• நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்
No Result
View All Result
  • நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்
No Result
View All Result
Darul Aman
No Result
View All Result
இஸ்லாம் கூறும்  அரசியல் போராட்டம்

Defence Secretary Calls for a Sri Lankan Version of Islam!

கிலாஃபத் அழிக்கப்பட்ட வரலாறு உங்களுக்கு தெரியுமா? இதோ ஒரு சுருக்க வரலாறு

Home கட்டுரைகள் சிந்தனை எண்ணக்கரு

இஸ்லாம் கூறும் அரசியல் போராட்டம்

September 9, 2013
in எண்ணக்கரு
Reading Time: 2 mins read
0
0
SHARES
95
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அரசியல் போராட்டம் என்பது எவரது கையில் அதிகாரம் இருக்கிறதோ, எவர்கள் ஆட்சியில் இருக்கின்றனரோ அவர்களுக்கெதிரான ஓரு போராட்ட ஓழுங்காகும். அது இரத்தம் சிந்தாத, பாரிய பொருளாதார நஷ்டத்தினை ஏற்படுத்தாத ஒரு கட்டமைக்கப்பட்ட போராட்டத்தினூடாக நாம் விரும்புகின்ற ஒரு முழுமையான மாற்றத்தினையோ, அல்லது

அந்த மாற்றத்தின் ஒரு பகுதியினையோ அடைந்து கொள்வதற்கான ஒரு போராட்ட ஒழுங்கு என்று கூட சொல்லலாம்.

அரசியல் போராட்டம் என்பது, எவ்வாறு உலக நாகரீகங்கள் பழமையானதோ அதே போன்று, மக்கள் ஒன்றாக, ஒரு சமூகமாக எப்போது வாழத்தொடங்கினார்களோ அல்லது ஒரு குறித்த நாட்டினராக வாழ எத்தனித்தார்களோ அக்கணத்திலிருந்தே ஆரம்பமாகிய ஒரு பழமையான போராட்ட ஒழுங்காகும். மக்கள் ஒரு சமூகமாக வாழும் போது அவர்களுக்குள் அடிப்படையான மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற எண்ணம் எப்போதெல்லாம் தோண்றியதோ, எப்போதெல்லாம் சமூகத்தில் முறைகேடுகளும், அநியாயங்களும் தலைவிரித்தாடியதோ அப்போதெல்லாம் அதனை மாற்ற வேண்டும் என்ற கூட்டத்தினர் அந்த சமூகத்தலைமைகளுக்கு எதிராக தமது பலமான போராட்டங்களை தொடுத்தனர். சிலர் இதனை ஆயுதத்தினூடாகவும், பலத்த பொருளாதார சேதத்துடனும் முன்னெடுத்தனர். சிலர் அதே மாற்றத்தினையே அரசியல் போராட்டத்தினூடாக வெற்றி கொள்ள முயற்சித்தனர்.

இந்த போராட்டங்கள் அந்த சமூகங்களுக்கு மத்தியில் இரண்டு வேறுபட்ட பிரிவுகளை ஏற்படுத்தியது. ஒரு புறம் பலமும், அதிகாரமும் பொருளாதார வளமும் கொண்ட ஆளும் தலைமைகள், அதிகார வர்க்கங்களுடனும், அதனது உள்ளக கட்டமைப்புகளுடனும், அதனது கொள்கை கோட்பாடுகளுடனும் பலமுடன் நின்றன. மறுபுறம் பலவீனமான, இளமையான ஒரு குழு தனது கொள்கைகள், மாற்று திட்டங்களுடன் மக்கள் மத்தியில் தனது கருத்திற்காக பணியாற்றிய வண்ணம் காணப்படுகின்றது.

எனவே மாற்றத்தினை எதிர்பார்த்து ஒரு அரசியல் போராட்டத்தில் குதிக்கின்ற ஒரு குழு சமகாலத்தில் தனக்கென ஒரு உறுதியான கொள்கையினையும், மாற்றம் குறித்த முழுமையான அறிவினையும் கொண்டிருக்க வேண்டியதுடன் அது தன்னம்பிக்கை கொண்டதாகவும், துணிவுமிக்கதாயும் காணப்பட வேண்டும். இந்த இடத்தில் மாற்றதிற்கான கொள்கை குறித்த அறிவு இல்லாத நிலையில் ஒரு புரட்சிக் குழுவிடம் காணப்படும் அறிவு பயனற்றது. அதே நேரத்தில் கொள்கையில் தெளிவிருந்தாலும் அதனை வெற்றி கொள்ளச் செய்வதில் தியாகமும், திடகாத்திரமான துணிச்சலுமில்லாத எந்த குழுவும் இந்த அரசியல் போராட்டத்தில் வெற்றி பெற்றதில்லை, வெற்றி கொள்வதுமில்லை.

இங்கு நான் துணிச்சலும், தன்னம்பிக்கையும் எனத் தெரிவிப்பது அந்த இலட்சிய குழு நடைமுறையில் காணப்படும் முறையற்ற நடைமுறைகளுக்கும், கொள்கைகளுக்கும் எதிராக அதனை தலைமை தாங்கும் தலைவர்கள், அரசர்கள் போன்றோருக்கு எதிராக துணிச்சலான முடிவுகள் மேற்கொள்ளக்கூடியதாக இருத்தல் வேண்டும் என்பதையாகும். ஏனெனில் எவருக்கு எதிராக அல்லது எந்த கட்டமைப்புக்கு எதிராக நாம் புரட்சி செய்கிறோமோ, அந்த தலைமையும், அதனது கட்டமைப்பும் எம்மை நசுக்குவதற்கு பல நடைமுறைகளை கட்டவிழ்த்து விடலாம். அது எமது அடித்தளத்தை வேறடி மண்ணோடு பிடிங்கிவிட முயற்சிக்கலாம். எமது உறுப்பினர்களை கொலை செய்யலாம். சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்யலாம். எமது வளங்களை பறிமுதல் செய்து எம்மை ஒரு மூலையில் முடக்கலாம். இவையெல்லாம் எம்மை பலகீனப்படுத்தலாம். எம்மை பல அடிகள் பின்னோக்கி நகர்தலாம். எனினும் எமது தியாகச்சுடர்; அணைந்துவிடக்கூடாது. இவற்றையெல்லாம் கண்டு நாம் அஞ்சிவிடக்கூடாது. இவற்றுக்கு எதிராக உறுதியாக எதிர்நீச்சல் போடுவதிலேயே எமது இலக்கின் வெற்றி தங்கியிருக்கிறது.

ஒரு இஸ்லாமிய அணியை பொருத்த வரையில், அல்லாஹ்வின் கூட்டத்தினரைப் பொருத்த வரையில் அந்த ஒப்பற்ற அணி இயல்பாய் ஓர் உயரிய கொள்கையின்பால் தம்மை வடிவமைத்திருக்கிறது. அது இஸ்லாத்தின் செய்தியை இந்த உலகில் நிலைநாட்டவும், எத்திவைக்கவும் அதனது இலக்கை அடைந்து கொள்ளவும் மிக உறுதியான அறிவார்ந்த மற்றும் அரசியல் போராட்டத்தினை மேற்கொள்கிறது.

எனவே அந்த குழுவிடம் தனது உயரிய இலக்கான இஸ்லாத்தினை உலகின் ஏனைய வழிமுறைகளைவிட, சித்தாந்தங்களைவிட மேலோங்கச்செய்வதற்கான வீரியமும், அரசியல் பக்குவமும் ஒருங்கே காணப்படவேண்டும். அதாவது இஸ்லாத்தின் மீதும் அதனது இலக்கின் மீதும் உறுதியான நம்பிக்கையும், அதனை சாத்தியப்படுத்தும் பாதையில் வருகின்ற சவால்களை எதிர்கொள்ளும் தைரியமும் அதற்கு இருக்க வேண்டும். இந்த பண்பு இஸ்லாமிய இயக்கத்தின் பண்பாக மட்டும் மிளிர முடியாது. மாறாக அந்த இயக்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரிடமும் இப்பண்பு பிரகாசிக்க வேண்டும்.

இந்த குழு அல்லது இஸ்லாமிய இயக்கம் நடைமுறையிலுள்ள குப்ரிய தலைமைகளிடமிருந்தும், அல்லது அதனது அடிவருடிகளிடமிருந்தும் தலைமைத்துவத்தை தனது கையில் எடுத்துக்கொள்வதற்கு போராட்டங்களை தொடர்ந்து தலைமைதாங்க வேண்டும். ஒரு சமூகமோ அல்லது நாடோ இஸ்லாமிய கொள்கையால் மாத்திரம் கவரப்படும் என நாம் எதிர்பார்ப்பது யதார்த்தமல்ல. மாறாக அந்த கொள்கையை தலைமை தாங்கும் தலைமையும், அதனது குழுவும் அந்த சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அறிவும், துணிவும் கொண்டதாக காணப்பட வேண்டும். எனவே இஸ்லாமிய இயக்கம் ஒரு உறுதியான தலைமைத்துவத்தால், அதனுடன் சேர்ந்த ஒரு உறுதியான குழவினால் வழிநடத்தப்படவேண்டும். அங்கு பயமோ, தடுமாற்றமோ காணப்படக்கூடாது என்பது மிக மிக அத்தியவசியமாகும்.

எனவே இத்தகைய இஸ்லாமிய அரசியல் இயக்கத்தில் காணப்படுகின்ற உறுப்பினர்கள் இஸ்லாத்தின் தூய்மையான செய்தியை தாங்கிச் செல்வார்கள். அவர்கள் இஸ்லாத்திற்காக போராட வேண்டும். இஸ்லாத்தினை கொண்டு மட்டும் போராட வேண்டும். எனவே உடனடியாக அவர்கள் அல்குர்ஆன், அல் ஹதீஸின் பக்கம் தம்மை முழுமையாக திருப்பிக் கொள்ள வேண்டும். அதிலே தம்மை முற்று முழதாக வார்த்தெடுக்க வேண்டும்.

எவ்வாறு நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களை வார்த்தெடுத்தார்களோ அவ்வாறு அவர்கள் வார்த்தெடுக்கப்பட வேண்டும். அந்த ஸஹாபிகள் எவ்வாறு தஃவாவினை, தமது அரசியல் அறிவார்ந்த போராட்டத்தினை முன்னெடுத்தார்களோ அதே இயல்புடன் நாமும் அதனை முன்னெடுக்க வேண்டும். இந்த விடயத்தில் நாம் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. இருந்து விடமுடியாது.

இஸ்லாத்தின் அழைப்பை நாம் ஆழமாக ஆராய்ந்தால் அது எம்மை ஒரு உறுதியான அரசியல் போராட்டத்தின்பாலும் அரசியல் மறுமலர்ச்சின்பாலும் அழைத்துச் செல்வதை உணர்ந்து கொள்ளலாம். மேலும் இஸ்லாம் ஒரு நிலையில் எம்மை ஆயுத போராட்டத்தின்பாலும் கவர்ந்திழுப்பதையும் அவதானிக்கலாம். இஸ்லாத்தின் செய்தி முஸ்லிம்களை ஜிஹாதிய களங்காணும் மனிதர்களாகவும், தியாக புருஷர்களாகவும், வீரச்செம்மல்களாகவும் உருவாக்க விளைவதையும் அவதானிக்கலாம். இஸ்லாமிய செய்தி இஸ்லாம் அல்லாத அனைத்து வழிமுறைகளையும், மதங்களையும், இயக்கங்களையும், சித்தாத்தங்களையும் நிராகரித்து முழு உலக மானிடர்களையும், எவ்வித இன, மத, நிர, பிரதேச, கொள்கை வேறுபாடுகளையும் கருத்திற்கொள்ளாது சத்தியத்தின்பாலும், வெற்றியின்பாலும் அழைக்கிறது. அந்த இஸ்லாமிய அழைப்பு இஸ்லாத்தை மாத்திரமே இந்த உலகில் நிலைத்திருக்க அனுமதிக்கிறது.

இந்த உலகில் கடைசி முஸ்லிம் இருக்கும் வரையில் இஸ்லாம் மாத்திரம்தான் இவ்வுலகில் மேலோங்கியிருக்க வேண்டும் என்ற இஸ்லாத்தின் நிலைப்பாடு எந்த ஒரு பிரதேசத்திற்கும், எந்த ஒரு காலப்பிரிவிக்கும் பொதுவான நிலைப்பாடாகும். இதனை உறுதி செய்வதுதான் ஒவ்வொறு இஸ்லாமிய அழைப்பாளனினதும், இயக்கத்தினதும் கடமையாகும்.

இஸ்லாமிய அழைப்புப்பணியின் போது அது ஏனைய கொள்கைகளையும். அளவுகோள்களையும் எவ்வித சமரசமும் இன்றி, பயமும் இன்றி முழுமையாக எதிர்க்க வேண்டிய பண்பை திருமறை வசனங்களும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையும் எமக்குள் ஏற்படுத்துகிறது.

மாற்றுக்கொள்கையாளர்களை அல்லாஹ் எச்சரிக்கும்போது

“நிச்சயமாக நிராகரிப்பவர்களும், அல்லாஹ்வுக்குப் பகரமான உங்களின் பொய்யான தெய்வங்களும் நரகத்தின் எரிபொருளாகும்”(21:98) எனக் கூறுகிறான்.

இன்னுமொரு இடத்தில் குப்ரின் தலைவர்களை அல்லாஹ் எச்சரிக்கும்போது

அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடையட்டும், அவனும் நாசமாகட்டும். (111:1) என மிகவும் தெளிவாகவும், நேரடியாகவும் எச்சரிக்கிறான்.

மேலும் அல்லாஹ் கூறுகிறான்

“அன்றியும், இழிவானவனான அதிகமாக சத்தியம் செய்யுக்கூடிய ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்; (அத்தகையவன்) குறைகூறித்திரிபவன். கோள்சொல்லிக்கொண்டு நடப்பவன். (எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக்கொண்டிருப்பவன் வரம்பு மீறியவன்; பாவஞ் செய்பவன். கடின சித்தமுடையவன்; அப்பால் இழிபிறப்புடையவன்.” (68:10-13)

இந்த திருமறை வசனங்கள் இஸ்லாத்தின் செய்தி, அதன் அடிப்படைகள், ஏனைய எந்த கொள்கையுடனோ, அல்லது நடைமுறைகளுடனோ அடிபணிந்து போவதையோ, அல்லது சமரசம் செய்வதையோ அனுமதிக்கவில்லை என்பதை காட்டுகின்றன. நாம் ஏனைய நடைமுறைகளுடனும், கொள்கையுடனும் செய்து கொள்ளும் சமரசம் அல்லது சிறிய விட்டுக்கொடுப்பு எம்மை எமது தூய்மையான பாதையைவிட்டு எமது இஸ்லாத்தைவிட்டு திசை திருப்பிவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை இஸ்லாம் எமக்கு தெளிவாக விளங்கப்படுத்துகிறது.

அல்லாஹ் கூறுகிறான்

“(சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், (உமக்கு) அவர்களும் தளர்ந்து செல்வதை விரும்புகின்றனர்” (68:9)

இன்னுமொரு இடத்தில் இந்த அழைப்பின் பண்பைப்பற்றி அல்லாஹ் வரையருக்கும் போது

“அத்தகையோரின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கு அறிவான். ஆகவே நீர் அவர்களிடமிருந்து விலகியிரும். அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யும். மேலும் அவர்களின் மனங்களில் படும்;படி தெளிவான வார்த்தைகளைக் கூறும்” (4:63) எனக் கூறுகிறான்.

அபூஜஹ்ல் ரஸுல்(ஸல்) அவர்களிடம் வந்து தனது கையில் வைத்திருந்த உடைந்த எலும்புத்துண்டுகளைக் காட்டி இதைப்போன்று நான் மாறிய பின்பும் அல்லாஹ் என்னை உயிர்ப்பிப்பானா? என கிண்டலாக வினவிய போது ரஸ{ல்(ஸல்) அவர்கள் வெறுமனே அதற்கான பதிலை மட்டும் நேரடியாக அளிக்கவில்லை. மாறாக நீ இவ்வாறு ஆன பின்பு அல்லாஹ் மீண்டும் உன்னை உயிர்ப்பித்து நரகத்திலும் நுழைவிப்பான் என பதிலடி கொடுத்தார்கள்.

எனவே இத்தகைய துணிச்சலான, உறுதியான இஸ்லாமிய அழைப்பை நாம் காவிச்செல்;லும் போது அது பல தியாகங்களை எம்மிடம் எதிர்பார்க்கிறது. அத்தியாகங்கள் உயிரிழப்பாக, சித்திரவதையாக, ஒரு நிலையில் அது ஆயுத போராட்டங்களால் ஏற்படுகின்ற சோதனைகளாகக்கூட உருமாறலாம். ஏனெனில் இந்தப் பாதையில் இவைதான் யதார்த்தங்கள் என்பதை நபிமார்கள் அனைவரும் முஹம்மத் (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் எமக்கு காட்டிச்சென்றுள்ளார்கள். இத்தகைய சூழ்நிலைகளின் போது எமது பொறுமையையும், கட்டுப்பாட்டையும், உறுதியையும் அல்லாஹ் சோதிக்கின்றான். அதற்கு கூலியாக விரிந்த இந்த பிரபஞ்சத்தைவிட விசாலமாக சுவர்க்கத்தை எமக்கு தயார்ப்படுத்தி வைத்திருப்பதாக எமக்கு நன்மாராயம் கூறுகிறான்.

“ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். இன்னும் வீணான (பேச்சு,செயல் ஆகிய) வற்றை விட்டு விலகியிருப்பார்கள்” (23:1-3)

“உங்களுக்கு முன்னிருந்தோருக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்துவிடலாம் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? அவர்களை (வறுமை,பிணிபோன்ற) கஷ்டங்களும், துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டோரும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது”(என்று நாம் ஆறுதல் கூறினோம்)” (2:214)

“விசுவாசங்கொண்டோரே! உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர் யார் என்றும், இன்னும் பொறுமையை கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கின்றீர்களா?” (3:142)

ரஸுல்(ஸல்)அவர்கள்

“சுவரக்கம்; இருக்கிறதே அது கஷ்டங்களினால் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. நரகமிருக்கிறதே அது ஆசைகளினால் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது.” எனச் சொன்னார்கள்

மேலும் நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள் “நற்கூலி என்பது அனுபவிக்கும் கஷ்டங்களின் அளவிற்கு உயர்ந்திருக்கும்.”

மேலும் நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள் “நீங்கள் ஈஸா (அலை) அவர்களின் தோழர்கள் போல் இருங்கள் அவர்கள் பலகையில் வைத்து ஆணிகளினால் அரையப்பட்டாரகள்” எவன்பால் எனது மீட்சி இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக அவனது நாட்டத்தைக்கொண்டு ஓருவன் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவனாக இறப்பது அவன் அடிபணியாமல் வாழ்வதைவிட சிறந்தது” என்றார்கள்.

நபி(ஸல்)அவர்களின் இந்த சொற்களுக்கு ஏதுவாக நபித் தோழர்கள் விளங்கியதை நாம் காண்கின்றோம். அவர்கள் பெரும் பணக்காரர்களாகவோ, படித்தவர்களாகவோ, அல்லது ஏழைகளாகவோ, அடிமைகளாகவோ இருந்த போதிலும் எவ்வித வேறுபாடும் இன்றி இறை நிராகரிப்பாளர்களின் கைகளினால் பட்ட துன்பங்கள் எமக்குத் தெரியும். யாசிருடைய குடும்பத்தாரினதும், பிலால்(றழி), கப்பாப்(றழி) போன்ற நபித்தோழர்களினது வரலாறுகளும் எமக்குத் தெரியும்.

எனவே நடைமுறையிலுள்ள சமூகத்தை மாற்றி அதனது கொள்கையையும், கட்டமைப்பையும் தான் விரும்புகின்ற ஒரு தர்மத்தின் வழியில் மாற்ற யார் எத்தனிக்கின்றார்களோ, அல்லது சமூகத்தலைமையை தாம் கைப்பற்ற நினைக்கின்றார்களோ அவர்கள் அக்காலப்பிரிவிலுள்ள அரசியல் தலைமைகளால் இத்தகைய தியாகங்களையும், கஷ்டங்களையும் அனுபவிக்க நேரிடும் என்பது தவிர்க்க முடியாதது. அது ஒரு முஸ்லிமுக்கோ, அல்லது முஸ்லிம் அல்லாதவருக்கோ பொருந்தும்.

சார் மன்னனை வீழ்த்துவதற்கான போராட்டத்தில் கம்யூனிஸ்ட்கள் அனுபவித்த கஷ்டங்களும், தியாகங்களும் மிகப்பெரியது. சுதத்திரத்துக்காகவும், விடுதலைக்காகவும் என இடம்பெற்ற பிரஞ்சுப் புரட்சிக்காலத்தில் புரட்சிக்கு முன்னர் பாஸ்டில் சிறைச்சாலை புரட்சியாளர்களால் நிரம்பி வழிந்ததை கேள்விப்பட்டிருப்பீர்கள். இது போன்ற பல அண்மைக்கால வரலாறுகள் கூட எமக்கு சாட்சியாக அமைந்துள்ளன.

இந்நாளில் இஸ்லாத்தின்பால் அழைப்பதும், நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும் என்ற இஸ்லாமிய அழைப்புப் பணி அல்லது அதற்கான அறிவியல், அரசியல் போரட்டம் என்பது மிக உயர்ந்;த இலக்கினைக் கொண்டது என்ற அடிப்படையில் நாம் குப்;பார்களைவிட அதிகளவில் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். இந்தப் பணிக்காக அல்லாஹ் எமக்கு வழங்கவிருக்கும் வெகுமதிகளைப் பார்த்தால் இந்தப் பாதையில்படும் கஷ்டங்கள் யாவும் மிகவும் இலகுவானதாக எமக்குத் தென்படும். எனவே நாம் தலைநிமிர்ந்தும், துணிவுடன் தியாகத்தை அடித்தளமாக கொண்டும் இந்தப் பணியினை செய்ய தயாராக வேண்டும். இந்த அரசியல் போராட்டத்தின் உயரிய நிலை குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறும்போது

“மிகச் சிறந்த ஜிஹாத் என்பது கொடுங்கோல் ஆட்சியாளனுக்கு முன் நின்று ஹக்கினை சொல்வதாகும். இறைத்தியாகிகளின் தலைவர் ஹம்ஸாவாகும். மேலும்; கொடுங்கோல் மன்னனுக்கு முன்னால் சென்று ஹக்கினைக் கூறி அதற்காக கொல்லப்படுபவராகும்” என்றார்கள்.

எமது நாட்டைப் பொருத்தமட்டில் நாம் கொடுங்கோல் மன்னனுக்கு, அல்லது குப்ரிய தலைவர்களுக்கு முன்னால் நின்று ஹக்கினை கூறும் அளவிற்கு எமது அரசியல் போராட்டம் இப்போது விரிவடையவில்லை. எனினும் குப்ருக்கு எதிராகவும், குப்ர் சிந்தனைக்குப் பின்னால் முஸ்லிம் சமூகத்தை வழிநடாத்தும் முறைகெட்ட தலைவர்களுக்கு எதிராக சவால் விடும் அளவிற்கு எம்மை முதலில் தயார்படுத்த வேண்டியிருக்கிறது. இந்தப் பணியினை நாம் செய்யும் போது முதலில் சமூகம் எம்மை முழுமையாக எதிர்க்கலாம். எம்மிடமிருந்து வெருண்டோடலாம். கேலி செய்து சிரிக்கலாம். அல்லது எம்மை தமது இரும்புக்கைகளால் நசுக்க முற்படலாம். எனினும் இவையெல்லாம் எமது பாதையை விட்டும் எமது இலக்கை விட்டும் ஒரு அணுவளவும் எம்மை சறுகச்செய்து விடக்கூடாது. ஒரு கணப்பொழுதும் எம்மை தாமதப்படுத்தக்கூடாது. எனினும் இவற்றையெல்லாம் முகம் கொடுப்பதற்கு இந்த இஸ்லாமிய அரசியல் போராட்ட அமைப்பின் உறுப்பினர்களிடம் முக்கிய சில தகுதிகள் இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.

 இஸ்லாத்தின் கொள்கையின் மீது அசைக்கமுடியாத உறுதியான நம்பிக்கை இருத்தல்.

 இஸ்லாத்தின் கோட்பாடுகளுக்கு மாத்திரம் முழுமையான கட்டுப்பட்டவர்களாக இருத்தல்.

 நிகரற்ற தன்னம்பிக்கையும், எதற்கும் அஞ்சாத துணிவும்; இருத்தல்.

 முழுமையாக எம்மை அர்ப்பணித்து சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர்களாக இருத்தல்.

 இஸ்லாத்தை இந்த பூமியில் நிலைநாட்டல் அதனை மேலோங்கச்செய்தல் என்ற தமது இலக்கின் மீதும், அதற்காக ஒழுங்கு படுத்தப்பட்டுள்ள அரசியல் பாதையின் மீதும் முழுமையான நம்பிக்கை கொண்டிருத்தல்.

 குப்ருடனும், குப்ர் கோட்பாடுகளுடனும், குப்ர் அரசாங்களுடனும், அதன் பாராளுமன்றங்களுடனும் எவ்விதத்திலும் சமரசம் செய்யாதிருத்தல்.

 நிலைப்பாட்டில் விட்டுக்கொடுத்தலோ, அல்லது ஏமாற்றுதலோ செய்யாதிருத்தல்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அரசியல் போராட்டத்தில் அல்லாஹ்வுக்காக செய்கிறோம் என்ற தூய்மையும், ஷரிஆவுக்கு பூரணமாக கட்டுப்பட்ட நிலையில் நகர்கிறோம் என்ற உறுதிப்பாடும் மிக மிக அவசியமாகும்.

எனவே குப்ருக்கு எதிரான எமது அரசியல் போராட்டத்தில் எம்மிடம் இத்தகைய பண்புகள் வந்துவிட்டால் அதற்கு மேல் வெற்றியை அல்லாஹ்விடம் விட்டுவிட வேண்டியதுதான். இதற்கு மேல் எமக்கு இடஞ்சல்களையும், அநியாயங்களையும் செய்து எம்மை நசுக்க நினைப்பவர்களை அல்லாஹ் பார்த்துக் கொள்வான்.

அல்லாஹ் சொல்கிறான்

“நிச்சயமாக எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்தி; பின்னர், தவ்பா செய்து மீளவில்லையோ அவர்களுக்கு நரக வேதனையுண்டு; மேலும் கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு” (85:10)

எனவே சகோதரர்களே!

கொடுங்கோலர்களின் முன் எழுந்து நின்று ஹக்கை சொன்ன ஹம்ஷா(றழி) போன்ற ஸஹாபிகள் தியாகிகளின் தலைவர்கள் ஆனதுபோல் நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளப் போகின்றீர்களா? அல்லது இஸ்லாமிய கிலாபத்தின் எல்லைகளை விஸ்தரிப்பதிலே களமிரங்கிய முஹம்மத் பின் காசிம் அல்லது தாரிக் பின் சியாத் போன்ற இளைஞர்களைப் பின்பற்றப் போகின்றீர்களா? அல்லது வெகு சீக்கிரத்திலே உலகளாவிய கொடுங்கோல் வல்லரசுகளை வீழ்த்தியபடி நிலைகொள்ளப்போகிற கிலாபத் ராஸிதாவின் ஸ்;தாபகர்களாக உருவெடுக்க போகிறீர்களா? என்பதை நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

அல்லாஹ் எம்மை நேர்வழியில் செலுத்துவானாக. ஆமீன்.

Related Posts

தனிநபர் சீர்திருத்தத்தினால் மாத்திரம் ஓர் சமுதாயத்தை மாற்றிவிடலாமா?

தனிநபர் சீர்திருத்தத்தினால் மாத்திரம் ஓர் சமுதாயத்தை மாற்றிவிடலாமா?

July 27, 2021
முதல் ரமதான் உலகை புரட்சிகரமாக மாற்றியமைத்தது!

முதல் ரமதான் உலகை புரட்சிகரமாக மாற்றியமைத்தது!

April 14, 2021

இஸ்லாத்தை புனரமைக்கக் கோருபவர்களுக்கு அல்லாஹ்(சுபு)வின் நேரடி பதில்!

September 20, 2020

இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வழிமுறை

January 5, 2020
Next Post
கிலாஃபத் அழிக்கப்பட்ட வரலாறு உங்களுக்கு தெரியுமா? இதோ ஒரு சுருக்க வரலாறு

கிலாஃபத் அழிக்கப்பட்ட வரலாறு உங்களுக்கு தெரியுமா? இதோ ஒரு சுருக்க வரலாறு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

சமீபத்திய இடுகைகள்

  • உசூலுல் ஃபிக்ஹிற்கும், அல் கவாஇத் அல் ஃபிக்ஹிய்யாஹ்வுக்கும் இடையான வேறுபாடு
  • இலங்கையின் பொருளாதார நெருக்கடி முஸ்லிம்களின் கண்களைத் திறக்குமா?
  • தீவிர இந்துத்துவா பாதையிலா திருமலை சண்முகா கல்லூரி?
  • சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!
  • இந்திய முஸ்லிம்களின் ‘இனப்படுகொலை’ ஐ இனி எதிர்பார்க்கலாம் – Dr. Gregory Stanton!

சமீபத்திய கருத்துகள்

  • Face to true on கொரோனா வைரஸ் மரணங்களுக்கு தகனத்தை கட்டாயமாக்கியது இலங்கை!
  • Fareed on கிலாஃபா மட்டுமே மக்கள் நல அரசு!
  • Nizamhm on இலங்கையில் முஸ்லிம் விரோத பிரச்சாரத்திற்கு சீனா தலைமை! தெரண களத்தில்!
  • Abdullah on கொரோனா வைரஸ் மரணங்களுக்கு தகனத்தை கட்டாயமாக்கியது இலங்கை!
  • Admin on இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களும் தகனம் செய்யப்படலாம்!

காப்பகம்

  • June 2022
  • April 2022
  • February 2022
  • January 2022
  • December 2021
  • September 2021
  • August 2021
  • July 2021
  • June 2021
  • April 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020
  • October 2020
  • September 2020
  • August 2020
  • July 2020
  • June 2020
  • May 2020
  • April 2020
  • March 2020
  • February 2020
  • January 2020
  • December 2019
  • October 2019
  • September 2019
  • May 2019
  • April 2019
  • February 2019
  • July 2018
  • May 2018
  • March 2018
  • January 2018
  • December 2017
  • October 2017
  • February 2017
  • January 2017
  • November 2016
  • September 2016
  • August 2016
  • July 2016
  • June 2016
  • May 2016
  • April 2016
  • March 2016
  • February 2016
  • January 2016
  • December 2015
  • November 2015
  • October 2015
  • August 2015
  • March 2015
  • September 2014
  • August 2014
  • July 2014
  • May 2014
  • April 2014
  • March 2014
  • February 2014
  • November 2013
  • October 2013
  • September 2013
  • March 2013
  • February 2013
  • July 2012
  • December 2011

பிரிவுகள்

  • Uncategorized
  • YouTube சேனல்
  • அகீதா
  • அறிக்கைகள்
  • ஆய்வு
  • உசூலுல் பிக்ஹ்
  • எண்ணக்கரு
  • ஒலி
  • ஒளி
  • கட்டுரைகள்
  • கிலாஃபா
  • சிந்தனை
  • செய்திகள்
  • செய்திப்பார்வை
  • தஃவா
  • நடப்பு விவகாரம்
  • நிகழ்வுகள்
  • பிக்ஹ்
  • பிரசுரங்கள்
  • பொருளாதாரம்
  • யதார்த்தம் எது ?
  • வரலாறு
  • வலையொலி

சமீபத்திய இடுகைகள்

  • உசூலுல் ஃபிக்ஹிற்கும், அல் கவாஇத் அல் ஃபிக்ஹிய்யாஹ்வுக்கும் இடையான வேறுபாடு
  • இலங்கையின் பொருளாதார நெருக்கடி முஸ்லிம்களின் கண்களைத் திறக்குமா?
  • தீவிர இந்துத்துவா பாதையிலா திருமலை சண்முகா கல்லூரி?
  • சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!
  • இந்திய முஸ்லிம்களின் ‘இனப்படுகொலை’ ஐ இனி எதிர்பார்க்கலாம் – Dr. Gregory Stanton!

பிரிவுகள்

Uncategorized YouTube சேனல் அகீதா அறிக்கைகள் ஆய்வு உசூலுல் பிக்ஹ் எண்ணக்கரு ஒலி ஒளி கட்டுரைகள் கிலாஃபா சிந்தனை செய்திகள் செய்திப்பார்வை தஃவா நடப்பு விவகாரம் நிகழ்வுகள் பிக்ஹ் பிரசுரங்கள் பொருளாதாரம் மல்டி மீடியா யதார்த்தம் எது ? வரலாறு வலையொலி
No Result
View All Result
  • நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்

© 2020 www.darulaman.net