“மேற்கத்திய மேலாதிக்கத்திற்கு உண்மையான சவாலாக விளங்குவது இஸ்லாம்தான்…. ரஷ்யா அல்ல…” இவ்வாறு ஒபாமா தன்னுடைய கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ….
“ரஷ்யா முன்பு சோவியத் யூனியனாக இருந்தபோது தலைமை ஏற்று நடத்தியது போன்று தற்போது எந்த நாடுகளின் கூட்டமைப்பையும் தலைமை ஏற்று நடத்தவில்லை; மேலும் அது தற்போது சர்வதேச சித்தாந்தத்தையும் கொண்டிருக்கவில்லை”
விளக்கம்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஜனநாயக சித்தாந்தத்தை சோதிக்கும் வகையில் அமைந்துள்ள சமீபத்திய சவாலாக உக்ரைனில் ரஷ்யாவின் தலையீட்டிற்கு எதிராக சர்வதேச நாடுகளின் முயற்சிகள் குறித்து சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா இவ்வாறு தெரிவித்தார். ரஷ்ய அதிபர் புடினிற்கு பிராந்திய நிலைப்பாட்டை மாற்றும் தகுதி இருப்பதாக ஒபாமா உணர்ந்திருந்தாலும், ரஷ்யா தனது கம்யுனிச சித்தாந்தத்தின் வீழ்ச்சிக்கு பிறகு உலக நிலையை மாற்றும் நிலையில் எவ்வகையிலும் இல்லை என்பதை உணர்ந்துள்ளார்.
“Ideology knows the answer before the question has been asked – கேள்வி கேட்கப்படும் முன்பே அதற்கான பதிலை சித்தாந்தம் அறிந்திருக்கும்.” என்ற ஜார்ஜ் பேக்கரின் கூற்று நினைவுக்கு வருகிறது.
சித்த்தாந்தம் ஒருவருடைய இலக்கு, எதிர்பார்ப்பு மற்றும் செயல்களை உருவாக்கும் . அது உலக கண்ணோட்டத்தை பார்க்கக் கூடிய விஷயமாகவும் அல்லது ஒரு முழுமையான பார்வையை கொண்டதாகவும்ம், சமூகத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து மக்களில், சில ஆதிக்கமுடைய வர்க்கத்தினர் முன் வைக்கும் எண்ணங்களின் தொகுப்பாகவும் இருக்கும். உலக கண்ணோட்டம் மக்களின் பொது காரியங்களில் நடைமுறை படுத்தப்படும்; ஆகவே அரசியலில் மையக்கருவாக சித்தாந்தம் விளங்குகிறது.
இரண்டாம் உலகப்போருக்கு பின்பு ஜப்பானில் ஏற்பட்ட பொருளாதார அதிசயமானது, ஜப்பான் மேற்கத்திய குழுவுடன் இணைந்து முதலாளித்துவ கொள்கைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து அரசின் பொருளாதாரத்தில் தலையிட்டதே முதன்மையான காரணமாகும். நாடுகளுக்கிடையே தொடர்பு எவ்வாறிருக்க வேண்டும் என்பதையும் அதன் சொத்துக்களை எவ்வாறு நிர்மாணம் செய்ய வேண்டும் என்பதையும் அந்த நாடுகள் பின்பற்றும் சித்தாந்தங்கள் தீர்மானிப்பதால், வேறுபட்ட சித்தாந்தங்களுக்கிடையே அதற்கான ஆதாயங்களை அடையக்கூடிய விஷயத்தில் முரண்பாடு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.
நிரப்பப்பட்ட துப்பாக்கி
பனிப்போர் உச்சகட்ட நிலையில் இருந்த காலகட்டத்தில் ஐக்கிய சோவியத் நாடுகள் ஒன்றாக இருந்தது.கம்யூனிசம் மற்றும் முதலாளித்த்துவ சித்தாந்தங்களுக்கிடையில் நிறைய வேற்றுமைகள் இருந்து இருவேறு துருவங்களாக செயல்பட்ட காரணத்தால் அக்காலத்தில் மக்கள் அவர்களுக்கு எந்த சித்தாந்தம் வேண்டும் என்பதை(பெயரளவிலாவது) தேர்வு செய்ய முடிந்தது. கம்யூனிச சித்தாந்தத்தை உடைய நாடுகளை சோவியத் யூனியன் தலைமை தாங்கி உலகளாவிய அச்சுறுத்தலாக விளங்கியது.எனவே காலங்காலமாக அதிகாரத்தை கொண்டிருந்த ஐரோப்பிய சக்திகளும் புதிதாக சக்தி வாய்ந்ததாக வளர்ந்து வந்த அமெரிக்காவும் தங்களுடைய முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு போட்டியாக கம்யூனிசத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளானது. அதாவது மேற்கத்திய முதலாளித்துவம் தனது வாடிக்கையாளரை வென்றெடுக்க வேண்டியிருந்தது, அதற்காக ஊக்கத்தொகை அளிக்க வேண்டியிருந்தது.அதற்கு ஒரு தரமான பொருள் தேவைப்பட்டது. ஜான் மேனார்ட் கேய்ன்ஸ்(கேய்னீஸியேனிஸம்) என்பவரின் கலப்பு பொருளாதார (Hybrid Economics) முறை கம்யூனிசத்துடன் போட்டியிட முதலாளித்துவத்தின் தேவையால் உருவானது. ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் தலைமையின் கீழ் அமெரிக்கா தான் சந்திக்கும் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் சீர்படுத்தப்படாத தாராள பொருளாதார சந்தையின் காரணமாக மிகவும் பாதிப்பிற்குள்ளான தனது குடிமக்கள் தங்களுக்கு அரசியல், பொருளாதார மற்றும் சமூக அமைப்பில் மாற்றம் தேவை என கோரி எழுந்த ஒரு வலுவான போராட்டத்தை தடுக்க சில உள்நாட்டு தொடர் திட்டங்களை கொண்டு வந்தார். அந்நேரத்தில் சிலர் முற்றிலும் மாறுபட்ட அடிப்படைக்காக 1932 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் 10 லட்சம் அமெரிக்கர்கள் சோசலிச அல்லது கம்யூனிச வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர்.
இதனடிப்படையில் அமெரிக்க தொழிலதிபர்கள் மனவெறுப்புடன் ரூஸ்வெல்ட்டின் இந்த புதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். முதலாளித்துவத்தின் எதிர்காலம் கேள்விக்குறியானதால் யாரும் பட்டினிக்கு ஆளாகாதவாறு பொதுத்துறையில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி சந்தையை சற்று மிருதுவாக ஆக்கும் நிலை தேவைப்பட்டது. பனிப்போரின் காலத்தில் எவ்வொரு நாடும் இந்த அழுத்தமான நிலையிலிருந்து தடுத்து கொள்ளும் நிலையில் இல்லை. உண்மையில், மத்திய நூற்றாண்டில் முதலாளித்துவம் அமெரிக்காவில் அடைந்த சாதனைகளான- தொழிலாளர் பாதுகாப்பு, ஓய்வூதியம், பொது மருத்துவம் மற்றும் ஏழைகளுக்கான அரசு உதவிகள் – இவையனைத்தும் பலம் வாய்ந்த இடதுசாரிகளிடமிருந்து சலுகையாக பெறும் நடைமுறையில் சாத்தியப்படும் வகையில் நிலவிய சூழ்நிலையில் பெறப்பட்டதாகும். புகழ்பெற்ற “History of the Marshall Plan” ன் ஆசிரியர் கேரொலின் ஈசன்பெர்க் குறிப்பிடுகையில் இந்த அணுகுமுறை பொதுநல பண்பினால் உருவாகவில்லை, ” சோவியத் யூனியன் ஒரு நிரப்பப்பட்ட துப்பாக்கியாகும்” சோவியத் ரஷ்யா மற்றும் கம்யூனிச சித்தாந்தம் இறுதியாக 1991-ல் தாராளமயமாக்கத்திடம் வீழ்ந்ததன் பின்பு, உலகம் வேறொரு இடமாக மாறியது – தாராளமயமான சந்தை தற்போது உலக ஏகாதிபத்தியமாக மாறியுள்ளது.
ஒருதலைப்பட்சமான உலகமும் “வரலாற்றின்முடிவும்“
1989 ஆம் ஆண்டு கோடையில்” The National Interest “எனும் பத்திரிகை அதிரடியான கொட்டை எழுத்துக்களில் “The End of History?” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது, கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நடைபெற்ற சித்தாந்தத்தின் போரானது முடிவுக்கு வந்தது. மேலும் மேற்கத்திய தாராளமயமான ஜனநாயகம் வெற்றி பெற்றது என அதன் ஆசிரியரும் அரசியல் அறிஞருமான ஃப்ரான்சிஸ் ஃபுகுயோமா அறிவித்தார். சோவியத் யூனியன் முழுவதிலும் ஏற்பட்ட கம்யூனிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இந்த கட்டுரையை உண்மைப்படுத்தியது. பன்முனை ராணுவ நிலையிலிருந்து(1815-1945) உலகம் இருமுனை நிலைக்கு(1945-1989) மாறி தற்போது ஒருமுனை நிலையுடைய சூழலுக்கு மாறியுள்ளது. ஃபுகுயோமா அரசியல் அறிவியலில் எதிர்பாராத நட்சத்திரமாக உருவானார். அவர் ஜான் க்ரேயினால் “உலக முதலாளித்துவத்தின் ராஜ தத்துவ ஞானியாக போற்றப்பட்டார்”. அவருடைய புத்தகமான “The End of History? and The Last Man” வெளியாகிய மூன்றாண்டுகளுக்கு பின் அத்தலைப்பில் உள்ள கேள்விக்குறி காணாமல் போனது.
ஃபுகுயோமா நடப்புகளை பற்றி பேசாமல் சிந்தனைகளைப் பற்றி பேசினார். மேற்கத்திய தாராளமய ஜனநாயகத்தின் சமமான சுதந்திரம் மற்றும் அனைவரும் சமம் என்னும் விஷயத்தை நோக்கி முயற்சிகள் மேற்கொண்டதன் காரணத்தால் இதை யாரும் மிஞ்ச முடியாது எனவும் அதை கடைபிடிப்பதால் உலக நடப்புகளில் ஒரு பொதுவான அமைதி ஏற்படும் எனவும் நீண்ட காலத்திற்கு எடுத்து கொள்வோமேயானால் இது தான் நாட்டிலிருந்தும் ஒரே நம்பகத்தன்மையுடையதாக இருக்கும் என அவர் நம்பினார். அவர் எழுதிய “நாம் இப்போது கண்டுகொண்டிருப்பது”, என்பது “பனிப்போரின் மடிவு மட்டுமல்ல; அல்லது பிந்தைய போர்க்கால வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலம் கடந்து செல்வது போலல்லாமல், மாறாக இது வரலாற்றின் முடிவு ஆகும்: அதாவது, மனிதனின் சித்தாந்தத்தின் பரிணாம வளர்ச்சியின் முடிவாகவும் மேற்கத்திய சுதந்திர ஜனநாயகமே மனித அரசமைப்பில் இறுதி வடிவாக உலகமயமாக்கப்படுத்துதலே ஆகும்.
ஆகவே, சில இடங்களில் துடைத்தெறிவதற்கான சண்டைகள் நடந்தாலும் – சில தேசியவாத எழுச்சிகள் நிகழ்ந்தாலும், சில கம்யூனிச நாடுகள் சிதறாமல் இருந்தாலும்( வட கொரியா அல்லது கியூபா) மற்றும் சில பிரிவினைவாத அரசுகள் (ஈரான்) நிலை கொண்டிருந்தாலும் சந்தைகளும், தனிநபர் உரிமைகளும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும் மக்கள் தவிர்க்க முடியாமல் ஏற்றுக்கொள்ளும் பாதையாக விளங்கியது. இதன் விளைவாக மேற்குலகம் ரஷ்யா தனக்கு போட்டியாக காட்டிக்கொள்வதை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளுக்கும் அறிவார்ந்த தலைமையை தாங்கி நின்றது. சோவியத்தின் காலத்தில் தனது சித்தாந்தத்தை ரஷ்யா பகிரங்கமாக நெடுதூரம் விரிவான பரப்பளவில் பிரச்சாரம் மேற்கொண்டதை போன்று வாழ்விற்கான ஒரு முழுமையான வழியாக வழங்க ரஷ்யாவால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தியத்திற்கு சவால் விடும் வகையில் அல்லது அதை உள்நாட்டு அளவில் பிரச்சினை கொடுக்க முடியாமல் போனது.
பந்தயபோக்கு மாற்றம்
நெடுங்காலமாக ஃபுகயாமாவின் வாதங்கள் இடது சாரிகளின் எதிர்ப்புகளால் மௌனியாக முடிந்தது. நவீன சுதந்திரமயமாக்கல் ஏகாதிபத்தியமாக இருந்தது. 2008 ம் ஆண்டின் வங்கிகளை மீட்டெடுக்கப்பட்டதற்கு தாமதமாக எழுந்த எதிர்ப்புகளால் கடந்த மூன்றாடுகளில் அதற்கு விரிசல் ஏற்பட தொடங்கியது. உலகளாவிய ஆக்கிரமிப்பு போராட்டங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பல இடதுசாரி ஆய்வாளர்களை – பிரான்சின் தத்துவஞானி ஆலன் பேடியோ தனது The Rebirth of History மற்றும் Selma Milne ஆகிய தனது கட்டுரைகளில் – வரலாறு தனது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளதா என வியக்க வைக்கிறது, “என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது?” என்று கேட்கிறார். “அந்த தளர்ந்து போன உலகத்தின் விலையின், தொடர்ச்சியா? தனது வெற்றிகரமான விரிவாக்குவதன் மூலம் ஏற்பட்ட உலகின்ஒரு சுகந்தரும் பிரச்சினையா? அவ்வுலகின் முடிவா? ஒரு மாற்றமான உலக உருவாக்கலின் ஆரம்பமா? அவர் இந்த 2011 ஆண்டின் எழுச்சிகளை ஒரு புதிய அரசியல் முறையை ஏற்படுத்தும் நிலையுடைய முக்கியமான நிகழ்வுகளாக கருதுகிறார். அதேபோல் மில்னேவைப் பொறுத்தவரை அமெரிக்காவினால் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதில் அடைந்த தோல்வியினாலும் பொருளாதார வீழ்ச்சியும் “ஒருமுனை கொண்ட நிலை கடந்து போகும் காலம்”என்னும் நிலையை வெளிப்படுத்துகிறது.
அக்கட்டுரை வெளிவந்து 25 வருடங்கள் கழித்து மற்றும் செப்டம்பர் 11(அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்) நிகழ்ந்து பதிமூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், ஃபுகுயாமாவின் கணிப்பை மறுபடியும் உற்று நோக்கும் காலம் வந்துள்ளது. “இந்நவீன காலத்தில் தாராளமயத்திற்கும் கம்யூனிசத்திற்கும் மாற்றமான ஒரு ஆளுமையுடைய ஓர் அரசியல் மாற்றத்தை இஸ்லாம் மட்டுமே வழங்குகிறது”. க்ரிமியாவை ரஷ்யா தன்னுடன் சேர்த்து கொண்டதை அடுத்து அது உக்ரைனின் மீது படையெடுப்பு நடத்துமோ என்ற பலரது அச்சம் மற்றும் இப்பிரச்சினை உருவானதை அடுத்து உலகளாவிய கவனத்தை தன் பக்கம் திருப்பிக்கொண்டது- இருந்தாலும் அரசியல் ஆய்வாளர்கள சிரியாவில் வெளிவரும் நிகழ்வுகள் பக்கம் தங்களது கவனங்களை வைத்த வண்ணம் இருக்கின்றனர். “The catastrophe now taking place in and Syria”என்ற கார்டியன் பத்திரிகையின் வெளியுறவு கட்டுரையாளர் தனது சமீபத்திய கட்டுரையில் சுட்டிக்காட்டிய “இப்போதைய பேரழிவானது சிரியா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்பதே அடிப்படையிலான ஒரு சவாலாகவும் மற்றும் தற்போதைய உலக நிலைக்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதாகவும் எழுதியுள்ளார், இதற்கான மூலகாரணமாக ஜிஹாதிய போராளிகள் “மேற்கத்திய மதிப்பு மற்றும் ஈடுபாடுகளுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிப்பதில் ஒற்றுமையாக உள்ளனர்.” முஸ்லிம் உலகம் மற்றும் அதனைத்தாண்டி ஏற்படும் விளைவுகளை பற்றி கூறுவதற்கு முன் அவர் ” உக்ரைனை மறந்து விடுங்கள், சிரியா தற்போதைய உலகத்தின் மிகபெரிய அச்சுறுத்தலாக உள்ளது” என குறிப்பிடுகிறார்.
என்வே ஒரு முழுமையான சித்தாந்தத்தையும் அதை எடுத்துரைக்கும் தூதுவர்களை கொண்ட இஸ்லாம் வெற்றி கொள்வது உண்மையான சவாலாக விளங்குகிறது. கம்யூனிசத்தின் சிவப்பு அச்சுறுத்தல் மற்றும் அடிப்படைவாத இடதுசாரிகளின் பயம் தற்போது இஸ்லாம் மற்றும் ஷரீ’ஆவின் பசுமை அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஒரு கொடுங்கோல் அரசுக்கு எதிராக நடைபெறும் ஆயுதப்போராட்டத்தை தற்போது வேறு வகையான கண்ணாடி மூலம் இஸ்லாத்தின் மீது நாட்டம் கொண்டிருக்கும் போராட்டமாக காணப்படுவது கண்கூடாக தெரிகின்றது. சிரிய போராட்டத்திற்கு மேற்குலக முஸ்லிம்களிடையே ஆதரவு கிடைத்தி ருப்பதால் பண்டைய கால அமெரிக்க மெகாத்தீயத்தில்(McCarthyism) கடைபிடிக்கப்பட்டது போன்று முஸ்லிம்கள் பல நியாயமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணை யுத்திகளுக்கு எதிர்கொள்ள நேரிட்டது; அதாவது அப்போது ஆயிரக்கணக்கான அமெரிக்க குடிமக்கள் கம்யூனிஸ்டுகள் எனவும் கம்யூனிசத்தை ஆதரிப்பவர்கள் எனவும் குற்றம் சாட்டப்பட்டு அரசு அல்லது தனியார் நிறுவன குழு, கமிட்டி மற்றும் ஏஜென்சிகளால் கொடூரமான விசாரணை மற்றும் கேள்விகளுக்கு உட்படும் மக்களாக ஆளானார்கள்.
உஸ்மானிய கிலாஃபா வீழ்த்தப்பட்டதற்கு பின்னர் இஸ்லாமிய சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வதற்கு இயலாமல் போனதால் உலக சூழ்நிலையில் தாக்கத்தை ஏற்படுத்த இயலாத நிலைக்கு முஸ்லிம்கள் ஆளாயினர். இதன் அடிப்படையில் புரூஸல்ஸில் மேற்கின் ஆதரவு தாங்கி வந்த கோரிக்கைகள் சிரிய முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட்டது கருத்தியல் மாற்றத்திற்கான அறிகுறிகள் என சுட்டிக்காட்டுகிறது. ஏற்கனவே இருநூறு கோடி மக்களில் இஸ்லாமிய கொள்கை ஊடுருவியுள்ளது- சட்டங்கள் மற்றும் அமைப்புகளை உருவகப்படுத்தி அதை மறுபடியும் செயல்படுத்தும் எண்ணத்தை கொண்டுள்ளனர், அது இப்போது நிலவிவரும் சிலர் மட்டுமே அனுபவிக்கும் வகையில் உள்ள மக்களே செயல்பாடுகளை மாற்றி அமைத்துக்கொள்ளும் நிலைக்கு மாற்றமான ஒரு வரையறையை கொண்டிருக்கும் அது இப்போதுள்ள நிலையை தங்களுக்கு சாதகமாக ஆக்கி சுகம் அனுபவித்து வருபவர்களால் தாங்கிக்கொள்ள முடியாதவாறு இருக்கும்.
மீண்டும் நாகரிகங்களின் மோதல்
“The Clash of Civilisations” என்ற நூலின் ஆசிரியர் சாமுவேல் ஹண்டிங்டன் வருங்காலத்தில் உலக அரசியலின் அச்சாணி மேற்கு மற்றும் மேற்கு அல்லாத நாகரீகத்திற்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை ஒட்டியே அமைந்திருக்கும் என அறிவுறுத்தினார். அவர் மேற்கத்திய நாடுகள் அல்லாத நாகரீகங்கள் மேற்கின் பொதுவான நடவடிக்கைகளாக தாராளமய விழுமியங்களை ஓங்கி ஒலித்த வண்ணமும் அதனை ஏற்றக்கொள்ள வைக்க அரும்பாடுபடும் விதமாகவும் இருக்கும் என்பதை முன்வைத்தார். தங்களுடைய சொந்த விழுமியங்களை பாதுகாத்துக் கொள்ள நாட்டம் கொள்பவர்கள் அதற்காக அவர்கள் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகமானதாக இருக்கும் எனவும் அதை வெகுசில நாடுகள் மட்டுமே செய்ய முடியும் என அவர் வாதிட்டார். சிரிய முஸ்லிம்கள் ஏற்கெனவே மிக அதிக விலையை கொடுத்துள்ளனர் இந்த போராட்டம் குறைவதற்கான அறிகுறிகள் தென்படாதது மேற்கிற்கு மிகவும் கவலை அளிக்க கூடிய விஷயமாக உள்ளது.
இறுதியாக இப்போது நடைபெற்று வரும் க்ரீமியாவின் போராட்டம் மேற்கத்திய முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு சவால் விடக்கூடியதாக இல்லை. மாறாக முஸ்லிம் உலகின் இஸ்லாமிய நாட்டமானது சமூகத்திற்கு ஒரு மாற்று கண்ணோட்டத்தை முன்னிறுத்துகிறது. ஸைக்ஸ்-பைகாட் ஒப்பந்தத்தின் (Sykes-Picot agreement)மூலம் ஏற்படுத்தப்பட்ட செயற்கை எல்லைகளை களைந்தெறிவது, மேற்கின் நலன்களை அல்லாமல் முஸ்லிம்களின் நலன்களை மட்டுமே தங்களின் விருப்பமாக கொண்டுள்ள தலைமைத்துவம், நெறிமுறை, அரசியல் மற்றும் பொருளாதாரங்களை செயல்படுத்த ஓரு மாறுபட்ட சித்தாந்தம்;இதுவே நாகரீகங்ளுக்கு மத்தியில் போராட்டம் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகும். மேலும் இது தற்போது நிலவிவரும் முதலாளித்துவத்தின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக நிலைக்கு ஆபத்தை விளைவிக்கும் வண்ணம் இருக்கிறது.
இந்த மாறுபட்ட நாகரீகம் 200 கோடி முஸ்லிம்களை ஒரு அரசின் கீழ் கொண்டுவரும் தலைமைத்துவத்தை அஃதாவது கிலாபத்தை மட்டும் நாடாது; மாறாக அதன் பின் இந்த அறிவார்ந்த தலைமைத்துவத்தை உலகெங்கும் கொண்டு செல்வதற்காகவே நாடுகிறது.
“இஸ்லாத்தின் சக்கரமானது சுழன்று கொண்டிருக்கிறது, ஆகவே அது எங்கெல்லாம் சுழல்கிறதோ அதனுடன் சுழன்று கொள்ளுங்கள்.” [தப்ரானி]