செய்திப்பார்வை

முஸ்லிம்கள் மீதான ட்ரம்பின் தடை தேசிய அரசுகளின் இயலாமைக்கு இன்னுமொரு உதாரணம்!

செய்திப்பார்வை 10 பிப்ரவரி 2017

டொனால்ட் ட்ரம்ப், உலகின் கவனத்தை கடந்த சில வாரங்களாக தன் பக்கம் திருப்பியிருந்ததை அவதானித்திருப்பீர்கள். அதற்கு அவர் விசேடமாக எந்த உபாயத்தையும் பாவிக்கவில்லை. தான் தேர்தல் வாக்குறுதியாக முன்மொழிந்த அதே முட்டாள் கொள்கைகளை பதவியில் அமர்ந்ததன் பின்னாலும் மென்மேலும் முன்மொழிந்ததும், அவற்றையே சுடச்சுட அமூல்படுத்தியதுமே அத்தகைய ஊடகக் கவனயீர்ப்புக்கு காரணமாகும். மீதியை மேற்குலக ஊடகங்களும், லிபரல்(தாராளவாத) விமர்சகர்களும் தமது வழமையான பாணியிலே செய்து முடித்தனர். ட்ரம்பின் வடிவில் தமது நாகரீகத்திற்கும், அதன் வாழ்க்கை நெறிக்கும், விழுமியங்களுக்கும் பெரும் ஆபத்து வந்துவிட்டது என ஊதிப்பெருப்பித்து ஒரு போலிக்கருத்தாடலை அனுதினமும் வெளியிட்டுக் கெண்டிருந்தனர்.

நூற்றாண்டு காலமாக நாம் பல அர்ப்பணிப்புக்களைச் செய்து பாதுகாத்த சமத்துவம்(equality), பன்மைத்துவம்(pluralism) போன்ற உயரிய சிந்தனைகளை துச்சமென மதித்து தூக்கி வீசுகிறாரே! எமது அமெரிக்க மாண்புகளை பிரதிபளிக்காமல் ஒரு நாசிசக் காரனைப்போல செயற்படுகிறாரே! என்றெல்லாம் அவர்கள் கேள்விக்கணைகளை தொடுத்தனர். இந்த பாதிக்கப்பட்ட லிபரல் வாதிகளின் உணர்ச்சி ததும்பிய பேச்சுக்களுக்கும், அங்கலாய்ப்புக்களுக்கும் இடையே தீவிர வலதுசாரியான டொனால்ட் ட்ரம்ப் தனது தீர்மானங்களை எதன் அடிப்படையில் எடுக்கிறார் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

கடுமையான விமர்சனங்களை சந்தித்துவரும் டொனால்ட் ட்ரம்ப்பின் வெளி விவகாரக் கொள்கையையும், எல்லைப் பாதுகாப்புக் கொள்கையையும் அவர் எதனை அடிப்படையாகக் கொண்டு தீர்மானித்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எவரை நாட்டுக்குள் விடுவது, எவருக்கு அனுமதி மறுப்பது என்பதை தீர்மானிப்பதற்கு அவர் பாவிக்கின்ற அளவுகோல் பற்றி நாம் ஆராய வேண்டும். இங்குள்ள பிரச்சனை சில முஸ்லிம் நாட்டவர்களை அவர் அமெரிக்காவுக்குள் அனுமதிக்க மறுக்கிறார் என்பதல்ல அல்லது ட்ரம்ப் நிறுவாகமும், ஊடகங்களும் சொல்வதைப்போல 'இஸ்லாமிய பயங்கரவாதம்' என்ற பூச்சாண்டியுமல்ல.    மாறாக இங்குள்ள பிரச்சனை ஐக்கிய அமெரிக்கா உட்பட நவீன கால தேசிய அரசுகளின்(nation state) அடிப்படை யதார்த்தத்துடனும், இயல்புடனும் தொடர்புபட்டது. பிரச்சனை தேசியவாதத்துடனும், தேசிய அரசுக்கோட்பாட்டுடனும் சம்பந்தப்பட்டது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் மேலால், அனைத்துக்கும் மேலால் தனது தேசத்தை, தேசத்தின் பெருமையை, தேசத்தின் மேலாதிக்கத்தை நிறுவ முற்படும் ஒருவர் தனது நாட்டின் மீதான ஆபத்துக்களையும், அச்சங்களையும் தவிர்ப்பதற்காக தனது நாட்டின் இனத்தையும், கலாசாரத்தையும் சேராத, பிரதிபலிக்காத மக்கள் அனைவரையும் தவிர்க்கும் அல்லது தடுக்கும் காரியத்தையே நாம் ட்ரம்பின் நடவடிக்கையில் காண்கிறோம். இது முழுக்க முழுக்க தீவிர தேசியவாத சிந்தனையின் விளைவேயன்றி வேறல்ல.

இயல்பாக தேசியவாத அரசாங்கங்கள் தமது தேசங்களையும், மக்களையும் போட்டி மனோபாவத்தின் திசையிலும், முரண்பாடுகளின் திசையிலும் வழி நடாத்துகின்றன. தேசிய அரசுகள் பகைமையான சூழலையும், தேசங்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும், மேலாதிக்கச் சிந்தனையையும் ஸ்தாபனமயப்படுத்தி விடுகின்றன. எனினும் பலர் முன்மொழிவதைப்போல இந்த அடிப்படைச் சிக்கலுக்கான தீர்வு மதச்சார்பற்ற சிந்தனையை மேன்மேலும் கவனமாக அமூல்படுத்துவதோ அல்லது பன்மைத்துவம், சமத்துவம், அமெரிக்க உறைவிடம்(American melting pot) என்ற கற்பனை போன்றவற்றை கடைபிடிப்பதோ அல்ல. இன்று ட்ரம்ப் போன்றோர்கள் முன்வைக்கும் சித்தாந்தத்திற்கு அவை எதுவும் தீர்வாக அமையாது. ஏனெனில் இந்த சிந்தனைகள் யாவும் அமெரிக்காவை வரையறுக்கும் சிந்தனைகளாகக் கொள்ளப்பட்டாலும் கூட அவை தீவிர வலதுசாரிகளான ட்ரம்ப் போன்றோர்களின் வருகையை, வளர்ச்சியை ஒருபோதும் தடுக்கப் போதுமானவை அல்ல. மாறாக இந்தச் சிந்தனைகளை விட அமெரிக்க சமூகத்தில் ஆழப்படிந்துள்ள வலிமையும், வீரியமும் கொண்ட தேசியவாதம், தேசியநலன், தேசிய அரசுகள் பற்றிய சிந்தனைகள் பல ட்ரம்ப்களை சுகப் பிரசவம் செய்யும் வலிமை கொண்டவை. எனவேதான் அமெரிக்கா போன்ற மேற்குலக சமூகத்தில் எப்போது தேசியமும், தேசிய அடையாளமும் பாரிய ஆபத்தை சந்திக்கிறது என பரப்புரை செய்யப்படுகிறதோ அப்போதெல்லாம் ஹிட்லரும், சேர்ச்சிலும், ட்ரம்பும் பிரசவித்து விடுகின்றனர்.

எனவே உலக அரங்கில் ஹிட்லர், சேர்ச்சில், ட்ரம்ப் போன்றோர்களை தவிர்க்க வேண்டுமென்றால் அவர்களை கருக்கோள்ளும் கருவறையான தேசியவாதத்தை நாம் முற்றாக அகற்றிவிட வேண்டும். உலகம் தேசிய அரசுகள் என்ற அரச மாதிரியை கைவிட்டு, அனைத்து மக்களுக்கும், தேசங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு மாதிரியை இனம் காண வேண்டும். அத்தகைய அரச மாதிரி தேசிய எல்லைகளைக் கடந்து பூகோளமயமானதான இருக்கும். சுத்தமாக அறிவார்ந்த மற்றும் சட்டாதிக்கத்தின் அடிப்படையில் அமைந்த அரச மாதிரியாக இருக்கும். அவ்வாறு தோன்றுகின்ற அந்த அரசு முழு மனிதகுலத்தையும் தனது பிரஜைகளாக உள்வாங்கும் கொள்கை விசாலம் கொண்டது. அத்தகைய ஒரு அரசுக்குள் தாராளவாத மற்றும் சோசலிச அரச முறைமைகளின் குறைபாடுகளால் எதிர்வினையாகத் தோன்றிய பன்மைத்துவம், சமத்துவம் போன்ற மேற்குலகப் சிந்தனைகளுக்கு தேவையே இருக்காது. அந்த அரசில் இன, குல, மத பேதங்களைக் கடந்து நாட்டு மக்கள் யாவரும் பூரண உரித்துடைய சமமான பிரஜைகளாகக் கையாளப்படுவார்கள். அங்கே சம அந்தஸ்திலிருந்து அனைவரும் இயங்குவதால் பகைமை, போட்டி, மேலாதிக்க உணர்வு என்பற்றிற்கான முகாந்திரமே இருக்காது. அத்தகைய உன்னதமான அரசை இஸ்லாமிய கிலாஃபா அரசால் மாத்திரமே பிரதிபளிக்க முடியும். அந்த கிலாஃபா அரசால் மாத்திரமே உலகெங்கும் புரையோடிப்போயிருக்கும் தேசிய மற்றும் இன ரீதியான குரோதங்களிலிருந்து மனிதகுலத்தை பாதுகாத்து ஒன்றிணைக்க முடியும். இதுதான் உண்மையும், ஒவ்வொரு முஸ்லிமும் உறுதியாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நம்பிக்கையுமாகும்.

எனினும் கவலைக்கிடமான விடயம் என்னவென்றால் முஸ்லிம்களில் பலர் அதிலும் குறிப்பாக தாராளவாத, சடவாத மேற்குலகில் வாழுகின்ற முஸ்லிம்களில் பலர் ட்ரம்பினைச் சூழ்ந்து உருவான கருத்தாடல்களில் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டு தமது வாதங்களைக் கட்டமைக்காமல் தாராளவாதிகளின் மிகைப்படுத்தல்களுடன் கைகோர்த்தே தமது வாதங்களை முன் வைக்கின்றனர். இதனால் கடுமையாக விவாத்திற்குட்படுத்தப்பட வேண்டிய தேசியவாதச் சிந்தனைகள் தப்பிப்பிழைத்து நயவஞ்சகத்தனமான தாராளவாத சிந்தனைகளில் கருத்தாடல்கள் திசை திருப்பி விடுகின்றன.

எனவே நாங்கள் உலகில் வியாபித்திருக்கின்ற தாராளவாதம் போன்ற சடவாத சிந்தனைகளின் அடிப்படையில் சிந்திப்பதிலிருந்து விலகாத வரையில், அல்லது உலகம் எதிர்நோக்குகின்ற அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சனைகளுக்கு தூய இஸ்லாமிய சிந்தனையிலிருந்து தீர்வுகளை முன்வைக்காத வரையில் உலகம் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளின் ஓர் அங்கமாக நாமும் மாறி விடுவோம். சத்தியத்தைக் கொண்டு முழு மனிதகுலத்திற்கும் சான்று பகர வேண்டிய முஸ்லிம் உம்மத் குப்பார்களிடம் கையேந்தி எங்களுக்கும் அடைக்களம் தாருங்கள், எங்களையும் சமமாக நடத்துங்கள் என இரந்து நிற்பது நிச்சயம் உசிதமானது அல்ல.

தம்மைப்போன்ற சக மனிதர்களை இனத்தின், மதத்தின், தேசியத்தின் அடிப்படையில் பாகுபடுத்தி ஒருவரையொருவர் ஒடுக்கி வாழ நினைக்கும் இந்த உலகில் முழு மனித சமூகத்தையும் எவ்வாறு கட்டியாள்வது, எவ்வாறு வழிநடத்துவது என்பதற்கு நாம் தான் முன்மாதிரியாய் இருக்க வேண்டும். தூய்மையான குடியுரிமைக் கொள்கை எவ்வாறு அமைய வேண்டும்?, வேறுபட்ட இனக்குழுக்களும், வேறுபட்ட மதக்குழுக்களும் எவ்வாறு ஒரே தேசத்தின் அங்கங்களாக வாழ முடியும்? ஒரு நாட்டின்  வெளிவிவகாரக் கொள்கையும், எல்லைப் பாதுகாப்புக் கொள்கையும் எதனடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்? குடிவரவுக் கொள்கைக்கும், வீசா நடைமுறைகளுக்கும் எவை நியமங்களாக இருக்க வேண்டும் என்பதை உலகுக்கு இனம் காட்டுகின்ற உம்மத்தாக நாம் மாற வேண்டும். எமது அரசியல் வழக்கங்கள் சர்வதேச தராதரங்களாகப் போற்றப்படும் அளவுக்கு நாம் மேன்மை பெற வேண்டும். இத்தகையோர் உன்னதமான நிலையை கிலாஃபா ராஷிதாவின் மீள்வருகையால் மாத்திரமே சாத்தியப்படுத்த முடியும்.

எத்தகையதொரு பாரிய அரசியல் மாற்றத்திற்கான முதற்படி, அதன் அறிவார்ந்த அடிப்படையை முழுமையாகத் தழுவுவதும், ஆதிக்கத்திலுள்ள அறிவார்ந்த அடிப்படைக்கு எதிராக அதனை வலிமையாகப் பிரயோகிப்பதாகும். கிலாஃபத் என்ற அரசியல் மாற்றத்தைப் பொருத்தமட்டில் தௌஹீத்தை அதன் அரசியல் பரிமாணத்துடன் தழுவுவதும், சடவாதத்தையும், தாராளவாதத்தையும் நிராகரிப்பதுமே அதன் பொருளாகும்.

 

சகோதரர் அப்துல் ராஸிக்கின் கைதை ஏன் முஸ்லிம் சமூகம் கொண்டாட முடியாது?

செய்திப்பார்வை 18 நவம்பர் 2016

 

சிறீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் சகோதரர் அப்துல் ராஸிக் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக முஸ்லிம் சமூகத்திற்குள் எதிரும் புதிருமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவதையும் நாம் காண்கிறோம். இந்நிலையில் சகோதரர் அப்துல் ராஸிக்கின் கைதை நாம் எவ்வாறு அணுக வேண்டும் என்பது பற்றியும், இலங்கையில் அடிக்கடி முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டப்படும் இன, மத வாத சர்ச்சைகளுக்கு யார் பொறுப்புச் சொல்ல வேணடும் என்பது தொடர்பான சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். அவை எதிர்காலத்திலும் இது போன்ற நிகழ்வுகளை நாம் நிதானமாய் அணுகுவதற்கு உறுதுணையாய் இருக்கும் என்று நம்புகிறோம்.

 

1) சகோதரர் அப்துல் ராஸிக்கின் கைது முஸ்லிம் சமூகம் எவ்வாறு நோக்க வேண்டும்?

முதலில் அப்துல் ராஸிக் என்பர் எமது உம்மத்தைச் சேர்ந்த ஓர் இஸ்லாமியச் சகோதரர் என்ற அடிப்படையில் அவரின் நலனும் எமது சமூகத்தின் நலனும் ஒன்றுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்; தனது அழைப்புப்பணியில் சதாரண ஒரு மனிதன் என்ற அடிப்படையில் சில தவறுகளை விட்டிருக்கலாம். நாம் அவருடனும், அவர் சார்ந்த இயக்கத்துடனும், அவர்களின் போராட்ட வழிமுறைகளுடனும் முரண்பாடுகளைக் கொண்டிருக்கலாம். எனினும் அந்த தவறுகளும், முரண்பாடுகளும் அந்நியர்களின் கைகளில் ஒரு முஸ்லிமை இலகுவாக தாரைவார்க்கின்ற மனோநிலைக்கு எம்மைத் தள்ளிவிடக்கூடாது. அது இஸ்லாம் கூறுகின்ற சகோதரத்துவ மனப்பாங்கிற்கு நேர் எதிரானதாகும். இன்று ஒரு சகோதரனை அல்லது ஒரு இயக்கத்தை காட்டிக்கொடுக்கின்ற, தனிமைப்படுத்துகின்ற அல்லது அந்தரத்தில் விடுகின்ற முன்மாதிரியை நாம் உருவாக்கி விடுகின்ற போது நாளை வேறொரு அரசியற் களத்தில் எமது சமூகத்தின் வேறு அங்கங்களுக்கும் இதுபோன்ற நிலை தோன்றும் போதும் எமது சமூகம் இத்தகைய முன்மாதிரியையே பின்பற்றும். அது பலம் வாய்ந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்புதவற்கும், எமது சமூக இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் ஆபத்தானதாகும். அந்த மனோநிலை எம்மை எதிரியின் முன் பலகீனப்பட்டு மண்டியிடச் செய்துவிடும்.

முஸ்லிம்களின் நியாயமான உரிமைக்காக சாத்வீகமான முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு கூட தடையாக இருந்த, தம்மீதும், முஸ்லிம் சமூகத்தின் மீதும் தொடர்ந்தும் தேவையற்ற தொந்தரவுகளை ஏற்படுத்தி வந்த ஞானசார தேரரை கடுமையான வார்த்தைகளால் எச்சரித்த சகோதரர் அப்துல் ராஸிக்கின் செயற்பாட்டையும் இனவாத, மதவாதத் தீயை மூட்ட நினைக்கின்ற டான் பிரியசாத் போன்றவர்களின் அடாவடித்தனமான செயற்பாடுகளையும் ஒரே தரத்தில் சித்தரிக்க நினைப்பது எந்த அளவுகோலின்படியும் நியாயப்படுத்த முடியாது.

டான் பிரியசாத்தின் தீவிரவாத மதவாதக் கருத்துக்களையும், வன்முறையைக் கொப்பளிக்கும் வார்த்தைகளையும், அவனும் அவனது குழுவும் எதிர்காலத்தில் மேற்கொள்ள இருப்பாதகக் கூறிய திட்டங்களையும் சமூக வலைத்தளங்களின் ஊடாக அறிந்தவர்கள் அவனுக்கும், அப்துல் ராஸிக்கும் இடையில் இருக்கின்ற வேறுபாட்டை புரிந்து கொள்ள சிரமப்பட வேண்டியதில்லை.

பௌத்த சங்கத்தை சேர்ந்தவர் என்பதற்காகவும், காவியுடை அணிந்திருக்கிறார் என்பதற்காகவும் ஒருவரின் அளவுகடந்த அத்துமீறல்களை ஆரோக்கியமான எந்த சமூகமும் அனுமதிக்கக் கூடாது. அந்தவகையில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக போலிப்பிரச்சாரங்களை பரப்பி, பௌத்த மக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டி நாட்டின் சட்டத்தையும், பொது அமைதியையும் சீரழிக்கின்ற வகையில் தொடர்ந்து செயற்பட்டுவரும் ஞானசேர தேரர் போன்றவர்கள் பகிரங்கமாகவும் வன்மையாகவும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே.

எனினும் அந்தக் கண்டிப்பை கடிவாளமிட்டும், அரசியல் முதிர்ச்சியுடனும் வெளிப்படுத்தாது விட்டதே அப்துல் ராஸிக் விட்ட தவறு. எனவே அவர் நிதானம் தவறாமல் இருந்திருக்கலாம், சில வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம் என்ற விமர்சனத்தை அவர் மீதும், அவர் சார் இயக்கத்தின் மீதும் முன்வைப்பது நியாயமானதுதான். எனினும் இத்தகைய தவறுகளைக் காரணம் காட்டி அந்நியர்கள் செய்வதைப்போல் அப்துல் ராஸிக்கை நாட்டின் இன நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பவராகவும், கடும்போக்கு மதத்தீவிரவாதியாகவும் நாமும் சித்தரிக்க நினைப்பது நியாயமற்ற செயற்பாடாகும்.

மேலும் அப்துல் ராஸிக்கின் கைதை தௌஹீத் ஜமாத், தப்லீக் ஜமாத் முரண்பாட்டு கண்ணாடியினூடாகவோ, தௌஹீத் ஜமாத், தரீக்கா முரண்பாட்டுக் கண்ணாடியினூடாகவே பார்ப்பது மிகவும் தவறானதாகும். இத்தகைய குழுவாத மனோநிலைகள் நிலைமையை நியாயமாக அணுகுவதற்கு வழிவிடாது. அவை காழ்ப்புணர்வையும், காட்டிக்கொடுப்புக்களையுமே உருவாக்கும்.

அதேபோல எமது சமூகத்தில் இருக்கின்ற மிதவாத போக்குடைய இயக்கங்கள் மற்றும் வலையமைப்புக்கள் போன்றன, இது போன்ற நிகழ்வுகளை முஸ்லிம்களில் தீவிரவாத சிந்தனை கொண்ட தரப்புக்களாக தாங்கள் கருதுபவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த நினைப்பதும் துரோகத்தனமானதாகும். இத்தகைய மனோநிலை முஸ்லிம் சமூகத்தினது ஒற்றுமையை கேள்விக்குறியாக்கி, எம்மை மென்மேலும் பலகீனப்படுத்தி எதிரிக்கு இரையாக்கவே வழிவகுக்கும்.

மேலும் முஸ்லிம் அரசியல் வாதிகள் தமது குறுகிய அரசியல் இலாபத்தை அடைந்து கொள்வதற்கும், தமது எதிராளிகளை கருவறுக்கவும் இத்தகைய சந்தர்ப்பங்களைப் பாவிப்பதற்கு முஸ்லிம் சமூகம் ஒருபோதும் அனுமதித்து விடக்கூடாது.

மேலும் இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபடும்போதும், சமூக உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்கும்போதும் எல்லாச் சந்தர்ப்பத்திலும் அனைவரையும் திருப்த்திப்படுத்தலாம் என நாம் நினைக்கலாகாது. சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டுகின்ற போதும், சில அநியாயங்களை பகிரங்கமாக தட்டிக்கேற்கின்றபோதும் எம்மை நோக்கி எதிர்ப்பலைகள் எழலாம். அந்நிய மக்களில் சிலர் எமது கருத்துக்களை தீவிரவாதக் கருத்துக்களாகவும், மத நிந்தனைக் கருத்துக்களாகவும் பார்க்கக்கூடிய ஆபத்துக்கள் தோன்றலாம். எனினும் அவை அனைத்தும் முழுக்க முழுக்க எமது பிழையான அணுகுமுறையின் விளைவுகள்தான் என்று நாம் கருத வேண்டியதில்லை. அதற்கு வேறுபல காரணங்கள் இருக்கலாம். எனவே குற்றம் வெளியே இருக்கின்றபோது தொடர்ந்து எம்மை நாமே குறை கண்டுகொண்டிருப்பது சாணக்கியமான நடவடிக்கையாக இருக்காது. செய்யாத குற்றத்திற்கெல்லாம் எம்மை திருத்திக் கொள்ள வேண்டும் எனச் சொல்கின்ற அக்கறை குற்றத்தை செய்பவர்களை தோலுரித்துக் காட்டுவதிலும், அவை மீண்டும் ஏற்படாமல் தடுப்பதிலும் வரவேண்டும். மறுபக்கத்தில் நாம் விடும் சில தவறுகளால் வம்புகளை விணாக விலைக்கு வாங்கிக் கொள்ளும் முட்டாள்தனத்தையும் நாம் செய்துவிடக்கூடாது என்பதை நாமும் மறுக்க வில்லை.


2) இன, மத கடும்போக்கு வாதம் பரவுவதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? நாம் என்ன செய்ய வேண்டும்?

நாம் முதலில் ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் தொடர்பாக எழுந்த சர்ச்சை தொடக்கம் இன்று அப்துல் ராஸிக் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது வரைக்கும் நிகழ்ந்த சம்பவங்களுக்கு இன்றைய நல்லாட்சி அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஏனெனில் முஸ்லிம் தனியார் சட்டத்திருத்த விடயம் தொடர்பாக முஸ்லிம்களுடன் முறையாக ஆலோசிக்காமல் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட நினைத்ததன் விளைவுதான் முஸ்லிம்கள் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. சிறீ லங்கா தௌஹீத் ஜமாத் போன்ற அமைப்புக்களை வீதிக்கு இறக்கி ஆர்பாட்டத்தில் ஈடுபட நிர்ப்பந்தித்தது.

அதேபோலவே ஞானசார தேரர் போன்றவர்கள் நாட்டில் இனவாதத்தையும், மதத்தீவிரவாதத்தையும் விதைத்து வருகின்ற நிலையில் அவர்களை அரசு சுதந்திரமாக உலவ விட்டதன் விளைவுதான், தௌஹீத் ஜமாத்தின் ஆர்பாட்டத்தை பொலிஸ் தடுத்து நிறுத்தவில்லையானால் வன்முறையைக் கொண்டு அதனை நாங்களே நிறுத்திக் காட்டுவோம் என ஞானசார தேரர் அரசுக்கே சவால் விடும் துணிவைக் கொடுத்தது. அதற்கு பதிலடியாக அப்துல் ராஸிக் ஞானசார தேரரை வன்மையாகக் கண்டிக்க வேண்டிய நிலையைத் தோற்றுவித்தது.

மேலும் இன, மத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கக்கூடிய செயற்பாடுகளை சென்ற மஹிந்த அரசைப்போலவே இந்த அரசும் கண்டும் காணதது போல இருந்து வருவதன் விளைவுதான் டான் பிரியசாத் போன்ற தீவிரவாத விசக்கிருமிகள் பௌத்தத்தின் பெயரால் நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க நினைக்கிறார்கள்.

இறுதியில் அதே ஞானசார தேரர் விடுத்த காலங்கெடுவுக்கு பயந்து நியாயமற்ற முறையில் அப்துல் ராஸிக் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். இவை அனைத்தும் இந்த நல்லாட்சி அரசின் முதுகெலும்பற்ற நிலையையும், சமூக நல்லிணக்கம் தொடர்பான அதன் அலட்சியப்போக்கையுமே எடுத்துக்காட்டுகிறது.

எனவே முஸ்லிம்கள் தமக்குள் ஒருவரை ஒருவர் குறைபேசித்திரிவதைத் தவிர்த்து தனது அதிகாரத்தை கொண்டு இனவாதத்தையும், மதவாதத்தையும் உடனடியாக தடுத்து நிறுத்தக்கூடிய வல்லமை கொண்ட இலங்கை அரசும், அதன் காவல்துறையும், நீதித்துறையும் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததே பிரச்சனை அனைத்துக்குமான அடிப்படைக் காரணம் என்பதை நாம் அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் இன்று மதத்தீவிரவாதம் பேசினார், மதங்களை நிந்தனை செய்தார் என்ற குற்றச்சாட்டைச் சுமத்தி சகோதரர் அப்துல் ராஸிக்கையும், மறுபக்கத்தில் பௌத்த கடும்போக்குவாதத்தின் சூத்திரதாரிகளை கைது செய்யாமல் டான் பிரியசாத் போன்ற அடியாட்களையும் கைது செய்துவிட்டு நாம் ஆவன செய்து வருகிறோம் என அரசாங்கம் பாசாங்க செய்ய முடியாது. இவ்வாறான வேடதாரி நடவடிக்கைகளால் நாட்டில் பெருகிவிரும் பௌத்தத் தீவிரவாத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதையும் நாம் அரசுக்குக்கும், நாட்டு மக்களுக்கும் முன்வைக்க வேண்டும்.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்று சொல்வதைப்போல் பௌத்த மதத் தீவிரவாதத்தையும், சிங்கள தேசியவாதத்தையும், வன்முறைக்கலாசாரத்தையும் அரசியலாக்கி அதற்கு தலைமை வகித்து வருகி;ன்ற ஞானசார தேரர் போன்றவர்களையும், அந்த ஞானசார தேரருக்கு பின்னே இருக்கின்ற உயர் மட்டத்திலான மறை கரங்களையும் அரசாங்கம் இன்று வரை பாதுகாத்து வருகின்றது என்ற குற்றச்சாட்டையும் நாம் அரசை நோக்கி முன் வைக்க வேண்டும்.

மேலும் கடந்த மஹிந்த அரசுதான் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை கட்டுக்கடங்காது வளர்த்து விட்டது என்ற அடிப்படையிலும், மீண்டும் இணைந்த எதிர்கட்சி என்ற பெயரில் குழப்பங்களை செய்து நாட்டின் அதிகாரத்திற்கு திரும்ப வர எத்தணிக்கின்ற மஹிந்த ராஜபக்ஷவின் தரப்புக்கும் இன்று உருவாகியுள்ள சூழலுக்கும் என்ன தொடர்பிருக்கிறது என்பது பற்றியும் முஸ்லிம்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

மேலும் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான உலகளாவிய நச்சுப்பிரச்சாரம் இலங்கையில் பரப்பப்படுவதன் பின்னணியில் சர்வதேச சக்திகள் இருப்பதையும், அதனால் ஏற்படக்கூடிய எதிர் விளைவுகள் முழு நாட்டு மக்களுக்குமே ஆபத்தானது என்பதையும் நாம் அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் வாக்கு வங்கி அரசியலை அடிப்படையாக வைத்து செயற்படும் கட்சிகளும், அரசாங்கத்தை அரசியல் ஸ்திரமற்ற நிலைக்குள் தள்ள நினைக்கின்ற எதிர்கட்சிகளும், சில பொழுதுகளில் நாட்டு மக்களின் கவனத்தை நாட்டின் முக்கிய பிரச்சனைகளிலிருந்து திசை திருப்ப அரசாங்கங்களும் இதுபோன்ற இனவாத, மதவாத தீயை சில காலங்களுக்கு தூண்டி விடுவது வழங்கமாக மாறி வருகின்றது என்பது பற்றிய விழிப்புணர்வு எமக்கு இருக்க வேண்டும். குறிப்பாக தேர்தல் ஒன்றை நாடு எதிர் நோக்கியிருக்கின்ற காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் இடம்பெறுவது வழமையானவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே குறுகிய சுயநல அரசியல் இலாபங்களுக்காக தூண்டி விடப்படுகின்ற இந்த சிக்கல்களை சரியாகப் புரிந்து கொண்டு சமூகங்கள் தமக்குள் முரண்பட்டுக் கொள்வதையும், குறிப்பாக முஸ்லிம்கள் தமக்குள் தர்க்கித்து கொள்வதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

இறுதியாக, இத்தகைய இக்கட்டான தருணங்களில் அல்லாஹ்(சுபு)வின் உதவி மாத்திரம்தான் எம்மை உய்விக்கும் என்ற அடிப்படையில் அவன் எம்மீது விதியாக்கியிருக்கின்ற கடமைகளை சரியாக நாம் செய்து விட்டு அவனிடத்திலேயே எமது பொருப்புக்கள் அனைத்தையும் பாரம் சாட்டி விட வேண்டும். அவன் எம்மீது விதித்திருக்கின்ற கடமை என்னவென்றால் நாம் எமது இஸ்லாமிய அடையாளத்தை எள்ளின் மூக்களவு, மூக்கின் முனையளவு கூட சிதைத்து விடாமல் பாதுகாத்து, யாருக்காகவும் ஹிம்மத் என்ற பெயரில் சத்தியத்தை சமரசம் செய்யாது, பிறரை திருப்த்திப்படுத்துவதற்காக 'கூஜா தூக்கும் அரசியல்' செய்யாது, எமது சமூகத்தில் சிலர் விடுகின்ற சிறிய தவறுகளுக்காக அவர்களை எதிரியிடம் காட்டிக்கொடுக்காது, அரசுக்கும், முழு நாட்டு மக்களுக்கும் தூய்மையான இஸ்லாத்தின் செய்தியை சான்று பகர்கின்ற நேர்மையான ஒரு சமூகமாக வாழ்வதேயாகும். அதற்கு வல்ல இறைவன் எமக்கு தைரியத்தைத் தருவானாக!

 

 

 
 

அலெப்போவின் 2வது முற்றுகை உடைப்புச் சமர்: அஷ்ஷாமில் அமெரிக்காவின் முதுகெலும்பை முறிக்கும் சமர்!

செய்திப்பார்வை 05 நவம்பர் 2016

புதிய யுத்த நிறுத்தம் ஒன்றை ரஸ்யா சாத்தியப்படுத்தினாலே ஒழிய சிரியாவின் இரண்டாவது பெரும் நகரமான அலெப்போ  'சிற்சிறு துகள்களாக'  சிதைக்கப்படும் ஆபத்தை தவிர்க்க முடியாது என சென்ற திங்கள் கிழமை (31/10/2016) ஜொன் கெரி தனது பிரித்தானிய விஜயத்தின்போது கூறியிருந்தார்(தி காடியன் - 01/11/2016).

ரஸ்யா மத்தியதரைக் கடற்பரப்பிற்குள் தனது கடற்படை மீள் வலுவூட்டலுக்காக இராணுவக் களங்களை நகர்த்தியிருக்கும் நிலையில் அலெப்போவில் இதுவரை காணாத பாரிய தாக்குதலை அது மேற்கொள்ளவிருக்கிறது என பல அவதானிகள் கூறியிருக்கும் நிலையிலேயே ஜோன் கெரியும் இந்தக் கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இரண்டாவது முறையாகவும் அலெப்போவை முற்றுகைக்குள் கொண்டு வந்திருக்கும் சிரிய இராணுவத்தின் நிலைகளை உடைத்தெறிந்து அலெப்போவுக்குள் அகப்பட்டுள்ள 250,000 இற்கும் மேற்பட்ட பொது மக்களை பாதுகாப்பதற்கான முற்றுகை முறிப்புச் சமரில் சிரிய எதிரணிப்படைகள்(முஜாஹிதீன்கள்) சென்ற வெள்ளிக் கிழமை தொடக்கம் ஈடுபட்டு வருகின்றனர். மறுபக்கத்தில் முற்றுகையை தக்க வைத்துக்கொள்வதற்கான பலந்த பிரயத்தனத்தில் சிரிய அரச படைகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அண்மிய காலம் வரை அலெப்போவில் ரஸ்யா மிக மூர்க்கத்தனமான விமானத்தாக்குதல்களில் ஈடுபட்டு வந்திருந்தாலும் இந்த இரண்டாவது முற்றுகையைத் தொடர்ந்தும், ஒருதலைப்பட்சமாக அறிவிக்கப்பட்டிருந்த யுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்தும் தனது தாக்குதல்களின் வீரியதை குறைத்திருந்தது. எனினும் யுத்த நிறுத்ததை ஏற்றுக்கொள்ளத அலெப்போ போராளிகளின் நிலைப்பாட்டின் விளைவாக மிகப்பாரிய தாக்குதல் நடிவடிக்கை ஒன்றுக்கு ரஸ்யா ஏற்கனவே தயாராகி வருகின்றது என்பதை கள அசைவுகள் காட்டுகின்றன.

கடந்த இரு வாரங்களாக நாம் விமானத்தாக்குதல்களில் ஈடுபடவில்லை என அறிவித்திருக்கும் ரஸ்யா இனிமேல் தம்மாலான அனைத்து வழிகளிலும் போராடத் தயாராக இருப்பதாக தெரிவித்திருப்பது அதற்கான சமிக்ஞைதான். மேலும் ரஸ்யாவின் இந்த நிலைப்பாடும் எதிர்பார்க்கப்பட்டதுதான்.

எது எப்படியோ இதுவரை அலெப்போ மிகப்பலத்த தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளது. இனிமேலும் அதிலே பாரிய மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை. சிரிய-ரஸ்ய விமானப்படைகளின் குண்டுகள் அந்நகரை ஏறத்தாழ சுடுகாடாக மாற்றி விட்டன. அவர்கள் வகை வகையான குண்டுகளை பாவித்து பார்த்து விட்டார்கள். இதுவரை பாவிக்காத குண்டு வகைகளையும் சோதிக்கும் ஆய்வு கூடமாக அலெப்போ மாறியிருக்கிறது. உதாரணமாக இலக்கைத்தாக்கும் வரைக்கும் எந்தவொரு சத்தத்தையும் ஏற்படுத்தாத அமைதி ஏவுகணையை(Silent Missiles) ரஸ்யா, அங்கேதான் அண்மையில் சோதித்துப் பார்த்தது.

மக்கள் குடிமனைகள், சந்தைகள், மருத்துவமனைகள், பள்ளிவாசல்கள் என எதனையும் விட்டு வைக்காது மக்களுடன் சேர்த்து அனைத்தையும் துவம்சம் செய்கின்ற கொடூரத் தாக்குதல்களுக்கு அலெப்போ பழகிப்போய்விட்டது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பாகுபாடில்லாது அனைவரையும் உள்ளடக்கிய பாரிய  மனிதப்படுகொலைகள் அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்க முழு உலகும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலை. இந்த மனித அவலத்தை தடுத்து நிறுத்துவதன் பால் குவிய வேண்டிய ஊடகக் கவனம்  சிரியா விடயத்தில் அமெரிக்காவும், ரஸ்யாவும் மோதிக் கொண்டிருக்கிறார்கள் என்ற போலியான தோற்றப்பாட்டை சுற்றி சூழன்று கொண்டிருக்கின்றன. ரஸ்யா நடாத்துகின்ற தாக்குதல்கள் ஏதோ அமெரிக்காவை மீறி இடம்பெறுவதைப்போன்ற ஒரு காட்சி தோற்றுவிக்கப்படுகிறது.

எனினும் உண்மை இதற்கு நேர் எதிரானது. 29/09/2015 இல் வாசிங்டனில் ஒபாமாவுடன் புடின் மேற்கொண்ட பேச்சுக்களைத் தொடர்ந்தே மறுநாள் 30/09/2015 இல் ரஸ்யா சிரியா மீதான தாக்குதலை ஆரம்பித்தது. அன்றிலிருந்து இன்று வரை வாசிங்டனும் - மொஸ்கோவும் நெருங்கிய கூட்டுறவுடன் தான் இந்த தாக்குதல்கள் அனைத்தையும் செய்கின்றன என்பதை அவர்களின் தாக்குதல் நடவடிக்கைகள் தொடக்கம், அரசியல் பேச்சுக்கள் வரைக்கும் மிகத் துல்லியமாகக் காட்டுகின்றன.

தந்தை ஹாஃபிஷ் அல் அஷதுடைய காலத்திலிருந்து சிரியா அமெரிக்க முகவரகாக செயற்பட்டு வந்தது அரசியல் ஞானமுடைய அனைவருக்கும் தெரியும். எனவே புரட்சியின் விளைவால் ஒருவேளை பஷார் அல் அஷத் தூக்கி வீசப்படும்போது தன் சார்பான ஆட்சியொன்றை அங்கே ஸ்தாபித்துவிட வேண்டும் என்ற விடயத்தில் அமெரிக்கா ஆரம்பம் முதலே மிகக் கவனமாக செயற்பட்டு வந்தது. ஐரோப்பாவைக் கூட அந்த களத்துக்குள் நுழைவதற்கு அமெரிக்கா இடம்கொடுக்கவில்லை. எனினும் அரைச் தசாப்பத்தைத்தாண்டியும் அமெரிக்காவால் அதனைச் சாத்தியப்படுத்த முடியவில்லை.

பஷாரின் சரிவை தடுத்து நிறுத்துவதற்கு  அமெரிக்கா பாவித்த முதலாவது துரும்பு ஈரான். ஈரான் தான் நேரடியாகவும், தனது பூரண செல்வாக்குடன் இயங்கும் ஹிஸ்புல்லாஹ்வினூடாகவும் பஷாருக்கு இறுதி வரை உதவிப்பார்த்தது. எனினும் மக்களின் தியாகத்திற்கும், உறுதிக்கும் முன்னால் ஈரானின் உதவி பஷாருக்கு கைகொடுக்கவில்லை. உடனே அமெரிக்கா பஷாரின் உடனடிச் சரிவை சரிசெய்யும் தனது அடுத்த காய்நகர்த்தலாக ரஸ்யாவை களத்துக்குள் இறக்கியது. ரஸ்யா தனது வழமையான பாணியில் மிக மூர்க்கத்தனமாக சிரிய முஸ்லிம்களை கொன்றழிக்க ஆரம்பித்தது. அது தனது தரை மற்றும் கடற் தளங்களைப் பாவித்தும், ஏவுகணை மற்றும் வான்வெளித்தாக்குதல்களைக் கொண்டும் மிகக்கடுமையான தாக்குதல்களை மக்கள் மீதும் கிளர்ச்சியாளர்கள் மீதும் மேற்கொண்டது. ரஸ்யாவின் தாக்குதல்கள் பாரிய சேதத்தை ஏற்படுத்தியதும், அது போராளிகளுக்கு பெரிய பலப்பரீட்சையாக இருந்தது என்பதும் உண்மையென்றாலும், ரஸ்யாவால் அவர்களை அடிபணியச் செய்ய முடியவில்லை. குறிப்பாக அலெப்போவில் ரஸ்யாவின் உதவியோடு சிரிய அரசு மேற்கொண்ட முற்றுகையை 26/07/2016 இல் முஜாஹிதீன்கள் உடைத்தெறிந்த விதம் ரஸ்யாவுக்கும், அதன் பின்னணியில் நின்று இயக்கிய அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனவே அலெப்போ மக்களுக்கும், போராளிகளுக்கும் பாடம் புகட்டி அவர்களின முதுகெழும்பை உடைப்பது மொத்த சிரியப்புரட்சியையும் நசுக்குவதற்கு அடிப்படையானது என்ற ஒரு கருத்துக்கு அவர்கள் வந்தார்கள். எனவே  அதனைச் சாத்தியப்படுத்த அலெப்போ இதுவரை காணாத தாக்குதல்களை மேற்கொண்டு அதன் ஆன்மாவை பலகீனப்படுத்துவது. அதனை மீண்டும் பூரண முற்றுகைக்குள் கொண்டு வருவது. அவை ஏற்படுத்தும் தாங்க முடியாத அழுத்தத்தினால் புரட்சியாளர்களை அமெரிக்கா விரும்பும் அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களுக்குள் நுழைவிப்பது என்பதுதான் அவர்களின் திட்டம்.

ரஸ்யா, ஈரான் மற்றும் அதன் கூலிப்படைகளைக் கொண்டு மீண்டும் அலெப்போவை முற்றுகைக்குள் கொண்டு வருவதற்கான தீவிரமான போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இது போதாதற்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் முக்கிய முகவரான துருக்கி,  முஜாஹிதீன்கள் மத்தியில் இருந்த தனது ஆதரவுப்படைகளை அலெப்போ சமர் முனையிலிருந்து வெளியேற்றி ஜரப்லொஸ் முனையை நோக்கி நகர்த்தியதன் ஊடாக மிக முக்கியமானதொரு தருணத்தில் அலெப்போ புரட்சியாளர்களை கைவிட்டது. விளைவு, ஏற்கனவே வளப்பற்றாக்குறையுடன் இருந்த போராளிகளின் அலெப்போ முனை மென்மேலும் பலகீனப்பட்டது. இந்த காய்நகர்த்தல்கள் அனைத்தும் இணைந்து இறுதியில் 04/09/16 இல் அலெப்போ மீண்டும் பஷாரின் முற்றுகைக்குள் வந்தது.

"மேலும் சிரிய அரச படைகள் அலெப்போவின் எதிரணியினரின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை மீண்டும் முழுமையான முற்றுகை இட்டனர். சென்ற மாதம் ஆறாம் திகதிக்கு முன்னர் இருந்த நிலையை அது மீண்டும் தோற்றுவித்துள்ளது..." ( அல்அரபி அல் ஜதீத் 04/09/2016)

அமெரிக்கா திட்டமிட்டதற்கு இணங்க மிகக் கொடூரமான தாக்குதல்கள், மீண்டும் முழுமையான முற்றுகை, என்பவற்றுக்குள் அகப்படும் மக்களின் ஆன்ம பலம் இலகுவில் உடைக்கபட்டுவிடும் என எல்லோரும் எதிர்பார்த்தனர். அந்த நம்பிக்கையுடன் 12/09/2016 ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தமொன்று அறிவிக்கப்பட்டது. நீழிக்கண்ணீர் வடித்துக் கொண்டு மக்கள் ஓரிரு பாதைகளினூடாக அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்து தம்மை முற்றுகைக்குள் இருந்து விடுவித்து கொள்ளலாம் என அரசு அறிவித்தது. மேலும் போராளிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு அரசியல் பேச்சுக்களின் ஊடாக ஒரு தீர்வை எட்டலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு எதிரணியினரை தாம் எதிர்பார்க்கின்ற யுத்த நிறுத்த நிபந்தனைகளுக்கு ஒடுக்குமுறையைக் கொண்டு உடன்படச் செய்துவிடலாம் என அமெரிக்காவும், ரஸ்யாவும், பஷாரும் நினைத்தனர். எனினும் போராளிகள் உடனேயே ஓருதலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை நிராகரித்து விட்டனர். மக்களோ வெற்றி அல்லது கௌரவமான சாவு என்ற அடிப்படையில் முற்றுகைக்குள்ளிருந்து வெளியேற மறுத்து விட்டனர். இந்த அதிர்ச்சியான தகவல் அமெரிக்க கூட்டணியின் தலையில் இடியாக விழுந்தது.

அமெரிக்காவைப் பொருத்தவரையில் இதுவரை பஷார் உள்ளடங்காத ஒரு அரசியல் தீர்வு பற்றியே அது பேசிவந்தது. எனினும் பஷாரை விட தனக்கு விசுவாசமான ஒரு கோடாரிக்காம்மை இனங்காண முடியாத நிலையில் அவனையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் எதிர்காலத்தை பற்றி மாத்திரமே தற்போது சிந்திக்க முடியும் என்ற யதார்த்தத்தை அது புரிந்து கொண்டுள்ளது. எனவே இன்று பஷாரையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வுக்கு கிளர்ச்சியாளர்கள் இணங்க வேண்டும் என்று வெட்கமில்லாமல் கேட்டு வருகின்றது.

அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி, எதிரணியினர் பஷார் அல் அஷாத்தின் பங்குபற்றுதலுடனான தேர்தலில் கலந்து கொள்ள வேண்டும். அதுதான் சிரியாவின் அரசியல் எதிர்காலத்திற்கு பொருத்தமானது என்ற கருத்தில் இருக்கிறார் (ரஸ்யா டுடே 01/10/2016)

அமெரிக்க இராஜாங்க அமைச்சர் கூட்டமொன்றில் சுட்டிக்காட்டிய நிலைப்பாடு, அதாவது அஷாத் உள்ளடங்கலான தேர்தலொன்றில் எதிரணியினரும் பங்குபற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு அமெரிக்க நிர்வாகம் அஷாத் இராஜினாமா செய்ய வேண்டும் என இதுவரை வலியுறுத்தி வந்த நிலைப்பாட்டுக்கு முரண்பட்டதாகும் (அல் ஜஸீரா 1/10/2016)

ஆனால் எதிரணியினரைப் பொருத்தமட்டில் பஷாரை உள்ளடக்கிய ஒரு தீர்வு என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத விடயம். எனினும் கொலைக்களமொன்றுக்குள் வைத்து அவர்களை அதற்கு இணங்கச் செய்துவிடலாம் என அமெரிக்க கூட்டாளிகள் நினைத்தனர். எனினும் அந்த எதிர்பார்ப்பு களைந்து போகவே தொடர்ந்து யுத்த நிறுத்தத்தை பேணுவது அவர்களுக்கு எதிர்மறையான அறுவடையையே வழங்கும். எனவே யுத்த நிறுத்தத்தை நிறுத்த வேண்டும்@ யுத்தத்தை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் எவ்வாறு செய்வது? யார் பொறுப்பேற்பது? என்ற சிக்கல் குறிப்பாக அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. ஏனெனில் தனது நச்சுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இதுவரை யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி வந்த அமெரிக்கா எவ்வாறு யுத்தத்தை திரும்ப ஆரம்பிக்கச் சொல்வது? கிளர்ச்சியாளர்களின் பக்கத்தில் நிற்பது போல பாசாங்கு செய்து வந்த அமெரிக்கா எவ்வாறு அவர்களை கூண்டோடு அழிக்க நினைக்கின்ற ஒரு போருக்கு பச்சைக் கொடி காட்டுவது? அதற்காக அது எடுத்து வைத்த அடிகளில் ஒன்றுதான் சிரியக்களத்தின் பின்னடைவுக்கு ரஸ்யாதான் காரணம்@ மேலும் அவர்கள் அத்துமீறி செயற்பட நினைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை கூறியபடி  ரஸ்யாவும், பஷாரும் போராளிகளையும் மக்களையும் தான்தோன்றித்தனமாக கொலை செய்வதற்கு அனுமதியளிப்பதாகும்.

அதற்கிணங்கவே 19/09/2016 இல் யுத்த நிறுத்த முறிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிரியாவுக்கான தீர்வு விவகாரத்தில் ரஸ்யாவுடன் பேசிப்பலனில்லை என்று அமெரிக்கா அறிவித்தது.

"இது தொடர்பாக வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜோஸ் ஏர்னஸ்ட் "ரஸ்யா விடயத்தில் எல்லோரும் பொறுமை இழந்து விட்டனர்... சிரியா விடயத்தில் இனி ஐக்கிய அமெரிக்காவும் ரஸ்யாவும் கதைப்பதற்கு ஒன்றுமில்லை" அதாவது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.(மத்திய கிழக்கு ஓன்லைன், 3/10/2016)

இதன்படி முன்பை விட கொடூரமான நரவேட்டை ஆரம்பிக்க இருக்கின்றது என்று தெரிகிறது. முன்பு எதிரணியினரை திருப்திப்படுத்துவதற்காகவேனும் ரஸ்யாவின் மிருகத்தனமான தாக்குதல்களை தளர்த்துவதற்கு தாம் முயற்சிப்பதைப்போன்ற ஒரு நாடகத்தை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டியிருந்தது. எனினும் இம்முறை 2017 ஜனவரியில் நிறைவு பெற இருக்கின்ற ஒபாமாவின் பதவிக்காலத்திற்குள் சிரியக் களமுனையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்றை தாம் சாதித்தோம் என்ற ஒரு வரலாற்றுப் பதிவை ஏற்படுத்திவிட வேண்டும் என்ற அவசரம் அவர்களிடம் காணப்படுவது தெரிகிறது. எனவே மக்களை அடிபணியச் செய்ய ரஸ்யா மேற்கொள்ளக்கூடிய எத்தகைய தீவிரமான தாக்குதல்களையும் அமெரிக்கா கண்டு கொள்ளப்போவதில்லை.

ஒரு பக்கத்தில் அமெரிக்காவும் ரஸ்யாவும் யுத்த நிறுத்த முறிவுக்கான காரணத்தை ஒருவர் மீது ஒருவர் கடுமையான தொணியில் பழி சுமத்தினாலும் மறுபக்கத்தில் அவர்களே தாங்கள் ஒன்றாக ஒருங்கிணைந்து செயற்படுவதாகவும் அறிவித்திருக்கின்றனர். இதற்கு அண்மையில் கேர்பி சொல்லியிருந்தது சிறந்த சான்றாகும்.

"அதாவது சிரியாவின் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது தமது படைகள் ஒருவரின் வழியில் மற்றவர் குறிக்கிடாத வகையில் ஈடுபடுவதை உறுதிப்படுத்துவதற்காக ரஸ்யாவினதும், அமெரிக்காவினதும் இராணுவங்கள் தமக்கிடையே தொடர்பாடல் ஒழுங்கொன்றை வைத்திருக்கும்" ( மத்திய கிழக்கு ஓன்லைன் 3/10/16)

மேலும் அவர் " நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் ரஸ்ய மற்றும் சிரிய துருப்புக்கள் நிலைகொள்வது உள்ளடங்களாக முன்புபோலவே நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் குரோதங்களை நிரந்தரமாக நிறுத்துவதற்காக நாம் முயற்சிப்போம்." (ஏஎப்பி அரபு, 4/10/16)

இவை எல்லாவற்றிற்கும் நடுவே ஹெரியும், லவ்ரோவும் அடிக்கடி சந்திப்பதும் மிக நெருக்கமாக நட்புப் பாராட்டுவதும் வெளிப்படையாகவே நடக்கிறது. "நாங்கள் இணக்கம் கண்டுள்ள சிரியாவிற்கான தீர்வை அமூல்படுத்துவதிலே குறிக்கீடாக இருக்கின்ற தடைகளை அகற்றுவதற்காக நாம் முயற்சித்து வருகின்றோம்." என தமது பொது வேலைத்திட்டத்தை லவ்ரோ குறிப்பிடும் அளவிற்கு இவர்களின் கூட்டுறவு காணப்படுகிறது.  லவ்ரோ மேலும் தெரிவிக்கையில் தமது மற்றத்தரப்பான அமெரிக்காவுடன் ஒவ்வொரு நாளும் தான் உரையாடி வருவதாகவும் கடந்த சனிக்கிழமை மாத்திரம் மூன்று முறை தொலைபேசியூடாக பேசிக்கொண்டதாவும் தெரிவித்தார். (ரஸ்யா டுடே 3/10/16)

எனவே இவர்கள் சிரிய முரண்பாட்டிற்கான அமெரிக்க முகாமைத்துவ திட்டத்திற்கு இணங்க தமது பாத்திரங்களை மாற்றி மாற்றி இயக்கி வருகின்றனர் என்பதே உண்மை. அதாவது பஷாரின் சிறகுகளுக்கு கீழே அவனுடன் எதிரணியினர் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கின்ற தீர்வை நோக்கி களத்தை நகர்த்துகின்ற அமெரிக்க தீர்வுத்திட்டத்திற்காக கையாட்களாய் நின்று தொழிற்படுவதே ஏனையோரின் விகிபாகமாகும்.

சரி, இனி எமது முஸ்லிம் தலைவர்களும், வாய்சொல் வீரர்களும் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

இன்று முழு அளவிலான மனிதப்படுகொலையை சிரிய முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். சிரிய அரசும் அவர்களின் கூட்டணியும் ஒட்டு மொத்த மக்களையும் சேர்த்து கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக நிர்மூலமாக்கி வருகின்றார்கள். இத்தகைய அகோரக் காட்சிகள் சிரியாவிலே நடந்தேறிக் கொண்டிருக்கையில் சிரியாவின் அண்டை நாடுகளான முஸ்லிம் நாடுகளும் சற்றே தள்ளியிருக்கின்ற ஏனைய முஸ்லிம் நாடுகளும் இந்தக் கொடுமைகளுக்கு நேரடியாக துணைபோகின்ற, அல்லது மறைகரங்களாக இருக்கின்ற அல்லது குறைந்த பட்சம் மௌனமாய் இருந்து வேடிக்கை பார்க்கின்ற மிகக்கேவலமான பாத்திரத்திரங்களை வகித்து வருகின்றார்கள் என்பதே வேதனையான உண்மை. அவர்களின் இராணுவங்களோ முகாம்களுக்குள் முடங்கிக்கிடக்கின்றன. சில பொழுதுகளில் அவர்கள் வெளியில் வந்தால் கூட அது அல்லாஹ்(சுபு)வுக்கும், அவனது தூதருக்கும்(ஸல்), முஃமின்களுக்கும் துரோகமிழைக்கின்ற காரியங்களுக்காகவே வெளியில் வருகின்றன.

உதாரணமாக அண்டை நாடான துருக்கி என்ன செய்தது என்பதைக் கவனித்துப் பாருங்கள். அலெப்போவில் முஜாஹிதீன்களின் போராட்டம் உக்கிரமடைந்திருந்த தருணத்தில் அதற்கு கைகொடுப்பதற்காக தனது படைகளை அங்கே அனுப்பியிருக்க வேண்டிய துருக்கி அந்தத்தருணத்தை சரியாக தேர்ந்தெடுத்து "The shield of the Euphrates"  அதாவது "யூப்ரடிஸின் கேடயம்" என்ற பெயரில் ISISக்கு எதிரான ஒரு இராணுவ முன்னெடுப்பை ஆரம்பித்தது. இது ஒரு அப்பட்டமான திசை திருப்பும் நடவடிக்கையாகும். அதற்காக தனது இராணுவத்தை வடக்கு சிரியாவை நோக்கி அணிவகுக்கச் செய்ததுடன் ஏற்கனவே அலெப்போவில் போராடிவந்த  துருக்கி சார்பான போராளிக் குழுக்களை பிரதான களமுனையான அலெப்போவிலிருந்து வெளியேற்றி ஒப்பீட்டளவில் முக்கியத்துவமும் இல்லாத ஜரப்லஸ் நோக்கி அழைப்பு விடுத்தது.

இந்த நகர்வுகள் அலெப்போவில் முஜாஹிதீன்களின் பலத்தை பெருமளவில் பாதித்ததுடன் முறியடிக்கப்பட்ட முற்றுகையை 4ஃ9ஃ16 இல் பஷார் மீண்டும் நிலைநாட்ட துணை புரிந்தது. அலெப்போ சிரிய அரசிடமிருந்து கை நழுவுமானால் அது நிச்சயமாக வடக்கு சிரியாவையும் சேர்ந்து வீழ்த்திவிடும் என்பது துருகிக்கு தெரிந்திருந்தும், அதாவது அலெப்போவின் விடுதலை வடக்கு சிரியாவினதும் விடுதலையாகவே அமையும் என்பது அதற்கு நன்றாகவே தெரிந்திருந்தும் அது அலெப்போ நோக்கி தனது கரத்தை நீட்டாமல் தனியாக பிரிந்து நின்று முஜாஹீதீன்களை பலகீனப்படுத்தியது.

துருக்கி விரும்பியிருந்தால் அது அலெப்போவை நோக்கி தனது படையையும், ஆதரவு சக்திகளையும் அணிதிரட்டியிருக்கலாம். பலமும், எண்ணி;க்கையும் கொண்ட துருக்கிய இராணுவம் அலெப்போ முற்றுகையை மிக இலகுவாக முறியடித்திருக்கும். பஷாரின் கொடுமைகளிலிருந்து மக்களை விடுவித்து இஸ்லாத்தின் ஆளுகைக்குள் அதனை கொண்டு வந்திருக்கும். இதே கருத்தை முன்னாள் பிரித்தானிய வெளிவிககார அமைச்சர் லோர்ட் டேவிட் ஒவன் அண்மையில் வெளியிட்டிருந்தார். அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார். "துருக்கியால் சிரியாவில் ஒரு முக்கிய சமநிலைக் காரணியை உருவாக்க முடியும். தனது தரைப்படையையும், விமானப்படையையும் பயன்படுத்தி அவசர மனிதாபிமான முன்னெடுப்பு ஒன்றினை மேற்கொண்டு அலெப்போ மீதான முற்றுகையை அது முறியடிக்க முடியும். அலெப்போவை காப்பாற்றுவதற்கு தேவையான சாதகமான அரசியல் மற்றும் இராணுவத் தகுதி துருக்கிக்கு மாத்திரமே இருக்கின்றது..." (al watan site, 3/10/2016 )

"பஷாருடன் இணைந்த ஆட்சிப்பகிர்வு என்ற தீர்வு நோக்கி மக்களை நகர்த்துவதற்காக மக்கள் மீது பாரிய அழுத்தத்தை பிரயோகித்தல்" என்ற அமெரிக்க திட்டமிடலுக்கு இசைவாக துருக்கி இயங்கி வருவதுதான் இதற்கு காரணமாகும்.  இவையனைத்தையும் பஷார் ஒரு கொடுங்கோலன், துரோகி என அடிக்கடி வாய் கிழிய பேசிக்கொண்டும், இரண்டாவது ஹமா இடம்பெறுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என சவால் விட்டுக்கொண்டும் இருக்கின்ற அதே துருக்கிதான் செய்கின்றது. இன்று இரண்டாவது ஹமா அல்ல, மூன்று, நான்கு என பல ஹமாக்களை நாம் கண்டாகி விட்டது. "வெட்கம் இல்லையென்றால் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்" என்று சொல்ல தோன்றுகிறதல்லவா?

சிரியாவின் அண்டை நாடான ஜோர்தானை பொருத்தமட்டிலும் இதே நிலைதான். அதுவும் தனது இராணுவத்தை காப்பரண்களிலே பூட்டி வைத்துள்ளது. தர்ஆவிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் கொத்துக்கொத்தாக மக்கள் கொன்றொழிக்கப்பட்டபோதும், பாரிய குண்டுத்தாக்குதல்களுக்கு அவை முகம் கொடுத்தபோதும் வெறும் வேடிக்கை பார்க்கும் அனுமதி மட்டுமே அதற்கு வழங்கப்பட்டிருந்தது. பஷாரின் கொடுங்கோண்மையிலிருந்து அந்த மக்களை விடுதலை செய்ய அது முயற்சிக்கவில்லை. மாறாக இராணுவம் ஜோர்தானிய எல்லைகளையும், அரசின் நலன்களையும் மாத்திரமே கவனத்தில் எடுக்க அனுமதிக்கப்பட்டது. சிரிய அகதிகள் தமது நாட்டுக்குள் தஞ்சம் அடைவதை தடுப்பதற்காக மட்டுமே அது வெளியில் வந்தது. உதாரணமாக 'அர்ருக்பான்' என அழைக்கப்படும் சிரிய - ஜோர்தானிய எல்லை அருகில் தங்கி வாழ்ந்த மக்கள் சிரிய எல்லையைத்தாண்டி ஜோர்தானுக்குள் தஞ்சமடைய எத்தனித்த வேளையில் அவர்களை தடுத்து நிறுத்துவதற்குத்தான் இந்த இராணுவம் களத்தில் நின்றது.   பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் தற்காலிகமான ஒரு மீட்சி நடவடிக்கையாக ஜோர்தானில் தஞ்சம் புகலாம் என நினைத்த வேளையில், அவர்களுடன் சேர்ந்து தீவிரவாத சக்திகளும் தமது நாட்டுக்குள் நுழைந்து விடலாம் என்பது போன்ற நொண்டிச் சாட்டுக்களைக்கூறி ஜோர்தான் தனது எல்லைகளை இழுத்து மூடி விட்டது. அர்ருக்பானிலே அகப்பட்டுப்போன மக்கள் அந்த பிராந்தியம் மூடப்பட்ட இராணுவ வலயம் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பட்ட கஷ்டங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. (24.ae site, 4/10/2016)

சிரியாவின் அண்டை நாடுகளான துருக்கியும், ஜோர்தானும் காஃபிர் காலணித்துவவாதிகளின் அறிவுறுத்தத்தல்களுக்கு இணங்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இவை. மரணத்தின் விழிப்பில் நின்ற மக்களை மீட்பதற்கு பதிலாக குறுகிய தேசிய நலன்களுக்காக மக்களை மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்காக பணயம் வைக்கின்ற நாடுகளாவே இவை தொழிற்படுகின்றன. அதே நேரத்தில் ஏனைய அண்டை நாடுகள் என்ன செய்கின்றன? ஈராக்கும், லெபனானும் ஈரானின் தேசிய பாதுகாப்புபடையும், ஈரானின் செல்லக்குழைந்தையான ஹிஸ்புல்லாஹ்வும் அதன் ஆதரவு சக்திகளும் சிரியாவுக்குள் நேரடியாக நுழைந்து பஷாருக்கு உதவி வருகின்றன.  பஷாரின் கொலைவெறித்தாண்டவம் முறையே நடந்தேறுவதற்கு தேவையான அனைத்து ஒத்தாசைகளையும் வழங்குவதே இவர்களின் பணியாக இருக்கின்றது.

மேலும் சிரியாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் அருகிலிருக்கின்ற முஸ்லிம் நாடுகள் சிரிய முஸ்லிம்களுக்கு இழைக்கும் துரோகமும் புரக்கணிக்கத்தக்கதல்ல. உதாரணமாக சவூதி அரேபியா அமெரிக்க நலனை பாதுகாப்பதற்காக யெமனை நோக்கி ஓர் யுத்த முன்னெடுப்பை ஆரம்பித்து அங்குள்ள முஸ்லிம்களை கொன்றொழிப்பதிலே தனது இராணுவத்தை ஓய்வில்லாமல் ஈடுபடுத்தி வருகிறது. எனினும் அதே சவூதியால் பஷாரின் கொடுமையிலிருந்து சிரிய முஸ்லிம்களை பாதுகாக்க ஒரு சிப்பாயையேனும் அனுப்ப முடியவில்லை. மீதமிருக்கின்ற ஏனைய நாடுகளும் சிரியப் படுகொலைகளை தடுத்து நிறுத்த பல வழிகளில் முயற்சித்திருக்கலாம். அமெரிக்காவுடனும், ரஸ்யாவுடனும், ஈரானுடனும் தமது உறவை துண்டித்து உடனடியாக சிரிய மக்கள் மீதான தான்தோன்றித்தனமான தாக்குதல்கள் நிறுத்த நிர்ப்பந்திருக்கலாம். எனினும் அவை அவற்றை செய்ய முன்வரவில்லை.

சிரிய விவகாரத்தில் அரபு லீக்கும் இஸ்லாமிய கூட்டுறவுக்கான அமைப்பும் (OIC) தத்தமது கையாளாகத்தனத்தை மீண்டும் நிரூபித்துள்ளன. அரபு லீக் தனது உறுப்பு நாட்டுப்படைகளைத் அணிதிரட்டி உடனடியாக அலெப்போ மக்களை முற்றுகைக்குள்ளிருந்து வெளியேற்ற முயற்சிப்பதற்கு பதிலாக சர்வதேச சமூகத்தை நோக்கி 'அவசரமான நிலைப்பாடு' (ஸ்கை நியூஸ் அரேபியா, 2/10/16) ஒன்றிற்கு வாருங்கள் என்று வெட்டிப் பேச்சு பேசிக் கொணடிருக்கிறது. கண்ணெதிரே பல இலட்சம் மக்களை காவு கொடுத்ததன் பின்னால் இவ்வாறு ஒரு அழைப்பை விட்டுவிட்டால் தனது பங்களிப்பு முடிந்து விட்டதாக அது கருதுகின்றது. ஓஐசியும் தன் சார்புக்கு தனது கேவலத்தையும் நிரூபிக்க சிரியாவில் இடம்பெற்று வரும் மனிதாபிமான நெருக்கடியின் அளவு பற்றி ஆராய்வதற்காக கூட்டம் கூட்டினார்களாம். ஏதோ சிரியாவில் தொடரும் அவலம் பற்றி உலகுக்கு தெரியாது, அதற்கு ஒரு விசேட ஆய்வு தேவை என்பதைப்போல இவர்களின் வித்தை இருக்கிறது.

இவர்கள்தான் முஸ்லிம் தேசங்களின் தலைவர்கள், இவைதான் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள். காலணித்துவவாதிகள் மீது தாம் கொண்டிருக்கின்ற அடிமைத்தனமான விசுவாசத்திற்காக முஸ்லிம் உம்மத்திற்கு இவர்கள் செய்கின்ற துரோகங்கள் மிகக் கேவலமானதும், மன்னிக்க முடியாததுமாகும். அறிவுணர்ச்சியும் அற்று, உணர்வெழுச்சியும் அற்று இருக்கின்ற இவர்களிடம் தன்மானமும், வெட்க உணர்வும் மிஞ்சியிருக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. எனவே இவர்களிடமிருந்து விடிவோ, விமோசனமோ ஒருபோதும் வரப்போவதில்லை.

 

لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ

நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். (அல் அஃராஃப்:179)

 

தீர்வு எங்கிருந்து தோன்ற முடியும்?

 

எனவே காலணித்துவத்திற்கு கூஜா தூக்குகின்ற இத்தகைய தலைமைகளை உதறித்தள்ளிவிட்டு முஸ்லிம் இராணுவங்கள் இஸ்லாத்திற்கு நுஸ்ரா(உதவி) வழங்க முன்வருவதிலேயே அலெப்போவின் விடுதலை மாத்திரமல்லாது, முஸ்லிம் உம்மத்தின் ஒட்டு மொத்த விடுதலையும் தங்கியுள்ளது. இஸ்லாமிய சிந்தனைகளால் மாத்திரம் உந்தப்பட்ட, இஸ்லாத்தைக் கொண்டு மாத்திரம் ரோசம் பெற்ற, அல்லாஹ்(சுபு)க்காக மாத்திரம் ஜிஹாதிய களங்களில் போராடத் துணிவு பெற்ற தூய்மையான தளபதிகள் முஸ்லிம் இராணுவங்களுக்குள்ளிருந்து வெளிவர வேண்டும். இஸ்லாமிய உணர்வுகள் அவர்களுள் பொங்கியெழ வேண்டும். அப்பாவி முஸ்லிம்களின் இரத்தம் சிந்தப்படுவதைப் பார்த்து, பெண்களும், குழந்தைகளும் கூக்குரலிடுவதைக் கேட்டு, இஸ்லாத்தின் கண்ணியங்கள் களங்கப்படுவதை பார்த்து, பள்ளிவாசல்களும், மினரத்களும் சரிந்து விழுவதை பார்த்து அவர்களின் குருதி கொதிக்க வேண்டும். அவர்களின் நரப்புகள் புடைக்க வேண்டும். இஸ்லாமிய சிந்தனைகளாலும், இஸ்லாமிய உணர்ச்சியினாலும் அவர்கள் வேட்கை பெற வேண்டும். அப்போது அவர்களுக்குள்ளிருந்து ஒரு ஷஅத்தும், உசைத்தும், உக்பாவும், காலித்தும் வெளிவரவேண்டும். தாரிக்கும், அல் முஃதஸிம்மும், சலாஹுத்தீனும், சுலைமான் அல் கானூனியும், ஒரு அப்துல் ஹமீதும் தோற்றம் பெற வேண்டும்.

அத்தகைய நல்ல மனிதர்கள் தூய்மையான ஜிஹாதின் அழைப்புக்கு பதில் சொல்வார்கள். அப்போது காலணித்துவவாதிகளும், அவர்களை நக்கிப்பிளைக்கும் வேட்கம் கெட்ட முகவர்களும், நயவஞ்சகக் குள்ளநறிகளும் இஸ்லாமிய புதல்வர்களின் வீரத்தை பார்ப்பார்கள், உண்மையான முஸ்லிம் படையின் பலத்திற்கு முகம் கொடுப்பார்கள். அப்போது ஒரு தலைமையின் கீழ் முஸ்லிம் உம்மாஹ் அணிதிரண்டு நிற்கின்ற போது யாருடன் இதுவரை சேட்டை விட்டோம் என்பதை நினைத்து குஃபார்கள் கைசேதப்படுவார்கள். இன்ஷா அல்லாஹ்!

فَإِمَّا تَثْقَفَنَّهُمْ فِي الْحَرْبِ فَشَرِّدْ بِهِمْ مَنْ خَلْفَهُمْ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ

எனவே போரில் நீர் அவர்கள்மீது வாய்ப்பைப் பெற்று விட்டால், அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களும் பயந்தோடும்படி சிதறடித்து விடுவீராக - இதனால் அவர்கள் நல்லறிவு பெறட்டும்.

(அன்ஃபால்:57)

 

 

 

 

 
 

யெமனிலிருந்து யுத்த மேகங்கள் என்று விலகும்?

செய்திப்பார்வை 17 செப்டம்பர் 2016

 

முஹம்மத்(ஸல்) கூறியதாக கப்பாப் பின் அல் அறத்(ரழி) அவர்கள் அறிவிக்கின்ற நபிமொழி புஹாரியில் பதியப்பட்டுள்ளது.

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! சன்ஆவிலிருந்து ஹதரமௌத்திற்கு அல்லாஹ்வைத்தவிர வேறொன்றுக்கும் அஞ்சாத நிலையில் ஒருவர் பயணம் மேற்கொள்ளும் வரையில் இந்த மார்க்கம் நிலைபெற்றிருக்கும். தனது செம்மறி ஆடுகளை ஓநாய்கள் காவிச் சென்றுவிடுமோ என்ற அச்சம் ஒன்றைத் தவிர. (வேறெந்த அச்சமும் அவருக்கு இருக்காது) ஆனால் நீஙகள் அவசரப்படக்கூடியவர்களாக இருக்கின்றீர்கள்.”

அன்று இஸ்லாத்தால் யெமன் முழுமையாக வெற்றி கொள்ளப்பட்டபோது மக்கள் இந்த நபிவாக்கை நிதர்சனத்தில் கண்டார்கள்...எனினும் பல நூற்றாண்டுகள் கடந்து இன்று

மீண்டும் அத்தகைய ஒரு நாள் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பே யெமனியர்களின் அங்கலாய்ப்பாய் மாறியிருக்கிறது...

யெமனில் 2015ஆம் ஆண்டில் அதிகரித்த போராட்டங்களினால் இதுவரை 10000 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உலகிலே மிகவும் வறுமைப்பட்ட தேசங்களில் ஒன்றான யெமனின் அண்டை நாடுகள் எண்ணெய் வளம் மிகக் நாடுகள். காலணித்துவ நாடுகளால் போடப்பட்ட செயற்கையான பிரிகோடுகளால் எண்ணெய் வாய்க்கால்களின் வாசலில் வாழ்ந்தாலும் யெமனியர்கள் வறுமையில் வாடுகின்றனர்.

மக்களின் நலன் காக்க இங்கே யாரும் ஆட்சி புரிவதில்லை. ஏனைய மத்திய கிழக்கு நாடுகளைப் போன்றே சுயநலத்தை மாத்திரமே இலக்காகக் கொண்ட மோசடிக்கார மேட்டுக்குடியினராலேயே தொடர்ந்து ஆழப்பட்டு வருகிறது யெமன். அவர்களோ உலகளாவிய சக்திகளின் பிராந்திய நலன்களுக்காக மக்களை தாரைவார்த்து ஆட்சியில் அமர்ந்திருக்கின்றனர். இன்று மாத்திரமல்லாது மிக நீண்ட காலமாகவே யெமன் நெருக்கடி நிலையில்தான் இருக்கிறது. வரலாற்று ரீதியாக பார்த்தால் அது பிரித்தானியாவின் செல்வாக்கிற்கு உட்பட்ட ஒரு நாடு. அரபு வசந்தம் தோன்றி அலி அப்துல்லாஹ் சாலிஹ்ஹை ஆட்சியிலிருந்து தூக்கியெறியும் வரை ஏறத்தாழ அவரது அரசும் பிரித்தானிய ஆதிக்கத்திற்குட்பட்டே இருந்தது. அவர் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் அவரது அரசு தப்பிப்பிழைத்து ஆட்சியில் நிலைத்தது. புரட்சியின் பின்னர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹும், அவரது கட்சியும் தந்திரமாக அவரது முன்னை நாள் நண்பர் அப்து ரப்புஹ் மன்சூர் ஹாதிக்கு(யெமனுக்கு வெளியே இருக்கும் இவரையே பிரித்தானியா இன்றும் யெமனின் அதிபராக ஏற்றுக்கொண்டுள்ளது) எதிராக போராடுவதற்காக ஹுதி கிளர்ச்சியாளர்;களுடன் இணைந்து கொண்டார்கள்.

பிராந்திய சக்திகளான சவூதியும், ஈரானும் தத்தமது பிராந்திய இலக்குகளை எட்டுவதற்காகவும், யெமனிலே தனது மேலாதிக்கத்தை வேரூன்றச் செய்ய வேண்டும் என்ற அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கைக்கு சேவகம் செய்வதற்காகவும் அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களைக் சந்தோசமாக தியாகம் செய்து வருகின்றன. எந்தளவிற்கென்றால் சவூதி அரசு யெமனிலே முஸ்லிம்களைக் கொல்லும் முன்னெடுப்புக்கு நிதியொதுக்குவதற்காக தனது நாட்டு ஊழியர்களின் ஊதியங்களைக்கூட தாரை வார்த்திருந்தது.

அமெரிக்காவும் நீண்ட காலமாக யெமனுக்குள் தனது தீய கரங்களை நுழைத்துத்தான் இருந்தது. முன்னர் யெமனிலே வடக்கு – தெற்கு என்ற பிராந்திய பேதங்களைத் தூண்டிவிட்டு அதிலே குளிர் காய்ந்த அமெரிக்கா பின்னர் தாங்கள் பிராந்தியத்திலுள்ள தீவிரவாதிகளை தேடிப்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக சாட்டுச் சொன்னது. இந்த முன்னெடுப்புக்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 800 இற்கும் மேற்பட்ட யெமனிய முஸ்லிம்கள் அமெரிக்க ஆளில்லா விமானங்களின் மூலம் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நாசகார செயலில் பிரி;தானியாவின் பகிபாகமும் பெரியது. மேலும் இவர்கள் தற்போது யெமனிலே பூதாகரமாக உருவெடுத்திருக்கும் ஷிஆ – சுன்னி குறுங்குழுவாதத்தை(Sectarianism) தமது கைக்கூலிகளை வைத்து கனகச்சிதமாக வழிநடாத்தி வருகின்றனர்.

ஒரு கோணத்தில் யெமனின் நிலையும் சிரியாவின் நிலையை ஒத்ததுதான். ஏனெனில் இந்த இரு நாடுகளும்  இன்று வந்தடைந்திருக்கும் நிலைக்குக் காரணம் இவர்கள் சொல்வதைப்போல குறுங்குழுவாதமோ அல்லது இஸ்லாமோ அல்ல. மாறாக பிராந்தியத்திலுள்ள அரசியல் கட்டமைப்புக்கள், அந்த கட்டமைப்புக்களால் வரலாறு நெடுகிலும் மேற்கொள்ளப்பட்ட அநீதிகள் மற்றும் அமெரிக்கா, பிரித்தானியா, ரஸ்யா, பிரான்ஸ் போன்ற காலணித்துவ சக்திகளின் அத்துமீறல்கள், தலையீடுகள் போன்றவைதான் இந்நிலையை தோற்றுவித்துள்ளன. பிராந்தியத்தில் காணப்படும் சட்டபூர்வமற்ற அரசுகளை கொண்ட அரசியல் கட்டமைப்புகளும், இஸ்லாம் மக்கள் அனைவருக்கும் உரிமையாக வழங்கியுள்ள அத்தியவசியமான வளங்களை செயற்கையான பிரிகோடுகளால் பிளவுபடுத்தும் தேசிய அரசுகளும், அத்தகைய தேசிய அடையாளங்களால் பிராந்தியத்திலே தோற்றம் பெற்ற மோதல்களும்தான் இத்தகைய அவல நிலைக்கு அடித்தளமிட்டன.

யெமனிலே காலங்காலமாக சைய்யிதி முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக தொடரப்பட்டு வந்த அநீதிகளும், அதனை ஈரான் குறுங்குழுவாத நோக்கங்களுக்காக அல்லாது தனது தீய சுயநல அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வந்தமையுமே அவர்கள் இன்று புரட்சியில் ஈடுபட அடிப்படைக் காரணமாக அமைந்தன. சிரியாவை எடுத்துக் கொண்டால் அங்கே மக்கள் கிளர்ந்தெழுந்ததற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது பஷார் அல் அஸத் காலங்காலமாக புரிந்து வந்த கொடுங்கோண்மையாகும்.

சரி, எப்போது இந்த கொடுமையெல்லாம் ஒழிந்து அமைதியும், சுபீட்சமும் தோன்றும் என்ற கேள்வி தோன்றுகிறதல்லவா? ஏற்கனவே நான் குறிப்பிட்ட நபிமொழியை முழுமையாகப் பார்த்தால் அதிலே இக்கேள்விக்கு ஒரு பதிலிருக்கிறது.

ஹப்பாப் பின் அல் அரத்(ரழி) அறிவிக்கிறர்கள், நாங்கள், கஃபாவின நிழலின் கீழே தனது புர்தாவில்(போர்த்தும் துணியில்) சாய்ந்து அமர்ந்திருந்த முஹம்மத்(ஸல்) அவர்களிடம் சென்று (முஷ்ரிக்குகள் எங்களுக்கு செய்து வருகின்ற கொடுமைகள் பற்றி) முறைப்பாடு செய்து, எங்களுக்காக அல்லாஹ்(சுபு) விடம் நீங்கள் உதவி தேடக்கூடாதா என வினவினோம். அதற்கு அவர்கள்(ஸல்),

“உங்களுக்கு முன்பிருந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அவருக்காக தோண்டப்பட்ட குழியில் நிறுத்தப்பட்டு அவரது தலையில் ஒரு வாள் வைக்கப்பட்டு அவர் இரண்டு துண்டாக துண்டாடப்படும் வரையில் அறுக்கபடுவார், எனினும் அது அவரை தனது மார்க்கத்தை விட்டுவிடத் தூண்டவில்லை. அவரது சதை அவரது எழும்புகளிலிருந்தும், நரம்புகளிலிருந்து வேறாகப் பிடுங்கியெடுக்கப்படும் வரையில் அவரது உடல் இரும்புச் சீம்புகளால் விராண்டி எடுக்கப்படும். எனினும் அது அவரை அவரின் மார்க்கத்தை கைவிட தூண்டவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! சன்ஆவிலிருந்து ஹதரமௌத்திற்கு அல்லாஹ்வைத்தவிர வேறொன்றுக்கும் அஞ்சாத நிலையில் ஒருவர் பயணம் மேற்கொள்ளும் வரையில் இந்த மார்க்கம் நிலைபெற்றிருக்கும். தனது செம்மறி ஆடுகளை ஓநாய்கள் காவிச் சென்றுவிடுமோ என்ற அச்சம் ஒன்றைத் தவிர. (வேறெந்த அச்சமும் அவருக்கு இருக்காது) ஆனால் நீங்கள் அவசரப்படக்கூடியவர்களாக இருக்கின்றீர்கள்.” (புஹாரி)

இந்த மாற்றத்ததை எட்டுவது என்பது நேர்வழி பெற்ற கிலாஃபத்தை மீள நிலைநாட்டி இஸ்லாத்தின் ஆளுகைக்குள் நாம் மீள வாழ ஆரம்பிப்பது என்பதே. இஸ்லாமிய ஆட்சி என்பது குறுங்குழுவாதத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. இஸ்லாமிய அரசு சுன்னி அரசோ அல்லது ஷிஆ அரசோ அல்ல. மாறாக வேறுபாடுகளைக்கடந்து தனது குடிமக்கள் அனைவர் மீதும் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தும் அரசே அதுவாகும். இஸ்லாத்தைக் கொண்டு ஆட்சி செய்வது என்பது அகீதாவிலும், இபாத்திலும் அரசு ஒரேயொரு நிலைப்பாட்டை(இஸ்லாமிய பனுவல்களில் எல்லைக்குள் அது கருத்து முரண்பாட்டை அனுமதிக்கும்) மாத்திரம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதல்ல. மாற்றமாக சமூக விவகாரங்களை வழிநடாத்துவதற்கு அரச தலையீட்டைக் கோரும் அவசியமான விடயங்களில் மாத்திரம் அது ஒரு இஸ்லாமிய கருத்தை தேர்ந்தெடுத்து அதனை நாட்டின் சட்டமாக அமூல்செய்வது என்பதே அதன் அர்த்தமாகும்.

உண்மையில் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட மோதல்களை குறுங்குழுவாத மோதல்களாக சித்தரிக்கின்ற பொறிக்கள் முஸ்லிம்கள் அகப்பட்டு விடக்கூடாது. அவ்வாறு அகப்படுவது முஸ்லிம்கள் முஸ்லிம்களின் கொலை செய்யும் சைத்தானிய வளையில் வீழ்ந்ததாக மாத்திரம் அது அமையாது. மாறாக அது நடைபெறுகின்ற போராட்டங்களின் உண்மையான காரணங்களை எமது கண்களிலிருந்து மறைத்து விடும்.

இஸ்லாம் எமது வாழ்க்கை நெறியாக அமூலில் இல்லை என்ற அடிப்படை பிரச்சனையை தவிர்த்துப் பார்த்தால்) மோதல்கள் அனைத்துக்கும் அந்நியத்தலையீடுகளே மூல காரணமாகும். குறுங்குழுவாதம் என்பது முஸ்லிம் தேசங்களுக்குள் தமது மூக்கை நுழைப்பதற்கு பயன்படுத்தப்படும் பிரித்து ஆளும் கொள்கையின் ஒரு கருவி என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.

எனவே இத்தகைய தீய தலையீடுகளை தோலுரித்துக் காட்டுவதற்கு முஸ்லிம்கள் தயங்கக்கூடாது. உதாரணமாக பிரித்தானிய அரசாங்கம் சவூதி அரேபியாவிற்கு ஆயுத விற்பனை செய்வது குறித்து. இத்தகைய ஆயுதங்களை பயன்படுத்தித்தான் சவூதி யெமனிய சகோதர, சகோதரிகள் மீது குண்டு மழை பொழிகிறது. பாடசாலைகளையும், மருத்துவமனைகளையும் தரைமட்டமாக்குகிறது.  இவ்வாறு அல் சவூதின் குடும்பத்திற்கு பிரித்தானியா ஆயுதங்களை அணிவித்து அழகு பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. அது காலங்காலமாக நடைபெற்ற ஒன்றே. இதுபோன்று வல்லாதிக்க சக்திகளின் நலன்களுக்காகவும், தமது அரியாசனங்களை தொடர்ந்து அலங்கரிப்பதற்காகவும் எமது தலைமைகள் எதனையும் செய்யத் துணிவார்கள் என்பதை மக்கள் மன்றத்தில் வாதப்பொருளாக மாற்ற வேண்டும். மேலும் மேற்குலகத் தலையீட்டினால் எமது நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்ற வார்த்தை ஜாலங்களுக்கு முஸ்லிம்கள் செவிசாய்த்து விடக்கூடாது.   முஸ்லிம்கள் ஒருபோதும் மேற்குலக தலையீட்டை வரவேற்பவர்களாக அல்லது அதனை அனுசரித்துச் செல்பவர்களாக  இருந்து மோதல்களின் அடிப்படை பிரச்சனைக்கு தூபமிட்டுவிடக்கூடாது. அவர்களின் வருகை எப்போதும் எமது நிலைமையை அலங்கோலப்படுத்திள்ளதே தவிர ஒருபோதும் அழகுபடுத்தியது இல்லை என்பதை நாம் ஐயமற புரிந்து கொள்ள வேண்டும். எமது அண்மித்த வரலாறு முழுக்க இந்த உண்மையைத்தான் சான்று பகர்கிறது.

 
 

ரஸ்யாவுக்கு வெண்ணெய் தடவ முஸ்லிம் பெண்களையும், குழந்தைகளையும் தாரைவார்த்து வரும் நவீன துருக்கி

செய்திப்பார்வை 31 ஆகஸ்ட் 2016

 

மனிதாபிமான மீட்பு நிதியம் (Humanitarian Relief Foundation) மற்றும் மேலும் பல துருக்கிய ஊடகங்களின் செய்திகளின்படி கடந்த ஜுலை 29ம் திகதியிலிருந்து இன்று வரை இஸ்தான்புலிலே இடம்பெற்ற தேடுதல் வேட்டைகளில் உஸ்பகிஸ்தான், கஷகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்கிஸ்தான் மற்றும் கவ்கஸஸ் போன்ற பிராந்தியங்களைச் சேர்ந்த சுமார் 450 பேர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது சொந்த நாடுகளுக்கு திருபபி அனுப்பும் வரை காத்திருக்கும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த கைதுகள் ஜுலை 12ஆம் திகதி அதாவது துருக்கியில் அண்மையில் இடம்பெற்ற சதிப்புரட்சிக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட பெயர்பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டன.

 

முதலாவது தேடுதல் வேட்டையில் மாத்திரம் உஸ்பெக்கிஸ்தான் சேர்ந்த 29 நபர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் அவர்களில் 2 பெண்கள் உட்பட 7 பேர்கள் கும்கெபி (Kumkapi) தடுப்பு முகாமில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த 7 கைதிகளினதும் குடும்பங்கள் ஒரு மாத காலத்திற்குள் துருக்கியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த குடும்பங்களில் 15 சிறுவர்களும், 5 பெண்களும், 2 ஆண்களும் அடங்குவதுடன் அவர்களில் ஒருவர் 6 மாதம் நிரம்பிய கற்பிணித் தாயுமாகும். 7 வயது முதல் 80 வயது வரை எவ்வித வயது வித்தியாசமும் இன்றி மேற்கொள்ளப்படும் இத்தகைய கைதுகள் துருக்கியில் நடந்த வண்ணமே இருக்கின்றன. கைதுக்காக அவர்கள் தயாரித்த பட்டியலில் 1000 நபர்களின் பெயர்கள் வரை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கைது நடவடிக்கைகள் துருக்கிய – ரஸ்ய நல்லிணக்க செயல்முறையின் ஒரு அங்கமாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மத்திய ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த எமது சகோதர, சகோதரிகளை துருக்கியில் வைத்து இவ்வாறு கைது செய்வது என்பது புதியதொரு விடயமல்i. மாற்றமாக இஸ்லாத்துடன் என்றுமே தீராப்பகையுடன் இருக்கும் ரஸ்யாவை திருப்திப்படுத்துவதற்காக இது போன்றவை துருக்கியில் தொடர்ந்து நடந்தே வந்திருக்கிறது.

 

துருக்கிய முஸ்லிம்களே! நீதிக்கும், அபிவிருத்திக்குமான கட்சி (AKP) ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து இஸ்லாத்தின் பெயரால் பல விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளன என நீங்கள் நம்புகிறீர்கள். மீண்டும் திரும்பி வந்துவிடுவார்களோ என நீங்கள் அதிகம் பயப்படுகின்ற சடவாத குடியரசு மக்கள் கட்சி (CHP) யின் மனோபாவம் இன்றும் காணப்பட்டே வருகிறது என்பதை உங்களால் உணர முடியவில்லை. இன்று துருக்கிய குடியரசை ஆட்சி செய்பவர்கள் கூட குடியரசின் ஸ்தாபக கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டும், ஜனநாயகம், சடவாதம், அதன் நீதித்துறை போன்ற அல்லாஹ்(சுபு) அதிகமாக வெறுக்கின்றவற்றை உயர்த்திப் பிடிப்பதற்காகவே அரும்பாடுபடுகின்றனர். இத்தகைய சடவாத மனோபாவத்தின் அல்லது அடிப்படைகளின் ஒரு அம்சம்தான் வெறும் தேசிய நலன்களுக்காக எமது முஸ்லிம் பெண்களையும, குழந்தைகளையும் கொடுங்கோலர்களின் கைகளில் காணிக்கையாக படைப்பதாகும். இந்த மனோபாவம் (CHP) இன் மனோநிலையை ஒத்தது இல்லையா?!

 

அர்துகான் 2012 இல் சிரிய அகதிகளை துருக்கிக்குள் அனுமதித்த சந்தர்ப்பத்தில் அதற்காக விமர்சிக்கப்பட்டபோது CHP காலத்தில் நடந்த பொரால்டன் பாலச் சம்பவத்தை(Boraltan bridge incident) அவர் பின்வருமாறு நினைவுபடுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். “ 1944இல் 146 அஜெர்பைஜானிய முஸ்லிம் சகோதரர்களும் சகோதரிகளும் ரஸ்யாவின் கொடுமைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக துருக்கியில் அடைக்களம் புகுந்தனர். ஆனால் அன்றைய துருக்கி நடுநிலைபேணுதல்(in the name of neutralism and balances) என்ற பெயரில் அந்த 146 பேர்களையும் ஸ்டாலினின் துருப்புகளிடம் ஒப்படைத்தது. இந்த ஒப்படைப்பு நிகழ்ந்தது CHP இன் ஆட்சிக்காலத்தில் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே அவர்களின் வரலாறு அசிங்கமானது...எங்களது அஜெர்பைஜானிய சகோதரர்கள் பொரால்டன் பாலத்தை கடந்ததுதான் தாமதம், எமது இராணுவத்தினர் பார்த்துக் கொண்டு இருக்கும்போதோ அந்த முஸ்லிம்களை நோக்கி துப்பாக்கி ரவைகள் தீர்க்கப்பட்டன. கேவலம் CHP இனரே! உங்களுக்கு ஒழிந்து கொள்ள ஏதேனும் இடம் இருக்கிறதா? எங்களது அஜெர்பைஜானிய சகோதரர்களையும், சகோதரிகளையும் ஸ்டாலினிடம் விற்று விட்டு இன்று கூக்குரலிடுகிறீர்களா?  மிரட்டுகிறீர்களா?...”

 

ஆனால் பாருங்கள்! இப்போதும் ஓர் பொரால்டன் பாலச் சம்பவம் மீட்டப்படுகிறது...

ஆனால் எவர் கையால்?

 

துருக்கிய தலைவர்களே! இந்த நிலைப்பாட்டுடன் எங்கு சென்று முகம் கொடுக்கப் போகிறீர்கள்? ரஸ்யாவை திருப்த்திப்படுத்துவதற்காக ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கும் உங்களுடைய  இன்றைய செயலுக்கும், அன்று CHP எடுத்த நிலைப்பாட்டுக்கும் அல்லது இனொனு எடுத்த நிலைப்பாட்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது? மேலும், “சிரியாவில் ISISக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை” என்ற நாடகத்திற்கு உங்களது தாக்குதல் விமானங்களையும் ஈடுபடுத்த துணிந்துள்ள நீங்கள் இரத்தக் காட்டேறி பஷாரிடமிருந்து உம்மத்தை பாதுகாப்பதற்காக அவற்றை ஈடுபடுத்த ஏன் துணியவில்லை?

 

ரஸ்யாவுக்கு மனம் கோணாமல் நடப்பதற்காகவும், அமெரிக்காவுக்கு அடிபணிவதற்காகவும் உங்களை நம்பி வந்த ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களை சொற்பக் கிரயத்திற்கு விற்கின்ற எவ்வளவு கேவலமான ஒரு வியாபாரத்தில் நீங்கள் ஈடுபட்டு இருக்கிறீர்கள்? உங்களுடைய வீட்டிலே அடைக்களம் தேடி வந்த விசுவாசிகளை எதிரியின் கைகளில் தாரை வார்த்து விடுவது உம்மத்திற்கு செய்கின்ற அசிங்கமான துரோகமும், அல்லாஹ்(சுபு)வின் பார்வையில் பாரதூரமான பாவமுமாகும். முஹம்மத்(ஸல்) சொன்னார்கள்

 

«الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لاَ يَظْلِمُهُ، وَلاَ يُسْلِمُهُ»

 

“ஒர் முஸ்லிம் இன்னுமொரு முஸ்லிமுக்கு சகோதரராவார், அவர் அவரை ஒடுக்கவும் மாட்டார். ஒடுக்குகின்ற ஒருவரிடம் ஒப்படைக்கவும் மாட்டார்.” மேலும் தூதர்(ஸல்) சொன்னார்கள்,

 

«مَنْ أَعَانَ عَلَى قَتْلِ مُؤْمِنٍ بِشَطْرِ كَلِمَةٍ لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ آيِسٌ مِنْ رَحْمَةِ اللَّهِ»

 

“ஒருவர் ஓர் அரைச் சொல்லைக் கொண்டாயினும் ஒரு விசுவாசியை கொலை செய்வதற்காக உதவுவாராக இருந்தால் அவர் அவரது இரு கண்களுக்கும் இடையில் 'அல்லாஹ்(சுபு)வின் அருள்  கிடைக்கப் பெறாதவர்' என்று எழுதப்பட்ட நிலையிலேயே அல்லாஹ்(சுபு)வை சந்திப்பார்”

 

முஸ்லிம்களை தாரைவார்க்கும் இச்செயலானது பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதோருக்கும் அடைக்களம் கொடுப்பதில் புகழ்பெற்றிருந்த உத்மானிய கிலாஃபத்தின் வரலாறுக்கு எதிராகச் செய்யப்படும் துரோகமாகும். எனவே இன்றிருக்கின்ற சடவாத துருக்கியைப் போலல்லாது நபிவழியில் அமைந்த கிலாஃபத் என்ற தூய்மையான தலைமையால் மாத்திரமே முஸ்லிம்களினதும், இஸ்லாத்தினதும் உண்மையான நலன்களை பாதுகாக்க முடியும். எனவே கிலாஃபத்திற்கு மாத்திரமே உம்மத்தின் ஆதரவு வழங்கப்பட வேண்டும். அந்த கிலாஃபத் எத்தகைய தாமதமும் இல்லாது நிலைநாட்டப்பட வேண்டும்.

 
 

பக்கம் 2 / 6