ரியல்எஸ்டேட் விவகாரத்தில் வெடித்துக் கிளம்பிய பொருளாதார நெருக்கடி அமெரிக்காவின் அடமானமுறை வீட்டுக்கடன் திட்டத்தை (subprime mortgage programme) மூழ்கடித்து விட்டது, இந்தத் திட்டத்தில் கடன் பெற்றவர்களில் பெரும்பான்மையினர் கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அமெரிக்காவின் பிரதான வங்கிகளில் சிலவும் முன்னனி நிதிநிறுவனங்களில் சிலவும் அழிவை சந்தித்துவிட்டன இன்னும் சில அழிவின் விளிம்பில் நின்று ஊசலாடிக் கொண்டிருக்கின்றன, கவர்ச்சிமிக்க சலுகைத்திட்டங்கள் மற்றும் பெரும்குவியலாக லாபம் கிடைக்கும் என்ற பகிரங்க அறிவிப்பு ஆகியவற்றால் தூண்டப்பட்டு சர்வதேச வங்கிகளின் பணமும் நிதிச்சந்தை ஜாம்பவான்களாக விளங்கும் பல பன்னாட்டு நிதிநிறுவனங்களின் பணமும் அமெரிக்காவின் அடமானமுறை கடன் திட்டத்தை நோக்கி குவிந்தன, இந்த திட்டம் படுதோல்வி அடைந்து பல்லாயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்பட்டதால் இதில் முதலீடு செய்த அமெரிக்க வங்கிகளும் நிதிநிறுவனங்கும் நொறுங்கி வீழ்ந்துவிட்டன, இந்த வங்கிகளும் நிதிநிறுவனங்கும் சர்வதேச அளவில் நிதியியல் தொடர்புகள் வைத்திருந்ததால் இதன் தீயவிளைவு முழு உலகத்திலும் பரவ ஆரம்பித்துவிட்டது, அமெரிக்கா என்ற நோயாளி தும்மியதில் வெளிப்பட்ட நோய்க்கிருமி உலக முழுவதிலும் தொற்றிக்கொண்டு நோயை பரப்பிக் கொண்டிருக்கிறது.
அடமானமுறை வீட்டுக்கடன் திட்டத்தில் (subprime mortgage programme) ஏற்பட்ட இழப்பு அமெரிக்காவைப் பொறுத்வரை 300 பில்லியன் டாலர் என்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்ட இழப்பு 550 பில்லியன் டாலர் என்றும் நிதித்துறை அமைப்புகள் சில மதிப்பீடு செய்துள்ளனõ இதனடிப்படையில் இந்த திட்டத்தால் பாதிப்பு அடைந்த நாடுகள் குறிப்பாக செல்வந்த நாடுகளின் அரசுகள் நிதிச்சந்தை குறித்த நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்காகவும் நிதிநிறுவனங்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு உயிரூட்டுவதற்காகவும் கோடிக்கணக்கான டாலர் பணத்தை ஒதிக்கியிருக்கின்றன, உண்மையாகக் கூறவேண்டுமானால் பிரிட்டன் அரசு செய்ததைப்போல சிலநாடுகள் தங்கள் நாட்டிலுள்ள சில பெரிய வங்கிகளை தேசியமயமாக்கும் நடவடிக்கûயில் இறங்கியிருக்கின்றனõ
முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடித்தளம் என்று கருதப்படும் தாராள வர்த்தகம். தடையற்ற வர்த்தகம் என்ற தாரகமந்திரம் தவிடுபொடியான கதையை நாம் கண்கூடாகக் காண்கிறோம், இவ்விரு கோஷங்களும் முதலாளித்துவவாதிகளின் அடிப்படை நம்பிக்கையாக விளங்கிவந்தன, நிதித்துறை நடவடிக்கைகளில் காணப்படும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கிவிட்டு நிதிச்சந்தையில் எத்தகைய கட்டுப்படுகளும் இருப்பதை தடைசெய்யும் சட்டத்தை டிசம்பர் 1999 ல் அமெரிக்கசெனட் கொண்டுவந்தது, முதலாளித்துவ கொள்கையை தலமையேற்று நடத்திச்செல்லும் அமெரிக்காவிலேயே இந்தத் தவறான கொள்கையின் தீயவிளைவு வெளிப்பட ஆரம்பித்தது, அடமானமுறை வீட்டுக்கடன் திட்டத்தில் சிக்கி நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த அமெரிக்க வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் ஆகியவை வினியோகம் செய்திருந்த பங்குப்பத்திரங்களை கொள்முதல் செய்துகொள்வதன் மூலம் தங்களின் பொருளாதாரத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக அமெரிக்க அரசுக் கருவூலகத்தின் செயலாளர்(US secretary of govt. treasury) ஹென்ரி பால்ஸன் (Henry Paulson) கொண்டு வந்த திட்டத்திற்கு 700 பில்லியன் டாலர் பெய்லவுட் (க்ஷஹண்ப்ர்ன்ற்) தொகையாக ஒதுக்குவதற்கு அமெரிக்க செனட்டும் அமெரிக்க காங்கிரஸýம் அங்கீகாரம் அளித்ததின் மூலமாக நிதிச்சந்தையில் அமெரிக்கஅரசு தலையீடு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது, இத்திட்டம் அக்கீகரிக்கப்பட்ட சில நிமிடத்திலேயே கருவூலக செயலாளர் அதை நடைமுறைப் படுத்திவிட்டார், நிதித்துறையில் அரசு எந்தவிதமான தலையீடும் செய்யக்கூடாது என்ற முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படைக் கொள்கை இப்போது மீறப்பட்டிருக்கிறது, இதன்மூலம் முதலாளித்துவ சித்தாந்தத்தை உலகம் முழுவதிலும் நடைமுறைப்படுத்தும் திட்டத்திற்கு தலைமை ஏற்றுள்ள அமெரிக்காவும் பிரிட்டனும் அதன் கொள்கைக்கு முரண்பாடாக செயல்பட்டிருக்கினறன, பொதுவுடமை கோட்பாட்டின் அடிப்பûயிலுள்ள கம்யூனிஸம் தோல்வியுற்று புதையுண்டு போன அதே முறையில் இப்போது முதலாளித்துவமும் மரணப்படுக்கையில் கிடக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது,
அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஏற்பட்ட இந்த நிகழ்வுகளின் காரணமாக உலக நாடுகள் முழுவதிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன, ஐரோப்பாவின் பிரதான நாடுகளான பிரிட்டன். பிரான்ஸ். ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை நிதித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை ஆய்வு செய்வதற்காக முறையான சந்திப்புகள் நடைபெறவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன, அதுபோலவே G7 (ரஷ்யாவை இதில் சேர்த்துக்கொண்டால் G8 நாடுகள்) நாடுகளின் நிதியமைச்சர்களும் மத்திய வங்கிகளின் மேலாளர்களும் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சந்தித்து விரிவான ஆய்வு நடத்தவேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,
இந்த முயற்சிகள் முதலாளித்துவ பொருளாதாரத்தைக் காப்பாற்றுமா?
முதலாளித்துவ பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை உற்றுநோக்கிக் கொண்டிருப்பவர்கள் அது அழிவை சந்தித்துவிட்டது என்பதை அல்லது அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வார்கள், அதை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக முதலாளித்துவவாதிகள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் அனைத்தும் தற்காலிகமான நிவாரணத்தை மட்டுமே ஏற்படுத்தக்கூடும் ஏனெனில் முதலாளித்துவ பொருளாதாரம் நொருங்கிப் போனதற்கு காரணம் அது தவறான அடித்தளத்தின் மீது கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதுதான், மேலோட்டமான சீரமைப்புகளால் அதை ஒருபோதும் காப்பாற்றமுடியாது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடித்தளம் தவறானது என்பதற்கு நான்கு காரணங்கள் இருக்கின்றன அவற்றை விளங்கிக் கொள்வது அவசியமாகும்;
1) இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட பிரட்டன் உட்ஸ் (Bretton woods) உடண் படிக்கையின் அடிப்படையில் நாணயங்களுக்கு ஏற்புநிறை மதிப்பீடாக(gold standard) தங்கம் மட்டும் இருந்ததை மாற்றி அதற்கு இணையாக அமெரிக்க டாலர் கொண்டுவரப்பட்டது, 1970 க்குப் பின்னர் ஏற்புநிறை மதிப்பீட்டில்(ஞ்ர்ப்க் ள்ற்ஹய்க்ஹழ்க்) தங்கத்தை அறவே நீக்கிவிட்டு முழுக்க முழுக்க அமெரிக்க டாலர் மட்டுமே ஏற்புநிறை மதிப்பீடாக கொண்டுவரப்பட்டது, இதன் மூலமாக அமெரிக்கநாட்டின் காகிதநாணயமான டாலர் தங்கத்திற்கு இணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, இதனடிப்படையில் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற பாதிப்புகள் இயல்பாகவே உலக பொருளாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன ஏனெனில் பல்வேறு நாட்டு நாணயங்களும் செலாவணியில் (exchange) தங்கத்துடன் இணைக்கப்படாமல் அமெரிக்க டாலருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன, ஐரோப்பாவின் யூரோ நாணயம் அறிமுகப் படுத்தப்பட்ட போதிலும் அமெரிக்க டாலர் பல்வேறு நாட்டு நாணயங்களுடன் இணைக்கப்பட்டிருபதால் தொடர்ந்து அதன் மதிப்பு குறையாமல் இருந்து வருகிறது,
எனவே நாணயங்ளுக்கு ஏற்புநிறை மதிப்பீடாக(gold standard) தங்கத்தை மறுபடியும் கொண்டு வந்தால் ஒழிய இத்தகைய பொருளாதார பாதிப்புகள் உலக நாடுகளுக்கு தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும், இன்றைய சூழலில் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படும் வீழ்ச்சி உலக நாடுகளின் பொருளாதாரத்தில் வீழ்ச்சியைக் கொண்டு வருகிறது, அமெரிக்க அரசின் சில கொள்கைகளால்(policies) அமெரிக்க டாலரில் ஏற்படும் பாதிப்புகள் உலக நாடுகளின் நாணயங்களில் பிரதிபலிக்கிறது, உண்மையைக் கூறவேண்டுமானால் ஏகாதிபத்திய செல்வாக்கு பெற்றுள்ள எந்தவொரு நாட்டின் காகித நாணயமும் தங்கத்தின் மதிப்பு அதற்கு பின்னனியாக கொள்ளப்படா விட்டால் உலகப் பொருளாதாரத்தில் இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துவது இயல்பான விஷயம்தான்õ
2) வட்டி அடிப்படையில் கொடுக்கப்படும் கடன்களால் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடிகள் தோன்றுகின்றன, காலஓட்டத்தில் கடன் கொடுக்கப்படும் தொகையின் மதிப்பு சிறிதுசிறிதாக குறைந்துகொண்டு வருகிறது என்றபோதிலும் தனிமனிதராக இருந்தாலும் சரி அல்லது ஒருநாட்டு அரசாக இருந்தாலும் சரி பலசமயங்களில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது, இதன்காரணமாக பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டு நெருக்கடிகள் பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, மேலும் மத்தியதர வகுப்பினர் (middle class people) கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால் நிதித்சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டு பொருட்களின் உற்பத்தியிலும் பெரிய பாதிப்புகள் உருவாகின்றன,
3) இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் பொருளாதாரக் கொள்கையின் காரணமாக பொருளாதார நடவடிக்கை. நிதிச்சந்தை. பங்குச்சந்தை. நிதியியல் உபகரணங்கள் (காசோலை (cheque) வரைவுகாசோலை (demand draft) ரொக்கப்பத்தரம் (cash certificate) போன்றவை) . வர்த்தகப் பொருட்கள். கொடுக்கல் வாங்கள்(speculative trading)ஆகியவற்றில் யூகவர்த்தக முறை (wrong commercial practice) பின்பற்றப்படுகிறது, இதனடிப்படையில் பொருட்கள் கையிருப்பில் இல்லாத நிலையில் யூகத்தின் அடிப்படையில் வர்த்தகம் நடைபெறுகிறது, இது முறையற்ற வர்த்தகம் என்பதோடு மிக ஆபத்தான பொருளாதார நடவடிக்கையாகவும் இருக்கிறது, பொருட்களின் விலையில் முறையற்ற ஏற்ற இறக்கம் ஏற்படுவதோடு பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் இது காரணமாக இருக்கிறது, பொருளாதார சந்தையில் அதிர்வுகளை ஏற்படுத்துவதற்கு உடனடி காரணிகளாகவும் உண்மையான பொருளாதாரத்திலிருந்து மக்களை திசை திருப்பிவிடும் தவறான வர்த்தகமுறை (ஜ்ழ்ர்ய்ஞ் ஸ்ரீர்ம்ம்ங்ழ்ஸ்ரீண்ஹப் ல்ழ்ஹஸ்ரீற்ண்ஸ்ரீங்) யாகவும் இருக்கிறது, லாபநஷ்டங்கள் யூகத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால் குறைகளும் பாதிப்புகளும் சரியான முறையில் அறிந்து கொள்ளப்படாமல் இறுதியில் பெரும் நெருக்கடிகள் எற்பட்டு விடுகின்றன,
4) மிகமுக்கியமான விஷயம் என்னவென்றால் கிழக்கு நாட்டவராக இருந்தாலும் அல்லது மேற்கு நாட்டவராக இருந்தாலும் சொத்துரிமை தொடர்பான எதார்த்தமான உண்மைகள் பற்றிய அறிவை பெறாதவர்களாகவே இருக்கிறார்கள், பொதுவுடமைக் கோட்பாட்டிலிருந்து தோன்றிய கம்யூனிஸ சித்தாந்தம் (communist ideology) அனைத்து சொத்துக்களின் உரிமைகளையும் அரசுடமை ஆக்கியிருக்கிறது எனவே தனிமனிதர் எவரும் எத்தகைய சொத்துக்களையும் அடைந்துகொள்ள முடியாது, அதேவேளையில் முதலாளித்துவ சித்தாந்தம் (capitalist ideology) சொத்துரிமை அனைத்தையும் தனியார்மயம் ஆக்கியிருக்கிறது மேலும் தனிமனிதரின் சொத்துரிமையில் அரசு எந்தவிதமான தலையீடு செய்யாதவாறு தடை செய்யப்பட்டுள்ளது ஏனெனில் இந்த சித்தாந்தம் தாராள வர்த்தகக் கொள்கையை ஆதரிப்பதோடு உலகமயமாக்கல் என்ற கோஷத்தையும் எழுப்பிவருகிறது,
சொத்துரிமை பற்றிய முழுமையான அறியாமையின் காரணமாக அரசுகளிடம் காணப்படும் தவறான கொள்கைகள் பொருளாதாரத்தில் அதிர்வுகளையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்துகின்றன, ஏனெனில் சொத்துக்களை வைத்துக்கொள்ளும் உரிமை அரசிற்கு மட்டுமோ அல்லது தனிமனிதருக்கு மட்டுமோ உரியதல்ல மாறாக சொத்துரிமையில் மூன்று வகைகள் இருக்கின்றன;
பொதுச்சொத்து :
பூமியின் இயற்கை வளங்களான எண்ணெய் வளங்கள். கனிம வளங்கள். நிலவாயு நிலக்கரி போன்ற எரிபொருள் வளங்கள். மின்சாரம் போன்ற ஆற்றல் வளங்கள். காடுகள் மற்றும் புல்வெளிகள் போன்ற பசுமை வளங்கள். ஆறுகள் மற்றும் கடல்கள் போன்ற நீர் வளங்கள் . பூமிக்குள் இருக்கும் புதையல்கள் ஆகியவை பொதுச்சொத்து இனங்களில் அடங்கும், இவைகளை அரசே நேரடியாக நிர்வாகம் செய்து அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயில் ஐந்தில் ஒரு பங்கை தன் செலவினங்களுக்கு எடுத்துக்கொண்டு மீதியுள்ள நான்கு பங்கை பொதுமக்கள் நலனுக்காக செலவு செய்யவேண்டும்,
அரசு சொத்து :
அரசினால் வசூலிக்கப்படும் அனைத்து விதமான வரிகளின்(taxes) மூலம் கிடைக்கும் பணம். தனியார் சொத்து இனங்களில் அடங்காத விவசாயம். வர்த்தகம். கனரக தொழிற்சாலை. ஆயுத தொழிற்சாலை ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் பணம். யுத்த கனீமத் பொருட்களிலிருந்து கிடைக்கும் ஐந்தில் ஒரு பங்கு பணம். இயற்கை வளங்களிலிருந்து கிடைக்கும் ஐந்தில் ஒரு பங்கு பணம் ஆகியவை இதில் அடங்கும், இந்தப் பணம் முழுவதும் அரசு செலவினங்களுக்கும் பொதுமக்கள் நலப்பணிகளுக்கும் பயன்படுத்தப்படும்,
தனியார் சொத்து :
தனிமனிதர்கள் தங்கள் உழைப்பு மூலமாகவோ அல்லது வாரிசுரிமை மூலமாகவோ அல்லது அன்பளிப்புகள் மூலமாகவோ அடைந்து கொள்ளும் அனைத்து சொத்துக்களும் இதில் அடங்கும், ஷரியாவின் விதிமுறைப்படி பொதுச் சொத்துக்களை தனியார் அடைந்து கொள்ள முடியாது அதுபோலவே தனியார் சொத்தையோ அல்லது பொதுச்சொத்தையோ அரசுசொத்தாக மாற்றமுடியாது,
இந்த மூன்று வகை சொத்துரிமைகளும் வெவ்வேறானவை அவை ஒவ்வொன்றும் ஷரியாவின் விதிமுறைப்படியே நிர்ணயிக்கப்படுகின்றன, கம்யூனிஸத்தில் உள்ளது போல் இவை மூன்றையும் ஏகபோகமாக அரசுடமை ஆக்கினாலும் அல்லது முதலாளித்துவத்தில் உள்ளது போல் மூன்றையும் ஏகபோகமாக தனியார்மயம் ஆக்கினாலும் பொருளாதாரத்தில் வீழ்ச்சியும் நெருக்கடியும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும், அனைத்து வகையான சொத்துரிமைகளையும் அரசு எடுத்துக்கொண்டு தனிமனித உரிமைகளைப் பறித்ததால் கம்யூனிஸ பொருளாதாரம் வீழ்ச்சியுற்றது, சோவியத் ரஷ்யாவின் கம்யூனிஸ ஆட்சிக்காலத்தில் எண்ணெய் வளம். கனிம வளம். மற்றும் கனரக தொழிற்சாலை ஆகியவை அரசு நிர்வாகத்தில் இருந்ததால் அதன்மூலம் அதற்கு கணிசமான வெற்றி கிடைத்தது அதேவேளையில் தனியார் வசம் இருக்க வேண்டிய சிறுதொழில். விவசாயம். வர்த்தகம் ஆகியவற்றை அரசு தனக்கு உரிமையாக்கிக் கொண்டு நிர்வாகம் செய்ததால் பெரும் தோல்வி ஏற்பட்டு அந்த அரசு வீழ்ச்சியை சந்தித்தது, அதுபோலவே மேற்கத்திய நாட்டின் முதலாளித்துவ அரசுகளும் தோல்வியின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கின்றன, முதலாளித்துவ நாடுகளில் பொதுச்சொத்துக்கள் தனியார்மயமாக ஆக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் நலனுக்கு பயன்படவேண்டிய பூமியின் அரியவளங்கள் அனைத்தும் ஒரு சில தனிமனிதர்களிடத்தில் குவிந்து கிடக்கின்றன, கனரக தொழிற்சாலைகள். ஆயுத தொழிற்சாலைகள். ஆகியவை தனியாருக்கு சொந்தமாக ஆக்கப்பட்டதால் வர்த்தக சந்தையில் தலையீடு செய்வதிலிருந்து அரசு ஒதுக்கப்பட்டதோடு ஒரு அரசு நிலைத்திருப்பதற்கு உரிய வருவாய் ஆதாரங்களும் அரசின் இயல்பான உரிமைகளும் அதனிடமிருந்து பறிக்கப் பட்டுவிட்டன, தாராள வர்த்தகம். தடையற்ற வர்த்தகம். அரசியல் தலையீடற்ற பொருளாதாரம். உலகமயமாக்கல் ஆகிய கோஷங்களின் பெயரால் இந்த அத்துமீறல்கள் அனைத்தும் அரங்கேற்றப்படுகின்றன, தவறான இந்த பொருளாதாரக் கொள்கை ஏற்படுத்தும் முடிவுகள் தவிர்க்க முடியாததுõ தொடர்ச்சியான வீழ்ச்சி வேகமான அழிவுõ நிதிச்சந்தைகளும் நிதிநிறுவனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக நொறுங்கிவிழும் துயரம்õ இவைதான் தவறான கொள்கை ஏற்படுத்திய இயல்பான முடிவுõ
தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக அன்று கம்யூனிஸ அரசு வீழ்ந்ததுõ தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக இன்று முதலாளித்துவ அரசுகள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன.
எவ்வித சந்தேகமும் இல்லை. இந்தத் துயரங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் அழிவுகளுக்கும் ஒரே மாற்றுத் தீர்வு இஸ்லாம் மட்டுமேõ ஏனெனில் பொருளாதாரத்தில் அழிவுகளை ஏற்படுத்தும் காரணிகள் அனைத்தையும் இஸ்லாம் மட்டுமே தடைசெய்திருக்கிறது,
நாணயங்களுக்கு ஏற்புநிறை மதிப்பீடாக(gold standard) தங்கத்தை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் கட்டாயம் ஆக்கியிருக்கிறது, காகித நாணயத்தை அச்சிடும் பட்சத்தில் அதற்கு ஈடான மதிப்பிற்கு தங்கத்தையும் வெள்ளியையும் அரசு இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் மக்கள் விரும்பும்போது நாணயங்களை தங்கமாகவோ அல்லது வெள்ளியாகவோ மாற்றிக் கொள்வதற்கு ஏதுவாக அரசு கருவூலகங்களில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் இருப்பு இருக்கவேண்டும் என்பதையும் இஸ்லாம் கட்டாயமாக ஆக்கியிருக்கிறது, இதன்முடிவாக ஒரு நாட்டின் நாணயம் மற்றொரு நாட்டின் நாணயத்துடன் பிணைக்கப் படுவதை இஸ்லாம் தடைசெய்துள்ளது, இதனடிப்படையில் ஒரு நாட்டின் நாணயம் இதர நாட்டின் நாணயத்திலிருந்து சுதந்திரமாக இயங்கவேண்டும் என்றும் ஒவ்வொரு நாணயத்திற்கும் நிலையான மதிப்பு இருக்கவேண்டும் என்றும் இஸ்லாம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது,
மேலும் வட்டியை அதன் அனைத்து வடிவங்களிலும் இஸ்லாம் தடைசெய்துள்ளது, தேவையுள்ளவர்களுக்கு எந்தவிதமான வட்டியோ அல்லது கட்டணமோ இல்லாமல் கடனுதவி செய்யவேண்டும் என்பதை இஸ்லாம் கட்டாயமாக ஆக்கயிருக்கிறது, பைத்துல்மால் எனறழைக்கப்படும் அரசு கருவூலகம் (govt. treasury) தேவை உள்ளவர்களுக்கும் விவசாயிகளுக்கும் வட்டியில்லாமல் கடன் கொடுக்கும் வகையில் தனிகணக்கில் பணம் வைத்திருக்க வேண்டும் என்றும் இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது,
இதுபோலவே பொருட்களை கையிருப்பில் வைத்திருக்காத நிலையில் யூகத்தின் அடிப்படையில் விற்பனை செய்வதை இஸ்லாம் தடைசெய்துள்ளது, முறையற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பங்குப்பத்திரங்கள். நியியல் உபகர்ணங்கள் (செக்.டிரா*ப்ட் போன்றவை) ரொக்கப்த்திரங்கள் மற்றும் டிரைவேடிவ்ஸ்(அசலான மதிப்பு இல்லாத நிதியியல் உபகர்ணங்கள்) ஆகியவற்றில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வதை இஸ்லாம் தடைசெய்திருக்கிறது, மேலும் சொத்துரிமை சுதந்திரம் என்ற பெயரில் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை அனுமதித்துள்ள யூகவணிகம் (speculative trading) போன்றவற்றை மேற்கொள்வதற்கும் இஸ்லாம் தடைசெய்துள்ளது, பொதுச்சொத்து இனங்களில் அடங்குகின்ற எண்ணெய் வளங்கள். கனிம வளங்கள். நிலவாயு போன்ற ஆற்றல் வளங்கள் போன்றவற்றை தனிமனிதர்களோ அல்லது தனியார் நிறுவனங்களோ அல்லது அரசுத்துறை நிறுவனங்களோ தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்வதை இஸ்லாம் தடைசெய்துள்ளது, பொதுமக்களுக்கு சொந்தமான இந்த சொத்துக்களை ஷரியா விதிமுறைகளின் அடிப்படையில் அரசு பராமரித்து வரவேண்டும் என்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் பலன்கள் பொதுமக்கள் மத்தியில் வினியோகம் செய்யப்படவேண்டும் என்றும் இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது, இவ்வாறாக மனிதனின் வரம்புமீறிய சுயநலத்தினாலும் மனிதநேயத்திற்கு முரண்படும் பேராசைகளாலும் விளையும் அனைத்து பொருளாதார சீரழிவுகளையும் இஸ்லாம் விளக்கிக் கூறியிருப்பதோடு அவற்றைக் குறித்து எச்சரிக்கையும் செய்திருக்கிறது, இஸ்லாம் என்ற இந்த கொள்கை பிரபஞ்சத்தைப் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் இறைவனிடமிருந்து வந்துள்ளது அவன் தனது படைப்புகளுக்கு நன்மையானவை எவை என்பதை நன்கு அறிந்தவன்;
أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ
(அனைத்தையும்) படைத்த அவன் அறியமாட்டானா? அவன் (தன் படைப்புகளிடத்தில்) மென்மையும் கனிவும் கொண்டவனாகவும் (அவற்றை) நன்கு உற்று நோக்குகிறவனாகவும் இருக்கிறான். (TMQ 67 :14)
முஸ்லிம்களே!
தனது தூதர் முஹம்மது(ஸல்) மூலமாக இஸ்லாம் என்ற உயர்ந்த மார்க்கத்தை உங்களுக்கு வழங்கியிருப்பதால் அல்லாஹ்(சுபு) உங்களுக்கு ஒப்பற்ற கண்ணியத்தை கொடுத்திருக்கிறான்; மேலும் அவன் உங்களை எச்சரிக்கை செய்தும் இருக்கிறான், இஸ்லாத்தின் பொருட்டாகத்தான் அனைத்து சமுதாயத்திலும் சிறந்த சமுதாயமாக உங்களை உயர்த்தியிருக்கிறான், இந்த தீனை முழுமையாக செயல்படுத்துவதில்தான் உங்களுடைய கண்ணியமும் உயர்வும் அடங்கியிருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், இந்த உயர்வு உங்களுக்கு மட்டும் உரித்தானதல்ல மாறாக அது முழு மனித சமுதாயத்திற்கும் உரித்தானது ஏனெனில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட தவறான கொள்கைகளையும். செயலாக்கஅமைப்புகளையும் (man made systems) பல நூற்றாண்டுகளாக எதிர்த்து நின்று இஸ்லாம் வெற்றி அடைந்திருக்கிறதுõ
சங்கைக்குரிய குர்ஆனை தடிப்பான அட்டைகளில் மூடி வைத்திருப்பதால் இந்த மகத்தான மார்க்கத்தை நடைமுறைப் படுத்திவிட முடியாது மாறாக இஸ்லாத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன் சத்திய செய்தியை உலகம் முழுவதற்கும் அழைப்புப்பணி (da’wah) மூலம் எடுத்துச்செல்லக்கூடிய கிலா*பாவை அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்களின் முன்மாதிரி அடிச்சுவட்டில் நிர்மாணிப்பதின் மூலமாகவே அதை செய்யமுடியும், மனித சமுதாயத்தின் பாதுகாப்பிற்கும் உயர்வுக்கும் செழிப்பிற்கும் கிலா*பா மட்டுமே உத்திரவாதம் அளிப்பதற்கு ஆற்றல் பெற்றுள்ளது, ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்õ நீங்கள் சுகபோகத்தில் மூழ்கி இருப்பீர்கள் எனில் அல்லாஹ்(சுபு) தனது வானவர்களை அனுப்பி கிலா*பாவை நிர்மாணிக்கப் போவதில்லை மாறாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) மதினாவில் இஸ்லாமிய அரசை நிர்மாணித்ததைப் போல் அவர்களது தோழர்களான ஸஹாபா பெருமக்களும் அவர்களை பின்துயர்ந்து வந்த முஸ்லிம்களும் தொடர்ந்து அதை நிலைநிறுத்தியது போல் இஸ்லாமிய அரசை நிர்மாணிப்பதையும் தொடர்ந்து அதை நிலைநிறுத்துவதையும் அல்லாஹ்(சுபு) உங்களுக்கு கடமை ஆக்கியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்õ
முஸ்லிம்களே!
உவகை கொள்ளுங்கள்õ ஏனெனில் அல்லாஹ்(சுபு) வின் திருப்பொருத்தத்தை அடைந்து கொள்ளும் வாய்ப்பபை நீங்கள் பெற்றுள்ளீர்கள்õ எழுந்து நில்லுங்கள்õ உங்களை நீங்களே தயார் படுத்திக் கொள்ளுங்கள்õ ஹிஸ்புத்தஹ்ரிருடன் இணைந்து பணியாற்றுங்கள்õ உங்கள் ஆதரவையும் அங்கீகாரத்தையும் அதற்கு வழங்குங்கள்õ அல்லாஹ்(சுபு) அருட்செய்துள்ள கூட்டத்தினரோடு இணைந்திருப்பதின் மூலமாக அவனுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள்õ அல்லாஹ்(சுபு) நமக்கு அதிகாரத்தையும் வாரிசுரிமையையும் வழங்குவதாக வாக்களித்துள்ளான்õ நபித்துவத்தின் அடிச்சுவட்டில் கிலா*பா ஏற்படும் என்று அண்ணலார்(ஸல்) நமக்கு நற்செய்தி கூறியுள்ளார்கள்.
முஸ்லிம்களே!
மனிதசமுதாயத்திற்கு தலைமை ஏற்பதற்கும் அல்லாஹ்(சுபு) வின் அனுமதி கொண்டு அதை நேர்வழியில் இட்டுச் செல்வதற்கும் உரிய தகுதியை உங்களிடம் மட்டும்தான் அல்லாஹ்(சுபு) வழங்கியுள்ளான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்õ அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ
இவ்வாறே உங்களை நாம் (நீதி செலுத்தக்கூடிய) நடுநிலைச் சமுதாயமாக ஆக்கியுள்ளோம் மக்கள் மீது நீங்கள் சாட்சியாளர்களாக இருப்பதற்காக … (TMQ 2 :143)
முஸ்லிம்களே!
நீங்கள் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்ட தூதரும்(ஸல்) அவர்களுடைய தோழர்களும் அவர்களை பின்பற்றி வந்த முஸ்லிம்களும் கடந்து வந்த அடிச்சுவட்டை நீங்கள் அறிந்து கொள்ள வில்லையா? அவர்கள் தங்கள் பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றிய விதத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள வில்லையா? அல்லாஹ்(சுபு) உங்கள் மீது வாஜிபாக ஆக்கிய கடமையை நிறைவேற்றுவதில் நீங்கள் அசட்டையாக இருந்து விடாதீர்கள் அனைத்து மார்க்கங்களையும் இஸ்லாமிய மார்க்கம் வெற்றி கொண்டே தீரும் என்று அவன்(சுபு) விதித்திருப்பதால் அதன் வெற்றிக்காக உங்களை நீங்களே அர்பணித்துக் கொள்ளுங்கள்.
وَاللَّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள். (TMQ 12 : 21)