செய்திப்பார்வை

பிரஸல்ஸ் குண்டு வெடிப்புக்கள் எம்மை எத்திசையில் செலுத்த வேண்டும்?

செய்திப்பார்வை 31 மார்ச் 2016

மார்ச் 22ஆம் திகதி 2016 பெல்ஜியத் தலைநகர் குண்டு வெடிப்புக்களால் அதிர்ந்தது. தாக்குதல்கள் 31 பேர்களின் உயிர்களைக் குடித்தது. அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுவதை அது முஸ்லிமாக இருந்தாலும், இல்லாது விட்டாலும் இஸ்லாம் முற்றாகத் தடை செய்கிறது. இன்று உலகின் பிரபல அரசியல்வாதிகளும், ஊடகங்களும் அங்காராவிலும், இஸ்தான்புல்லிலும் குண்டுவெடிப்புக்களில் இறந்த உயிர்கள் பற்றி அலட்டிக்கொள்ளாதது போல அல்லது பஷார் அல் அஸதினால் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் உயிர்கள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதை கண்டும் காணாது இருப்பது போல இஸ்லாம் இதனைப் பாரபட்சத்துடன் நோக்குவதில்லை. மாறாக பல்வேறு பின்னணிகளைக் கொண்ட அரசியல்வாதிகளும், மேற்குலக ஊடகங்களும் அப்பாவி மக்களின் கொலைகளை பயன்படுத்தி தமது ஈனத்தனமான அரசியல் ஓட்டங்களை எடுப்பதற்காக முயற்சிப்பதை நாம் வழமைபோலவே பிரசல்ஸ் தாக்குதல் சம்பவத்திலும் காண்கிறோம்.

தமது நாட்டுக்குள் அகதிகளை ஏற்றுக்கொள்வது, முஸ்லிம்கள் தமது நாட்டில் நிலைகொண்டு வாழ்வது போன்ற விடயங்களில் அவர்களிடம் காணப்படும் குரோதமான மனோநிலையை இத்தகைய சம்பங்களின்போது அவர்கள் எடுக்கின்ற நிலைப்பாடுகள் தோலுரித்துக் காட்டுகின்றன. அவர்கள் முஸ்லிம்கள் எங்கே, யாருடன் தமது விசுவாசத்தை வைத்திருக்கிறார்கள் என்ற கேள்விக்கணைகளைத் தொடுத்து தமது சமூகத்திற்கு மத்தியில் பீதியான ஒரு மனோநிலையை தோற்றுவிக்க முயன்று வருவதும் தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு பீதியை அதிகரிப்பதன் ஊடாக சாதாரண பொதுமக்களை தீவிரப்படுத்தி அவர்களுக்கு மத்தியில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்புகின்ற முனைப்பிலா இவர்கள் இருக்கிறார்கள் என்ற நியாயமான கேள்வியும் இங்கே எழுகின்றது.

ஏறத்தாழ அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தீவிரவாதத் தாக்குதல்கள் எங்கும் நடக்கலாம் என்ற புரளியைக் கிளப்பி விடுவதிலும், மக்களை தொடர்ந்தும் அச்சத்தில் வைத்துக் கொள்வதிலும் அக்கறை காட்டுவதை நாம் காண்கிறோம். குறிப்பாக இஸ்லாத்திற்கு எதிரான உலகளாவிய போரின் முக்கிய பங்காளியான பிரித்தானியா இதனை முன்னின்று செய்கிறது. ஐக்கிய இராஜ்ஜியத்தின் முன்னாள் உள்துறைச் செயலாளர் ஜோன் ரீட் “ தீவிரவாதிகள் பிரித்தானியாவின் பாதுகாப்பு வேலிகளை கடந்து பிரஸல்ஸில் நடந்த தாக்குதல்களைப்போல இங்கேயும் தாக்குதல்கள் நடாத்துவார்கள்” என பொறுப்பற்ற முறையில் சில தினங்களுக்கு முன் பிபிசிக்கு தெரிவித்த கருத்தும், அடுத்த தாக்குதல் பிரித்தானியாவில்தான் என மக்கள் மத்தியில் பீதியைக் கிளறிவிடும் ஏனைய பிரித்தானிய அரசியல்வாதிகளின் கருத்துக்களும் இதற்கு நல்ல உதாரணங்களாகும்.

இத்தகைய பொறுப்பற்ற போலிப்பிரச்சாரங்கள் உள்நாட்டுக்குள் தமது வங்குரோத்து அரசியல் நடாத்துவதற்கும், இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதி;ராக சர்வதேச மட்டத்தில் மேற்குலகு ஏற்படுத்தி வந்த எதிர்மறையான தோற்றப்பாட்டை மென்மேலும் வலுப்படுத்தி முஸ்லிம் உலகில் தாங்கள் வீசும் குண்டுகளுக்கும், தமது தலையீடுகளுக்கும் நியாயாதிக்கத்தை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

முஸ்லிம்களின் நம்பிக்கைகள், விழுமியங்கள், அடையாளங்களை குறிவைத்து சிதைக்கும் நோக்கில்  மேற்குலக நாடுகள் பலவற்றில் அமூல்படுத்திவரும் அல்லது அமூல்படுத்த எத்தணிக்கும் அரசாங்க நிகழ்ச்சி நிரல்களுக்கு இந்த தீவிரவாத தாக்குதல்களை நல்ல சாட்டாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இஸ்லாத்தின் அதி முக்கிய அம்சங்களில் கூட சமரசம் செய்யும்படி நிர்ப்பந்திக்கின்ற  இவர்கள் எந்தளவு தூரத்திற்கு நீஙகள் இஸ்லாத்தை பின்பற்ற ஆரம்பிக்கிறீர்களோ அந்தளவு தூரத்திற்கு எமது சமூகத்திற்கு ஒரு அபாய சமிஞ்ஞையாக மாறி வருகிறீர்கள் என்ற உளவியல் அழுத்தத்தை சாதாரண முஸ்லிம்கள் மத்தியில் அநுதினமும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்த அரசியல் திருகுதாளங்கள் அனைத்தும் இத்தகைய தீவிரவாத தாக்குதல்கள் அனைத்துக்கும் அடிப்படைக் காரணமான மேற்குலகின் அயோக்கியத்தனமான வெளிவிவகாரக் கொள்கை பற்றிய நேர்மையான விமர்சனத்தையும், வாதங்களையும், குறிப்பாக கடந்த தசாப்பத்தில் மத்திய கிழக்கிலும், முஸ்லிம் உலகிலும் அவர்கள் ஏற்படுத்திய படு பயங்கரமான சூழல் பற்றிய கருத்தாடல்களையும் திசை திருப்புவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிகளாகும்.

உலகில் கவனத்தை அவர்கள் எவ்வளவு தான் திருப்பினாலும், எம்மீது பௌதீக மற்றும் உளவியல் அழுத்தங்களை எவ்வளவுதான் திணித்தாலும் முஸ்லிம்கள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். அதுதான் நாம் எமது அடையாளத்தையும், தீனுல் இஸ்லாத்தையும் சமரசம் செய்யாது வாழ்கின்ற அதேநேரம் எமது தீனையும், எமது உம்மத்தையும் உண்மையில் பாதுகாக்கக் கூடிய கிலாஃபா ராஷிதாவை உலகில் மீண்டும் தோற்றுவிக்க கடுமையாக முயற்சிக்க வேண்டும் என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும். அவ்வாறு நபிவழியில் தோன்றக்கூடிய கிலாஃபாவால் மாத்திரம்தான் முஸ்லிம் உலகிலும், உலகின் ஏனைய பகுதிகளிலும் அமைதியையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும். வரலாறு இந்த உண்மைக்கு சான்று பகர்வதை யாரும் மறுக்க முடியாது.

ஸஹாப்பாக்களின் காலத்திலிருந்து 90 வருடங்களுக்கு முன் உத்மானிய கிலாஃபா நிர்மூலமாக்கப்படும் வரை மத்திய கிழக்கும்,  அரபுலகமும் பொதுவாக அமைதியான சூழலிலேயே இருந்தது. மேற்குலகுடன் அதற்கு இருந்த உறவு அரசுகளுக்கிடையிலான உறவு என்ற அளவில் இருந்ததேயொழிய அந்நிய தலையீடுகளின் ஊடாகவோ, காலணித்துவத்தின் ஊடாகவே, வேவு வேலைகளின் ஊடாகவோ இருக்கவில்லை. எப்போது மேற்குலக காலணித்துவம் எமது நாடுகளில் தடம்பதித்ததோ அன்றிலிருந்து இன்று வரை எமது தேசங்கள் ஸ்திரமற்ற நிலையிலும், பிளவுபட்ட நிலையிலுமே இருக்கின்றன. நிரந்தரமான மேற்குலகத் தலையீடுகள், முகவர்களின் ஆட்சிகள், அவர்களின் கூலிப்படைகளின் அடக்குமுறைகள் என எமது மக்களின் தலையெழுத்து அழிவாகவும், அவலமாகவும் மாறிவிட்டது. எமது நிலங்களின் பொதுவாழ்வில் இஸ்லாத்தின் வகிபாகம் முற்றாக மறுக்கப்பட்ட ஒரு சூழலில் முஸ்லிம் உலகிலும் சரி, உலகின் ஏனைய பிராந்தியங்களிலும் சரி மனித குலத்திற்கு அமைதியான நல்வாழ்வு எட்டாக்கனியாக மாறிவிட்டது.   மேற்குலக சித்தாந்தம் மிகக்குறுகிய காலத்திலேயே உலகை தலைமை தாங்குவதற்குரிய தனது அறிவார்ந்த தகுதியை இழந்து விட்ட நிலையில் பலப்பிரயோகம் மாத்திரமே அதற்கு இருக்கின்ற இறுதி ஆயுதம். நேரடி யுத்தங்களையும், வன்முறைகளும் பாவித்து தமது ஆதிக்கத்தை நிறுவ வேண்டிய நிர்ப்பந்தத்தில் அவர்கள் இருக்கின்றார்கள். விளைவு, தீவிரவாதத்தையும், வன்முறைகளையும் தமது நாடுகளுக்குள்ளும் அவர்கள வரவழைத்துக் கொள்கிறார்கள். அவ்வாறு வரவழைக்கப்பட்டவைகள் தான் 9/11, 7/7, தொடக்கம் பிரஸல்ஸ் தாக்குதல்கள் வரைக்கும்.

எனவே முஸ்லிம்கள் அவர்களின் பலகீனத்தையும், அவர்களின் தோல்வி மனப்பான்மையின் பிரதிபலிப்புக்களையும் நன்கு உணர வேண்டும். அவர்கள் தமது தீய அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக எங்கள் மீது பிரயோகிக்கின்ற அழுத்தங்களைக் கண்டு அஞ்சி நாம் அடிபணிந்து விடக்கூடாது. மாறாக இஸ்லாமிய சித்தாந்தத்தின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அதன் அறிவாhந்த பலத்தின் மீது நம்பிக்கை வைத்து இந்த அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டும். நெருக்கடிகள் அதிகரிக்க அதிகரிக்க இஸ்லாத்தை பின்பற்றுவதிலும், அதனை உயர்த்திப் பிடிப்பதிலும் நாம் முன்னிற்க வேண்டும். எமது அசைக்க முடியாக நம்பிக்கையும், அதன் அடிப்படையில் எழும் உத்வேகமும் பிற சமூகங்களைக்கூட இஸ்லாத்திற்குள் உள்ளிழுக்கக்கூடிய வழிகளைத் திறந்து விடவேண்டும். உலகை உய்விக்க இருக்கின்ற ஒரேயொரு அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாம் மாத்திரம்தான் என்ற நம்பிக்கையை அது எல்லோரிலும் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் எது இந்த உலகில் வந்து விடக்கூடாது என்று அனைத்து சக்திகளும் முயற்சிக்கின்றனவோ அந்த ஒளி முஸ்லிம் உலகில் நேர்வழிபெற்ற கிலாஃபத்தின் வடிவில் பிரகாசிக்கும் வரையில் இன்றைய வன்முறைச் சூழலை மாற்ற முடியாது. இன்றைய உலக அவலங்களை நீக்க முடியாது. எனினும் வாக்களிக்கப்பட்ட அல்லாஹ்(சுபு) இன் ஒளியின் பிரவாகத்தை யாரால்தான் தடுத்து நிறுத்த முடியும்!

அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். (61:08)

 

 

 

 

துருக்கி, சிரிய அகதிகளை துரும்பாக வீசி சூதாடி வருகிறது

செய்திப்பார்வை 16 மார்ச் 2016

 

கடந்த மார்ச் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய ஒன்றியமானது, தான் துருக்கியுடன் ஓர் முக்கிய உடன்பாட்டிற்கு வந்ததாக அறிவித்தது. அந்த உடன்பாடு துருக்கியூடாக சிரிய அகதிகள் மற்றும் ஏனைய அகதிகள் ஐரோப்பாவிற்குள் நுழைவதை துருக்கி கட்;டுப்படுத்த வேண்டும் என்பது பற்றியது. அகதிகள் பிரச்சனை உச்சகட்டத்தை எட்டிய வேளையில் பிரஸல்ஸிலே இடம்பெற்ற மாநாட்டிலே துருக்கிய பிரதமர் அஹ்மத் தாவுதுக்லு, தாம், துருக்கியூடாக அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைவதை கட்டுபடுத்த வேண்டுமானால், அல்லது ஏற்கனவே துருக்கியை விட்டு கடலினூடாக கிரேக்கத்திற்கு வெளியேறிய அகதிகளை துருக்கிக்குள் மீள அனுமதிக்க வேண்டுமானால் தமக்கு 6 பில்லியன் யூரோக்கள் தரவேண்டும் என்றும், தமது பிரஜைகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் விசாவின்றி பயணிப்பது அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைத்துக் கொள்ளும் பேச்சுக்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தார். அதேநேரத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது நாட்டுக்குள் அகதிகள் நுழைவதைத் தடுப்பதற்காக தனது எல்லைகளை மென்மேலும் இறுக்கமாக மூடிவந்தன. சிரியா, ஆப்கான், ஈராக் மற்றும் ஏனைய சில முஸ்லிம் நாட்டிகளிலிருந்து யுத்தத்தின் கோரப்படியிலிருந்து தப்பிப்பதற்காக வெளியேறிய முஸ்லிம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள என சுமார் 14,000 அகதிகள் மூடப்பட்டிருக்கும் மஸடோனிய எல்லையில் கடுமையான குளிரிலும், மழையிலும் போதுமான உணவோ, மருத்துவ வசதியோ, சுகாதார வசதியோ இன்றி வாடுகின்றனர். “எல்லைகளற்ற வைத்தியர்கள்” என்ற தொண்டு நிறுவனம் ஐரோப்பிய தலைவர்களைப் பார்த்து அவர்கள் “யதார்த்த உலகில் இல்லை” என்று விமர்சித்துள்ளது.

 

சில பிரதிபலிப்புக்கள்:

 

தற்போது பிரஸல்ஸ், உலகிலுள்ள மிகவுமே பலகீனமான, நாதியற்ற மக்களின் உரிமைகளை வணிகம் செய்யும் ஒரு கேவலமான சந்தையாக மாறிவருகிறது. ஐரோப்பிய நாடுகள் தமது குறுகிய அரசியல் மற்றும் தேசிய நலன்களை பாதுகாத்துக்கொள்வதற்காக தாமே முன்னின்று உருவாக்கிய சர்வதேச மற்றும் ஐரோப்பிய பட்டயங்களை உதறித்தள்ளி வருகின்றனர். தாம் வளர்த்துவந்த மகோன்னத சட்டங்களாக பீற்றிக்கொள்ளும் தமது மனித உரிமைச் சட்டங்களிலேயே அவர்கள் தடக்கி விழுந்து வருகின்றனர்.

 

அகதி அந்தஸ்த்தை கோரும் மக்களை கூட்டாக மூன்றாவது நாட்டுக்கு பலவந்தமாக வெளியேற்றுவது சர்வதேச மற்றும் ஐரோப்பிய சட்டத்தின் படி தடைசெய்யப்பட்டதாகும். ஏனெனில் அது 1951ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டினதும்;, மனித உரிமைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாட்டினதும், ஏனைய சர்வதேச ஒப்பந்தங்களின் தீர்மானங்களினதும் அத்துமீறலாகும். இவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற நினைப்பது பற்றி கருத்துத் தெரிவித்த ஐ. நா சபையின் அகதிகளுக்கான உயர் ஆளுநர், “சிரிய அகதிகளை நாடுகடத்துவது அவர்களின் பாதுகாப்பை கடுமையாக கேள்விக்குள்ளாக்குவதுடன், அவர்களை மீண்டும் யுத்த வலயத்திற்குள் தள்ளும் நிலையை உருவாக்கும்” என்பதாக எச்சரிக்கிறார். ஐரோப்பாவின் அதிகரித்து வரும் இந்த நிலைப்பாட்டை விமர்சிக்கின்ற “த காடியன்” பத்திரிகையின் ஒரு கட்டுரையாளர் “ ஐரோப்பா பணம் கொடுக்க தயாராக இருக்கிறது. ஆனால் ஒரு விடயத்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது. அதுதான் அகதிகளை தமது எல்iலைக்கு வெளியே வைத்திருப்பது” என எழுதுகிறார். ஆரம்பம் தொட்டே அகதிகளை தனது நாட்டுக்குள் பெருமளவில் வரவேற்ற ஜேர்மனிய ஆளுநர் அன்ஜெலா மேர்க்கலின் நிலைப்பாட்டால் உள்நாட்டுக்குள்ளும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளும் அவரது ஆதரவு பெருமளவில் சரிந்து வருவதை நாம் அவதானிக்கிறோம்.

 

இந்த சூழலில் சிரிய அகதிகள் பிரச்சனை தொட்பாக ஒரு முஸ்லிம் நாடான துருக்கி அடுத்தடுத்து எடுக்கின்ற நிலைப்பாடுகள் எம்மை வாந்தி எடுக்கச் செய்கின்றன. முதலாளித்துவ, தேசியவாத துருக்கிய அரசாங்கம் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள அகதிகளின் அவலத்தை ஐரோப்பாவில் தான் அடைய நினைக்கும் அரசியல் இலக்குகளுக்காக சூதாடும் சீட்டாகப் பயன்படுத்தும் கேவலத்தைச் கனகச்சிதமாகச் செய்து வருகிறது. கிரேக்கத்திலும், ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளிலும் பச்சிளம் பாலகர்களுடன், ஆண்களும், பெண்களும் தம்மை கடும் குளிரிலிருந்து காத்துக்கொள்ள எதுவுமின்றி உரைந்து போகும் காட்சிகளைக் கண்டபோதோ, காற்றிலும், மழையிலும் அடிபட்டு உண்ண உணவின்றியும், ஒதுங்க இடமின்றியும் நின்ற காட்சிகளை பார்த்தபோதோ அல்லது அந்த நாடுகளின் எல்லைப்பாதுகாப்பு படைகளினால் மனிதநேயமற்ற முறையில் அவர்கள் நடத்தப்பட்ட போதோ, அல்லது சுமார் நாலாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் மத்தியதரைக்கடலிலே மூழ்கி மரணித்தபோதோ, அவர்களை தமது நாட்டுக்குள் வைத்திருப்போம், பாதுகாப்போம், வாழ்க்கை கொடுப்போம் என்று எண்ணாத துருக்கிய அரசு, இன்று இந்த அகதிகளை தமது நாட்டுக்குள் வைத்திருக்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் கெட்டித்தனமாக பிச்சை கேட்கும் காட்சி முஸ்லிம் உம்மத்திற்கே இழிவைப் பெற்றுத் தருகிறது. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரன் என்ற  சகோதர வாஞ்சையுடன் அல்லது ஒடுக்குமுறையிலிருந்து தப்பிப்பிழைத்து வருகின்ற மக்களை அரவணைத்து அடைக்களம் கொடுப்பது மார்க்கக் கடமை என்ற சிந்தையுடன் ஒரு நொடிப்பொழுதும் சிந்திக்காது, இந்த முஸ்லிம்களின் அவலத்தை தமது அருவருப்பான அரசியல் அறுவடைக்காக பாவித்து வருவதின் ஊடாக, தானும் ஒரு சாதாரண கீழ்த்தர முதலாளித்துவ தேசமே என்பதை துருக்கி மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.

 

மேலும் இந்த சிரிய அகதிகள் பிரச்சனை, மேற்குலகும், துருக்கியும், ஏனைய பல முஸ்லிம் அரசுகளும் நடைமுறைப்படுத்தும் ஜனநாயகத்தினதும், மதஒதுக்கல் கொள்கையினதும், முதலாளித்துவத்தினதும், தேசியவாதத்தினதும் கோரமான முகத்தை உலகுக்கு தோலுரித்து காட்டியிருக்கிறது. அதேபோல இந்த முறைமையின் கீழ் மனித உரிமையை நிலைநாட்டப்போகிறோம் என்ற நியாயத்தைக் கூறி ஏனைய நாடுகளின் மீது  குண்டு வீசி, ஆக்கிரமித்து, காலணித்துவம் செய்யும் அரசுகள், தமது வாக்கு வங்கிகளில் அரசியல் பிரபல்யத்தை வளர்த்துக் கொள்வதற்காக அடக்குமுறைக்குள்ளான பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பிடிங்கி எறிவதையும் நாம் அவதானிக்கிறோம். இந்த முறைமைகள் கொள்கையை விட ஜனரஞ்சகத்தை தூக்கிப்பிடிப்பதை காண்கிறோம். இந்த முறைமைகள் மனிதர்களிடமிருந்து மனிதத்தையும், மனிதாபிமானத்தையும், அகற்றி, மனித அவலங்களைக் கண்டு கசியாத கண்களையும், அழுகுரல்களைக் கேட்டு கலங்காத உள்ளத்தையும் விதைத்திருப்பதை கவலையுடன் நோக்குகிறோம்.

 

அகதிகளாக்கப்பட்டு பொருத்தமான அடைக்களத்தை பெற்றுக்கொள்ள முடியாது, ஒரு நாட்டிலிருந்து இன்னுமொரு நாட்டுக்கும், பின் மீண்டும் அந்த நாட்டிலிருந்து பிரிதொரு நாட்டுக்கும் விரட்டப்பட்டு, பல நாடுகளின் எல்லைகளில் வாரக்கணக்காக, மாதக்கணக்காக பல்லாயிரக்கணக்கான மக்களை பரிதவிக்க விடும்  “தேசிய அரசுகள்” என்ற சிந்தனை நடைமுறைக்கு உதவாதது என்பதையும், அது நவீன காலப் பிரச்சனைகளை எதிர்கொள்ள சக்தியற்றது என்பதையும் இந்த அகதிகள் பிரச்சனை நிரூபித்துள்ளது.  சொல்லொண்ணா துயரங்களை சந்தித்து வரும் இந்த அகதிகளை உலகம் கையாளும் விதம் இன்றைய உலக ஒழுங்கின் கேவலமான தராதரத்தை படம்பிடித்துக் காட்டுகிறது. மனித விழுமியங்களுக்கும், அவர்களின் கண்ணியத்திற்கும் ஒரு சதத்தின் பெறுமதியைக் கூட வழங்க நினைக்காத, சடவாத முதலாளித்துவ முறைமைகளால் ஆதிக்கம் பெற்ற இன்றைய உலக ஒழுங்கு இந்த அகதிகள் பிரச்சனையையோ அல்லது இதுபோன்ற உலகம் எதிர்நோக்குகின்ற பல்வேறு அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சனைகளையோ தீர்ப்பதற்கு தகுதியற்றது என்பதை உலகம் தற்போது புரிந்து வருகிறது. எனவே ஒடுக்கபட்;ட, நாதியற்ற, பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுயநலமும், போட்டியும் நிறைந்த இன்றைய உலக ஒழுங்கின் கீழ் கட்டுண்டிருக்கும் எந்தவொரு தேசமும் முறையாக உதவப்போவதில்லை.

 

எனவே உலகம் உடனடியாக இன்னுமொரு உலக ஒழுங்கை வேண்டி நிற்கிறது. அந்த உலக ஒழுங்கு மனித அவலங்களை, சடவாத பொருளியல் இலாபங்களை அடிப்படையாகக் கொண்டோ, குறுகிய தேசிய நலன்களைக் கொண்டோ கையாளாத, மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு அதிலே எவ்விதத்திலும் சமரசம் செய்யாத ஒரு உலக ஒழுங்காக தோற்றம் பெற வேண்டும். அத்தகைய ஒரு உலக ஒழுங்கை நோக்கி உலகம் நகருவதற்கு, நீதியையும், மனித நேயத்தையும் எந்தகைய விலையைக் கொடுத்தாயினும் உலகில் நிலைநாட்டக்கூடிய நேர்வழிபெற்ற கிலாஃபா ஒன்றினால் மாத்திரமே வழிகாட்ட முடியும். அந்த கிலாஃபா அரசு, உலகிலுள்ள ஏனைய தேசங்களுக்கு மனிதர்களை மனிதர்களாக நோக்குகின்ற, அவர்களின் அவலங்களைக் கண்டு தூய்மையாக அக்கறை கொள்கின்ற, நவீன கால சவால்களை தீர்க்கமான அறிவுடனும், நேர்மையான அணுகுமுறையுடனும் எதிர்கொண்டு தீர்த்து வைக்கின்ற பாதையில் வழி காட்டும்.

 

பக்கச்சார்புக்கும், அநீதிக்கும் அப்பாற்பட்டவனான, முழு மனித குலத்தினதும் நலனை நன்கறிந்தவனான அல்லாஹ்(சுபு)வின் சட்டதிட்டங்களின் அடிப்படையில் ஆட்சி செய்யும் கிலாஃபா அரசால் மாத்திரமே மனிதகுலத்தை உய்விக்க முடியும். வரலாற்றில் மனிதநேயத்திற்கும், பெரும்தன்மைக்கும், உதவிக்கரம் நீட்டுவதற்கும் தனக்கென தனியான தடம்பதித்த, முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் என்ற பாகுபாடு இல்லாது, அல்லல்பட்ட, அவலப்பட்ட மக்களுக்காக தனது எல்லைகளைத் திறந்து அடைக்களம் கொடுத்த பெருமைக்குரிய வரலாற்றை உடைய கிலாஃபா அரசின் மீள் வருகையே இன்றைய உடனடித் தேவையாகும்.  அத்தகைய ஒரு அரசு உலகில் தோற்றம் பெறும் போது ஏன் இறைவன் அவனது இறுதித்தூதரை அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடை என்று அழைத்தான் என்பதை உலகம் வெகுவிரைவில் உணர்ந்து கொள்ளும்! இன்ஷா அல்லாஹ்!

 

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல் அன்பியா:107)

 
 

பால் சமத்துவ போராட்டங்கள் வெறும் பித்தலாட்டமே தவிர வேறில்லை!

செய்திப்பார்வை 13 மார்ச் 2016

சில தினங்களுக்கு முன் உலகெங்கிலும் சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதை நாம் அறிவோம். ஐக்கிய நாடுகள் சபை “சமத்துவத்திற்காக உறுதிமொழி பூணுவோம்” என்ற கருப்பொருளில் இவ்வருடத்திற்கான சர்வதேச மகளிர் தினத்தை கடந்த மார்ச் 8ம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில், நடைமுறை ரீதியிலான காத்திரமான  செயற்பாடுகளின் மூலமாக சமூக மட்டத்தில் பால் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை அதிகரிக்கும்படி தனது ஆதரவாளர்களை அது வேண்டி நின்றது. இந்நிகழ்வு, ஐ. நா வின் “2030 இல் 50:50 உலகம்: பால் சமத்துவத்திற்காக களமிறங்குவோம்” என்ற சர்வதேச வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகும். இந்த வேலைத்திட்டம் பிரதானமாக பால் சமத்துவத்திற்கான கொள்கைகளை தத்தமது நாடுகளில் அமூல்படுத்துவதற்கான சர்வதேச அரசுகளின் அர்ப்பணிப்பை புதுப்பித்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டது.

 

இவ்வாறு உயர்ந்த இலக்குகளும், நோக்கங்களும் கொண்டு இயங்குவதாகத் தென்படும் இந்த பால் சமத்துவ நிகழ்ச்சி நிரலின் உண்மை நிலை என்ன என்பதை நாம் உணர்ந்திருத்தல் அவசியமாகும். இந்த பால் சமத்துவம் என்ற கோரிக்கை மேற்குலக சடவாத வாழ்வொழுங்கின் அடக்குமுறையால் ஒடுக்கப்பட்ட பெண்ணினத்தை உய்விக்கும் மருந்தாக நம்பப்பட்டு, பின்னர் பெண்ணுரிமைப் போராட்டத்தின் போதைப் பொருளாக மாறிப்போன ஒரு மேற்குலக கோட்பாடு என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.  ஆண்களுக்கு நிகரான சமத்துவத்தை, சமூக வகிபாகத்தை பெண்களும் பெற்றுக்கொள்வதன் ஊடாக பெண் சமூகத்தின் கண்ணியமும், வாழ்க்கைத் தரமும் மேன்மை பெறும் என்ற போலியான ஒரு கற்பனையில் பலனற்ற போராட்டங்களில் பெண்களை பல சதாப்தங்களாக அலையவிட்ட பெருமைதான் இந்த கோட்பாட்டிற்கு இருக்கிறது.

 

ஓர் நூற்றாண்டு காலத்தைத் தாண்டுகின்ற, மேற்குலகிலும், உலகம் பூராகவும் இடம்பெறுகின்ற பால் சமத்துவத்திற்கான போராட்டங்களினால் அல்லது சர்வதேச பட்டயங்கள் பலவற்றில், பால் சமத்துவம் வலியுறுத்தப்பட்டிருப்பதினால், அல்லது மேற்கிலிருந்து கிழக்கு வரை உலகின் பல்வேறு தேசங்களில் அரசியலமைப்புக்களின் ஊடான உத்தரவாதங்கள் அதற்காக வழங்கப்பட்டிருப்பதினால், உலகில் மில்லியன் கணக்கான பெண்கள் வன்முறையாலும், துஸ்பிரயோகங்களினாலும், வறுமையாலும், கல்வியின்மையாலும், சுகாதார வசதியின்மையாலும்  கொடுங்கோல் ஆட்சியாளர்களாலும் வாடி வதங்குவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. சர்வதேச மற்றும் தேசிய சட்டங்களில் வலியுறுத்தப்பட்டுள்ள பால் சமத்துவத்தைக் கொண்டு உலகில் ஒவ்வொரு 3 பெண்களிலும் 1 பெண் வன்முறையால் பாதிக்கப்படுவதையோ அல்லது அமெரிக்காவில் மாத்திரம் ஒவ்வொரு நாளும் 3 பெண்கள் தனது துணைவரினால் அல்லது முன்னாள் துணைவரினால் கொடூரமாகக் கொல்லப்படுவதையோ அல்லது ஐரோப்பாவில் ஒவ்வொரு 10 பெண்களில் 1 பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதையோ கட்டுப்படுத்த முடியவில்லை.

 

மேற்குலக காலணித்துவ யுத்தங்களினால் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பல இலட்சம் முஸ்லிம் பெண்கள் காவு கொள்ளப்பட்ட வேளையில் அல்லது சிரியாவில் இலட்சக்கணக்கான சகோதரிகள் கொடுங்கோலன் பஷாரால்  பலியாக்கப்பட்டு வரும் வேளையில் இந்த பால் சமத்துவ ஏற்பாடுகளினால் பலன் ஏதும் கிட்டவில்லை. மேலும் இந்த முரண்பாடுகளினால் அகதிகளாக்கப்பட்ட மில்லியன் கணக்கான பெண்களுக்கு அடைக்களத்தை அவை வழங்கவில்லை.  அவற்றால் மத்திய ஆப்பிரிக்க பெண்களையோ, மியன்மார்; பெண்களையோ மனிதப்படுகொலையிலிருந்து காக்க முடியவில்லை. அல்லது அவர்கள் இந்த நரவெறியாட்டத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியில் நடுக்கடலில் மூழ்கி தத்தளித்தபோது உதவிக்கரத்தை அவை நீட்டவில்லை. கத்தியால் குத்த வருகிறார்கள் என்று சாட்டுச் சொல்லி, பலஸ்தீன யுவதிகளை காவலரண்களில் அருகே வைத்து யூத சியோனிச சிப்பாய்கள் ஒவ்வொருவராய் சுட்டு வீழ்த்தியபோது கவசமாக அவை முன்வந்து நிற்கவில்லை. மத்திய ஆசியா கொடுங்கோல் அரசுகளும்;, சீனாவின் கம்யூனிச அரசும் முஸ்லிம் பெண்களின் இஸ்லாமிய ஆடைகளை களைந்து, அவர்களை பலவந்தமாக கருத்தடை செய்து அல்லது கருக்களைப்பு செய்து வரும்போது அவர்களை மீட்டெடுக்க இவற்றால் முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் உலகெங்கும் உணவு, குடிநீர், சுகாதார வசதி, வைத்திய வசதி மற்றும் கல்வி வாய்ப்பின்றி தவிக்கும் சுமார் 700 மில்லியன் பெண்களுக்கும், பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலையிலுள்ள சுமார் 85 மில்லியன் சிறுமிகளின் வாழ்வுக்கு ஒளிர்வூட்டவும் இந்த பால் சமத்துவ வியூகங்களால் முடியவில்லை.

 

எனவே பால் சமத்துவத்திற்கான போராட்டங்களினாலோ, வேலைத்திட்டங்களினாலோ அவலங்களுக்கு உள்ளாக்கப்படும் சாதாரணப் பெண்களின் வாழ்வில் எத்தகைய மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதே உண்மையாகும். இதற்கு பிரதான காரணம் உண்மையில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான முக்கிய காரணமாக பால் சமத்துவமின்மை என்ற பிழையான எடுகோளின் அடிப்படையில் அப்பிரச்சனைகள் அணுகப்படுவதாகும். ஆணுக்கு நிகர் பெண் என்ற வாதம் யதார்த்தத்திற்கு முரணானதும், அவரவருக்குரிய சரியான வகிபாகத்தை வழங்க மறுப்பதுமாகும். உண்மையில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான அடிப்படைக் காரணம் இன்று உலகில் நடைமுறையிலுள்ள முதலாளித்துவ, தாராண்மைவாத, தேசியவாத கோட்பாடுகளும், அவற்றின் மீது கட்டமைக்கப்பட்ட மனிதன் வகுத்த அரசுகளும், வாழ்வொழுங்குகளுமாகும் என்பதை பால் சமந்துவ போராளிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

தாராண்மைவாத சுதந்திரத்தின் பெயரால் பெண்களை இலாப நோக்கத்திற்காக மோகப்பொருளாகவும், காம களியாட்ட கருவியாகவும் பயன்படுத்தும் முதலாளித்துவ அரசுகள் எவ்வாறு பெண்களின் கண்ணியம் காக்கப்போகிறது? ஏழையை விட செல்வந்தனை கட்டி அரவணைத்துப் பாதுகாக்கும் முதலாளித்துவ முறைமையின் கீழ் எவ்வாறு பெண்களின் பொருளாதார உரிமைகள் வழங்கப்படப்போகிறது? பயங்கரவாதம் என்ற முகத்திரையை பயன்படுத்தி எத்தகைய அரசியல் மாற்றுக் கருத்துக்களையும் அடக்கியாளும் சர்வாதிகார அரசுகளின் கீழ் வாழ்ந்து வரும் பெண்களுக்கு பால் சமத்துவப்போராட்டங்கள் எவ்வாறு அரசியல் வலுவூட்டல் செய்யப்போகிறது?

 

எனவே உண்மையில் முஸ்லிம் நாடுகளிலுள்ள பெண்களின் வாழ்வு மேன்பட வேண்டுமானால் அதற்கு ஒரு பொறிமுறையுள்ள அடிப்படை மாற்றம் அவசியமாகும். அதற்கு தனது பெண்களின் கண்ணியம் காப்பதை தனது முழு முதற்கடமையாகக் கொள்ளக்கூடிய கிலாஃபா ராஸிதா நபி(ஸல்) வழிமுறையில் முஸ்லிம் உலகில் நிலைநாட்டப்பட வேண்டும். இந்த கிலாஃபா முறைமை பெண்களில் உரிமைகளை தூய்மையாகக் காத்த, அதன் கீழ் வாழ்ந்த ஒவ்வொரு குடிமகனினதும் வாழ்வாதாரத்தை தனது நீதியான பொருளாதார ஒழுங்கினூடாக உறுதிப்படுத்திய புகழ்பெற்ற வரலாறைக் கொண்டது. எனவே யார் யாரெல்லாம் பெண்களின் நல்வாழ்வை இலக்காகக் கொண்டு இயங்குகிறார்களோ, பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு ஒரு முடிவு கிட்ட வேண்டும் என்று உண்மையாகவே விருப்புகிறார்களோ அவர்கள் அனைவரும் மீண்டும் இப்புவியில் கிலாஃபா ராஷிதாவை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பதே ஒரே வழியாகும். மாறாக பால் சமந்துவம் என்ற இந்த பித்தலாட்டத்தில் தமது காலத்தை கழிப்பது இறுதியில் பெருத்த ஏமாற்றத்தையே தரும் என்பதே நிதர்சனமாகும்.

 
 

ஈரான் - மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய முகவர்

செய்திப்பார்வை 13 ஜனவரி 2016

நவம்பர் 23, 2012 ஜெனீவாவில் அமெரிக்காவுக்கும் - ஈரானுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் நடக்கிறது. இரு நாடுகளும் தமது உறவுகளை சுமூகப்படுத்திக்கொள்கின்றனர். இந்த ஒப்பந்தம் இருதரப்புக்குமிடையான


அனைத்து பிரச்சனைகளையும் உடனே தீர்க்கும் வண்ணம் அமையாவிட்டாலும் அதற்கான முதற்படியாக கருதப்பட்டது. £7 பில்லியன் பெறுமதியான பொருளாதாரத் தடைத்தளர்வு ஈரானுக்கு வழங்கப்படுகிறது. ஈரான் அணுச் செறிவூட்டும் நடவடிக்கைகளை அடுத்த 6 மாதங்களுக்கு முடக்கி வைக்கிறது. முன்னைநாள் பேச்சுக்களைப் போலல்லாது இம்முறை பேச்சுக்கள் வித்தியாசமான சூழலில் இடம்பெறுகிறது. முன்னைய காலங்களில் அமெரிக்கா ஈரானுடனான பேச்சுக்களை P5+1(அமெரிக்கா, ரஸ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜேர்மனி) என்ற கூட்டணியின் கையில் விட்டுவைத்திருந்தது. ஆனால் இம்முறை 1979ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன் முதலாக அமெரிக்கா தனது அதியுச்ச அதிகாரிகளைக்கொண்டு நேரடியாகப் பேச்சுக்களில் குதித்தது. வழமைபோல் பேச்சுக்களை கைவிடும் மனோபாவத்துடன் அமெரிக்கா இப்பேச்சுக்களை அணுகாமல் உண்மையில் ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற தன்னார்வத்துடன் செயற்பட்டது. இந்தப்பேச்சுக்களை தொடர்ந்து செப்டெம்பர் 2013இல் அப்போது புதிதாக பதவியேற்றிருந்த ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரூஹானி தனது முதலாவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பங்கேற்புக்காக அமெரிக்காவுக்கு பயணமாகிறார். இரு நாடுகளுக்கிடையிலான தேன்நிலவுப் பயணத்திற்கு பாதை திறக்கப்படுகிறது.

 
 

சவூதி அரேபியா குறித்து நீங்கள் அறியவேண்டிய 10 குறிப்புக்கள்

செய்திப்பார்வை 10 ஜனவரி 2016

 

 

ஒரு வாரத்திற்கு முன் சவூதியின் உள்துறை அமைச்சு தக்பீரி (Takfiree) சிந்தனையைக் கொண்டிருந்தார்கள், தீவிரவாத இயக்கங்களில் இணைந்திருந்தார்கள், சட்டவிரோத சதிவேலைகளில்


ஈடுபட்டிருந்தார்கள் என்ற பல்வேறு குற்றச்சாட்டின் பேரில் சுமார் 47 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதை உறுதிப்படுத்தியிருந்தது. அவர்களின் தண்டனைகள் 12 வேறுபட்ட நகரங்களில் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் அல்கையிதாவுடன் இணைந்து 2003-2004 காலப்பகுதியில் சவூதிக்குள் தாக்குதல்களை தொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுன்னி முஸ்லிம்களும் அடங்குவர்.

தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஷிஆ அறிஞர் ஷேய்ஹ் நிம்ர் அல் நிம்ர் அவர்களும், வெளிநாட்டவர்களான எகிப்த்தியர் ஒருவரும், சாட் நாட்டவர் ஒருவரும் அடங்குவர். நிறைவேற்றப்பட்ட இந்த மரண தண்டனைகள் கடுமையான சர்வதேச விசனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் ஷிஆ-சுன்னி குறுங்குழு முரண்பாட்டின் இன்னுமொரு மோதலாகப் பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே பிராந்தியத்தில் வளர்ந்து வந்த ஷிஆ-சுன்னி முறுகல் நிலை இச்சம்பவத்தால் மேலும் கொந்தளிப்பை அடைந்துள்ளது. இந்த பின்னணியை மனதில் கொண்டு இத்தண்டனைகள் ஏற்படுத்தியுள்ள புதிய களநிலை குறித்தும் பொதுவாக சவூதி அரேபியா குறித்தும் மிக முக்கிய 10 புரிதல்களை சுருக்கமாக கிழே விபரிக்கிறேன்.

1. சவூதி அரேபியா தன்னை ஒரு இஸ்லாமிய நாடாகவும், ஷரீஆவை அமூல்படுத்தி வரும் நாடாகவும், முஸ்லிம் உம்மத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாகவும் நீண்டகாலமாக காட்சிப்படுத்துவதில் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த அடையாளக் காட்சிப்படுத்தலை அரங்கேற்றுவதற்கு அது பயன்படுத்தி வரும் மிக முக்கிய கருவிதான் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களில் சிலவற்றை நடைமுறைப்படுவதாகும். சவூதி அரேபியா இப்னு சவூதின் வம்சாவழி ஆட்சியைத் தக்கவைக்க பாடுபடும் வெறும் மன்னராட்சி மட்டுமே என்றிருந்தாலும்கூட அது உருவாக்கம் பெற்ற நாள் முதல் தனது போலியை மறைப்பதற்கு இஸ்லாமிய போர்வையை போர்த்திக் கொண்டது என்பதே உண்மை. எனவே மன்னராட்சியை தக்கவைப்பதே அதன் முழு முதல் இலக்கு. ஏனைய அனைத்தும் அதற்கான அலங்காரங்கள் மட்டுமே. அதனால்தான் எதிர்க்கருத்துக்கள் அங்கே அனுசரிக்கப்படுவதில்லை. சொல்லப்போனால் சவூதி அரேபியாயை ஒரு சர்வாதிகார மன்னராட்சி என்றே அழைக்கலாம்.

2. சவூதியைப்பொருத்தவரையில் அது தனது பல்வேறு இலக்குகளை அடைந்து கொள்வதற்கு இஸ்லாத்தை வசதியாகப் பயன்படுத்துகிறது. உலகில் பல பாகங்களில் மஸ்ஜித்களை நிர்மாணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு தனக்கு இஸ்லாமியச் சாயத்தைப் பூசிக் கொள்ளும் சவூதி, இஸ்லாத்தின் வாழ்வா-சாவா போராட்டங்கள், நெருக்கடிகள் என்று வருகின்றபோது நேர் எதிரான திசையில் பயணிப்பதை எவரும் அவதானிக்கலாம். தன்னை ஒரு இஸ்லாமிய தேசமாகக்கோரும் சவூதி, இதுவரையில் குறைந்தது ஒடுக்கப்பட்ட ஒரு முஸ்லிம் சமூகத்திற்காகவேனும் உண்மையாக உதவி அவர்களின் விடுதலைக்காக உழைத்தது கிடையாது. சியோனிச இஸ்ரேலின் விவகாரமாகட்டும், ஈராக் ஆக்கிரமிப்பாகட்டும், சோவித் ஆப்கானிய ஆக்கிரமிப்பாகட்டும், மேற்குலகின் தேவையை பூர்த்தி செய்யும் நிலஎண்ணெய் உற்பத்தி பராமரிப்பாகட்டும் இவை அனைத்திலும் மேற்குலகுக்கு சேவகம் செய்வதையே தனது குறிக்கோளாக் கொண்டு சவூதி இயங்கியிருக்கின்றது. மேலும் சில முஸ்லிம் உம்மத்தின் முக்கிய விவகாரங்களிலும், அது சந்தித்த மிக நெருக்கடியான சந்தர்ப்பங்களிலும் அவையெல்லாம் ஏதோ இஸ்லாத்தின் கடப்பாட்டுடன் சம்பந்தப்படாத விடயங்கள் மாதிரி கணித்து தனது தேசிய நலனை மாத்திரம் கருத்திற் கொண்டு தன் கண்களை இறுக மூடியபடியே சவூதி செயற்பட்டு வருகின்றது.

பலஸ்தீனப்பிரச்சனை, ரொஹிங்கா முஸ்லிம்களின் அவலம், சிரியாவின் கொடூர யுத்தம் போன்றவற்றினால் சொல்லொண்ணா துயரத்தில் கதறும் முஸ்லிம்களை மீட்கும் ஆளுமை சவூதிக்கு இருந்தாலும் அதனை தனது கடமையாக ஒரு கணமும் சவூதி கருதியது கிடையாது. எனினும் தனது எல்லை என்று வருகின்றபோது, தனது தேசிய நலன் என்று வருகின்றபோது யெமனிலும், பஹ்ரேனிலும் களத்தில் நேரடியாக குதிப்பதற்கு சவூதி ஒரு கணமும் தாமதிக்கவில்லை. இத்தகைய உதாரணங்கள் ஏனைய நாடுகளைப்போன்று சவூதியும் வெறும் தேசியவாத நாடே என்பதற்கு சான்றாகும்.

3. சவூதி அரேபியா, உலகளாவிய முஸ்லிம்கள் மத்தியில் தனது நியாயாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக தன்னை சுன்னி முஸ்லிம்கள் மீது ஷிஆக் கொள்கையைத் திணிக்க எத்தணிக்கும் ஈரானின் சதிமுயற்சிக்கு எதிராக போராடும் முக்கிய போராளியாக காட்ட முற்படுகிறது. குண்டுவெடிப்புக்கள், கிளர்ச்சிகள் என எது இடம்பெற்றாலும் அவற்றை ஈரானியச் சதி என்றே அது காட்சிப்படுத்துகிறது. ஈரானும், சவூதியும் பிராந்தியத்தில் தமது மேலாதிக்கத்தை நிறுவதற்காக இஸ்லாத்தை ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தி களங்கப்படுத்துகின்றனவே தவிர அவர்கள் முழுக்க முழுக்க தேசிய நலன்களை குறிக்கோளாக் கொண்டவர்களே. உதாரணமாக அரபு வசந்தம் பஹ்ரேனில் வீசத்தொடங்க சவூதி நேரடியாக தனது இராணுவச் சப்பாத்துக்களை அங்கே பதித்தது. பெரும்பான்மையான ஷியாக்களைக்கொண்ட பஹ்ரேனில் சிறுபான்மை சுன்னி முடியாட்சி நிலைநாட்டிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வீதிக்கு வந்த மக்களின் போராட்டமாக அதனை சவூதி ஒரு வினாடியும் அணுக முற்படவில்லை. மாறாக ஈரானின் சதி என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அனைத்தையும் அடக்கி, நேரடியாக களமிறங்கி, தனது தேசிய, இராஜ தந்திர நலனை அது முதன்மைப்படுத்திமை அதன் தேசியவாத யதார்த்தத்திற்கு சிறந்த சான்றாகும்.

4. சவூதியின் வெளிநாட்டுக்கொள்கை அதன் எஜமானர்களான மேற்குலகின் நலன் தழுவியது. அது மேற்குலக வெளிநாட்டுக்கொள்கைக்கு அடிபணிந்தது. சவூதி அரேபியா மேற்கின் முன்னெடுப்புகள் அனைத்துக்கும், அது ஏனைய முஸ்லிம் நாடுகளுக்கு முற்றிலும் எதிரானதாக இருந்தபோதிலும், அதற்கு முழுமையாக ஆதரவளித்து வருகிறது. அது பலஸ்தீனத்தின் மீதான யூத சியோனிச ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டதுடன் மாத்திரமல்லாமல் அதனை சுமூக நிலைப்படுத்துவதற்காக இஸ்ரேலுக்கும் அதனைச்சூழவுள்ள நாடுகளுக்குமிடையே பேச்சுக்களை முன்னின்று நடத்தியது. சவூதியின் வெளிநாட்டுக்கொள்கைளை சாராம்சப்படுத்தினால் அது வரலாற்று ரீதியாக பிரித்தானியாவின் நேரடி முகவராக தொழிற்பட்டதுடன் சில சதாப்தங்களாக அமெரிக்க வெளிநாட்டுக்கொள்கைக்கும் - பிரித்தானியாவுக்குமிடையே சிக்குண்டிருந்து, தற்போது ஒப்பீட்டளவில் அமெரிக்க சார்பு முகவராக முன்னின்று தொழிற்பட்டு வருகின்றது.

5. சவூதி அரேபியா தனதாட்சியை மனிதச் சட்டங்களைக்கொண்டும், ஷரீஆச் சட்டங்களைக்கொண்டும் தொகுக்கப்பட்ட ஒருவகையான கலவையைக் கொண்டு மேற்கொண்டு வருகிறது. சவூதியின் அரசியலமைப்பு தொடர்பான அரபு நூலொன்றிலே நூலாசிரியர் இந்த பித்தலாட்டம் தொடர்பாக இவ்வாறு விபரிக்கிறார். “ சட்டம்(கானூன்) அல்லது சட்டவாக்கம்(தஸ்ரீஃ) போன்ற பதங்கள் இஸ்லாமிய ஷரீஆவிலிருந்து பெறப்பட்ட சட்டங்களுக்கு மாத்திரம்தான் பிரயோகிக்கப்படுகின்றன. மனிதச்சட்டங்களால் தீர்மானிக்கப்படும் முறைமைகள்(அன்திமாஹ்) அல்லது அறிவுறுத்தல்கள்(தஃலீமாத்) அல்லது அரசாணைகள்(அவாமிர்) போன்றவற்றிற்கு அப்பதங்கள் பிரயோகிக்கப்படுவதில்லை...”.

6. சவூதியில் காணப்படும் சமய கட்டமைப்புக்கள் அனைத்தும் சவூதி முடியாட்சிக்கு நியாயாதிக்கத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காகவும், அதன் முடிவுகளை நியாயப்படுத்துவதற்காகவுமே இயங்குகின்றன. வஹ்ஹாபி மத்ஹபின் ஸ்தாபகா,; பதின்னெட்டாம் நூற்றாண்டு அறிஞர் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் வழித்தோன்றல்கள் சவூதி மன்னர் பரம்பரைக்கு தமது பூரண ஆதரவை வழங்கி வருவதன் ஊடாக சவூதி மன்னராட்சியை சட்டபூர்வமாக்குகின்றனர். அதியுயர் ஆன்மீகத் தலைமைப்பதவிகள் சவூதின் குடும்பத்துடன் மிக நெருங்கிய தொடர்புடைய, பெரும்பாலும் திருமண பந்தங்களினூடாக தொடர்புபட்; நபர்களுக்கே வழங்கப்படுகின்றன. இவ்வாறு உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட அறிஞர்கள் உலகின் பல பாகங்களில் மஸ்ஜித்களை நிறுவுதல் போன்ற செய்கைகளை மேற்கோள் காட்டி சவூதியை இஸ்லாத்தின் காவலனாக சித்தரிக்கும் பணியை கச்சிதமாக செய்து வருகின்றனர். சில பொழுதுகளில் அரச குடும்பம் கடைப்பிடிக்கும் சில கொள்கைகள் தொடர்பாக மக்களிடமிருந்து எழும் நியாயமான அதிருப்த்திகளை இந்த செஞ்சோற்றுக்கடன் தீர்க்கும் அறிஞர்களே தமது பத்வாக்களைக் கொண்டு சாந்தப்படுத்துகின்றனர். சவூதியின் உயர் முப்தி அரபுலகெங்கும் புரட்சிகள் வெடித்த காலகட்டத்தில் எதிர்ப்பு மனுக்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் எதிராக பத்வா வழங்கியமையும் இந்தத் தரத்தில்தான் சாரும்.

7. சவூதி நீதித்துறை நீண்டகாலமாக சந்தேகத்திற்குரியதாகவே தொழிற்பட்டுவருகிறது. அது முரண்பாடுகள் நிறைந்ததும் சவூத் குடும்பத்தின் மன்னராட்சிக்கு எதிராகத் தோன்றும் எதிர்ப்பலைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவுமே பயன்பட்டு வந்துள்ளது. அங்கே நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைகளில் பாதிக்கும் மேலானவைகளை மிக குறுகலான சட்டவுரிமையைப்பெற்றுள்ள பிற நாட்டுக் குடியேறிகளுக்கு எதிராகவே நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு குடியேறி ஒரு குற்றச்செயலுக்காக சந்தேகிக்கப்பட்டவுடனேயே அவர் ஆரம்பத்திலிருந்தே தவறாக நடத்தப்படுவதுடன் இறுதியாக சட்டத்தின் பிடியிலும் மோசமாக கையாளப்படுகிறார். அவர்களுக்கு இருக்கின்ற குறுகலான சட்ட உரிமைகள் காரணமாக தம்மை நீதியின் முன் முறையாக பிரதிநிதித்துவப்படுத்த முடியாத நிலையை குடியேறிகள் சந்திக்கின்றனர். போதுமான சட்ட உதவிகள் பெறமுடியாத நிலையில் நியாயப்படுத்த முடியாத குற்றத்தின் உண்மை நிலைக்கு சமமற்ற தண்டனைகளால் குடியேறிகள் பலர் மிகக்கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பல நீதிமன்றத் தீர்ப்புகள் சந்தேகத்திற்குரியவை. கடந்த வருடம் மார்ச் மாதம் 19 வயதே நிரம்பிய ஒரு இளம் யுவதி வன்மையான கூட்டுப்பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டபோது அந்தப்பெண்ணுக்கே 200 கசையடிகளும், ஆறு மாத சிறைவாசமும் விதித்த சவூதி நீதிமன்றம் அதற்கான காரணமாக அந்தப்பெண் மஹ்ரமான ஆண் துணையின்றி இருந்ததற்கான தண்டனையே இது என்று தீர்ப்பளித்தமை இதற்கொரு உதாரணம். அதே சவூதி அரேபியா மஹ்ரமின்றிய நிலையில் பல்லாயிரக்கணக்கான வேற்று நாட்டுப் வீட்டுப்பணிப்பெண்களை சவூதிக்குள் அனுமதித்து அவர்கள் சவூதி இல்லங்களில் விதம் விதமாக வதைப்படுவதை சவூதி எந்த முகத்துடன் அனுமதிக்கிறது என்ற கேள்வி இங்கே எழுகிறது அல்லவா?

8. இன்று ஷேய்ஹ் நிம்ரின் மரண தண்டனை குறித்து உலக ஊடகங்கள் அதிகம் பேசுகின்றன. அவர் அரபுலகப் புரட்சிகளைத் தொடர்ந்து 2011 இல் சவூதி இடம்பெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தவர். மக்கள் நல புரக்கணிப்புகள், ஒடுக்குமுறைகள், தெளிவான பாரபட்சங்கள் என்பவற்றின் விளைவால் எழுந்த மக்களின் அபிலாசைகளுக்கான கோரிக்கைகளாக இந்த ஆர்ப்பாட்டங்களை சிறிதளவு கூட கண்டுகொள்ளாமல் ரெஹ்ரானிலிருந்து இயக்கப்பட்ட சதிவேலை என்று அதனை முழுமையாக மூடிமறைத்து ஷியா-சுன்னி குறுங்குழுவாத முரண்பாட்டை முன்வைத்து அதனை அடக்கியது சவூதி. சோம்பேறித்தனமான ஊடகவியலாளர்களும் உண்மை நிலைபற்றியும் மக்கள் கோரிக்கைகளின் பல்பரிமாணங்கள் பற்றியும் கருத்திற்கொள்ளாது வெறும் ஷியா-சுன்னி குறுங்குழுவாதத்தை அடிப்படையாக வைத்தே இது குறித்து அதிகம் எழுதினார்கள். இஸ்லாத்தை முரண்பாடுகளும், உரசல்களும் நிறைந்த ஒன்றாக சித்தரித்து, ஓர் உம்மத் என்ற கோட்பாட்டை கொச்சைப்படுத்தி, அதனூடாக மதஒதுக்கல் சிந்தனையும், மேற்குலக தலையீட்டையும் நியாயப்படுத்தும் சிலரின் நிகழ்ச்சி நிரலும் இதன் பின்னால் இருக்கின்றது.

9. அல் கையிதா உறுப்பினர்கள், மற்றும் அரசுக்கெதிராக சதி செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தண்டிக்கப்பட்டனர். ஆனால் அதே சவூதிதான் அல்கையிதா மற்றும் ஏனைய பல ஜிஹாதிய குழுக்களுடன் மிகவும் நெருக்கமான தொடர்பை வைத்திருந்தது. அவற்றை தமது இராஜதந்திர நகர்வுகளுக்காக உருவாக்கியதிலிருந்து ஆயுத உதவி, நதியுதவி போன்ற வளங்களை வழங்கியும் ஒத்துழைத்து வந்தது. வருகிறது. அல்கையிதாவுடன் இணைவதற்காக சென்ற பல இளைஞர்களுக்கு இராணுவப்பயிற்சி வழங்குவதில் சவூதி மிக முக்கிய பங்காற்றியது. ஆனால் ஆப்கான் ஜிஹாதிற்கு பின்னரான காலத்தில் அவ்வாறு சென்ற இளைஞர்கள் சவூதியின் உண்மை நிலையை உணரத்தொடங்கினர். அது வெறுமனவே சவூதியின் தேசியநலனில் மாத்திரம்தான், இன்னும் சொல்லப்போனால் மன்னர் குடும்பத்தின் நலனில் மாத்திரம்தான் அக்கறையுடையது என்ற யாதார்த்தம் அவர்களுக்கு வெளிச்சமானது. மேலும் சவூதி தனது இருப்புக்காக முழுக்க முழுக்க மேற்குலக நலன்களைத் தழுவியே இயங்கி வருகிறது என்ற உண்மை அவர்களுக்கு ஐயமறப் புலப்பட்டது. விளைவு, அவர்கள் சவூதி மன்னராட்சிக்கு எதிராக தமது ஆயுதங்களைத் திருப்பத் தொடங்கி தற்போது வரை அப்போராட்டம் தொடர்ந்து வருகின்றது.

10. சவூதி தன்னகத்தே அதிகளவான கனிய வளங்களையும், இராணுவ வளங்களையும் கொண்டிருந்தாலும் உலகத்தின் அதன் செல்வாக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. அது உலகில் கொண்டுள்ள செல்வாக்கு முஸ்லிம்களின் முக்கிய புனிதஸ்தளங்களான மக்கா-மதீனாவை தனதெல்லைக்குள் வைத்திருக்கிறது என்ற அடையாள ரீதியான செல்வாக்குடன் மட்டுப்படுத்தபட்டது. பிராந்தியத்தைப் பொருத்தவரையில் பலஸ்தீனுக்கான இரு-அரசுத் தீர்வினை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களை நடத்துவதில் முன்னின்றமை, அமெரிக்க இராணுவத்தளங்களை அமைக்க தனது எல்லையைத் திறந்து விட்டமை போன்ற ஒரு சிலவற்றைச் சொல்லலாம். சுருங்கக் கூறின் சவூதின் அரச குடும்பத்தினரிடையே அதிகார சமநிலையைப் பேணிக்கொண்டு, மக்கள் மீதும் அவர்களின் முழுமையான வளங்களின் மீதும் உரிமை கொண்டாடிக்கொண்டு, மக்கா-மதீனாவைக் காட்டி உம்மத்தை தொடாந்து ஏமாற்றலாம் என கனவு கண்டுகொண்டு, தனது சொந்த இருப்புக்காக மேற்குலகின் இஸ்லாத்திற்கு எதிரான போராட்டத்தில் கைகோர்த்துக்கொண்டு இயங்குகின்ற மிகக்குறுகிய மனப்பான்மை கொண்ட அரசே சவூதி அரேபியா.

 

 

 
 

பக்கம் 4 / 6