• நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்
No Result
View All Result
  • நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்
No Result
View All Result
Darul Aman
No Result
View All Result
இஸ்லாத்தின் பொருளாதாரக் கொள்கை

இஸ்லாம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டதா?

இன்சுரன்ஸ் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது?

Home கட்டுரைகள் சிந்தனை

இஸ்லாத்தின் பொருளாதாரக் கொள்கை

September 24, 2014
in சிந்தனை, பொருளாதாரம்
Reading Time: 2 mins read
0
0
SHARES
209
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வழமையான, மேன்மை பொருந்திய வரலாற்றைக் கொண்ட இஸ்லாமிய சமுதாயம் இன்றுகடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியிருக்கிறது. முதலாளித்துவமும், ஊழலும்,தகுதிக்கேடும் இன்று இஸ்லாமிய சமூகத்தை பீடித்திருக்கிறது.

இதற்கு, மக்களைகட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார அமைப்பும், இஸ்லாமிய ஆட்சியாளர்கள்மேற்கொள்ளும் தவறான ஆட்சி முறையுமே காரணம் ஆகும். இஸ்லாமிய சமூகம் தங்கள்பிடியில் இருக்கும் படியும், தங்களின் (குடியேற்ற நாடுகளின்) தலைமையே இஸ்லாமியசமூகத்தை ஆதிக்கம் செலுத்தும் வகையிலுமே குடியேற்ற நாடுகளின் பொருளாதாரக்கொள்கைகள் இருக்கின்றன.

இவ்வாறாக, அமெரிக்கா மற்றும் அதைப்போன்ற நாடுகள் ,இஸ்லாமிய நாடுகளை தங்களின் பொருட்களை விற்கும் சந்தையாகவே கருதுகின்றன.குடியேற்ற நாடுகளின் பிடியிலிருந்து மீள முஸ்லீம் ஆட்சியாளர்கள் கையாள வேண்டியபொருளாதாரக் கொள்கைகள் இங்கே விளக்கப்பட்டுள்ளன. மேலும் இஸ்லாமியபொருளாதாரக் கோட்பாடுகள் குர்ஆன் மற்றும் திருநபியின்(ஸல்) போதனைப்படி அமையும்வழியையும் ,இக்கட்டுரை சுட்டுகிறது.

தனி மனிதனின் தேவையைக் கணக்கில் கொள்ளாமல், சமதர்மத்தை நிலைநிறுத்துவதுபற்றியும், மொத்த தேசிய உற்பத்தியை பெருக்குவது பற்றியும் மட்டுமே குடியேற்றநாடுகள் வலியுறுத்துகின்றன. இதன் தொடர்பாக, மேலை நாடுகள், பொருளாதாரத்தைப்பற்றி புத்தகங்கள் பலவற்றை பிரசுரித்து, தொழில் முன்னேற்றம் கண்ட தங்களுடன் சரிநிலையை அடைய, இஸ்லாமிய நாடுகள் தங்களுடைய பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கின்றன.

மொத்த தேசிய உற்பத்தியை பெருக்கி-அதன் அடிப்படையில் பொருளாதாரத்தை அமைக்கும் வழிமுறையும் சமதர்மக் கொள்கையும், சமூக நீதி திட்டமும், சமூகத்திற்கு எவ்வித பயனும்தராமல் உண்மை நிலையிலிருந்து விலகியே நிற்கின்றன. சமூக நீதி கொள்கையானது, முதலாளித்துவக்கொள்கைக்கு கைகொடுக்குமெயன்றி வேறொரு பயனும் அளிக்காது என்பதை சம கால வரலாறு கூறிநிற்கின்றது.

இஸ்லாமிய சட்டங்களை மாற்ற முடியாத காரணத்தினாலும், அவை மட்டுமே மனிதசமூகம் உயர வழி கோலும் என்பதாலும், முஸ்லீம்கள் நிலையற்ற அல்லது பிற நாட்டைச்சார்ந்த பொருளாதாரத்திட்டத்தை பின்பற்றுவது உபயோகமற்றதாகும்.

இஸ்லாமியர்களின்பொருளாதார அமைப்பு திருக்குர்ஆன் கூறும் ஷரியத் சட்டப்படியும், சுன்னாஹ் எனப்படும்நபிகளாரின்(ஸல்) வழிகாட்டுதலின் படியும், சஹாபாக்களின் ஒருங்கிணைந்த தீர்வின்படியும்(இஜ்மா-அஸ்-ஸஹாபா), கியாஸ்(ஒப்புநோக்குதல்) படியும் அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.

இந்த அடிப்படையில் பின்வரும் நான்கு கருத்துக்கள் அமைந்திருக்கின்றது.

1. ஒரு தனி நபருக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தனிப்பட்ட தேவைகள் உண்டு எனஇஸ்லாம் கருதுகிறது.

2. ஒரு மனிதன் வாழ அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும் என இஸ்லாம்கருதுகிறது.

3. தொழில் சுதந்திரத்தையும், வேலையில் யாவரும் சமம் என்ற நிலையையும்,இறைவனின் வளங்களிலிருந்து பயனடைதலின் மூலம் பெற முடியும் என இஸ்லாம்கருதுகிறது.

4. உறவு முறைகளின் முக்கியத்துவத்தையும், மனிதர்களிடையே உள்ள தொடர்பையும்இஸ்லாம் இதற்காக நிர்வகிக்கிறது.

ஆகவே, மனிதன் உழைப்பதின் மூலமும், மனிதர்களிடையே உள்ள தொடர்பைஉறுதிப்படுத்துவதின் வாயிலாகவும், தனி நபரின் முக்கியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், அவனுடைய வாழக்கைத் தரத்தை உயர்த்தவும், அவனை முன்னேற்றமடையச்செய்யவும் இஸ்லாம் வழி சொல்கிறது.

எனவே உற்பத்தியைப் பெருக்குவதோ, சமதர்மக்கொள்கையோ, சமூக நீதி திட்டமோ-இவை அனைத்தும் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையாகாது. முஸ்லிம்உம்மாவிடையே, அல்லாஹ்வின் வளங்களை சமமாக பங்கிடுதலின் மூலமாக, ஒவ்வொருமனிதனின் அடிப்படைத் தேவைகளையும், அதிகப்படியான தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியும் என இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை கூறுகிறது.

வளங்களை சமமாக பங்கிடுதல் மட்டுமல்லாமல் நிலத்தை உழுவதின் மூலமாக செழுமைப்படுத்தியும் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்று இஸ்லாம் பொருளாதாரத்தை விளக்குகிறது.

1. பொருளாதாரக் கொள்கை.

2. பொருளாதார முன்னேற்றம்(பொருள் உற்பத்தியும் பெருக்கமும்).

பொருளாதாரக் கொள்கை

பொருளாதாரக் கொள்கைகளை இரு வகைகளாக வகுத்து நோக்கலாம்.

1. பொருளாதாரத்தின் முக்கிய வருமான வழிகள்

2. அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய முறைகள்

பொருளாதார முன்னேற்றம்

வளங்களை வளர்க்கும் வழிமுறைகள் என்பது கூர்ந்து நோக்க வேண்டிய ஒரு விசயமாகும். மனிததேவைகளை கருத்திற்கொள்ளாது உற்பத்தியை மட்டும் கருத்திற் கொள்வதால், நாட்டிற்குநாடு இது வேறுபடுகிறது. இஸ்லாமிய நாட்டில் தொழிற் புரட்சியின் வாயிலாக விவசாயஉற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறையினை கண்டறிவதே இதன் முக்கிய நோக்கமாகும்.அதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்திற்கு தொழிற்சாலைகள் முக்கிய பங்காற்றுமாறுசெய்யலாம். இவ்வணுகுமுறையை நான்கு பகுதிகளாக நோக்கலாம்.

1. விவசாயக் கொள்கை

2. இயந்திரமயமாக்கற் கொள்கை

3. திட்டங்களுக்கான மூலதனம்

4. வெளிநாட்டுச் சந்தை உருவாக்கம்

விவசாயக் கொள்கை

இது பண்ணை உற்பத்தி அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். இது பின்வரும்முறைகளை உள்ளடக்கியுள்ளது.

மண்ணின் விளைச்சலை அதிகரித்தல் : இது அதி நவீன இயந்திரங்களையும், இரசாயணபொருட்களையும், உற்பத்தித்திறன் மிக்க விதைகளையும் உபயோகிப்பதன் மூலமாகநடைமுறைப்படுத்தப்படுகிறது. இவற்றை கொள்முதல் செய்யமுடியாத விவசாயிகட்கு மானியங்கள் வழங்குவதையும்(கடன்கள் அல்ல), முடியுமானோரை ஊக்குவிப்பதையும் அரசுமேற்கொள்ளும்.

உற்பத்திக்கான நில அளவை அதிகரித்தல்: நில அளவை அதிகரித்தல் என்பதுவிவசாயிகளிடம் இருக்கும் உற்பத்தி நிலங்களை அதிகரித்தலாகும். இது உலர் நிலங்களைவிவசாயத்திற்கு ஏற்ற முறையில் மாற்றியமைக்க உதவுவதோடு நிலமற்ற சிறிய அளவிலானவிவசாயிகட்கு அரசாங்கத்தின் கைவசம் இருக்கும் நிலங்களை வழங்குவதன் மூலமாகவும்நடைமுறைப்படுத்தப்படுகிறது. விளைநிலத்தை, விளைச்சலின்றி மூன்று ஆண்டுகள்வைத்திருப்பது ஹராம் ஆதலால் அவ்வாறு செய்வோரின் நிலங்களை அபகரித்துவிவசாயத்திற்கு ஈடுபடுத்தப்படும்.

இவ்விரு முறைகளின் மூலமாக விவசாய உற்பத்தியில் முன்னேற்றம் காணப்படுவதோடுவிவசாயக் கொள்கையின் நோக்கம் நிறைவேற்றப்படுகிறது. இக்கொள்கையை அமுல்படுத்தும்நிலையில் வேறு சில விசயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். விளைச்சலைஅதிகரிப்பதோடு அதன் தரத்தையும் அதிகரித்தல் அவசியமாகும். இது நவீனதொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலமாக சாத்தியமடைவதால் இயந்திரத்தொழிற்புரட்சியை ஏற்படுத்துதல் முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகிறது.

ஆகவே விவசாயத் திறனை அதிகரிப்பதில் பின்வரும் நோக்கங்கள் அடிப்படையாகஅமையவேண்டும்.

1. அன்றாடத் தேவை, நீண்ட கோடை, விளைச்சல் சரிவு, வர்த்கத் தடைஎன்பனவற்றை மனதிற்கொண்டு இச்சந்தர்ப்பங்களை முகம் கொடுக்கும் வகையில்உணவு உற்பத்தியில் முன்னேற்றம் காண வேண்டும். இதன் போது விவசாயம் மற்றும்கால்நடை வளர்ப்பு இரண்டிலும் கவனம் செலுத்துதல் அவசியம்.

2. ஆடை அணிகட்கு தேவையான பருத்தி, பட்டு, கம்பளி போன்றமூலப்பொருட்களின் உற்பத்தியல் முன்னேற்றம் காணல். இதன் முக்கிய நோக்கம்வர்த்தகத்தடையின் போது இறக்குமதியினை சார்ந்திராது சுயதேவையினை பூர்த்திசெய்து கொள்வதேயாகும்.

3. வெளிநாட்டு சந்தையில் கிராக்கி நிலவும் பொருள்களின் உற்பத்தியல்முன்னேற்றம். அது ஆடை அணிகலன்களானாலும் சரி அல்லது உணவுப்பொருட்களான பெரித்தம் பழம் போன்றவையானாலும் சரி.

அணைகள் கால்வாய்கள் கிணறுகள் அமைத்தல் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் மிகஅவசியமாயின் முக்கியத்துவம் அளிக்கப்படல் வேண்டும். இதன் நோக்கம்விவசாயப்புரட்சியினை மட்டும் ஏற்படுத்துவதல்ல. மாறாக இயந்திரப் புரட்சியினை,விவசாயத்தை புறக்கணிக்காமல் ஏற்படுத்தி, உற்பத்தியினை அதிகரித்தலாகும். இதன்முக்கிய நோக்கம் பொருள் அபிவிருத்தியினை உண்டாக்குவதே. இது இயந்திரப்புரட்சியன்றி சாத்தியமாகாது.

இன்றைய முஸ்லிம் உலகின் பொருளாதாரம் ஒரு சில தொழிற்சாலைகளுடன்,விவசாயத்தை மட்டுமே முழுமையாக ஒன்றியதாக உள்ளதால் பொருளாதார பின்னடைவுபெற்றதாக காணப்படுகிறது. அதனால் இயந்திரப் புரட்சி ஏற்படுத்த அதிகளவிலான முயற்சிமிக அவசியமாகும். குடியேற்ற சக்திகளின் நோக்கம் ஏனைய நாடுகளை விவசாயத்தில்மட்டும் கவனம் செலுத்தச் செய்து, இயந்திர தொழில் முயற்சிகளை தடைசெய்து,அவ்வியந்திரங்கட்காக மேற்குலகை நம்பியிருக்கவைப்பதாகும்.

ஆகவே விவசாயத்தினைமட்டும் ஊக்குவிக்க முனையும் இவர்களின் திட்டங்களை அலட்சியப்படுத்துதல் மிகஅவசியமாகும். ஷாPஆ முடிவை இவ்விடம் கூறுவது பயனளிக்கும். “சமூகத்திற்குபயன்தரக்கூடிய வீண்விரயமற்ற செயல்திட்டங்கட்கு பொருள் விநியோகிக்க முடியுமானவிடத்துஅதனை மேற்கொள்ளல் கடமையாகும்” அதாவது மூலதனம் இருக்குமாயின் அதனைமேற்கொள்ளல் அவசியமானது. அச்செயல்திட்டம் அதி முக்கியமாக இல்லாவிடில் வரிவிதித்தல் மூலமாகவோ அல்லது தன் நாட்டு மக்களிடையே கடன் வாங்கியோ மேற்கொள்ளக்கூடாது.

இயந்திரமயமாக்கற்கொள்கை

இக்கொள்கையின் முக்கிய நோக்கம் நாட்டை இயந்திரமயமாக்கலாகும். இக்குறிக்கோளைஅடையக்கூடிய முக்கிய வழியானது இயந்திரங்களை உற்பத்தி செய்வதாகும். பின் மற்றையஉற்பத்தித் தொழிற்சாலைகளை மேற்கொள்ளலாம். இவ்விலக்கை அடைய மாற்று வழியேதும்இல்லாததால் இயந்திங்களை வடிவமைக்கும் தொழிற்சாலைகளை நிறுவுவதில்முக்கியத்துவம் அளித்தல் மிக அவசியமானது. இதன் மூலம் உள்நாட்டில் உற்பத்திசெய்யப்பட்ட இயந்திரங்களால் இயங்கும் தொழிற்சாலைகளை அமைக்கும் வாய்ப்புவாய்க்கிறது. ”இயந்திரங்களை உற்பத்தி செய்வதானது அதிக காலம் எடுக்கும் ஒருநடைமுறை ஆதலால் நுகர்வோர் பாவனை பொருள் உற்பத்தியினை மேற்கொள்ளும்தொழிற்சாலைகளை முதலில் அமைத்தல் வேண்டும்”” என்பது அடிப்படையற்ற நாசகாரத்தைநோக்கிய ஒரு கருத்தாகும். இது இஸ்லாமிய நாடுகளை தன் பொருட்களின் சந்தையாகமாற்றுவதற்காக மேற்கத்திய நாடுகளால் திணிக்கப்பட்ட ஒரு கருத்தேயன்றி வேறில்லை.

மேலும் இந்நோக்கை அடைய இயந்திரத் தொழில்நுட்ப அறிவுடைய மனிதவளத்தைமுதலில் உருவாக்க வேண்டும் என்பதும் தவறான கருத்தாகும். மேற்குலகில் அளவிற்குஅதிகமாக காணப்படும் பொறியியலாளர்களையும் தொழில்நுட்ப வல்லுனர்களையும் ஒப்பந்தமுறையில் வேலைக்கு அமர்த்துவதுடன் முஸ்லிம் இளைஞர்களை வெளிநாடுகளில்இத்துறைகளில் கற்கவைக்கலாம். மேலும் கற்றுக் கொண்டிருப்போரையும் உபயோகிக்கலாம்.ஆகையால் சிறு அல்லது நுகர்வோர் பாவனை பொருட் தொழிற்சாலைகளை உருவாக்கமுனைவதன் மூலம் இயந்திரமயமாக்கல் முயற்சி வீணடிக்கப்படக்கூடாது . முதல் படியேஇயந்திரங்களை உற்பத்தி செய்தலாக அமையவேண்டும். இக்கொள்கைக்கானபடிமுறைகளை ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொள்ளப்படாது ஒரே சமயத்தில் மேற்கொள்ளவேண்டும். ஒரு படியினை நிறைவேற்றிய பின்பே மற்ற படியினை ஆரம்பித்தல் என்பதுஇம்முயற்சிக்கு எதிரான ஒரு தடையாகும்.

தற்போதுள்ள நுகர்வோர் பாவனை பொருள் உற்பத்தித் தொழிற்சாலைகளை மேலும்விரிவுபடுததுவதில் கவனத்தை செலுத்துவதை தவிர்த்து இயந்திரமயமாக்கலில் முழுகவனத்தையும் செலுத்துதல் அவசியம். சுய உற்பத்தியை ஆரம்பிக்கும் வரையில்தற்போதுள்ள இறக்குமதி கொள்கையினை, இஸ்லாமிய பொருளாதார கொள்கையை,அமலில் வைக்கலாம். அரசின் கீழுள்ள கனிமப்பொருள் அகழ்வுத்துறையும் இதேநுணுக்கத்தை கையாளலாம். இஸ்லாமிய கொள்கைகளின் பிரகாரம் இத்துறையின்பிரதிநிதியான இஸ்லாமிய அரசு, இத்துறைக்குத் தேவையான உபகரணங்களை சுயஉற்பத்தியில் மேற்கொள்ள முனைய வேண்டும். இந்நிலையினை அடையும் வரைஇறக்குமதியை மேற்கொள்வதோடு தன் கவனத்தை சிதறடிக்காது இயந்திரமயமாக்கலில்முழுதாக செலுத்தவேண்டும்.

திட்டங்களுக்கான மூலதனம்

அரசும், தனியார் துறையும் பொறுப்பேற்க வேண்டிய திட்டங்கள் எவை என இஸ்லாத்தில்தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை முற்றுமுழுதாக தனியார் வசம்செல்வதோடு, மானியம் வழங்கல் கட்டடங்களுக்கான முதலீடு மற்றும் அபிவிருத்தித்திட்டங்கள் ஆகியவற்றில் அரசு பங்கேற்கும். ஆனால் இயந்திரமயமாக்கலில் அரசு மற்றும்தனியார் ஆகிய இரு துறையும் பங்கேற்கும். ஆனால் எண்ணை கனிமப்பொருள் அகழ்வுஎனபன அரசின் கீழ் வருதல் கட்டாயமாகும். ஏனெனில் பூமியினின்றும் கிடைக்கும்கனிமப்பொருட்கள் முஸ்லிம் உம்மாவுக்கு சொந்தமானது. எனவே அதன் பிரதிநிதியானஇஸ்லாமிய அரசே அதனை பேணிப்பாதுகாக்க வேண்டும்.

தனியார் மற்றும் அரசு இரண்டும் திட்டங்களுக்கான மூலதனம் திரட்டல் அவசியம்.தனியார் துறையை பொருத்தமட்டில் இது தனியொருவரோ அல்லது பங்காளர்கள்இணைந்தோ சட்டவிரோதமற்ற, இஸ்லாத்திற்கு எதிரான முறையில் இல்லாமல் அமைத்துக்கொள்ளலாம். அரசினை பொருத்தமட்டில் இதற்காக வெளிநாட்டு உதவிகளை தவிர்த்தல் அவசியம். இது வறுமையையும் வெளிநாட்டினை சார்ந்திருக்கும் நிலையையும்உண்டாக்குகிறது. அதுமட்டுமன்றி வெளிநாட்டு கடன்கள் வட்டியை அடிப்படையாகக்கொண்டதாகும். வட்டி இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டுக் கடன்களைவிலக்குதல் அவசியம். ஆகையால் திட்டங்களுக்கான மூலதனத்திரட்டல், அது அதிமுக்கியத்திட்டமாக இருப்பின், தன் மக்களிடம் வரிவிதித்தல் மூலம் மேற்கொள்ளலாம்.இதன்போது இஸ்லாமிய வரிவிதிப்புக் கொள்கை செயல்படுத்தப்படவேண்டும்.திட்டங்களுக்கான மூலதனத்திரட்டல் தவணை முறையாலும் மேற்கொள்ளப்படலாம்.இதன்போது அதன் கொள்ளளவு விலையிலும் அதிகமாக காணப்படுமாயின் அது வட்டி ரிதியாக அமையாது விலை ரிதியில் அமையுமாயின் மேற்கொள்ளலாம்.

வெளிநாட்டுச்சந்தை உருவாக்கம்

பொருள் சந்தைப்படுத்தலானது வருமானத்தை தரக்கூடிய முக்கிய வழியாகும். பலநாடுகள் தன் பொருட்களுக்கான சந்தை உருவாக்கலில் அன்றுபோல் இன்றும் மும்முறமாகஈடுபட்டுள்ளன. பல பொருளாதார வல்லரசுகள் இதன் மூலம் உருவாகியுள்ளன. ஆகையால்இஸ்லாமிய அரசும் தன் பொருள்களை வெளிநாட்டு சந்தையில் சந்தைப்படுத்தல்முக்கியமாகும். ஆனால் இது ஒரு தனி நோக்கமாக அமையாது. இயந்திரமயமாக்கலுக்குதேவையான பொருள் கொள்முதல், தழும்பலற்ற அன்னியச்செலாவணி திரட்டு, முஸ்லிம்இளைஞர்கட்கு பொறியியல் வைத்தியத் துறைகளில் கல்வி என்பவற்றை கருத்தில் கொண்டுஅமையவேண்டும். வர்த்தகம், இயந்திரமயமாக்கலை நோக்காக கொண்டு அமையவேண்டும்.இதன்போது “வர்த்தகமீதி” யில் கவனம் செலுத்துவது அவசியமற்றது. வர்த்தகமானது,இயந்திரமயமாக்கலுக்கும், இஸ்லாமிய து}து ஏனைய நாடுகளை அடையும் வகையில்இருப்பின், ஏற்றுமதி இறக்குமதியிலும் அதிகமாகவோ, சமமாகவோ அல்லது குறைவாகவோஅமைதலைப்பற்றி சிந்திக்கவேண்டிய அவசியம் கிடையாது. இவ்வர்த்தகக் கொள்கை மற்றஅனைத்து நாடுகளது வர்த்தகக் கொள்கையிலும் வேறுபட்டது. அனைத்து நாடுகளும்பொருட்கள் எங்கு உற்பத்தியாகின்றன என்பதை நோக்குகின்றது. எனினும் நம் கொள்கைவர்த்தகர்கள் எந்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதில் கவனம் செலுத்துகிறது. அதன் மூலமேஇஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ள முடியும். இஸ்லாமிய நாட்டைச் சார்ந்தவர்த்தகர்கள் இஸ்லாமிய ஷாரிஆவால் அனுமதிக்கப்ட்ட வகையில் வர்த்தகம் செய்வர்.வெளிநாட்டவர் தன் சொந்த கொள்கையினை பின்பற்றி வர்த்தகம் செய்வர். இம்முறைஉற்பத்தியை அதிகரிக்க உதவும்.

சுருக்கம்

நாம் இன்று மேலைத்தேய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையால் பலஇன்னல்களுக்கு ஆளாகியுள்ளோம். சுதந்திர வர்த்தக நடைமுறைகள்(“FREE TRADE”), உலகநிதி நிறுவனம்(IMF) பின்பற்றும் கொள்கைகள்(இது அடிப்படை தேவைகளில் நிறைவற்றதன்மையை உருவாக்கும்), இன்றைய இஸ்லாமிய நாடுகளில் சுரண்டல் ஆகியவற்றால்அல்லாஹ் தன் அருளால் வழங்கிய வளம் வீணாகி உபயோகமற்றதாகிவிடுகிறது. தெளிவானஒரு தலைமைத்துவத்தைக் கொண்டுள்ள, குர்ஆன் மற்றும் சுன்னாவினால்அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முறையான கிலாஃபா முறைக்கு திரும்புவதற்கு இதுவே தக்கதருணமாகும்.முஸ்லிம்களின் நோக்கம் அல்லாஹ்(சுபு)வின் மார்கத்தை அமுல்படுத்தி, இதனை முழுமனித சமுதாயத்திற்கும் சென்றடைய செய்வதாகும். இஸ்லாமிய பொருளாதாரகொள்கையானது இயந்திரமயமாக்கல் மூலம் ஒரு வல்லரசாகி தஆவா, ஜிஹாத் மூலம்இஸ்லாத்தை மற்றையோருக்கு சென்றடைய செய்வதுடன் தன் குடிமக்களின் அடிப்படைதேவைகளை பூர்த்தி செய்வதாகும். எனவே அமெரிக்கர், பிரிட்டிஷ் மற்றும் ஏனைய முஸ்லிம்அல்லாதோர்களின் கொள்கைகளை பின்பற்றாது அல்லாஹ்(சுபு)வின் போதனையை ஏற்றுஇக்காபிர்களின் கொள்கையை பின்பற்றும் அதிகாரத்தை மீற்பதன் மூலமே நம் இலக்குகளைநாம் அடையமுடியும்.

மேலும், (நபியே!) அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக நீர்அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றியும் விடாதீர். அன்றியும், உமக்கு அல்லாஹ் இறக்கிவைத்ததில்சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பி விடாதபடியும், நீர் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாகஇருப்பீராக. (உம்முடைய தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விட்டால், அப்போது அல்லாஹ்(சுபு)நாடுவதெல்லாம் அவர்களின் சில பாவங்களின் காரணமாக அவர்களை அவன் (தண்டிக்க) பிடிப்பதைத்தான்என்பதை நீர் அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாவர்.

அறியாமை காலத்துத் தீர்ப்பையா அவர்கள் தேடுகின்றனர். உறுதியாக நம்பிக்கை கொண்ட சமூகத்திற்குத்தீர்ப்பளிப்பதில் அல்லாஹ்வை விடவும் மிக்க அழகானவன் யார்? (5:49,50 )

Related Posts

சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!

சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!

January 25, 2022
காதி நீதிமன்றத்தை ஒழித்து பின்னர் MMDA ஐயும் ஒழிப்பார்கள்!

காதி நீதிமன்றத்தை ஒழித்து பின்னர் MMDA ஐயும் ஒழிப்பார்கள்!

September 21, 2021

ஆப்கானிஸ்தான் உம்மாஹ்வின் ஒற்றுமையின் தொடக்கமாக இருக்க வேண்டும்!

August 17, 2021

முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக போர் செய்யலாமா?

August 8, 2021
Next Post
இன்சுரன்ஸ் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது?

இன்சுரன்ஸ் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

சமீபத்திய இடுகைகள்

  • உசூலுல் ஃபிக்ஹிற்கும், அல் கவாஇத் அல் ஃபிக்ஹிய்யாஹ்வுக்கும் இடையான வேறுபாடு
  • இலங்கையின் பொருளாதார நெருக்கடி முஸ்லிம்களின் கண்களைத் திறக்குமா?
  • தீவிர இந்துத்துவா பாதையிலா திருமலை சண்முகா கல்லூரி?
  • சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!
  • இந்திய முஸ்லிம்களின் ‘இனப்படுகொலை’ ஐ இனி எதிர்பார்க்கலாம் – Dr. Gregory Stanton!

சமீபத்திய கருத்துகள்

  • Face to true on கொரோனா வைரஸ் மரணங்களுக்கு தகனத்தை கட்டாயமாக்கியது இலங்கை!
  • Fareed on கிலாஃபா மட்டுமே மக்கள் நல அரசு!
  • Nizamhm on இலங்கையில் முஸ்லிம் விரோத பிரச்சாரத்திற்கு சீனா தலைமை! தெரண களத்தில்!
  • Abdullah on கொரோனா வைரஸ் மரணங்களுக்கு தகனத்தை கட்டாயமாக்கியது இலங்கை!
  • Admin on இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களும் தகனம் செய்யப்படலாம்!

காப்பகம்

  • June 2022
  • April 2022
  • February 2022
  • January 2022
  • December 2021
  • September 2021
  • August 2021
  • July 2021
  • June 2021
  • April 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020
  • October 2020
  • September 2020
  • August 2020
  • July 2020
  • June 2020
  • May 2020
  • April 2020
  • March 2020
  • February 2020
  • January 2020
  • December 2019
  • October 2019
  • September 2019
  • May 2019
  • April 2019
  • February 2019
  • July 2018
  • May 2018
  • March 2018
  • January 2018
  • December 2017
  • October 2017
  • February 2017
  • January 2017
  • November 2016
  • September 2016
  • August 2016
  • July 2016
  • June 2016
  • May 2016
  • April 2016
  • March 2016
  • February 2016
  • January 2016
  • December 2015
  • November 2015
  • October 2015
  • August 2015
  • March 2015
  • September 2014
  • August 2014
  • July 2014
  • May 2014
  • April 2014
  • March 2014
  • February 2014
  • November 2013
  • October 2013
  • September 2013
  • March 2013
  • February 2013
  • July 2012
  • December 2011

பிரிவுகள்

  • Uncategorized
  • YouTube சேனல்
  • அகீதா
  • அறிக்கைகள்
  • ஆய்வு
  • உசூலுல் பிக்ஹ்
  • எண்ணக்கரு
  • ஒலி
  • ஒளி
  • கட்டுரைகள்
  • கிலாஃபா
  • சிந்தனை
  • செய்திகள்
  • செய்திப்பார்வை
  • தஃவா
  • நடப்பு விவகாரம்
  • நிகழ்வுகள்
  • பிக்ஹ்
  • பிரசுரங்கள்
  • பொருளாதாரம்
  • யதார்த்தம் எது ?
  • வரலாறு
  • வலையொலி

சமீபத்திய இடுகைகள்

  • உசூலுல் ஃபிக்ஹிற்கும், அல் கவாஇத் அல் ஃபிக்ஹிய்யாஹ்வுக்கும் இடையான வேறுபாடு
  • இலங்கையின் பொருளாதார நெருக்கடி முஸ்லிம்களின் கண்களைத் திறக்குமா?
  • தீவிர இந்துத்துவா பாதையிலா திருமலை சண்முகா கல்லூரி?
  • சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!
  • இந்திய முஸ்லிம்களின் ‘இனப்படுகொலை’ ஐ இனி எதிர்பார்க்கலாம் – Dr. Gregory Stanton!

பிரிவுகள்

Uncategorized YouTube சேனல் அகீதா அறிக்கைகள் ஆய்வு உசூலுல் பிக்ஹ் எண்ணக்கரு ஒலி ஒளி கட்டுரைகள் கிலாஃபா சிந்தனை செய்திகள் செய்திப்பார்வை தஃவா நடப்பு விவகாரம் நிகழ்வுகள் பிக்ஹ் பிரசுரங்கள் பொருளாதாரம் மல்டி மீடியா யதார்த்தம் எது ? வரலாறு வலையொலி
No Result
View All Result
  • நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்

© 2020 www.darulaman.net