• நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்
No Result
View All Result
  • நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்
No Result
View All Result
Darul Aman
No Result
View All Result
இன்சுரன்ஸ் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது?

இஸ்லாத்தின் பொருளாதாரக் கொள்கை

இமாம் மஹ்தி, சயீதினா ஈஸா, தஜ்ஜால் ஆகியோரின் வருகையும் எமது கடப்பாடும்

Home கட்டுரைகள் சிந்தனை

இன்சுரன்ஸ் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது?

September 25, 2014
in சிந்தனை, பிக்ஹ்
Reading Time: 1 min read
0
0
SHARES
65
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஆயுள் காப்பீடு, பொருள் காப்பீடு, வாகனக் காப்பீடு, சொத்துக் காப்பீடு அல்லது மற்ற எந்தவகையான காப்பீடு முறையாக இருந்தாலும் அவை அனைத்தும் ஓர் ஒப்பந்தமாகும் காப்பீடு நிறுவனத்திற்கும் காப்பீடு செய்து கொள்ளும் நபருக்கும் மத்தியில் ஏற்படும்ஒப்பந்தம்தான் இன்சூரன்ஸ் என்று அழைக்கப்படும் காப்பீட்டு முறையாகும், காப்பீடுசெய்யப்படும் பொருளுக்கு சேதமோ அல்லது அழிவோ ஏற்படும்போது அல்லது காப்பீடுசெய்துள்ள நபருக்கு விபத்து போன்றவற்றின் காரணமாக மரணம் ஏற்படும்போது ஒருகுறிப்பிட்ட தொகையை அல்லது ஒரு குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகையை அல்லது பொருளின்சந்தை விலையை தனக்கோ அல்லது தான் குறிப்பிடும் நபருக்கோ அல்லது தனது வாரிசுகளுக்கோகாப்பீடு நிறுவனம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காப்பீடு செய்யும் நபர் முன்வைக்கிறார்; அதற்காக காப்பீடு செய்யும் நபர் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறது,

ஆகவே ஒரு கோரிக்கையை காப்பீடு செய்பவர் முன்வைக்கிறார், அதை ஒரு நிபந்தனையின் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது, இவ்வாறு திட்டத்தை முன்வைத்தல் மற்றும் அதை ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய ஒப்பந்தத்திற்குரிய நிபந்தனைகள் இதில் நிறைவேற்றப்படுவதால் இது ஓர் ஒப்பந்தம் என்று கருதப்படுகிறது,இதனடிப்படையில். காப்பீடு நிறுவனத்திற்கும் காப்பீடு செய்யும் நபருக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் ஏற்படுகிறது, அதனடிப்படையில் காப்பீடு செய்யும் நபர்ஏற்றுக்கொண்ட நிபந்தனையின்படி குறிப்பிட்ட தவணைகளில் குறிப்பிட்ட தொகையை பிரீமியமாககாப்பீடு நிறுவனத்திற்கு செலுத்துகிறார், எதிர்பாராத விதமாக குறிப்பிட்ட கெடுவுக்குள் காப்பீடுசெய்யப்பட்ட நபருக்கு மரணம் ஏற்பட்டாலோ அல்லது காப்பிடு செய்யப்பட்டபொருளுக்கு சேதம் அல்லது அழிவு ஏற்பட்டாலோ அல்லது பொருள் திருடப்பட்டாலோ காப்பீடுசெய்யப்பட்ட தொகையை அல்லது இழப்பீட்டுத் தொகையை அல்லது பொருளின் சந்தைவிலையை அந்த நபருக்கு அல்லது அவர் குறிப்பிடும் நபருக்கு அல்லது அவருடைய வாரிசுகளுக்குகாப்பீடு நிறுவனம் கொடுத்துவிடுகிறது, இவ்வாறு காப்பீடு செய்தவருக்கு இழப்பீடு கொடுப்பது காப்பீடு நிறுவனம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பாகவும் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்வது காப்பீடு செய்தவரின் உரிமையாகவும் இருக்கின்றன, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வு (விபத்து போன்றவற்றால் ஏற்படும் சேதம் அல்லது அழிவு) ஏற்படும்போது அது முறையானது என்றுநிறுவனம் கருதும் பட்சத்தில் அல்லது முறையானது என்று நீதிமன்றம் தீர்ப்புச் செய்யும் பட்சத்தில்நிறுவனம் உரிய தொகையை உரிய நபருக்கு செலுத்திவிடுகிறது,

இந்த ஒப்பந்தத்தில் – காப்பீடு – என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது, ஒரு நபருக்கோ அல்லது அவரது குடும்பத்திற்கோ அல்லது மனைவி. குழந்தைகள்போன்ற அவரது வாரிசுகளுக்கோ பயன் அளிக்கும் நோக்கத்தோடு காப்பீடு செய்யப்படுகிறது, இத்தகைய காப்பீட்டு முறையில் ஒரு நபருக்கோ. பொருளுக்கோ. சொத்திற்கோ.வாகனத்திற்கோ. அல்லது ஒருவருக்கு பயனளிக்கக்கூடிய எந்தவொரு விஷயத்திற்கோ (உதாரணம்: ஒர் ஓவியரின் தொழிலுக்கு அனுகூலமாக உள்ள அவருடைய கை அல்லது ஒரு பாடகருக்குஅனுகூலமாக உள்ள அவரது குரல் ஆகியவை) காப்பீடு செய்து கொள்ளலாம், இவ்வாறு காப்பீடுசெய்வதின் மூலமாக ஒருவர் காப்பீடு செய்யப்பட்டவற்றில் மக்களோடு கொடுக்கல் வாங்க−ல் ஈடுபடுகிறார், அவ்வாறு இல்லையெனில் அவர் தனது ஆயுளை காப்பீடுசெய்துள்ளார் என்று கூறமுடியாது. மாறாக அவருக்கு மரணம் ஏற்படும்போது ஒருகுறிப்பிட்ட தொகையை தனது மனைவிக்கோ அல்லது தனது குழந்தைகளுக்கோ அல்லது தான்குறிப்பிடும் நபருக்கோ வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துள்ளார் என்றே கூறமுடியும், இதேநிபந்தனைதான் காப்பீடு செய்யும் பொருட்களுக்கும் சொத்திற்கும் பிரயோகிக்கப்படும், உள்ளபடியே. தனது ஆயுளை காப்பீடு செய்து கொண்டவருக்கோ அல்லது காப்பீடு செய்யப்பட்ட பொருட்களுக்கோ இழப்போ அல்லது சேதமோஏற்படும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கிடும் உத்திரவாதம் என்பதுதான் காப்பீடு என்று கருதப்படுகிறது, இதுதான் இன்சூரன்ஸ் என்று கூறப்படும்காப்பீட்டு முறை பற்றிய உண்மை நிலையாகும்,

இதை ஆழமாக ஆய்வு செய்யும்போது இரண்டுகோணங்களில் இது ஷரியாவின் விதிமுறைகளுக்கு முரண்பாடாக இருக்கிறது என்பதைஅறியமுடிகிறது,முதலாவதாக: இரண்டு தரப்பினர்களுக்கு மத்தியில் ஏற்படும் உடன்படிக்கையாகஇருப்பதால் இது ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது, இதில் திட்டத்தை முன்வைத்தல்மற்றும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவை இடம் பெறுகிறது, காப்பீடுநிறுவனம் ஒரு திட்டத்தை முன்வைக்கிறது, அதை காப்பீடு செய்யும் நபர்ஏற்றுக்கொள்கிறார், இதை ஷரியாவின் அடிப்படையில் சட்டரீதியான ஒப்பந்தமாக ஏற்றுக்கொள்ளவேண்டுமானால் ஒப்பந்தத்திற்குரிய ஷரியாவின் விதிமுறைகள் இதில் நிறைவேற்றப்பட்டிருக்கவேண்டும், அப்போதுதான் அது சட்டரீதியானதாக இருக்கும், இல்லையென்றால் அது ஒருபொருளுக்கோ அல்லது ஒரு பலனுக்கோ உரிய சட்டரீதியானஒப்பந்தமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; மாறாக சட்டத்திற்கு முரண்பாடானதாவேகருதப்படும், ஏனெனில் விற்பது. வாங்குவது போன்ற வர்த்தக நடவடிக்கையின் அடிப்படையில் ஒருபொருளுக்கு மாற்றாக மற்றொரு பொருளை பெற்றுக் கொள்வது அல்லது அன்பளிப்பு வழங்குவதுஅல்லது இலவசம் வழங்குவது அல்லது ஒரு பயனை ஈடாக பெறும் பொருட்டு குத்தகை முறையில்ஈடுபடுவது அல்லது ஒரு பயனை ஈடாகப் பெறாமல் கடன் வழங்குவது ஆகிய அடிப்படைனளில்மட்டுமே சட்டரீதியான ஒப்பந்தம் ஏற்பட முடியும், அதாவது ஷரியாவின் அடிப்படையில்ஒப்பந்தம் என்பது பொருள் , அதன் பயன் மற்றும் சேவை ஆகியவற்றில் மட்டும்தான் ஏற்பட முடியும்,இதனடிப்படையில். காப்பீடு என்பது பொருள் அல்லது பயன் மற்றும் சேவைஆகியவற்றில் ஏற்படும் ஒப்பந்தமாக இல்லை,

மாறாக அது உத்திரவாதத்தில் ஏற்படும் ஒப்பந்தமாகவே இருக்கிறது, இந்த உத்திரவாதம் உபயோகிக்கக்கூடிய பொருளையோ அல்லது பெற்றுக் கொள்ளும் பயனையோ குறிப்பதாக இல்லை, எனெனில் இதில் ஒரு பொருளை குத்தகைக்கு விட்டு அதி−ருந்து பயனைபெற்றுக் கொள்வது என்ற நிலை இல்லை; பயனை பெற்றுக் கொள்ளாமல் கடன் கொடுப்பதுஎன்ற நிலையும் இல்லை; அல்லது இந்த உத்திரவாதத்தை வைத்து கடன் பெறும் நிலையும் இல்லை,

மாறாக இது ஒரு கொடுக்கல் வாங்கலாகவே இருக்கிறது, ஆகவே இன்சூரன்ஸ்என்பது பொருட்களின் மீதோ அல்லது அவற்றின் பயன்களின் மீதோ அல்லது சேவை மீதோஏற்படும் ஒப்பந்தம் அல்ல, ஏனெனில் பொருள் அதன் பயன் மற்றும் சேவை ஆகியவை தொடர்பாக ஏற்படும் ஒப்பந்தத்தில் இடம் பெறும் ஷரியா விதிமுறைகள் எதுவும் இதில்இடம் பெறவில்லை, ஆகவே இன்சூரன்ûஸ பொருட்கள் அல்லது பயன்கள் அல்லது சேவைஆகியவற்றில் ஏற்படும் ஒப்பந்தமாக ஏற்றுக் கொள்ள முடியாது,இரண்டாவதாக: சில நிபந்தனைகள் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் காப்பீடு செய்பவருக்கு ஒரு குறிப்பிட்ட வாக்குறுதியை அளிப்பதால் இதை நிறுவனங்கள்அளிக்கும் உத்திரவாதத்தில் ஏற்படும் ஒப்பந்தம் என்றே குறிப்பிட வேண்டும்,இதனடிப்படையில். இன்சூரன்ஸ் செய்வதை சட்டரீதியானதாக ஏற்றுக் கொள்ள வேண்டுமெனில்உத்திரவாதம்தொடர்பான ஷரியாவின் விதிமுறைகள் இதில் இடம் பெற்றிருக்க வேண்டும்,அப்போதுதான் அது சட்டரீதியான உத்திரவாதமாக ஏற்றுக் கொள்ளப்படும். இல்லையெனில் அதுசட்டரீதியான உத்திரவாதமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, உத்திரவாதம் தொடர்பான ஷரியாவின் விதிமுறைகள் :ஒரு குறிப்பிட்ட உரிமையை நிறைவேற்றும்போது உத்திரவாதம் அளித்தவர் தனது பொறுப்பை உத்திரவாதத்தைப் பெற்றுக் கொண்டவரின் பொறுப்போடு இணைத்துக் கொள்கிறார், ஆகவே இன்சூரன்ஸில் ஒருவரின்பொறுப்போடு மற்றொருவரின் பொறுப்பை இணைக்கும் நிபந்தனை இடம் பெறவேண்டும்,மேலும் உத்திரவாதம் அளித்தவர், உத்திரவாதம் அளிக்கப்பட்டவர் , உத்திரவாதத்தை பெற்றுக் கொண்டவர் ஆகியவர்கள் அதில் இடம்பெற்றிக்க வேண்டும், ஆகவே உத்திரவாதம் என்பது ஓர் உரிமையைப் பொறுத்து கட்டாயம் நிறைவு செய்யவேண்டிய பொறுப்பாகும். அதில் எந்தவிதமான ஈட்டுத் தொகையையும்பெற்றுக் கொள்ளாமல் பொறுப்பு நிறைவு செய்யப்பட வேண்டும், நிகழ்காலத்தில் பெற்றுக்கொள்ளவேண்டிய நிதியியல் சார்ந்த உரிமை அல்லது எதிர்காலத்தில் பெற்றுக் கொள்ளவேண்டியநிதியியல் சார்ந்த உரிமை ஆகியவை தொடர்பான நிபந்தனைகள் இடம் பெற்றிருந்தால் அந்தஉத்திரவாதம் சட்டரீதியாக செல்லுபடி ஆகக் கூடியதாக இருக்கும், ஆகவே உத்திரவாதம்நிகழ்காலத்தில் பெற்றுக் கொள்ள வேண்டிய நிதியியல் சார்ந்த உரிமை அல்லது எதிர்காலத்தில்பெற்றுக் கொள்ள வேண்டிய நிதியியல் சார்ந்த உரிமை ஆகியவை தொடர்பானதாகஇல்லையெனில் அது சட்டப்படி செல்லுபடி ஆகாது, ஏனெனில் உத்திரவாதம் என்பதுஓர் உரிமையை நிறைவு செய்வதில் உள்ள ஒருவருடைய பொறுப்பில் மற்றொருவர் இணைந்துகொள்வதாகும். எனவே உத்திரவாதத்தைப் பெற்றுக் கொண்டவரின் உரிமையை நிறைவேற்றுவதில்பொறுப்பு ஏற்கும் செயல் இடம் பெறாவிடில் பொறுப்பில் இணைந்து கொள்ளுதல் என்ற செயல்ஒருபோதும் நடைபெறாது, உரிமையை நிகழ்காலத்தில் நிறைவேற்றுவதைப் பொறுத்தவரையில் இதுதெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறையாகும்,உரிமையை எதிர்காலத்தில் நிறைவேற்றுவதைப் பொறுத்தவரை “இன்ன மனிதரை திருமணம்செய்து கொண்டால் மஹருக்கு நான் உத்திரவாதம் கொடுக்கிறேன்” என்று ஒரு பெண்ணிடம்ஒருவர் கூறுவதற்கு ஒப்பாக இருக்கிறது, இந்த விவகாரத்தில். உத்திரவாதம் அளித்தவர் பொறுப்பில் பிணை ஆக்கப்பட்டு இருப்பதைப்போல உத்திரவாதத்தைப் பெற்றுக்கொண்டவர் பிணையாக்கப்படும் விதத்திலும். உத்திரவாதத்தைப் பெற்றுக்கொண்டவரின் பொறுப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிற அதே முறையில் உத்திரவாதம் அளித்தவரின்பொறுப்பு உறுதி செய்யப்படும் விதத்திலும். உத்திரவாதம் அளித்தவர் தன்னுடைய பொறுப்பை உத்திரவாத்தை பெற்றுக் கொண்டரின் பொறுப்போடு இணைத்துக்கொள்கிறார், அதேவேளையில் நிகழ்காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ நிறைவேற்ற வேண்டியபொறுப்பு இல்லையெனில் பிறகு உத்திரவாதம் அளிப்பதிலோ அல்லது ஒருவரின் பொறுப்பைமற்றவரின் பொறுப்போடு இணைப்பதிலோ எந்த அர்த்தமும் கிடையாது.

எனவே இத்தகையஉத்திரவாதம் சட்ட ரீதியாக செல்லுபடி ஆகாது,மேலும் உத்திரவாதத்தைப் பெற்றுக் கொண்ட நபருக்கு உடனடியாகவோ அல்லது பிறகோபயனை உறுதியான முறையில் பெற்றுக்கொள்ளும் உரிமை இல்லாவிடில் அந்த உத்திரவாதம்சட்டரீதியாக செல்லுபடி ஆகாது, ஏனெனில் உத்திரவாதத்தைப் பெற்றுக் கொண்டவரின்பொருளுக்கு சேதமோ அழிவோ ஏற்படும்போது அல்லது அவர் கடனுக்கு ஆளாகும்போது அல்லதுஎதிர்பாராத விதத்தில் ஏற்படும் நிகழ்வால் அவர் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய நிதியியல்சார்ந்த பொறுப்பு அல்லது பிறகு அவர் நிறைவேற்ற வேண்டிய நிதியியல் சார்ந்த பொறுப்புஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு உத்திரவாதம் அளிப்பவர் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான்உத்திரவாதம் அளிப்பதற்கு நிபந்தனையாக இருக்கிறது,

ஆகவே உத்திரவாதம் அளிக்கப்பட்டவர்உடனடியாகவோ அல்லது எதிர்காலத்திலோ நிறைவேற்ற வேண்டிய பொறுப்பைநிறைவேற்ற தவறும்போது அவர் விஷயத்தில் எவர் உத்திரவாதம் அளித்தாரோ அவருடையஉத்திரவாதம் சட்டப்படி செல்லாததாக ஆகிவிடுகிறது, ஏனெனில் உத்திரவாதம் அளிக்கப்பட்டவர்நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கு அந்த விவகாரத்திற்கு எவர் உத்திரவாதம்அளித்தாரோ அவரும் பொறுப்பாளியாக இருக்கிறார்,இதற்கு உதாரணம் ஒன்றை இப்போது காண்போம் : ஒரு சலவைத் தொழிலாளி இருக்கிறார்,ஒருவர் மற்றொரு நபரிடம் கூறுகிறார். “அந்த சலவைத் தொழிலாளியிடம் துணிகளை அனுப்புங்கள்நான் அவற்றிற்கு உத்திரவாதம் அளிக்கிறேன்” என்கிறார்; பின்னர் அவரிடம் துணிகள்அனுப்பப்பட்டு அவை சேதமாகி விட்டன, இந்நிலையில் சேதமடைந்த துணிகளுக்கு சலவைத்தொழிலாளியின் சார்பில் நஷ்டஈடு கொடுப்பதற்குரிய பொறுப்பு உத்திரவாதம் அளித்தவருக்குஇருக்கிறதா அல்லது இல்லையா? இதற்குரிய பதில் பின்வருமாறு : சலவைத் தொழிலாளியின்செயல்பாடு காரணமாகவோ அல்லது அவரின் கவனக்குறைவு காரணமாகவோ துணிகள்சேதமடைந்திருந்தால் பிறகு உத்திரவாதம் கொடுத்தவர் எந்தவிதமான நஷ்டஈடும் கொடுக்கத்தேவையில்லை; ஏனெனில் உத்திரவாதம் கொடுக்கப்பட்ட சலவைத் தொழிலாளி சேதத்திற்குக்காரணமாக இருக்கவில்லை, ஆகவே உத்திரவாதம் கொடுக்கப்பட்டவர் இதில் பொறுப்பாளியாகஇல்லாத காரணத்தால் உத்திரவாதம் கொடுத்தவருக்கும் இதில் எந்தவிதமான பொறுப்பும் இல்லை,

எனவே உத்திரவாதம் பெற்றுள்ளவர் தமது துணிகளுக்கு உரிய நஷ்டஈட்டை மற்றொருநபரிடமிருந்துதான் பெற்றுக் கொள்ள முடியும், அந்த துணிகளை தயாரித்தவர்களிடமிருந்தோஅல்லது அவற்றை விற்பனை செய்தவர்களிடமிருந்தோ உடனடியாகவோ அல்லது ஒரு குறிப்பிட்டகாலத்திற்குப் பின்னரோ நஷ்ட ஈட்டை பெற்றுக் கொள்ளவேண்டும்,ஆகவே ஷரியா விதிமுறையின்படி உத்திரவாதம் பெற்றுள்ளவரின் உரிமை உடனடியாகவோஅல்லது எதிர்காலத்திலோ உறுதி செய்யப்பட வேண்டும் என்பதுதான் உத்திரவாதம் சட்டரீதியாகஇருப்பதற்கு நிபந்தனையாக இருக்கிறது, எனினும் உத்திரவாதத்தைப் பெற்றுக் கொண்டவர் மற்றும் உத்திரவாதம் அளிக்கப்பட்டவர் ஆகியவர்களின் பெயர்கள்குறிப்பிடப்பட வேண்டும் என்பது நிபந்தனையல்ல, இவ்வாறாக இந்த இரு நபர்களின் பெயர்கள்குறிப்பிடப்பட்டாலும் அல்லது குறிப்பிடப் படாவிட்டாலும் உத்திரவாதம் சட்டரீதியாக செல்லபடிஆகக்கூடியதே, எனவே ஒருவர் மற்றொரு நபரிடம் “உங்கள் துணிகளை சலவைத் தொழிலாளியிடம்கொடுங்கள்” என்று கூறுகிறார்; அதற்கு மற்றொருவர் “துணிகளை அவர் சேதப்படுத்தி விடுவார்என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறுகிறார், இந்நிலையில் முதல் நபர் கூறுகிறார். “சலவைத்தொழிலாளியிடம் துணிகளைக் கொடுத்து அவை சேதம் அடைந்தால் நஷ்ட ஈடு கொடுப்பதற்கு நான் உத்திரவாதம் அளிக்கிறேன்” என்று சலவைத் தொழிலாளியின் பெயரைக் குறிப்பிடாமல்கூறினாலும் உத்திரவாதம் சட்டரீதியாக செல்லுபடி ஆகக்கூடியதுதான், இதனடிப்படையில் அவர்சலவைத் தொழிலாளியிடம் துணிகளைக் கொடுக்கிறார். பின்னர் அவை சேதமடைந்து விடுகின்றன,இந்நிலையில் உத்திரவாதம் அளிக்கப்பட்ட நபரின் (சலவைத் தொழிலாளி) பெயர் தெரியாதபோதும்உத்திரவாதம் அளித்தவர் சேதத்திற்கு பொறுப்பாளியாகி விடுகிறார், இதுபோலவே “இன்ன மனிதர்சிறந்த சலவைத் தொழிலாளியாக இருக்கிறார் , எவர் அவரிடம் துணிகளைக் கொடுக்கிறாரோஅவருக்கு அவரது துணிகள் சேதப்படுவதி−ருந்து நான் உத்திரவாதம் அளிக்கிறேன்” என்று ஒருவர்கூறும்போது உத்திரவாதம் அளிக்கப்பட்டவர் பெயர் குறிப்பிடப்படுகிறது. இந்நிலையிலும்உத்திரவாதம் சட்டப்படி செலலுபடி ஆகக்கூடியதுதான்,மேற்கூறப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில் உத்திரவாதம் தொடர்பானஷரியாவின் தெளிவான ஆதாரங்களிபடி உத்திரவாதம் அளிக்கும்போது ஒருவரின் பொறுப்பு மற்றவருடன் இணைக்கப்படுகிறது என்பதையும் அந்த உத்திரவாதம் வாக்குறுதியைநிறைவேற்றுவதில் இருக்கும் பொறுப்போடு தொடர்புடையது என்பதையும் நாம்காண்கிறோம்,

மேலும் இந்த விவகாரத்தில் உத்திரவாதம் அளிப்பவர் உத்திரவாதம்அளிக்கப்படுபவர் உத்திரவாதத்தைப் பெற்றுக் கொள்பவர் ஆகியவர்கள்இடம் பெறுகிறார்கள் என்பதையும். உத்திரவாதம் கொடுப்பதற்கு ஈட்டுத்தொகை எதுவும்கோரப்படுவதில்லை என்பதையும் உத்திரவாதம் அளிக்கப்படுபவர் மற்றும் உத்திரவாதத்தைப் பெற்றுக் கொள்பவர் ஆகியவர்களின் பெயர்கள் குறிப்பிடபட்ட நிலையிலும் பெயர்கள்குறிப்பிடப்படாத நிலையிலும் உத்திரவாதம் அளிக்கப்படுகிறது என்பதையும் நாம் காண்கிறோம்,ஜாபிர் அறிவித்து அபூதாவூதில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸில்கூறப்பட்டிருப்பதாவது:

கடன் இருக்கும் நிலையில் அதை அடைப்பதற்கு எந்த ஏற்பாடுகளும் செய்யாதநிலையில் ஒரு மனிதர் மரணம் அடைந்து விட்டால் அவரின் ஜனாஸாவிற்குஅல்லாஹ்வின் தூதர் தொழுகை நடத்த மாட்டார்கள், ஒரு சமயம் ஒருமனிதரின் ஜனாஸா கொண்டு வரப்பட்டது. அவருக்கு ஏதேனும் கடன் இருக்கிறதா? என்றுஅல்லாஹ்வின் தூதர்  வினவினார்கள், ஆம் அவருக்கு இரண்டு தினார்கடன் இருக்கிறது என்று அவர்கள் கூறினார்கள், உங்கள் தோழருக்காக நீங்கள் தொழுது கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் கூறிவிட்டார்கள், அப்போது.அல்லாஹ்வின் துதரே அந்தக் கடனை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றுஅபூகதாதா கூறினார், பின்னர் அல்லாஹ்வின் தூதர் அவருக்காகதொழுகை நடத்தினார்கள், அல்லாஹ் ( ஜிஹாது மூலமாக ) அல்லாஹ்வின் தூதருக்கு சில நிலப்பரப்புகளை திறந்து விட்டபோது. “ஒவ்வொரு மூ*மின்களுக்கும்அவர்களைவிட அவர்கள் மீது நான் பொறுப்பு உடையவனாக இருக்கிறேன், ஆகவேஅவர்களில் எவரேனும் கடனை விட்டுச்சென்றால் அதை அடைப்பது என்மீதுபொறுப்பாக இருக்கிறது இன்னும் எவரேனும் சொத்துக்களை விட்டுச்சென்றால் அதுஅவர்களின் வாரிசுகளுக்கு சொந்தமாக இருக்கிறது” என்று கூறினார்கள்,

இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள ஆதாரத்தின் விளக்கமாவது :கடன் கொடுத்த ஒருவரின் கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பில் மரணமடைந்துவிட்ட ஒருவரின் பொறுப்போடு தனது பொறுப்பை அபூகதாதா இணைத்துக்கொண்டார் என்பதையும் இந்த விவகாரத்தில் உத்திரவாதம் அளித்தவர் (அபூகதாதா உத்திரவாதம் அளிக்கப்பட்டவர் (மரணமடைந்துவிட்டவர்). உத்திரவாதத்தை பெற்றுக் கொண்டவர்(கடன் கொடுத்தவர்) ஆகியவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் மரணமடைந்தவரும்அபூகதாதாவும் திருப்பிச் செலுத்துவதாக கொடுத்த உத்திரவாதம் கடன்கொடுத்தவருக்கு உரிய உரிமையோடும் உத்திரவாதம் கொடுத்தவர் நிறைவேற்ற வேண்டியபொறுப்போடும் தொடர்புடையது என்பதையும் அந்த உத்திரவாதம் எந்தவிதமானஈட்டுத்தொகையையும் பெற்றுக் கொள்ளாமல் அளிக்கப்பட்டது என்பதையும் உத்திரவாதம்பெற்றுள்ள நபரான கடன் கொடுத்த மனிதர் மற்றும் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள நபரானமரணமடைந்த மனிதர் ஆகியவர்களின் பெயர்கள் பற்றிய விபரங்கள் உத்திரவாதம்அளிக்கப்பட்டபோது குறிப்பிடப்படவில்லை என்பதையும் இந்த ஹதீஸின் ஆதாரம் தெளிவாகக்குறிப்பிடுகிறது,

இதனடிப்படையில் இந்த ஹதீஸ் உத்திரவாதம் சட்டரீதியாக இருப்பதற்குரியநிபந்தனைகள் எவை என்பதைக் கூறக்கூடியதாகவும் அந்த உத்திரவாதத்தின் அடிப்படையில்ஒப்பந்தம் செய்து கொள்வதற்குரிய நிபந்தனைகள் எவை என்பதைக் கூறக்கூடியதாகவும் இருக்கிறது,ஷரியாவின் விதிமுறைகள் அடிப்படையில் இவைகள்தான் உத்திரவாதம் தொடர்பான சட்டரீதியான நிபந்தனைகளாகும், இன்சூரன்ஸ் என்பது நிச்சயமாக ஒருஉத்திரவாதமாக இருப்பதால் உத்திரவாதம் தொடர்பான ஷரியாவின் விதிமுறைகளைஇன்சூரன்ஸ் முறை மீது பிரயோகம் செய்து ஆய்வு செய்யவேண்டும், அவ்வாறு செய்யும்போதுஉத்திரவாதம் மற்றும் அதை ஒப்பந்தம் செய்வது தொடர்பான ஷரியா விதிமுறைகள் எதுவும்இன்சூரன்ஸ் முறையில் இடம்பெறவில்லை என்பதும் இன்சூரன்ஸ் முறையில் இடம்பெற்றுள்ளஉத்திரவாதம் சட்டரீதியாக செல்லுபடி ஆகாதது என்பதும் தெளிவாகத் தெரிகிறது, இன்சூரன்ஸ்நிறுவனம் காப்பீடு செய்துள்ளவர் கொடுக்கவேண்டிய கடன் பொறுப்பில்எதையும் தன்னோடு இணைத்துக் கொள்வதில்லை என்ற காரணத்தால் இன்சூரன்ஸ் முறையில்ஒருவர் பொறுப்பை மற்றொருவர் பொறுப்புடன் இணைத்துக் கொள்ளும் எந்த நடைமுறையும்இடம்பெறுவதில்லை,

ஆகவே இதில் எந்தவிதமான சட்டரீதியான உத்திரவாதமும் இடம்பெறவில்லை என்பதால் இது சட்டரீதியாக செல்லுபடி ஆகாது, காப்பீடு செய்தவர்اகடனாளியாக இருக்கும் நிலையில் காப்பீடு நிறுவனம் கடன் கொடுத்தவருக்கு எந்தத்தொகையையும் வழங்குவதில்லை, காப்பீடு செய்யும் நபருக்கு இருக்கும் கடன் சுமையில்எந்தவிதமான பொறுப்பையும் காப்பீடு நிறுவனம் எடுத்துக் கொள்வதில்லை என்றகாரணத்தாலும் கடன் அளித்தவரின் நிதியியல் சார்ந்த உரிமையை எந்தவிதத்திலும் நிறைவேற்றுவதில்லை என்ற காரணத்தாலும் காப்பீடு நிறுவனம் அளிக்கும் உத்திரவாதத்தைசட்டரீதியானது என்று ஏற்றுக் கொள்ளமுடியாது, காப்பீடு செய்யும் ஒருவருக்கு அவர்கொடுக்கவேண்டிய கடனைப் பொறுத்து எந்தவிதமான நிதியியல் சார்ந்த உரிமையையும் காப்பீடுநிறுவனம் அளிப்பதில்லை என்ற காரணத்தால் இன்சூரன்ஸில் எந்தவிதமான நிதியியல் சார்ந்தஉரிமையோ அல்லது ஷரியா அங்கீகரித்த உத்திரவாதமோ இடம்பெறுவதில்லை,

ஆகவேஇன்சூரன்ஸ்முறை சட்டப்படி செல்லுபடி ஆகாது,காப்பீடு செய்பவரிடமிருந்து ஒரு தொகையைப் முன்னதாகப் பெற்றுக்கொண்டுபின்னர் குறிப்பிட்ட நிபந்தனை அடிப்படையில் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாகவோ அல்லதுஇழந்த பொருளுக்கு விலையாகவோ காப்பீடு நிறுவனம் வழங்குவதை நிதியியல் சார்ந்தஉரிமை என்றோ அல்லது உத்திரவாதம் என்றோ ஏற்றுக் கொள்ளமுடியாது, காப்பீடு செய்தவர் நிகழ்காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ கொடுக்கவேண்டிய எந்தத் தொகைக்கும்காப்பீடு நிறுவனம் உத்திரவாதம் அளிப்பதில்லை என்ற காரணத்தால் அது கொடுக்கும்உத்திரவாதம் சட்டப்படி உண்மையான உத்திரவாதம் அல்ல, சட்டரீதியானஉத்திரவாதத்தில் உத்திரவாதம் அளிப்பவர் ,உத்திரவாதம் அளிக்கப்படுபவர் உத்திரவாதத்தைப் பெற்றுக் கொள்பவர் ஆகியோர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் இன்சூரன்ஸ் முறையில் உத்திரவாதத்தைப் பெற்றுக் கொள்பவர் எவரும்இடம் பெறுவதில்லை என்ற காரணத்தால் இன்சூரன்ஸ் நிறுவனம் கொடுக்கும்உத்திரவாதம் சட்டரீதியான உத்திரவாதம் அல்ல, உயிர் இழப்பு. பொருள் இழப்பு ஆகியவற்றிற்குகாப்பீடு நிறுவனம் நஷ்டஈடு கொடுப்பதற்கு முன்னதாக காப்பீடு செய்பவரிடமிருந்துபணத்தை(பிரீமியம்) பெற்றுக் கொள்கிறது. சட்டரீதியான உத்திரவாதத்தில் எந்தவிதமானஈட்டுத்தொகையயும் பெற்றுக் கொள்வதற்கு அனுமதியில்லை என்ற அடிப்படையில் காப்பீடுநிறுவனம் அளிக்கும் உத்திரவாதம் சட்டரீதியாக செல்லுபடி ஆகாது, ஷரியாநிர்ணயம் செய்துள்ள உத்திரவாதம் தொடர்பான ஷரத்துக்கள் எதுவும் இன்சூரன்ஸ் முறையில்இடம் பெறவில்லை என்பதாலும் உத்திரவாதத்தை சட்டரீதியாக ஆக்கும் நிபந்தனைகளைநிறைவேற்றுவதில் இன்சூரன்ஸ் முறை தவறிவிட்டது என்பதாலும் இன்சூரன்ஸ் செய்வதுசட்டவிரோதமானது, ஆகவே இன்சூரன்ஸ் நிறுவனம் அளிக்கும் வாக்குறுதி ஆவணம். உத்திரவாதம். இழப்பீடு. ஆகியவற்றில் சட்டரீதியான அம்சம் எதுவும்இல்லை என்ற காரணத்தால் ஒப்பந்தம் என்ற அடிப்படையிலும் உத்திரவாதம் என்றஅடிப்படையிலும் இன்சூரன்ஸ் முறையை ஷரியா அங்கீகரிக்கவில்லை,

ஆகவே இன்சூரன்ஸ்முறை ஷரியாவின் கண்ணோட்டத்தில் தடைசெய்யப்பட்ட விஷயமாக இருக்கிறது,இதனடிப்படையில். ஆயுள் காப்பீடு , சொத்துக் காப்பீடு வாகனக் காப்பீடு ,பொருள் காப்பீடு ஆகிய காப்பீடுகளும் இதரவகை காப்பீடுகளும் ஷரியாவினால் தடை செய்யப்பட்ட ஹராமான நிதியியல் நடவடிக்கைகளாகும், ஏனெனில் இன்சூரன்ஸ் என்று அழைக்கப்படும் காப்பீடு திட்டத்தில் இடம் பெறும்ஒப்பந்தம் மற்றும் வாக்குறுதி அடிப்படையிலேயே ஷரியாவின் விதிமுறைகளுக்கு முரண்பாடாக இருப்பதால் ஹராமானதாகும், ஆகவே இதி−ருந்து கிடைக்கும்பணம் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பான பணமாக இருப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்வதும் ஹராமாகும்,

Related Posts

உசூலுல் ஃபிக்ஹிற்கும், அல் கவாஇத் அல் ஃபிக்ஹிய்யாஹ்வுக்கும் இடையான வேறுபாடு

உசூலுல் ஃபிக்ஹிற்கும், அல் கவாஇத் அல் ஃபிக்ஹிய்யாஹ்வுக்கும் இடையான வேறுபாடு

June 9, 2022
தனிநபர் சீர்திருத்தத்தினால் மாத்திரம் ஓர் சமுதாயத்தை மாற்றிவிடலாமா?

தனிநபர் சீர்திருத்தத்தினால் மாத்திரம் ஓர் சமுதாயத்தை மாற்றிவிடலாமா?

July 27, 2021

ஜனநாயகத் தேர்தலில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முன்? – மீள்பதிவு!

August 3, 2020

முஸ்லிம் அல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் பரப்புரைக்குழுக்கள் (lobby groups) அல்லது அழுத்தக்குழுக்களை (Pressure groups) உருவாக்கி இயங்க முடியுமா?

January 8, 2017
Next Post
இமாம் மஹ்தி, சயீதினா ஈஸா, தஜ்ஜால் ஆகியோரின் வருகையும் எமது கடப்பாடும்

இமாம் மஹ்தி, சயீதினா ஈஸா, தஜ்ஜால் ஆகியோரின் வருகையும் எமது கடப்பாடும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

சமீபத்திய இடுகைகள்

  • உசூலுல் ஃபிக்ஹிற்கும், அல் கவாஇத் அல் ஃபிக்ஹிய்யாஹ்வுக்கும் இடையான வேறுபாடு
  • இலங்கையின் பொருளாதார நெருக்கடி முஸ்லிம்களின் கண்களைத் திறக்குமா?
  • தீவிர இந்துத்துவா பாதையிலா திருமலை சண்முகா கல்லூரி?
  • சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!
  • இந்திய முஸ்லிம்களின் ‘இனப்படுகொலை’ ஐ இனி எதிர்பார்க்கலாம் – Dr. Gregory Stanton!

சமீபத்திய கருத்துகள்

  • Face to true on கொரோனா வைரஸ் மரணங்களுக்கு தகனத்தை கட்டாயமாக்கியது இலங்கை!
  • Fareed on கிலாஃபா மட்டுமே மக்கள் நல அரசு!
  • Nizamhm on இலங்கையில் முஸ்லிம் விரோத பிரச்சாரத்திற்கு சீனா தலைமை! தெரண களத்தில்!
  • Abdullah on கொரோனா வைரஸ் மரணங்களுக்கு தகனத்தை கட்டாயமாக்கியது இலங்கை!
  • Admin on இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களும் தகனம் செய்யப்படலாம்!

காப்பகம்

  • June 2022
  • April 2022
  • February 2022
  • January 2022
  • December 2021
  • September 2021
  • August 2021
  • July 2021
  • June 2021
  • April 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020
  • October 2020
  • September 2020
  • August 2020
  • July 2020
  • June 2020
  • May 2020
  • April 2020
  • March 2020
  • February 2020
  • January 2020
  • December 2019
  • October 2019
  • September 2019
  • May 2019
  • April 2019
  • February 2019
  • July 2018
  • May 2018
  • March 2018
  • January 2018
  • December 2017
  • October 2017
  • February 2017
  • January 2017
  • November 2016
  • September 2016
  • August 2016
  • July 2016
  • June 2016
  • May 2016
  • April 2016
  • March 2016
  • February 2016
  • January 2016
  • December 2015
  • November 2015
  • October 2015
  • August 2015
  • March 2015
  • September 2014
  • August 2014
  • July 2014
  • May 2014
  • April 2014
  • March 2014
  • February 2014
  • November 2013
  • October 2013
  • September 2013
  • March 2013
  • February 2013
  • July 2012
  • December 2011

பிரிவுகள்

  • Uncategorized
  • YouTube சேனல்
  • அகீதா
  • அறிக்கைகள்
  • ஆய்வு
  • உசூலுல் பிக்ஹ்
  • எண்ணக்கரு
  • ஒலி
  • ஒளி
  • கட்டுரைகள்
  • கிலாஃபா
  • சிந்தனை
  • செய்திகள்
  • செய்திப்பார்வை
  • தஃவா
  • நடப்பு விவகாரம்
  • நிகழ்வுகள்
  • பிக்ஹ்
  • பிரசுரங்கள்
  • பொருளாதாரம்
  • யதார்த்தம் எது ?
  • வரலாறு
  • வலையொலி

சமீபத்திய இடுகைகள்

  • உசூலுல் ஃபிக்ஹிற்கும், அல் கவாஇத் அல் ஃபிக்ஹிய்யாஹ்வுக்கும் இடையான வேறுபாடு
  • இலங்கையின் பொருளாதார நெருக்கடி முஸ்லிம்களின் கண்களைத் திறக்குமா?
  • தீவிர இந்துத்துவா பாதையிலா திருமலை சண்முகா கல்லூரி?
  • சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!
  • இந்திய முஸ்லிம்களின் ‘இனப்படுகொலை’ ஐ இனி எதிர்பார்க்கலாம் – Dr. Gregory Stanton!

பிரிவுகள்

Uncategorized YouTube சேனல் அகீதா அறிக்கைகள் ஆய்வு உசூலுல் பிக்ஹ் எண்ணக்கரு ஒலி ஒளி கட்டுரைகள் கிலாஃபா சிந்தனை செய்திகள் செய்திப்பார்வை தஃவா நடப்பு விவகாரம் நிகழ்வுகள் பிக்ஹ் பிரசுரங்கள் பொருளாதாரம் மல்டி மீடியா யதார்த்தம் எது ? வரலாறு வலையொலி
No Result
View All Result
  • நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்

© 2020 www.darulaman.net