ஹிஜாப் அணிவதை தடை செய்வோம்- இலங்கை அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் பாசிச பொதுபல சேனா!

பிரசுரங்கள் 23 மார்ச் 2013

ஹிஜாப் அணிவதை தடை செய்வோம்- இலங்கை அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் பாசிச பொதுபல சேனா!

இன மத ரீதியான கடும்போக்கு பாசிச பாணியில் இலங்கையில் பெளத்த மேலாதிக்கத்தை நிறுவ முற்படும் பொதுபல சேனா இயக்கம் கடந்த 17ம் திகதி கண்டியில் இடம்பெற்ற தனது பேரணியில், தாம் முஸ்லிம் பெண்கள் ஜில்பாப் அணிவதை தடை செய்யும் பிரச்சாரத்தை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. கடந்த சில காலமாக முஸ்லிம் பெண்கள் ஜில்பாப் (ஹபாயா) அணிவதை கொச்சைப்படுத்தி வரும் இவ்வமைப்பு, அதை அணியும் முஸ்லிம் பெண்களை பௌதீக ரீதியாக தாக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இஸ்லாத்திற்கெதிராக வெறுப்பையும் விரோதத்தையும் தப்பான எண்ணத்தையும் ஏற்படுத்தும் இவர்களின் பல நடவடிக்கை பட்டியலில் தற்போது இந்த விவகாரம் இணைக்கப்பட்டுள்ளது..

இந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் சில நகரங்களில் முஸ்லிம் பெண்களை வீதிகளில் தடுத்து நிறுத்தி அவர்கள் அணிந்துள்ள ஜில்பாபை கழட்டுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்கள். திக்வள்ள நகரில் இஸ்லாமிய உடை அணிந்த மூன்று முஸ்லிம் பெண்கள் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். அண்மைக்காலமாக பொதுபல சேனா சிங்கள பௌத்தர்களுக்கு முஸ்லிம்களின் வியாபாரங்களை புறக்கணிப்பு செய்யும் படியும் இலங்கையில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு ஹலால் சான்றிதல் வழங்கும் முறையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் பாரியளவில் பிரசாரம் மேற்கொண்டது. இந்த அமைப்பு இலங்கையின் சிங்கள இனவாத கொள்கை கொண்ட மகிந்த ராஜபக்சாவின் அரசாங்கத்தின் மறைமுக ஆதரவைக் கொண்டிருப்பதால், முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களை எவ்விதக் கட்டுபாடுமில்லாமல் இவர்களால் மேற்கொள்ள முடிகிறது.

இவர்கள் இதுவரை காலமும் மேற்கொண்டு வரும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டனம் செய்யவோ தடுத்து நிறுத்தவோ இலங்கை அரசு முயலவில்லை. மாறாக மார்ச் 9ம் திகதி பொதுபல சேனாவின் பெளத்த தலைமைத்துவ பாசறையின் தலைமையகத்தை திறந்து வைப்பதற்கு பிரதம அதிதியாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச கலந்து கொண்டு தனது ஆசிர்வாதத்தை தெரிவித்துள்ளார். அங்கே உரையாற்றும்போது " காலத்தின் தேவை” கருதியே தான் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதாகவும், பொதுபல சேனாவின் பிக்குமார்கள் நாட்டின்தேசிய முக்கியத்துவம்” மிக்க செயற்பாடொன்றில் ஈடுபட்டுவருவதாகவும், அது குறித்து எவரும் பீதியடையவோ, சந்தேகம் கொள்ளவோ தேவையில்லை என்றும் குறிப்பிடிருந்தார்.

முஸ்லிம் பெண்களை கொச்சைப்படுத்தும், முஸ்லிம் சமூகத்தை ஓரம்கட்டும் பொதுபல சேனாவின் இந்த " தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணிக்குஇலங்கை அரசு ஆதரவு நல்குவதனூடாக ராஜபக்ச அரசு, பொதுபல சேனாவின் பாசிச இன வாத கொள்கையை தனது கொள்கையாக்கியுள்ளது. இலங்கை அரசு பர்மா போன்ற சர்வாதிகார தேசங்களைப் போல் இனவாதத்தை தூண்டி சிறுபான்மையை ஒடுக்குவதன் மூலம் பெரும்பான்மை மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை அதிகரிக்க முயல்கிறது. வேறுபாடு, பிரிவு மற்றும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் தேசிய வாத சிந்தனையிலிருந்து பிறக்கும் இனவாத அரசியல் இன்று இலங்கை முஸ்லிம் பெண்களை பலிக்கடாவாக்கியுள்ளது. நீதியற்ற இந்த சாக்கடை அரசியலுக்கு மாற்றமாக இஸ்லாமிய கிலாபா அரசு தனது சிறுபான்மை குடிமக்களை இன, மத வேறுபாடின்றி அவர்களின் நம்பிக்கை, கண்ணியம், உயிர், உடமை அனைத்தையும் பாதுகாக்கும் அரணாக செயற்படும்.

 

ஹிஸ்ப உத் தஹ்ரிரின் பெண்கள் பிரிவு இலங்கையின் பொதுபல சேனாவிற்கும் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்கும் பின்வரும் அறிக்கையை விடுக்க விரும்புகிறது.

இலங்கையில் முஸ்லிம் பெண்களுக்கும் இஸ்லாமிய கொள்கைகளுக்கும் எதிரான உங்கள் நடவடிக்கைகள் உலக அரங்கில் கவனிக்கப்படாது போய் விடும் என்று நீங்கள் எண்ண வேண்டாம்! நாம் முஸ்லிம் பெண்களுக்கெதிரான இந்த அநீதி குறித்து பரந்த அளவில் விழிப்புணர்ச்சியை சர்வதேச ரீதியாகவும் ஊடகங்கள் மூலமாகவும் ஏற்படுத்தி உலகில் நீதியின் பால் சாரும் அணைத்து மக்களையும் உங்களுக்கு எதிராக திரட்டி உலகில் கொடுங்கோலர்களின் பட்டியலில் உங்களையும் சேர்க்கச்செய்வோம்.

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் அவர்கள் 1.5 பில்லியன் தொகை பலம் மிக்க உம்மாஹ்வின் ஒரு அங்கத்தவர் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். இந்த பலம்மிக்க உம்மாஹ் உங்கள் இனவாத பாசிச நடவடிக்கைகளை பார்த்துகொண்டு மௌனமாக இருக்கும் என்று என்ன வேண்டாம்!. உலகம் பூராகவும் உள்ள முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் கிலாபத் வெகுவிரைவில் வருவது நிச்சயம் என்பதை பதிவுசெய்து கொள்ளுங்கள்! இன்ஷா அல்லாஹ்! யார் யாரெல்லாம் முஸ்லிம்களைத் துன்புறுத்தி அநியாயம் செய்திருக்கிறார்களோ அவர்களுக்கெதிராக மிகக் கடுமையான நடவடிக்கையை அந்த கிலாஃபத் எடுக்கும் என்பதில் உங்களுக்கு சந்தேகம் வரக்கூடாது.

 

இலங்கை முஸ்லிம் சகோதரிகளே!

இந்த இனவாத மிரட்டல்களுக்கும் சூழ்ச்சிகலுக்கும் அஞ்சி உங்கள் தீனையும் அல்லாஹ்வுக்கு அடி பணிவதிலும் சமரசம் செய்துவிடாதீர்கள். உலகங்களை படைத்த வல்ல நாயன் அல்லாஹவின் துணையும் முழு உலக முஸ்லிம் உம்மத்தின் ஆதரவும் உங்களுக்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.

உங்கள் ஈமானிய பலத்தால், அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்ட இஸ்லாமிய உடை நெறியை உறுதியாக பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள். கிலாபா வெகு தொலைவிலில்லை . அது உங்களுக்கு நிச்சயம் புகலிடம் அளிக்கும். எனவே உங்களது உடை குறித்து குறித்து கேள்வி எழுப்புவர்களுக்கு இப்ராஹிம் (அலை) அவர்கள் சிலை வணங்குபவர்களுக்கு எவ்வாறு பதிலளித்தர்களோ அவ்வாறு பதிலளியுங்கள்.

 

وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُم بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ عَلَيْكُمْ سُلْطَانًا ۚ فَأَيُّ الْفَرِيقَيْنِ أَحَقُّ بِالْأَمْنِ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ

உங்களுக்கு அவன் எந்த அத்தாட்சியும் இறக்கி வைக்காமலிருக்கும்போது நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது பற்றி பயப்படவில்லை - அப்படியிருக்க நீங்கள் (அவனுக்கு) இணைவைப்பவற்றுக்கு நான் எப்படி பயப்படுவேன்? நம் இருபிரிவினரில் அச்சமின்றி இருக்கத்தகுதி உடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், (கூறுங்கள் எனவும் கேட்டார்)  (md; Mk;: 81)

 

 

Dr. நஸ்ரின் நவாஸ்

த்திய ஊடகத்துறை அலுவலக இயக்குநர்

ஹிஸ்புத் தஹ்ரீர்

உங்கள் கருத்தை இணைக்க


Security code
Refresh