அவர்களும், அவரது ஸஹாபாக்களும் பல்வேறு அழுத்தங்ளுக்கும், நேருக்கடிகளுக்கும் முகம்கொடுத்தார்களோ அதேபோன்றதொரு சூழலை முஸ்லிம் உம்மாஹ் இன்று சந்தித்து வருகின்றது. இந்நிலையில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மாத்திரம் எதிர்பார்த்து இஸ்லாத்தை உறுதியாக பின்பற்ற நாம் திடசங்கற்பம் பூணவேண்டும். எம்மை எப்பெயர் கொண்டு அழைத்தாலும், எம்மில் பிரிவினைகளை ஏற்படுத்த முனைந்தாலும், இஸ்லாத்தின் வளர்ச்சியில் எத்தகைய முட்டுக்கட்டைகளை போட்டாலும் அவற்றையெல்லாம் உடைத்தெரிந்து அல்லாஹ்வின் தீனை எமது வாழ்விலும், உலகமெங்கிலும் நிலைநாட்ட நாம் முன்வருவோமாக!

“எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்@ கவலையும் கொள்ளாதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்” (3:139)

Related Posts

தீவிர இந்துத்துவா பாதையிலா திருமலை சண்முகா கல்லூரி?

தீவிர இந்துத்துவா பாதையிலா திருமலை சண்முகா கல்லூரி?

February 2, 2022
இந்திய முஸ்லிம்களின் ‘இனப்படுகொலை’ ஐ இனி எதிர்பார்க்கலாம் – Dr. Gregory Stanton!

இந்திய முஸ்லிம்களின் ‘இனப்படுகொலை’ ஐ இனி எதிர்பார்க்கலாம் – Dr. Gregory Stanton!

January 22, 2022

காதி நீதிமன்றத்தை ஒழித்து பின்னர் MMDA ஐயும் ஒழிப்பார்கள்!

September 21, 2021

தலிபான்களை ‘சர்வதேச அங்கீகாரம்’ எங்கு கொண்டு சேர்க்கும்?

September 9, 2021
Next Post
யார் தீவிரவாதி? முஸா(அலை)வா? பிர்அவ்னா?

யார் தீவிரவாதி? முஸா(அலை)வா? பிர்அவ்னா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

சமீபத்திய இடுகைகள்

  • உசூலுல் ஃபிக்ஹிற்கும், அல் கவாஇத் அல் ஃபிக்ஹிய்யாஹ்வுக்கும் இடையான வேறுபாடு
  • இலங்கையின் பொருளாதார நெருக்கடி முஸ்லிம்களின் கண்களைத் திறக்குமா?
  • தீவிர இந்துத்துவா பாதையிலா திருமலை சண்முகா கல்லூரி?
  • சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!
  • இந்திய முஸ்லிம்களின் ‘இனப்படுகொலை’ ஐ இனி எதிர்பார்க்கலாம் – Dr. Gregory Stanton!

சமீபத்திய கருத்துகள்

  • Face to true on கொரோனா வைரஸ் மரணங்களுக்கு தகனத்தை கட்டாயமாக்கியது இலங்கை!
  • Fareed on கிலாஃபா மட்டுமே மக்கள் நல அரசு!
  • Nizamhm on இலங்கையில் முஸ்லிம் விரோத பிரச்சாரத்திற்கு சீனா தலைமை! தெரண களத்தில்!
  • Abdullah on கொரோனா வைரஸ் மரணங்களுக்கு தகனத்தை கட்டாயமாக்கியது இலங்கை!
  • Admin on இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களும் தகனம் செய்யப்படலாம்!

காப்பகம்

  • June 2022
  • April 2022
  • February 2022
  • January 2022
  • December 2021
  • September 2021
  • August 2021
  • July 2021
  • June 2021
  • April 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020
  • October 2020
  • September 2020
  • August 2020
  • July 2020
  • June 2020
  • May 2020
  • April 2020
  • March 2020
  • February 2020
  • January 2020
  • December 2019
  • October 2019
  • September 2019
  • May 2019
  • April 2019
  • February 2019
  • July 2018
  • May 2018
  • March 2018
  • January 2018
  • December 2017
  • October 2017
  • February 2017
  • January 2017
  • November 2016
  • September 2016
  • August 2016
  • July 2016
  • June 2016
  • May 2016
  • April 2016
  • March 2016
  • February 2016
  • January 2016
  • December 2015
  • November 2015
  • October 2015
  • August 2015
  • March 2015
  • September 2014
  • August 2014
  • July 2014
  • May 2014
  • April 2014
  • March 2014
  • February 2014
  • November 2013
  • October 2013
  • September 2013
  • March 2013
  • February 2013
  • July 2012
  • December 2011

பிரிவுகள்

  • Uncategorized
  • YouTube சேனல்
  • அகீதா
  • அறிக்கைகள்
  • ஆய்வு
  • உசூலுல் பிக்ஹ்
  • எண்ணக்கரு
  • ஒலி
  • ஒளி
  • கட்டுரைகள்
  • கிலாஃபா
  • சிந்தனை
  • செய்திகள்
  • செய்திப்பார்வை
  • தஃவா
  • நடப்பு விவகாரம்
  • நிகழ்வுகள்
  • பிக்ஹ்
  • பிரசுரங்கள்
  • பொருளாதாரம்
  • யதார்த்தம் எது ?
  • வரலாறு
  • வலையொலி

சமீபத்திய இடுகைகள்

  • உசூலுல் ஃபிக்ஹிற்கும், அல் கவாஇத் அல் ஃபிக்ஹிய்யாஹ்வுக்கும் இடையான வேறுபாடு
  • இலங்கையின் பொருளாதார நெருக்கடி முஸ்லிம்களின் கண்களைத் திறக்குமா?
  • தீவிர இந்துத்துவா பாதையிலா திருமலை சண்முகா கல்லூரி?
  • சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!
  • இந்திய முஸ்லிம்களின் ‘இனப்படுகொலை’ ஐ இனி எதிர்பார்க்கலாம் – Dr. Gregory Stanton!

பிரிவுகள்

Uncategorized YouTube சேனல் அகீதா அறிக்கைகள் ஆய்வு உசூலுல் பிக்ஹ் எண்ணக்கரு ஒலி ஒளி கட்டுரைகள் கிலாஃபா சிந்தனை செய்திகள் செய்திப்பார்வை தஃவா நடப்பு விவகாரம் நிகழ்வுகள் பிக்ஹ் பிரசுரங்கள் பொருளாதாரம் மல்டி மீடியா யதார்த்தம் எது ? வரலாறு வலையொலி
No Result
View All Result
  • நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்

© 2020 www.darulaman.net