1.சிரியாவில் நடக்கும் புரட்சியானது இரு பிரிவினருக்கிடையே உள்ள வேறுபாட்டை மையமாகக்கொண்ட உள்நாட்டுப் போர்
சிரிய புரட்சியானது சில ஆட்சியாளர்களை பதவியிலிருந்து வெளியேற்றிய அரபுலக புரட்சியின் தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகிறது. எனவே அரபுலகில் நடைபெற்ற புரட்சி சிரியாவை வந்தடைவது கடினமான செயலாகாது. மார்ச் 2011- ஆம் ஆண்டு சிரியாவின் செயலாக்க அமைப்பில்(system) மாற்றம் வேண்டும் என்பதாக சில மாணவர்கள் ஒன்றுசேர்ந்து சிரியாவின் தெற்கிலுள்ள டேராவில் ஒரு வரைவு ஓலை எழுதினார்கள். மற்ற அரபு மன்னர்கள் புரட்சியினால் கவிழ்ந்த காரணத்தால், சிரிய அரசு கலக்கமடைந்து தீவிரமாக போராட்டம் நடைபெற்ற இடங்களுக்கு சென்று அங்கிருந்த மாணவர்களையும் பொதுமக்களையும் கைது செய்து வாரக்கணக்கில் சித்திரவதை செய்தது. இதன் விளைவாக மக்கள் தனித்தனியே போராட ஆரம்பித்து நாளைடைவில் இது நாடு தழுவிய போராட்டமாக மாறியது.மக்கள் கூட்டமாக போராடிய இடங்களுக்கு சென்று, போராட்டத்தை ஒடுக்க சிரிய அரசு தனது பாதுகாப்பு படையினர் மூலம் அவர்களை நோக்கி மிக மூர்க்கத்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டத்தின் மையப் பகுதியை தாக்கியும் பதிலடி கொடுத்தது.மார்ச் 2011-ல் சிரிய மக்கள் இதுவரை அடக்குமுறை ஆட்சியாளர்களின் கீழ் வாழ்ந்தது போதும் என்ற தங்களின் நிலையை அரசுக்கு தெளிவாக உணர்த்தினார்கள். நாடெங்கும் மக்கள் ஆயுதம் தாங்கி போராடிக்கொண்டிருக்கவே, அவர்களை அரசு அநியாயமாக கொன்று குவிப்பது தொடர்ந்து வந்தது. பின்அலி, முபாரக், கடாஃபி ஆகியோருக்கு ஏற்பட்ட கதி தனக்கும் ஏற்படலாம் என்பதை பஷாருல் அஸாத் உணர்ந்து பெரிய அளவில் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு தனக்கு ஏற்படும் எதிர்ப்பினை அடக்கிட கட்டளையிட்டான்.
எனவே சிரியாவில் நடந்துவரும் போர் முஸ்லிம் பிரிவினருக்கிடையே(ஸுன்னி – அலவி ஷியா) நடந்து வருகிறது என்ற எண்ணம் தவறானது. ஆரம்பம் முதலே சிரிய புரட்சியானது மதத்தை வாழ்விலிருந்து பிரித்து அடக்குமுறை ஆட்சி செய்து வரும் அரபு தேசியவாத பாத்திய(Ba’athist) சிந்தனை கொண்ட அரசுக்கு எதிராகவே துவங்கியது.அங்குள்ள ஆட்சியாளரும், ஆட்சிப்பொறுப்புகளில் அதிகமாக உள்ளவர்களும் அலவி ஷியா சமூகத்தினராக இருப்பதால்தான் இந்த எண்ணம் சிலருக்கு ஏற்படுகின்றது. பஷாருல் அஸாத்தின் அரசு, இந்த அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக நடைபெறும் புரட்சியை பிரிவினைவாத முலாம் பூசி உலகிற்கு சித்தரிக்கின்றது.முதன்முதலில் இந்த புரட்சிக்கு பிரிவினைவாத தன்மையுடைய புரட்சி என்று பஷாருல் அஸாத் அறிவித்தான். இந்த கூற்றானது முதலில் இந்த வெகுஜன மக்களின் புரட்சியை எதிர்கொள்ளாமல் இரு பிரிவினருக்கிடையே நடைபெறும் உள்நாட்டு கலகமாக சித்தரிக்க அரசு எடுத்த முயற்சியின் ஒருபகுதியாகும்.ஆரம்பத்திலிருந்த நிலையற்ற தன்மையால் பலர் தன்னிச்சையாக பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டனர். சிரிய அரசு இந்த புரட்சியை பிரிவினைவாத முலாம்பூசி மக்களிடையே அறிமுகப்படுத்தியதன் விளைவாக இந்நிலை உருவானது. ஷியா எதிர்ப்பு கொள்கையுடைய இனப்பிரிவினை உணர்வை கிளர்ந்தெழச் செய்யும் இதுபோன்ற பேச்சு சவுதியிலிருந்து வெளியானதும் மற்றொரு காரணமாகும். இந்த புரட்சியானது அலவி அல்லது ஷியா பிரிவினர் ஆட்சி செய்வதனால் தோன்றிய புரட்சி அல்ல.வாழ்வியலிலிருந்து மதத்தை பிரித்து மதச்சார்பற்ற ஆட்சி செய்துவரும் கொடுங்கோலனுக்கு எதிராக தோன்றிய மக்களின் அதிருப்தியாலும், கோபத்தினாலும் ஏற்பட்ட புரட்சி என்பதே மாபெரும் உண்மையாகும்.
2.மேற்குலகு பஷாருல் அஸாதிற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் சிரிய மக்களுக்கு உதவி புரிகின்றது
அமெரிக்கா, பிரான்ஸ்,பிரிட்டன் போன்ற நாடுகள் சிரிய மக்களுக்காக உதவி செய்வதாக கூறுவது வெறும் பேச்சலங்காரமாகும் மேற்குலகத்தின் செயல்களனைத்தும் அவர்களின் பேச்சிற்கு மாற்றமாகவே அமைந்துள்ளது.பிரிட்டனும் அமெரிக்காவும் புரட்சியின் ஆரம்பத்திலேயே பஷாருல் அஸாத் ஒரு சீர்திருத்தவாதியென்றும் அவருக்கு அங்கீகாரம் தரவேண்டுமென்றும் வில்லியம் ஹேக் மற்றும் ஹிலாரி கிளிண்டன் மூலமாக சொல்லி தங்களின் நிலைப்பாடை தெளிவுபடுத்தியது.புரட்சி நாடெங்கும் பரவி வன்முறையாக மாறியதும் அமெரிக்கா சில குறிப்பிட்ட எதிர்ப்பு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக சிரியன் நேஷனல் கவுன்சில் வடிவம் பெற்றது.உலகெங்கிலுமுள்ள சிரியன் நேஷனல் கவுன்சில் குழுவினர் அங்கு வசிக்காவிட்டாலும் குறுகிய காலத்தில் இது அதிகாரப்பூர்வ எதிரணியாக மாறியது. மேற்குலகும் இந்த குழுவை மட்டுமே ஆதரித்தது.ஏனென்றால் எக்காரணத்தை கொண்டும் இஸ்லாமிய சிந்தனையுடைய மக்கள் சிரியாவில் எந்த செல்வாக்கும் பெற்றுவிடக்கூடாது என்பதே அதன் நோக்கமாகும்.இதை ‘நியூயார்க் டைம்ஸ்’ என்றபத்திரிக்கை ஊர்ஜிதப்படுத்தியது.
“பஷாருல் அஸாதிற்கு எதிராக போராடும் ஜபத்துன்னுஸ்ரா போன்ற அடிப்படைவாதிகள், ஹிஸ்புல்லா லெபனானில் செய்ததை போன்று சிரியாவின் பகுதிகளை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து மக்களுக்கு சேவை புரிவார்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் அதிக அச்சம் கொண்டுள்ளார்கள்.”
முன்னாள் பாதுகாப்பு உளவுத்துறையின் அதிகாரி ஜெப்ரி வைட் கூறியதாவது:-
”அமெரிக்க அரசு எதையும் ஆரம்பிக்கவில்லையென்றால் இந்த போர் விரைவில் முடிவடையும். மேலும் களத்தில் போராடும் வீரர்களிடையே அமெரிக்காவிற்கு எந்த செல்வாக்கும் இருக்காது என்பதை நன்கு விளங்கினர்.அவர்களுக்கு சில அரசியல் குழுவிடமோ அல்லது சில தரப்பிடமோ வேண்டுமானால் செல்வாக்கு இருக்கலாம்.ஆனால் அவர்களால் களத்தில் ஈடுபடும் போராளிகளுக்கிடையில் செல்வாக்கு பெறுவது என்பது கடினமான காரியமாகும்.இந்த போராளிகள்தான் இந்த பகுதியை கட்டுப்படுத்துவார்கள்.”
இதை மேலும் ஊர்ஜிதப்படுத்தும் விதமாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ கூறியதாவது:- ”ஆரம்பத்தில் போர் தளவாடங்களை தேசியவாத, மதச்சார்பற்ற குழுவிற்கு தாங்கள் விநியோகித்ததாக நம்பியது தவறாகி, அது ஜிஹாத் குழுவினரின் கைகளுக்கு பாதை மாறி சென்ற செய்தி மேற்குலகு மற்றும் பிராந்திய சக்திகளுக்கு ஒரு பேரிடியாக விழுந்தது.” இவையனைத்தும் தங்களின் குறிக்கோளை அடைய குறிப்பிட்ட குழுவினை மற்ற அனைத்து குழுவினரை விடவும் மேலோங்க வைத்து அதன்மூலம் தாங்கள் வெற்றி பெற அமெரிக்கா மற்றும் மேற்குலகு நாடியதை தெளிவாக குறிக்கின்றது.
3.சிரிய மக்கள் மேற்குலக ஜனநாயகத்திற்கு மாறிவிட விரும்பியபோதிலும், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்த புரட்சியை தங்கள் வசமாக்கிக் கொண்டனர்
சிரியாவிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களோ இதற்கு நேர்மாறாக அமைந்திருக்கிறது. அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வரும் குழுக்கள்தான் இது போன்ற கருத்துககளை பரப்பிவிடுகின்றனர்.ஆனால் களத்தில் ஈடுபட்டுவரும் போராளிகள் மற்றும் அறிவு ஜீவிகள் இஸ்லாமிய ஆட்சியே வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளனர். IHS Jane என்னும் பாதுகாப்பு நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவு தெரிவிப்பது யாதெனில்;
“ஆயிரம் பிரிகேடியர்களுடன் ஒன்றினைக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் அடிப்படைவாதிகள் அங்குள்ளனர்.ஒரு சில போராளி குழுக்கள் மட்டும் தங்களை மதச்சார்பற்ற மற்றும் தேசியவாதக் குழுக்களாக காட்டி கொள்கின்றனர்.”
2013-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அல்ஜஸீரா தொலைக்காட்சி பஷாருல் அஸாதிற்கு எதிராக போராடும் குழுக்களின் முக்கிய தலைவர்களின் தொடர் பேட்டியை ஒளிபரப்பு செய்தது. மொத்தம் ஆறு பேட்டிகளை அந்நிறுவனம் ஒளிபரப்பு செய்தது. இந்த பேட்டிகளின் மூலம் படைத்தளபதிகள் மற்றும் உண்மையான போராளிகளின் கருத்துக்களை அறிய முடிந்தது. மேலும் மேற்குலகம் இருட்டடிப்பு செய்த சில உண்மைகளை உலகம் அறிந்து கொண்டது.இதுவரை சிரிய புரட்சியை சிரியன் நேஷனல் கவுன்சில் கூட்டமைப்பை சார்ந்த தலைவர்கள் நடத்தி வந்ததாக கூறிவந்தனர். இந்த பேட்டிகள் படைத்தளபதிகளின் உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்தது. படைத்தளபதிகளின் பேட்டியிலிருந்து சில வரிகள்:-
*சிரிய புரட்சியானது மக்களின் அமைதியான போராட்டங்களை அத்துமீறி கலைத்ததின் விளைவாகவே துவங்கியது.
*எக்காரணத்தைக் கொண்டும் ஆட்சியாளர்களுடனோ, அவர்கள் சார்பாக வரும் எவருடனோ பேச்சு வார்த்தைக்கு இடமில்லை.
*வருங்கால ஆட்சியானது ஸுன்னி பிரிவினர்களின் தலைமையில் நடைபெறவேண்டும். ஏனெனில் அவர்களே பெரும்பாலான சிரிய மக்களுக்கு பிரதிநிதியாக விளங்குகிறார்கள்.
*வருங்கால அரசானது ஒரு போதும் ஈரான், ஹிஸ்புல்லா போன்ற பஷாருல் அஸாதிற்கு உதவி புரிந்துவரும் நாடுகளையோ அல்லது அமைப்புகளையோ நேசத்திற்குரியதாக ஆக்கிக் கொள்ளாது.
வெளிநாட்டிலிருந்து வீரர்கள் போராட்டக் குழுவில் ஊடுருவியதை மேற்குலகு பொறுத்துக் கொள்ளாமல் ஊளையிடுவது, மக்களின் இஸ்லாமிய அழைப்பை கெடுப்பதற்காகவேயாகும். குறிப்பாக மேற்குலகால் அதிகமாக அவதூறுக்கு உள்ளான ஜபத்துந்நுஸ்ரா அமைப்பானது, ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக சண்டையிட்டு சிரியா திரும்பியவர்களையும் ஒன்றிணைத்து சிரிய ஆட்சியை தூக்கியெறிய உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.உஸ்மானிய கிலாஃபத்தை அழித்துவிட்டு பல முஸ்லிம் நாடுகளை உருவாக்கவும், அந்நாடுகளுக்கான புதிய எல்லைக்கோடுகளை வகுக்கவும் 1916 ஆம் ஆண்டு ரகசியமாக பிரிட்டனும் பிரான்சும் இணைந்து ஏற்படுத்திய ஒப்பந்தம்,ஸ்கைஸ் பிகோட் ஒப்பந்தம் (Sykes–Picot Agreement) என்றழைக்கப்படுகிறது.இந்த ஒப்பந்தத்தின் மூலம் எல்லைகளை வரையறுத்து உம்மத்தை நாடுகளைக்கொண்டு பிரித்ததை முஸ்லிம்கள் அங்கீகரிக்கவில்லை.எனவே சிரியாவில் வெளிநாட்டு வீரர்கள் போர் புரிகிறார்கள் என்ற கூச்சல் உம்மத்திற்கு அந்நியமான ஒன்றாகும்.
4.ஜெனீவா பேச்சுவார்த்தை இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாகும்
சிரிய அதிபர் பஷாருல் அஸாதுடன் சிரியன் நேஷனல் கவுன்சில் பேரம் பேசவும் மக்களின் கோரிக்கையின் எதிர்வினையாக சமாதானத்திற்கு ஒப்புக்கொள்ளவும் மேற்குலகால் எற்படுத்தப்பட்டதுதான் ஜெனீவா பேச்சுவார்த்தை என்ற வஞ்சக நடவடிக்கையாகும். இந்த பேச்சுவார்த்தை தற்போதுள்ள ஆட்சியை இதே நிலையில் நிலைத்திருக்கச் செய்யவும் போராட்டக் குழுவினர் தங்களின் நிலையை சமரசம் செய்யவுமே வழிவகை செய்கின்றது.
“அந்த நாட்டின் நிலைத்தன்மையை காப்பதற்காக பஷாருல் அஸாத் வெளியேறுவார். நிச்சயமாக அவர் வெளியேறுவார். அந்த ஒரு நிலைத்தன்மையை நிலைபெறச் செய்ய அதிகமான ராணுவத்தையும் காவல்துறையையும் பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து கட்டிக்காக்க வேண்டும். மேலும் அவர்கள் ஜனநாயக முறையிலான மாற்றியமைக்கப்பட்ட அரசை நிறுவுவார்கள்.” என்று லியோன் பணேடா CNN தொலைக்காட்சியில் ஜுலை-2012 ஆம் அண்டு நடந்த நேர்காணலில் கூறினார்.
பஷாருல் அஸாத் கிழக்கு டமாஸ்கசில் ரசாயன குண்டுகள் வீசி தாக்கியதற்கு பின் தங்களுடைய எந்த ஒரு குறிக்கீடும் அங்கு ஆட்சி மாற்றத்திற்காக நடைபெறுவது அல்ல என்ற எண்ணத்தை இவர் தெளிவாக கூறினார்.இதை செப்டம்பர் 2-ஆம் தேதி அன்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழ் ஊர்ஜிதப்படுத்தியது. “வெள்ளை மாளிகை எதிரணியை வலுவடைய வைக்க விரும்பும் அதே சமயம் எதிரணி எக்காரணத்தை கொண்டும் வென்று விடக் கூடாது என்று விரும்பியது. கடந்த வாரம் இரகசியமாக நடத்தப்பட்ட கலந்தாய்வில் கலந்து கொண்ட உயர் அதிகாரிகளின் கூற்றுப்படி அமெரிக்க நிர்வாகம் விமான தாக்குதலை நடத்த விரும்பவில்லை.உதாரணத்திற்கு பஷாருல் அஸாத் தோல்வி அடைந்தால் இஸ்லாமிய சிந்தனை கொண்டவர்கள் அசாத்தின் இடத்தை பிடித்து விடுவார்கள்” என அஞ்சுகிறது”.
5. பஷாருல் அஸாதின் அரசை தோற்கடிக்க முடியாது என்பதால்,அரசுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்த கிளர்ச்சியாளர்கள் முன்வர வேண்டும்
எப்போதெல்லாம் பஷாருல் அஸாதின் அரசு சண்டையிட்டதோ அப்போதெல்லாம், அதன் திட்டங்களை எதிரணியினர் தங்களின் வலிமையான படைகளைக்கொண்டு தவிடுபொடியாக்கினார்.நகரங்களை முற்றுகையிடுதல் மற்றும் சரமாரியான ஆயுத தாக்குதல் மூலமாக வலுவாக வேரூன்றினர். பஷாருல் அஸாத் அரசிடம் அதிகமான தளவாடங்கள் இருந்தாலும் அவர்களால் டமாஸ்கசை நோக்கிய கிளர்ச்சியாளர்களின் அணிவகுப்பை தடுக்க இயலவில்லை. எழுச்சியானது சட்டப்படியான ஆட்சியை எதிர்த்து கிளர்ந்தெழும் இயக்கமாக வெகுவிரைவில் மாறியது. சிரிய அரசின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் உம்மத்தை பல கிளர்ச்சிக் குழுக்களாக ஒருங்கிணைத்து அரசினை எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். கிளர்ச்சியாளர்கள் கொரில்லா தாக்குதல் உத்திகளை கடைபிடித்து ராணுவத்தை எதிர்கொண்டார்கள். அவர்கள் நாடெங்கிலும் ராணுவத்திற்கு பொருட்கள் எடுத்து செல்லும் வழிகளை குறிவைத்து துண்டித்தனர். நாட்டின் அனைத்து பகுதிகளையும் குறி வைத்ததால் குறிப்பிட்ட விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தி அதில் உள்ள தளவாடங்களை சேகரித்ததுடன் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஆயதங்களை தனதாக்கி கொண்டார்கள்.
ஆட்சியாளர்கள் வடக்கில் பெரும்பான்மையான பகுதிகளையும் தெற்கில் சில பகுதிகளையும் இழந்துவிட்டார்கள். இவர்கள் சமீபத்தில் ஹோம்ஸ் பகுதியை கிளர்ச்சியாளர்களிடமிருந்து ஈரானின் கூலிப்படையான ஹிஸ்புல்லாவின் உதவியுடன் மீட்டெடுத்தனர்.ஆனால் அதை தற்பொழுது தற்காத்து கொள்ள திணறிவருகின்றது. இன்று ஆட்சியாளர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களுடனான சண்டையின் நிலை கிளர்ச்சியாளர்களுக்கு சாதகமாக மாறுவதன் காரணமாக அமெரிக்கா படையெடுத்து குறுக்கிடப்போவதாக பேசிகொண்டிருக்கின்றது.
இஸ்லாத்தை மையப்படுத்தி பதினொன்று பெரிய குழுக்கள் சேர்ந்து ஒரு புதிய கூட்டணியை அமைத்ததன் மூலம் கிளர்ச்சியாளர்கள் தங்களின் தளங்களை ஒருங்கிணைத்து டமாஸ்கசை தங்களின் மையப்பகுதியாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர்.உண்மையில் பஷாருல் அஸாதின் அரசுதான் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து வருவதை காண்பிக்கின்றது.மேலும் தான் வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தையை கிளர்ச்சியாளர்களிடம் மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர். இல்லாவிடில் அவரது கூட்டாளியான முஅம்மர் கடாஃபி தன் சொந்த ஊரில் கழிவுநீர் குழாயில் மறைந்திருந்தபோது பிடிபட்டபின் சந்தித்த இழிநிநிலை பஷாருல் அஸாதிற்கும் வெகுவிரைவில் ஏற்படும்