செய்திப்பார்வை

2018 இன் முதல் 10 பூகோளச் சிக்கல்கள்

செய்திப்பார்வை 05 ஜனவரி 2018

தாருள் அமன் எம்மிடையே இருக்கின்ற அரசியல் அவதானிகளுக்கு 2018 இலே அவர்கள் அதிக கவனம் செலுத்துவதற்கு தகுதியான 10 முக்கிய பூகோளச் சிக்கல்களை சுட்டிக்காட்டுவதற்காக  இந்த ஆக்கத்தை பிரசுரிக்கின்றது.

1. சிரியா - சுமார் அரைத் தசாப்த்தத்தைத் தாண்டியிருக்கின்ற சிரியப் போரிலே சிரிய மக்களின் இறுதி நிலைப்பாட்டில் இத்லிப் களம் முக்கிய பங்காற்றும். அலெப்போவின் வீழ்ச்சி அசாத்தின் அரசை வீழ்த்துவதற்காக போராடிய இஸ்லாமிய புரட்சிப்படையினருக்கும், மக்களுக்கும் பாரிய பின்னடைவாக அமைந்தது எமக்குத்தெரியும். இன்று அசாத்தின் படை ஆயுத ரீதியாக மிகைத்திருக்கின்ற போதிலும் அதற்கு வடக்கு சிரியாவை முழுவதுமாக கைப்பற்றுவதற்கு சில வாரங்கள் தொடக்கம், மாதங்கள்  செல்லலாம். அசாத்தின் படை மிகவும் குறைவடைந்திருப்பதும், வெளியிலிருந்து வந்து போராடுகின்ற படைகளின் உதவியுடனேயே அவனின் படையினரால் யுத்த முனையில் இன்று வரை தாக்குப்படிக்க முடிகிறது என்பதுவே யதார்த்தம். அனேகமாக 2018ஆம் ஆண்டு, களமுனையில் வெல்வது என்பது வேறு, கைப்பற்றப்பட்ட பகுதிகளை தக்க வைத்துக்கொள்வது என்பது வேறு என்பதை அசாத்துக்கு உணர்த்தும்.

அமெரிக்காவை பொருத்தமட்டில் 2018 இல் ஓரளவுக்காவது தமக்கு சாதகமான ஒரு அரசியல் தீர்வை சிரியாவில் எட்டிவிட வேண்டும் என்பது ஒரு முக்கிய இலக்காக இருக்கும். இன்று அரசுக்கு சாதகமாக இருக்கின்ற சூழலைப் பயன்படுத்தி, புரட்சிப்படைகளையும், மக்களையும் இன்றிருக்கின்ற அரசுடன் இணைந்த ஒரு அரசியல் மாற்றத்தை எட்டுவதற்கு அமெரிக்கா நிர்ப்பந்திக்கும். ஆனால் ஒரு இடைக்கால தீர்வைத்தானும் எட்டக்கூடிய வகையில் ஜெனிவா, வியன்னா, ரியாத் அல்லது அஸ்டானா என்பவற்றிலே இடம்பெற்ற பேச்சுக்களில் முக்கியமான புரட்சிக்குழுக்கள் பங்கெடுப்பதை நிராகரித்திருந்தன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

2. பாகிஸ்தான் தேர்தல்கள் - செப்டெம்பர் 2018உடன் தற்போது ஆட்சியிலிருக்கின்ற முஸ்லிம் லீக் அரசாங்கமும், தேசிய சபையும் களைக்கப்பட்டாக வேண்டும். புதிய தேர்தல் இடம்பெற வேண்டும். ஆனால் பாகிஸ்தானின் நிலையற்ற அரசியல் முறைமை காரணமாக அதற்கு முன்னரேயே தேர்தல் இடம்பெறவும் வாய்ப்பிருக்கிறது. பாகிஸ்தானின் வரலாற்றிலேயே இன்றிருக்கின்ற அரசாங்கமே வழங்கப்பட்ட தனது தவணையை முழுமையாக முடித்து அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு அதிகாரத்தை கை மாற்றிய அரசாங்கமாகும். இன்று நவாஸ் ஷரீஃப் பதவி விலகவேண்டிய நிலை ஏற்பட்ட போதிலும் கூட அடுத்த தேர்தல் வரை இன்றிருக்கின்ற அவரது அரசாங்கம் நிலைக்குமானால் அது மீண்டும் அதிகாரத்தை புதிய அரசாங்கத்திற்கு கைமாற்றிய தகுதியைப் பெற்றுக்கொள்ளும்.

பாகிஸ்தானைப் பொருத்தமட்டில் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இலக்குகளை அடைவதற்கான கொள்கைகளை ஆதரிக்கின்ற நிலைப்பாட்டிலேயே முக்கிய கட்சிகள் இரண்டும் இருப்பதால் தேர்தல் முடிவுகள் எந்தவகையிலும் முக்கிய திருப்பங்களைக் கொண்டு வரப்போவதில்லை. ஏனெனில் முழு நாட்டின் முறைமையும் அரசியல் தலைமைகளினதும், அவர்களின் எஜமானர்களினலும் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாகவே நிர்மாணிக்கப்பட்டிருக்கிறதேயொழிய மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் முகமாகவல்ல. இந்தத் தேர்தல்கள் பாகிஸ்தானின் இன்றைய முறைமை மீது மீண்டும் மக்களுக்கு ஒரு குருட்டு நம்பிக்கையை ஏற்படுத்த பயன்படப் போகிறது. அதுதான் தலைமைகளின் தேவையும் கூட. அது தவிர பாகிஸ்தான் வேறு எந்த முக்கிய மதிப்பீட்டின்  அடிப்படையிலும் ஒரு தேசமாக வீழ்ச்சி கண்டே வருகின்றது.

3. சவூதி சிக்கல்கள் - சவூதி முடியாட்சி உத்தியோகவூர்வமான சிக்கலில் தவிக்கிறது. எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட சரிவு இதுவரை காலமும் சவூதி முடி முழுமையாகத் தங்கியிருந்த பொருளாதார மாதிரியின் உண்மைநிலையை தோலுரித்துக் காட்டியுள்ளது. முக்கிய தரப்புக்களை தமது விசுவாசிகளாக தக்க வைத்துக்கொள்வதற்கு 'விசுவாசத்திற்கு காசு - ஆழநெல கழச டழலயடவல" என்ற கேவலமான பேரம்பேசும் மாதிரி,  முடியாட்சியின் கருவூலத்தை நிரப்பி வந்த எண்ணெய் மூலமான வருமானத்திலேயே முழுமையாக தங்கியிருந்தது. ஒரு பரலுக்கு 100 டொலர்களுக்கு மேல் சவூதியின் எண்ணெய் பீப்பாய்கள் விலைபோனால்தான் சவூதியின் பஜ்ஜடை அமூல் செய்ய முடியும். எனவே எண்ணெய் விலைச் சரிவு சவூதி அதிகார கட்டமைப்பை பேணுவதற்கு பெரிய தலையிடியாக அமையும். இந்த சிக்கல் போதாதற்கு முடிக்கான இளவரசன் முஹம்மத் பின் சல்மான் தனது பிடியை பலப்படுத்திக்கொள்வதற்காக தனது குடும்பத்தைச் சேர்ந்த சகாக்களுக்கு எதிராகச் மேற்கொண்ட களையெடுப்பு நடவடிக்கையின் எதிர்விளைவு 2018இலே சவூதி முடிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

4. எகிப்து நெருக்கடி - எகிப்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிச் சரிவதால் அதிபர் அப்துல் பத்தாஹ் அல் சீசியின் கைகளில் தேர்வுகள் மிகச் சொற்பமாகவே உள்ளன. முந்தையவர்களைப்போலவே சீசி அவரது நாட்டின் வருமானத்தின் 60 சதவீதத்தை ஏற்கனவே பெற்ற கடன்களை அடைப்பதிலேயே விரயமாக்கி வருவதால் நாட்டின் பொதுச் சேவைக்கான நிதிக்கு பலத்த தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த உண்மையை மூடி மறைப்பதற்காக பாரிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை அறிவித்து வருகிறார் அவர். இதுவரை சமூக ஒத்துழைப்பையும், வாழ்க்கைத்தரத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு உதவித்தொகைகளை வழங்கி வந்தது எகிப்து. ஆனால் எகிப்தின் நிதி நிலைமை இனி இதை அனுமதிக்காது என்பது தெளிவு. நிகழ்ச்சித்திட்டங்களும்(Super Projects), அரசு கடைப்பிடிக்கும் பிற கொள்கைகளும் வறுமை போன்ற நீண்ட காலப்பிரச்சனையை தீர்வின்றி புரக்கணித்து குறுகிய கால ஆதாயத்தை தேடும் முயற்சியாகவே தொடர்கின்றன. மேலும் சீசியின் ஆட்சியின் கீழ் காணாமற்போனோரின் எண்ணிக்கையும் அதிகளவில் கூடியிருக்கிறது. உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான எகிப்திய ஒருங்கிணைப்பு என்ற நிறுவனம் சீசி ஆட்சியில் அமர்ந்த ஜுலை 2013க்கும் 2016 ஜுலைக்கும் இடையில் பலவந்தமாக காணமற்போனோர் தொடர்பான 2811 நிகழ்வுகளை பதிவு செய்திருக்கின்றது. மாற்று அரசியல் கருத்தைக் கொண்டிருப்பதும், சாதாரண அமைதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதும் ஒருவர் கைது செய்யப்படுவதற்கும், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கபடுவதற்கும் போதுமான சூழல் உருவாகியிருக்கின்றது. எனவே எகிப்திய மக்கள் பாரியளவில் வீதிக்கிறங்கி மீண்டும் போராடுவதற்காக காலம் தூரத்தில் இல்லை எனத் தோன்றுகின்றது.

5. அமெரிக்கா இடைக்கால தேர்தல் - 2016 தேர்தல் முடிவுக்கு பின்னர் டொனால்ட் ட்ரம்ப் முதல்முதலாக மீண்டுமொரு தேர்தலைச் சந்திக்கிறார். நவம்பர் 6, 2018 இல் அமெரிக்காவின் பிரதிநிதிகள் அவைக்கான அனைத்து 435 இடங்களுக்கும், செனட்டின் 100 இடங்களில் 33 தொகுதிகளுக்கும் தேர்தல் இடம்பெறவிருக்கின்றது. 39 மாநில மற்றும் பிராந்திய ஆளுநர்கள் மற்றும் உள்ளுராட்சிக்கான தேர்தல்களும் இடம்பெறவிருக்கின்றன. 2018 இன் இடைக்காலத் தேர்தல் வாக்கெடுப்பு டொனால்ட் ட்ரம்பின் செயல்திறனையும், அரசியல் எதிர்காலத்தையும் நிறுத்துப்பார்க்கின்ற ஒரு தேர்தலாக அமையும்.  இன்று பிரதிநிதிகள் அவையின் 435 இடங்களில் 239 ஐ குடியரசுக்கட்சியும், 194 ஐ ஜனநாயகக் கட்சியும் கொண்டிருக்கின்ற போதிலும் 2018 தேர்தலில் ஜனநாயகக்கட்சிக்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரிகிறது. தற்போது இரண்டு அவைகளையும் குடியரசுக்கட்சி தனது ஆதிக்கத்துக்குள் வைத்திருந்தாலும் பல சிக்கல்களால் ட்ரம்ப் பலகீனப்பட்டு உள்ளார். இரு அவைகளில் ஒன்றை குடியரசுக்கட்சி இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் இன்றைய அமெரிக்க கொள்கைகளையும், குறிப்பாக ட்ரம்பையும் அது மென்மேலும் பலகீனப்படுத்தும்.

6. அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை - 2018இலும், அதற்கு அப்பாலும் அமெரிக்க நிர்வாகம், தீவிரமான வெளிவிவகார சிக்கல்களைச் சந்திக்கும். 2015இலே ஒபாமா நிர்வாகம் வெளியிட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் முடிவுடன் உலகில் அமெரிக்காவின் நிலை தொடர்பான அதன் பார்வை மாற்றம் பெற்று விட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா உலகில் தனது தலைமைத்துவம் தொடர்பாக ஓரளவு உறுதிப்பாட்டுடன் இருந்தது. அந்த மூலாபாயம் "அமெரிக்கா புதிய நூற்றாண்டின் வாய்ப்புகளை கைப்பற்றுவதற்கும் பாதுகாப்பற்ற உலகின் அபாயங்களுக்கு எதிராக தனது நலன்களைப் பாதுகாப்பதற்கும் வலுவானதும் சிறந்ததுமான ஒரு நிலையில் தன்னை வைத்துள்ளது." எனக்கூறியது. இந்த மனோநிலை, இப்போது காலாவதியாகி விட்டது. அதனுடன் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளல் மற்றும் டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப் போன்றவறறில் ஏற்பட்ட மாற்றங்கள் அதனை மேலும் அழுத்தத் தொடங்கியது. டிசம்பர் 18 ம் தேதி, ட்ரம்பின் நிர்வாகமானது அதன் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை வெளியிட்டது, இந்த மூலோபாயம் அமெரிக்காவை முன்னிலைப்படுத்தி(Put America first) அது அதன் போட்டி சக்திகளால் தோற்கடிக்கப்படாதிருக்க மிகவும் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை தாங்கி வந்தது. இந்தக் கருத்து அமெரிக்காவை ஒரு தற்காப்பு மனோநிலைக்கு தள்ளுகின்ற கருத்தாகும்.

ட்ரம்பின் நிர்வாகம் அமெரிக்காவின் பொருளாதார நலன்களை முன்னிலைப்படுத்துமாறு கோரினாலும், அதனைத்தான் முன்னைய நிர்வாகங்களும் செய்தது. ஆனால் வேறுபாடு என்னவென்றால் அமெரிக்காவின் விழுமியங்களும், சித்தாந்தமும் இயல்பாகவே அதனை உய்விக்கும் என்பதில் முன்பைவிட தற்போது பலத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. எனவே போட்டி சக்திகளின் வெற்றியை தடுத்து நிறுத்த பாரிய இராணுவ  மேலாதிக்கமும், பலமும் தேவை என்பதாக அது நம்புகிறது. அமெரிக்காவை காப்பாற்றுவதற்கான ட்ரம்பின் மூலோபாயம் கிட்டத்தட்ட தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள அதன் இராணுவத்தை பயன்படுத்துவது என்பதாகவே தெரிகிறது.

முன்னரைப்போல அதிகளவிலான நண்பர்கள் இல்லாமையினால் இப்பொழுது ஆபத்தான் ஆத்திரமூட்டல்களிலும், சீனாவை நேரடியாக சந்திப்பதற்கு தயாராக முன்னர் சீனாவை முடக்குகின்ற நெருக்கடிகளைக் கொண்டு வருவதற்கான அணுவாயுத போர் பற்றிய சூழுரைகளையும் அமெரிக்கா முன்வைத்து வருவது அதன் பலத்தை விட பலகீனத்தையும், பயத்தை, பதட்டத்தையும் காட்ட ஆரம்பித்துள்ளது.

7. வட கொரியா - வட கொரியா அணுசக்தி சாதனம் ஒன்றை பரிசோதித்ததுடன் அதன் விநியோக திறன்களை வெளிப்படையாக நிரூபித்துள்ளது. 2018 ஆம் ஆண்டிலும் பியோங்யாங் தனது அணுசக்தி திட்டத்தை தொடரும என்பது உறுதியானது. விரைவில் அது அமெரிக்க நிலப்பகுதியை தாக்கும் திறனையும் மென்மேலும் வலுப்படுத்தும். ஒருவகையில் பியோங்யாங் வாஷிங்டனை ஒரு மூலையில் முடக்கியிருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் வடகொரியா முழுமையாக பயன்படுத்தத்தக்க அணு ஆயுதத்தை தயார்நிலைக்கு கொண்டுவருவதில் ஒரு அங்குல இடைவெளியையே எதிர்நோக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதனை தடுத்து நிறுத்துவதற்கான கால அவகாசம் அமெரிக்காவுக்கு அரிகிக்கொண்டே செல்கிறது. வடகொரியா அணுவாயுதங்களை வைத்திருப்பதை எவ்வாறு அமெரிக்கா விரும்பவில்லையோ அதுபோலவே அது வட கொரியா மீதான முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்குவதற்கும் விரும்பவில்லை. ஆனால் முழுமையான ஆக்கிரமிப்பைக் கொண்டேயல்லாமல் வட கொரிய அணுவாயுதக் களைப்பை செய்ய முடியாது என்ற நிலை தொடர்வதால் அமெரிக்காவின் தடுமாற்றத்தை தெளிவாக உணர முடிகிறது.

8. ஈரானின் பேரவா - அலெப்பாவில் கிளர்ச்சிக்குழுக்கள் பாரியளவில் பின்னடைவை கண்டதன் விளைவு இன்று ஈரான் கடுமையான உற்சாகத்தில் இருக்கிறது. பஷார் அல் அஸாதை முட்டுக்கொடுப்பதிலும், ஈராக்கில் மோசூலை மீள கைப்பற்றுவதிலும், ஐஎஸ்ஐஎஸை தோற்கடிப்பதிலும் ஈரானே முக்கிய பங்காற்றியது. ஈரான் அஸாதை பதவியில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா வேண்டிக்கொண்டது. இந்த அமெரிக்க கூட்டுறவு சிரியாவின் எதிர்காலத்தில் தானும் ஒரு முக்கிய பங்கை வகிக்க விரும்பும் ஈரானை வலுப்படுத்துவதற்கும், சிரியாவின் அரசியல் மாற்ற பொறிமுறையில அது ஆதிக்கம் செலுத்துவதற்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்துள்ளது. எனவே 2018இல் நாம் காண ஆவலாகவுள்ள விடயம் என்னவென்றால், ஈரான், அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலை தளர்வடையச் செய்வதற்கு சிரியாவை பயன்படுத்தப்போகிறதா? அல்லது அமெரிக்காவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு எதிர்ப்பை தெரிவிக்காது அதற்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு அது ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் உருவான அரசியல் கட்டமைபபுக்களில் மத்திய வகிபாகத்தை ஆற்றியதைப்போன்று சிரியாவிலும் செயற்படப்போகிறதா? என்பதே ஆகும்.

இவை அனைத்தும் அரை தசாப்த கால யுத்தத்தினால் ஈரானின் உள்நாட்டுப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் இடம்பெறுகின்ற நிலையில், ஏற்கனவே ஈரானிய மதகுருத்துவ ஆட்சியை ஆதரித்த பழமைவாத பிரதேசங்களில் 2017 டிசம்பரின் கடைசி வாரத்திலிருந்து மக்கள் ஆர்பாட்டங்கள் வெடித்துள்ளன. ஈரானுக்குள் ஒரு புயல் காத்திருப்பதுபோல் தெரிகிறது.

9. ஐரோப்பிய ஒன்றியம் - ஐரோப்பா எதிர்நோக்கும் அடிப்படைப்பிரச்சனை அதன் பொருளாதாரம் அல்ல. அது நம்பகத்தன்மை தொடர்பானது. ஐரோப்பாவின் சனத்தொகையில் பெரும்பாலான பங்கை வகிக்கும் நடுத்தர மற்றும் கீழ்மட்ட வகுப்பார்கள் தமது மேற்தட்டு சமூகத்தினர் பொருளாதாரத்தை திறன்பட நிர்வகிப்பதிலும், உருவாகியுள்ள கலாசார பதட்டங்களை புரிந்து கொள்வதிலும் இயலாமையில் இருக்கின்றனர் என்று கருதுகின்றனர். மக்களின் பெரும்பாலானவர்கள் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஒவ்வொருவருக்குமிடையில் சுக்குநூறாகிப்போயுள்ள நம்பகத்தன்மையை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்புவது என்பதில் ஒரு பொதுக்கருத்து உருவாக முடியாதுள்ளது. தேசங்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனங்களை எவ்வாறு முகாமை செய்வது என்பதில் பிளவுபட்டு நிற்கவில்லை. மாறாக அவர்கள் தமது மாறுபட்ட அரசியல், பொருளாதார, கலாசார நலன்களின் அடிப்படையிலேயே பிரிந்து நிற்கின்றார்கள். அனேகமாக 2018இல் ஐரோப்பிய ஒன்றியம் மிகப்பெரிய சோதனையை சந்திக்க நேரிடும்.

10. ரஸ்யா - சீனா கூட்டணி - சீனாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் உருவாகிவரும் ஆழமான ஒத்துழைப்பு அமெரிக்காவிற்கு ஒரு மூலோபாய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் உஷாரடைந்துள்ள வாஷிங்டன் உலகெங்கிலுமுள்ள தனது நட்பு நாடுகளை பலப்படுத்தி தமது உறவுகளை உறுதிப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. குறிப்பாக ரஸ்யாவும், சீனாவும் இன்றுள்ள சர்வதேச ஒழுங்கில் அமெரிக்காவுக்கு இருக்கின்ற பிடியை பலகீனப்படுத்துவதற்கு முயற்சிக்கின்ற நிலையிலும், அமெரிக்க நட்பு நாடுகள் பல வாஷிங்டனுடனான உறவை மட்டுப்படுத்தி வரும் நிலையிலும், உருவாகியிருக்கும் உலகில் பலம்பொருந்திய நாடுகளுக்கு இடையிலான ஸ்தானங்களில் நிலையற்ற தன்மை இனி வரவிருக்கின்ற உலக ஒழுங்கிற்கு வித்திடக்கூடியதாக இருக்கும். 2018இலும் இந்தப்போக்கின் வளர்ச்சியை நாம் தெளிவாகக் காணலாம்.

 

 

டோனால்ட் டரம்பின் பிரகடனம் முஸ்லிம் ஆட்சியாளர்களின் முதுகில் விழுந்த பலத்த அடி!

செய்திப்பார்வை 11 டிசம்பர் 2017

அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் புதன் கிழமையன்று வெள்ளை மாளிகையிலிருந்து அனுப்பிய கடிதத்தின் மூலம்  இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை பிரகடனப்படுத்தியுள்ளதோடு,  அரசு திணைக்களத்தை டெல் அவிவிலிருந்து ஜெரூசலத்திற்கு மாற்றம் செய்ய ஆயத்தமாகுமாறும் கட்டளை பிறப்பித்தது நாம் அறிந்ததே.  இந்த கட்டளையினை பிறப்பித்ததன் மூலம் முஸ்லிம் ஆட்சியாளர்கள் கட்டியிருந்த கோவணமும் உருவப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை விடுத்ததன் பின்னால்,

"உங்களுக்கு பல முன்னாள் ஜனாதிபதிகள் பல முறை  வாக்களித்தும்  கையளிக்க தவறிய ஒன்றை  நான் கொடுகின்றேன்" (arabia.net 06/12/2017) என்று மார்தட்டியிக்கிறான் ட்ரம்ப். இதில் கேவலம் என்னவென்றால் அல்குத்ஸ், அல் அக்ஸா என்று போலிக்கூக்குரலிட்ட சல்மான், அப்பாஸ், அப்துல்லாஹ், அல் சீசி போன்ற அனைவரும் ட்ரம்பின் உரையின் இறுதியில் அவன் இந்த பிரகடனத்தை மேற்கொள்ள இருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தும் கூட ஒன்றுமே செய்ய முடியாத பிணங்களாக இருந்திருக்கின்றார்கள்.

முதல் கிப்லாவான, மிஹ்ராஜின் பூமியான, முஸ்லிம்களின் மூன்று புனித தளங்களில் மூன்றாவது புனித தளத்தினை கொண்டிருக்கின்ற இடமான, (கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்ட) ஜெரூசலத்தினை டொனால்ட் ட்ரம்ப் யூத சியோனிசத்தின் தலைநகராக பிரகடனப்படுத்தியுள்ளான்.  ட்ரம்ப் முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஜெருசலத்திற்கு பெயரளவிலாவது கொடுக்கின்ற பெறுமானம் எதையுமே பொருட்படுத்தாமல் தனது நிலைப்பாட்டை அவர்களுக்கு வெறும் தொலைபேசி அழைப்பினூடாக அறிவித்த பின்னரே உலகுக்கு அறிவித்துள்ளான். அவர்களின் அடிமை வாழ்வை இன்னும் அம்பலப்படுத்தும் விதமாக இது குறித்து நல்லெண்ணத்தையும், மகிழ்ச்சியையும் பரிமாரிக்கொள்வதற்காக தனது உப ஜனாதிபதியான மைக் பென்சை முஸ்லிம் ஆட்சியாளர்களிடம் விரைவில் அனுப்பவிருப்பதாகவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ கொடுங்கோலன் டோனல்ட் ட்ரம்ப் சியோனிச காட்டேறிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறான். நம்பிக்கைகள் வேறுபட்டாலும் இறை நிராகரிப்பு என்று வரும் போது அவை அனைத்தும் ஒரே கொள்கைதான் என்பதை இது மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறது. எனவே அனைத்து நிராகரிப்பாளர்களும் ஒரு அணியில் கூடுவது ஆச்சரியமானதல்ல. எனினும் வேதனையான விடயம் என்னவென்றால் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள் எனக்கூறிக்கொள்ளும் முஸ்லிம் ஆட்சியாளர்கள் எந்தப்பிரச்சினையுமின்றி இறை நிராகரிப்பாள காலணித்துவவாதிகளை அப்படியே பின்பற்றுவதுதான்.

அல்லாஹ்(சுபு) திருமறை குர்ஆனிலே கூறுகின்றான் :

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْيَهُوْدَ وَالنَّصٰرٰۤى اَوْلِيَآءَ ‌ؔۘ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ؕ وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏

முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.(அல்மாயிதா:51)

முஸ்லிம்களே!

அமெரிக்கா, 1948  இல் சியோனிச அலகை அங்கீகரித்து அதற்கு அனைத்து விதமான ஆதரவும் வழங்கிய போதே இந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமெரிக்காவுடன் நட்புறவும் பேணினார்கள். அன்றே இந்த ஆட்சியாளர்கள் கண்ணியமிழந்தார்கள்.  அவமானத்தை சுமந்து கொண்டார்கள்.

யூத அரசு மீதமிருந்த பாலஸ்தீனையும், அல்குத்சையும் 1967 யில் மென்மேலும் ஆக்கிரமித்தது. இவ்வாக்கிரமிப்பின் போதும்  இந்த வேகலம் கெட்ட ஆட்சியாளர்கள் மௌனிகளாக இருந்தார்கள். அமெரிக்கா எவ்வித சங்கடமும் இல்லாமல் யூதர்களுக்கு அரவணைப்புக் கொடுத்தது. அப்போதும் இந்த ஆட்சியாளர்கள் வெறுமனவே அமெரிக்க விசுவாசிகளாகவும் யூத அரசுடனான மத்தியஸ்தர்களாகவுமே  காணப்பட்டார்கள். அன்றே இந்த ஆட்சியாளர்கள் கண்ணியமிழந்தார்கள்  அவமானத்தை சுமந்து கொண்டார்கள்.

 

இராணுவ நீக்கம்(Demilitarization)  செய்யப்பட்டாற்கூட கிழக்கு ஜெரூசலம் தலைநகராக இருக்குமென்றும், அமெரிக்கா யூத அலகுக்கு அழுத்தம் வழங்கி முஸ்லிம்களுக்கு ஏதாவது பெற்றுத்தருமென்றும் மக்களை குழப்பியும், ஏமாற்றியும், பிழையாக வழி நடாத்தியும் வந்தார்கள் இந்த ஆட்சியாளர்கள். உண்மையில் இவர்கள் வேறு யாரையும் ஏமாற்றவில்லை. தூரநோக்கில்லாமல் அவர்களே அவர்களை ஏமாற்றிக்கொண்டார்கள். அன்றே இந்த ஆட்சியாளர்கள் கண்ணியமிழந்தார்கள்  அவமானத்தை சுமந்து கொண்டார்கள்.

முஸ்லிம்களே!

யூதர்களின் கோரப்பிடியிலிருந்து பாலஸ்தீனை எவ்வாறு மீட்கலாம் என்பதிலும்,  அமெரிக்காவையும், அதோடு சேர்ந்த யூத ஆதரவு தேசங்களையும் எவ்வாறு எதிர்கொள்வதென்பதில் அறிவுள்ள இருவர் முரண்பட இயலுமா ?

பாலஸ்தீனின் விடுதலை முஸ்லிம் தேசங்களின் இராணுவங்களை ஒன்று திரட்டி நேரடியாக மோதி, யூத இராச்சியத்தின் முதுகெலும்பை உடைத்துத்தான் பெறப்பட முடியும் என்பதில் எவருக்கும் சந்தேகமிருக்க முடியுமா?

அல்லாஹ்(சுபு))திருமறை குர்ஆனிலே கூறுகின்றான்:

قَاتِلُوْهُمْ يُعَذِّبْهُمُ اللّٰهُ بِاَيْدِيْكُمْ وَيُخْزِهِمْ وَيَنْصُرْكُمْ عَلَيْهِمْ وَيَشْفِ صُدُوْرَ قَوْمٍ مُّؤْمِنِيْنَۙ‏

நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்; உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்.

(அத் தவ்பா: 14)

பாலஸ்தீனின் உண்மை விடுதலை இஸ்லாமிய தீர்வான இஸ்லாமிய அரசின் இராணுவத்தைக்கொண்டு யூத அலகையும், அதன் ஆதரவு அரசுகளையும்  துவம்சம் செய்து மீட்டெடுப்பதல்லவா ? இஸ்லாத்தின் பூமியை ஆக்கிரமித்து அட்டூழியம் புரியும் அயோக்கியர்களை துரத்தியடிப்பது ஞானம் நிறைந்த அல்லாஹ்(சுபு) வின் கட்டளையல்லவா?

ْ وَاَخْرِجُوْهُمْ مِّنْ حَيْثُ اَخْرَجُوْكُمْ‌ ‏

அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்;...

(அல் பகறா :191)

 

முஸ்லிம்களின் நிலத்தை ஆக்கிரமித்து அங்குள்ள மக்களை விரட்டியடித்த  யூதர்களுக்கு துணை போகும் நாடுகள் பற்றி அல்லாஹ்வின் கட்டளை என்ன தெரியுமா?

اِنَّمَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ قَاتَلُوْكُمْ فِى الدِّيْنِ وَاَخْرَجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ وَظَاهَرُوْا عَلٰٓى اِخْرَاجِكُمْ اَنْ تَوَلَّوْهُمْ‌ۚ وَمَنْ يَّتَوَلَّهُمْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏

நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள் (அல் மும்தஹினா:9)

முஸ்லிம் இராணுவத்தினரே!

1948 இல் யூதர்களால்  பாலஸ்தீனத்தின் பாரிய பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டபோது இந்த ஆட்சியாளர்கள் கொண்டிருந்த மௌனமும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க முஸ்லிம் இராணுவத்தை ஒன்று திரட்டாமல் போனதும் அடிப்படையில் மிகப்பெரும் குற்றமாகும். 1967 இல் மேலும் பாலஸ்தீன பூமி அபகரிக்கப்பட்ட போது இராணுவத்தை சுருட்டி வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தையும் மீட்காமல் போனது அதை விட பாரதூரமான குற்றமாகும். அதேபோல யூத ஆதரவு நாடுகளுடன் யுத்தம் செய்யாததும்  எந்தளவிலும்   குறைத்து மதிப்பிட முடியாதவை. மேலும் இந்த ஆட்சியாளர்களுக்கு இருக்கும் எதிரி தேசங்களுடனான விசுவாசமும், நல்லுறவும்  அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், மற்றும் விசுவாசிகளுக்கும் செய்த பெரும் துரோகமாகும் .

தற்போது, ட்ரம்ப் இந்த ஆட்சியாளர்களது நிர்வாணத்தை மறைத்துக்கொண்டிருந்த கடைசி துண்டையும் உருவி விட்டிருக்கிறான். இவர்களது சுயரூபத்தை முஸ்லிம்களுக்கு காண்பித்திருக்கின்றான்.

இந்த கையாலாகாத ஆட்சியாளர்கள் முறையானதும், முழுமையானதுமான ஜிஹாதை மேற்கொண்டு ஆக்கிரமிப்பிலிருந்து பாலஸ்தீனை விடுவிக்காது போய்விடின் இந்த ஆட்சியாளர்களை மீறி முஸ்லிம் இராணுவம் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து புனித பூமியை மீட்டெடுக்கட்டும் . இந்த ஆட்சியாளர்களை அவர்களின் சிம்மாசனங்களிருந்து தூக்கி வீசி, மீளவும் கிலாஃபா ராஷிதாவினை நிறுவட்டும். அதுவே காலணித்துவ காபிர்களுக்கு முஸ்லிம்களை அண்டுவதற்கும் தொடை நடுங்கச் செய்யும்.

அல்லாஹ் (சுபு )திருமறை குரானிலே கூறுகின்றான் :

وَاِنْ يُّقَاتِلُوْكُمْ يُوَلُّوْكُمُ الْاَدْبَارَ

ثُمَّ لَا يُنْصَرُوْنَ

அவர்கள் உங்களிடம் போரிட வந்தாலும், அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டி (ஓடி) விடுவார்கள்(ஆல இம்ரான் :111)

முஸ்லிம் இராணுவத்தினரே ! இதன் பிறகும் ஆட்சியாளர்களின் பொய் புறட்டால் ஏமாற்றப்படவேண்டாம்! அவர்கள் மேற்கொள்ளும் துரோகத்தை பார்த்துக்கொண்டு மௌனித்திருப்பது பெரும் பாவமும் குற்றமுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! இந்த மௌனத்தின் விளைவாக  பாலஸ்தீனத்தை மாத்திரம் நாம் இழக்கப்போவதில்லை. அதையும்  தாண்டி பாரிய விளைவுகளை இது கொண்டு வரும் . புனித பூமியை மீட்க தடையாக இருக்கும் அநியாயக்கார ஆட்சியாளர்களின் கட்டளைக்கு செவி சாய்ப்பதும், அடிபணிவதும் மன்னிக்க முடியாத குற்றமாகும் . இஸ்லாத்தின் பூமியை மீட்டெடுக்க தடையாக இருக்கும் அவர்களுக்கு இவ்வாறான நேரத்தில் கட்டுப்படுதல் உங்களை இவ்வுலகிலும், மறுமையிலும் இழிவுபடுத்தி விடும். மேலிடத்திலிருந்து கட்டளை வந்தால் செயற்படுவோம் என்ற சிந்தனை உங்களுக்கு எதுவித நன்மையையும் அளிக்கப்போவதில்லை. அது மிகவும் தவறான கூற்று நிலைப்பாடுமாகும்.

وَقَالُوْا رَبَّنَاۤ اِنَّاۤ اَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَاَضَلُّوْنَا السَّبِيْلَا‏

"எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்" என்றும் அவர்கள் கூறுவார்கள் (அல் அஹ்ஸாப்:67)

உண்மையில் முட்டாள் ஆட்சியாளர்களுக்கான அடிபணிதல் இம்மையிலும் ,மறுமையிலும் கைசேதத்தையே ஏற்படுத்தும். இவர்கள் பொய்யிலும் துரோகத்திலும் திழைத்திருப்பவர்கள் என்பது உங்களுக்கு தெரியாதா?

கஹ்ப் பின் உஜ்ராவிடம், ரசூலுல்லாஹி (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்கள் பின்னவருமாறு கூறினார்கள் :

"முட்டாள் ஆட்சியாளனிடமிருந்தும் உமக்காக நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்" என்று கூறினார்கள் நபியவர்கள். அதற்கு முட்டாளின் ஆட்சி என்றால் என்ன என்று அவர்கள் வினவ பின்வருமாறு கூறினார்கள் :

"எனக்கு பின்னால் எனது வழிகாட்டல்களையும் ,சுன்னாவையும் பின்பற்றாத ஆட்சியாளர்கள் வருவார்கள் .அவர்களது பொய்களை உறுதி செய்த வண்ணம் அவர்களின் அடக்குமுறையில் யார் அவர்களுக்கு துணை போகின்றார்களோ அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள்  அல்ல! நானும் அவர்களை சார்ந்தவன் அல்ல . சுவர்க்கத்தில் நான் நீரருந்தும் இடத்தில் அவர்கள் என்னை  சந்திக்க மாட்டார்கள் .யாரெல்லாம் அவர்களின் பொய்களை ஏற்று அடக்குமுறையில் அவர்களுக்கு துணை போகவில்லையோ அவர்கள்தான் என்னை சார்ந்தவர்கள். நானும் அவர்களில் ஒருவன். அவர்கள் சுவர்க்கத்தில் நான் நீர் அருந்தும் இடத்தில் என்னை சந்திப்பார்கள் "

இறுதியாக, முஸ்லிம்களே! அநியாயக்கார ஆட்சியாளர்களின் அதிகாரத்தை நீக்க கடுமையாக உழைத்து இவ்வுலகில் இஸ்லாத்தின் அதிகாரத்தை நிறுவி, இம்மையிலும் மறுமையிலும் வெற்றியாளர்களாக மாறுவதற்கு முயற்சிப்தே எம்மை நிச்சயம் உய்விக்கும் என்பதை நீங்கள் ஒரு கணப்பொழுதும் மறந்து விடலாகாது!

وَيَوْمَٮِٕذٍ يَّفْرَحُ الْمُؤْمِنُوْنَ

بِنَصْرِ اللّٰهِ‌ؕ يَنْصُرُ مَنْ يَّشَآءُ ؕ وَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُۙ‏

அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள். அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் - மேலும், (யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன். (அர்ரூம்:6)

 

 
 

ஒட்டு மொத்த பாலஸ்தீனை மீட்டெடுத்தலே அல்குத்ஸுக்கான இஸ்லாமிய தீர்வாகும் !

செய்திப்பார்வை 09 டிசம்பர் 2017

அரபு தேசிய அரசுகளினதும் மற்றும் பாலஸ்தீன குழுக்களினதும் முதலைக் கண்ணீரோ,பலனற்ற ஆர்ப்பாட்டங்களோ அரைநூற்றாண்டுகால துரோகத்தை இல்லாமல் செய்துவிடாது. அல்குத்ஸ் இனிமேல் சியோனிச காட்டு மிராண்டி இராச்சியத்தின் (Zionist entity) தலைநகராக உத்தியோக பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்படவேண்டிய நேரம் இதுதான்  என்று ட்ரம்ப் கூறிய  பிறகுதான் திடீரென அரபு தலைமைகளுக்கு அல்குத்ஸ் புனிதமான பூமியாகத் தெரிகிறது. அதன் புகழ்பாட அவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள். கண்டன நாடகத்தை அரங்கேற்ற தடுமாறுகிறார்கள்.  ரெட் லைன் என்கிறார்கள். யல்லோவ் லைன் என்கிறார்கள்.

முஸ்லிம்களின் முதல் கிப்லாவும் , இறைதூதர் முஹம்மது நபி (ஸல் ) அவர்களின் இரவுப் பயணம் (மிஹ்ராஜ் ) இடம்பெற்ற புனித தளமான மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கொண்டிருக்கும் அல்குத்ஸ் உண்மையிலேயே அருள்பாலளிக்கப்பட்ட புனித பூமியாகும். அந்தவகையில் அல்குத்ஸ் மீது நாங்கள் கொண்டிருக்கும்  நேசம், பற்று எல்லாம் அதனை முற்று முழுதாக சியோனிசக் காபிர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கும் அழைப்பையே வேண்டி நிற்கின்றன. நாம் அதை கிழக்கு, மேற்கு என்றெல்லாம் துண்டாட ஒருபோதுமே அனுமதிக்ககூடாது.

1960களின் நடுப்பகுதியில்  பத்தாஹ் இயக்கம் தோற்றம் பெற்றது, அது ஆக்கிரமிப்பு சக்திகளை எதிர்த்து நின்று  கிழக்கிலிருந்து மேற்கு வரை பாலஸ்தீனின் விடுதலையை உறுதிப்படுத்துவோம்  என்றும்  பிரகடனம் செய்தது.   இந்த கோஷமும் விரைவில் உதிர்ந்து மறைந்து போனதோடு அது கிழக்கே ஆற்றையும் மேற்க்கே கடலையும்  அதற்கிடைப்பட நிலங்களையும் தாரைவார்த்துக்கொடுத்தது.

இதன் யதார்த்தம் பற்றி 1964 இலே பலஸ்தீனத்திலே வெளியிடப்பட்ட ஹிஸ்புத் தஹ்ரீரின் துண்டுப்பிரசுரம் ஒன்று மிகத் தெளிவாகப் பேசியது. காஸாக்கும், மேற்குக்கரைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு பலஸ்தீன தேசத்தை நிறுவுதல் என்ற அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியே பலஸ்தீன (பிஎல்ஓ) விடுதலை இயக்கத்தின் (அல் பத்தாஹ்வும் பங்காளியாக இருந்த) வருகை, பில்ஓ இயக்கம் இறுதியில் சியோனிச அலகை அங்கீகரித்தே தீரும் என அது அன்றே எச்சரித்தது.

அந்தப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் பின்வருமாறு :

“எங்களுக்கு இஸ்லாத்தைக்கொண்டு அருள்புரிந்து ,எங்களது செயற்பாடுகளின் அளவுகோலாக ஹராம் , ஹலாலை ஆக்கிய அல்லாஹ் (சுபு )க்கு எல்லாப்புகழும் ! அல்லாஹ் இப்பூமிக்கு வழிகாட்டலுடனும் , எல்லா தூதுவர்களுக்கும் தலைவராகவும் ,இறுதி நபியாகவும் அனுப்பிவைத்த முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக !

"அஹமத் அல் சுஹைரியால் தலைமைதாங்கப்படும் பாலஸ்தீன “விடுதலை” முகவர் (அமைப்பு) நிறுவப்படுகின்ற  நோக்கமானது மேற்கு கரையை ஜோர்தானிலிருந்து பிரித்தெடுத்து அங்கு அல் குத்சையும், (பைத்துல் லஹமையும்)  உள்ளடக்காத  இன்னுமொரு சுயாதீன அரசை தோற்றுவிப்பதென்பது சந்தேகத்திடமின்றி நிரூபணப்படுத்தப்பட்டுள்ளது. (இது ஜோர்தானின் மன்னன் மேற்கு கரையை ஒப்படைக்கும் முன்பு). இது அல்லாஹ் (சுபு) வின் முஸ்லிம் நிலங்களின் ஒருமித்த தன்மை மற்றும் , ஒற்றுமை தொடர்பான கட்டளைக்கு எதிரான போக்காகும். ஆகவே இந்த விடுதலை முகவரமைப்பின் நோக்கம் ஹராமான, படு குற்றமான ஒரு பெரும்பாவத்தை செய்வதே ஆகும் “

1960, 1970,1980,1990 களிலிருந்து இன்றுவரை பலஸ்தீனப்பிரச்சனைக்கான ஷரீஆவின்  நிலைப்பாடு குறித்து ஹிஸ்புத் தஹ்ரீரின் பிரசுரங்களின் ஊடாக உறுதியாக வெளிக்காண்பிக்கப்பட்டு  வருவதோடு பாலஸ்தீன மண்ணில் நிறுவப்படும் குழுக்களின் நோக்கத்தையும் அவர்கள் எவ்வாறு காலனித்துவ சக்திகளின் முகவர்களாகவும் தொழிற்படுகின்றார்கள் என்ற உண்மை  இந்த  உம்மத்திற்கு தெளிவூட்டப்பட்டு  வருகின்றன.

ஹமாஸ் உருவாக்கம் பெற்ற வேளை அவர்களும் பாலஸ்தீனின் கிழக்கு மற்றும் மேற்கை விடுவிக்கப்போவதாக  தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டார்கள். பிற்பாடு அவர்களும் 1967 (1967 border)களின் நிலப்பிராந்தியத்துக்குள் சியோனிச அரசுடன் இணைந்த  பாலஸ்தீன் அரசு என்ற  சிந்தனையை சரிகண்டு ஏற்றுக்கொண்டார்கள் .

சிலுவையுத்தக்காரர்கள் பாலஸ்தீனை ஆக்கிரமித்து இருநூறு வருடகால இராஜ்ஜியத்தை கொண்டிருந்தார்கள். ஆனால் அன்றைய முஸ்லிம்கள் இன்றுள்ள அரபுத்தலைமகள், பாலஸ்தீன தலைமகள் போன்று அவர்களோடு சமாதன ஒப்பந்தம் கைச்சாத்திடவுமில்லை, ஒரு அங்குல நிலத்தை விட்டுக்கொடுக்க்கவுமில்லை.

முஸ்லிம்கள் இறுதிவரை அவர்களுடன் சண்டையிட்டு தங்களது நிலங்களை விட்டு துரத்தியடித்தார்கள். அஷ்ஷாமில் இருந்த அவர்களது இராஜ்ஜியங்களை துவம்சம் செய்தார்கள் . ஜெருசலத்தையும் பாலஸ்தீனத்தையும்  விடுவித்தார்கள் .

பாலஸ்தீனில் இரண்டு அரசுகளை(Two state solution) அங்கீகரித்தலோ, அல்குத்ஸ் இணைந்திருத்தல் அல்லது பிரிந்திருத்தல் என்பதோ இஸ்லாத்தின் பார்வையில் சியோனிச இராச்சிய இருப்பை ஒருபோதும் நியாயப்படுத்தாது. மேலும்  ஹமாஸ் மற்றும் ஏனைய அரபு முஸ்லிம் அரசுகளின் நிலைப்பாடுகள் இஸ்லாத்தினையோ முஸ்லிம்களையோ பிரதிநிதித்துவம் செய்பவை அல்ல. பாலஸ்தீன் இந்த முஸ்லிம் உம்மத்திற்கு சொந்தமான அல்லாஹ்வால் அருள்பாளிக்கப்பட்ட பூமியாகும். அதனை எவரது  குறுகிய நோக்கங்களுக்காகவும் தாரைவார்க்க முடியாது.

அல்குத்ஸ் என்றால் அது பூரண அல்குத்ஸ் தான். காலநித்துவ ஐக்கிய நாடுகள்கூறும் அதன் கிழக்குப்பகுதி மாத்திரமல்ல. அல்குத்ஸ் உற்பட மொத்த பாலஸ்தீனையும் நினைத்த மாதிரி சொற்பக் கிரயத்திற்கு  விற்பதற்கு  பத்தாவுக்கோ அல்லது ஏனைய பாலஸ்தீன குழுக்களுக்கோ அதிகாரம் கிடையாது. அது அவர்களுக்கு சொந்தமான பூமியல்ல. அல்லது தங்கள் மேற்கு எஜமானர்களை திருப்திப்படுத்த சியோனிஸ்டுக்களுக்கு கைச்சாத்திட்டு கொடுக்க  ஊழல்மிக்க அரபு தேசிய அரசுகளுக்கு சொந்தமான இடமோ அல்ல . பாலஸ்தீன் அல் குர்ஆனிலும் சுன்னாவிலும் குறிப்பிடப்பட்ட புனித பூமி, அது உமர் (ரழி ) அவர்களுக்கு கிருஸ்துவத்தலைமைகளால் அவர்கள்  மீது இஸ்லாமிய நீதியை பிரயோகிக்கும் வண்ணம்  ஒப்படைக்கப்பட்ட  பூமியாகும் .

இது பாலஸ்தீன்!! இதன் விடுதலை அமெரிக்காவுடன் கைகோர்த்து, சியோனிசஸ்டுக்களிடம் பேரம்பேசி  பெறும் இரட்டை அரசு தீர்வில் அல்ல. 1967 அன்று ஆக்கிரமிக்கப்பட்ட சான் அளவு பாலஸ்தீனமாக இருந்தாலும் சரி  1948யில் ஆக்கிரமிக்கபட்ட சான் அளவு பாலஸ்தீன நிலமாக இருந்தாலும் சரி அவை இஸ்லாத்தின் பார்வையில் ஒன்றே. அர்துக்கானும்,அப்பாசும் கூறும் இந்த Redline, 1917லே பிரித்தானியாவின் சதிப்படி   இஸ்லாமிய கிலாபாத்தை அழித்து, யூதக்குடிகளது தேசியமாக மாற்றியபோதே மீறப்பட்டுவிட்டது என்பதே இவர்கள் எம்மிடமிருந்து மறக்கடிக்க நினைக்கின்ற உண்மையாகும்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَخُوْنُوا اللّٰهَ وَالرَّسُوْلَ وَتَخُوْنُوْۤا اَمٰنٰتِكُمْ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ‏

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள்; நீங்கள் அறிந்து கொண்டே, உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்(அல்அன்பால்:27)

 
 

ஆங் சான் சூகியின் கபட வார்த்தைகளுக்கு முஸ்லிம்கள் பலிபோய்விடக்கூடாது!

செய்திப்பார்வை 06 அக்டோபர் 2017

கடந்த செம்டெம்பர் 19ம் திகதி தனது அண்டை நாடான வங்கதேசத்தை நோக்கி நான்கு இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் இடம்பெயர்ந்திருப்பது குறித்து ஆங் சான் சூகி முதல் முதலில் கருத்துத் தெரிவித்திருந்தார். அவரது உரையில் இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்கள் குறித்தும் ஏனைய மக்கள் குறித்தும் தான் பெரும் "அக்கறை-Concern" கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மியன்மாரில் இராணுவ ஜுன்டாக்களின் ஆட்சி நீங்கி ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக போராடி, அதற்காக நோபல் பரிசும் பெற்ற சூகியின் ஆட்சியின் கீழ் ஐக்கிய நாடுகள் சபை கூட 'இனச்சுத்திகரிப்பு - Ethnic Cleansing' என வர்ணிக்கும் அளவுக்கான பாரிய இடம்பெயர்வு நிகழ்ந்துள்ளமை சர்வதேச கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. அந்த நிலையிலேயே இந்த உரையில் அவர் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் முக்கியத்துவம் பெருகின்றன.

மேலும் அவரது உரையில் நடந்தேறியிருக்கின்ற சம்பவங்களுக்காக "மியன்மார் அரசாங்கத்தை குற்றம் சாட்டவோ அல்லது பொறுப்பிலிருந்து விடுவிக்கவோ விருப்பமில்லை." எனவும், ரோஹிங்கியா நெருக்கடி மீதான "சர்வதேச கண்காணிப்பு" குறித்து மியன்மார் பயப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் "கட்டுப்பாட்டைப் பேணுவதற்கும், மேலதிகமான சேதங்களை தவிர்ப்பதற்கும், பொதுமக்கள் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அதற்கான நடத்தை ஒழுங்குகளை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்." எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் "தனது நாடு கடந்த மாதத்தில் வன்முறையிலிருந்து தப்பியோடிய ரோஹிங்கியா மக்களின் நிலையை ஆராய்வதற்கும், மீள்குடியேற்றத்திற்கு தகுதியானவர்கள் மீண்டும் திரும்பி வருவதற்கான சூழலை சீர்தூக்கிப் பார்ப்பதற்கும் "எந்த நேரத்திலும்"தயார்நிலையில் இருந்தது" எனவும் தெரிவித்துள்ளார். (தகவல்: அல்ஜஸீரா)

எமது அவதானமும் கருத்தும்:

ஒரு காலத்தில் மேற்குலகின் போஸ்டர் பெண்ணாகவும், மனித உரிமைகள் சாம்பியனாகவும் பாராட்டப்பட்டு வந்த மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி மியன்மாரில் இடம்பெற்ற ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக காத்திரமான கருத்துக்களை முனவைப்பார் என எதிர்பார்த்தவர்களுக்கு அவரது உரை பாரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசின் முழுமையான அனுசரணையுடன் அதன் பாதுகாப்புப் படையினரால் சில வாரங்களாக தொடர்ந்து இடம்பெற்ற கண்மூடித்தனமான படுகொலைகள், ஈவிரக்கமற்ற கற்பழிப்புக்கள், வர்ணிக்கமுடியாத சித்திரவதைகளினால் சுமார் 50 இற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 400,000 க்கும் அதிகமான ரோஹிங்கிய முஸ்லிம்கள் வங்கதேசத்திற்கு அகதிகளாக தப்பிச்சென்ற மனித அவலம் குறித்து சூகி தெரிவித்த கருத்துகள், அவரின் சுயரூபத்தை இனம் காட்டியுள்ளது. அவரது உரை முழுக்க முழுக்க தனது பாதுகாப்புப்படையினரின் கோரத்தாண்டவத்தை மூடிமறைத்து அவர்களின் இரத்தக்கறை படிந்த கரங்களை கழுவுகின்ற   முயற்சியாகவே இருந்தது என விமர்சகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அவரின் முழுமையான அரை மணிநேர உரையில் 'ரோஹிங்கியா' என்ற வார்த்தையைக்கூட, அவரது அரசால் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு காரணமானவர்கள் என்று தெரிவிக்கப்படும் அரகான் ரோஹிங்கிய மீட்புப்படை (ARSA) என்ற இராணுவக் குழுவின் பெயரைக் குறிப்பிடும்போது மட்டுமே தவிர, மேலதிகமாக ஒரு தடவையேனும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாபெரும் பங்கரவாதிகள் என சூகியின் அரசால் வர்ணிக்கப்படும் அரகான் ரோஹிங்கிய மீட்புப்படை பற்றி மியன்மாரிலிருந்து ஏற்கனவே நாடுகடத்தப்பட்டிருந்த புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலரான டாக்டர் மவுங் ஸார்னி கருத்து இங்கே முக்கியமானது. அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

"மியன்மார் இராணுவம் தனது பாரியளவிலான பாதுகாப்பு சுத்திகரிப்பு நடவடிக்கையை முடுக்கிவிடுவதை நியாயப்படுத்துவதற்கான ஒரு சாட்டாக, கோபாவேசத்துடனுள்ள ரோஹிங்கிய இளைஞர்களைத் தூண்டும் விதத்தில் அவர்களுக்கு எதிராக உண்டாக்கிய "பொறிதான்" பேர்மிய இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுகளுடனும், சோதனைச் சாவடிகளுடன் தொடர்புபட்ட ஒரு பிராந்தியத்தில் எல்லைக் காவலரண்களை உருவாக்கியது." என அவர் மிகத் தெளிவாக் கூறுகிறார்.

மேலும் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீள்குடியேறுவதற்கான செயல்முறைகளை தொடங்குவதற்கு அவர்களின் அடையாளத்தை பரிசீலனை செய்தல் பற்றி சூகி தெரிவித்த கருத்து பற்றி மவுங் சார்னி கூறுகையில்,

"சூகி சர்வதேச அழுத்தத்தைத் ஒத்தி வைப்பதற்கான காலம் தாழ்த்தும் நடவடிக்கைiயாகவே அதனை மேற்கொண்டு வருவதுடன், அதிலே அவர் நேர்மையானவராக இல்லை. ஏனெனில் தம்மை அடையாளப்படுத்தும் பொறிமுறை என்பது ஒவ்வொருவரும் தமது அடையாள அட்டைகளை காட்டுவதன் மூலமாகவே மேற்கொள்ள முடியும். எனினும் 99% ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு அடையாள அட்டை இல்லாத நிலையே உள்ளது. ஏற்கனவே அரசாங்கம் அவர்களது அடையாள அட்டைகளை பறிமுதல் செய்து அவற்றை மதிப்பிழக்கச் செய்து விட்டது." என விளக்கி சூகியின் அரசாங்கத்தின் பித்தலாட்டத்தனங்களை மிகக்கடுமையாக விமர்சிக்கிறார்.

சரி, ரோஹிங்கிய முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்புக்கு சூகியை மாத்திரம் நாம் குற்றம் சாட்ட முடியுமா? அவ்வாறானால் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் முதுகெழும்பற்ற முஸ்லிம் ஆட்சியாளர்களின் நிலை பற்றி என்ன சொல்வது? ஏனைய முஸ்லிம் அல்லாத உலக நாட்டுத் தலைவர்களினதும் நிலை பற்றி என்ன சொல்வது? இந்த இனப்படுகொலையும், இனச்சுத்திகரிப்பும் சத்தமில்லாமல் அரங்கேறிக் கொண்டிருந்த வேளைகளில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலற்ற மந்த நிலை பற்றி என்ன கூறுவது? சம்பந்தமில்லாத சம்வங்களையெல்லாம் தீவிரவாதமாகச் சித்தரிக்கும் சர்வதேச ஊடகங்கள் மியன்மார் விசயத்தில் அடக்கி வாசித்த இரட்டை வேடம் பற்றி என்ன கூறுவது?

ஷார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின்னர் உலக நாட்டுத்தலைவர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர்? 12 பேர் மாத்திரம் கொல்லப்பட்ட அச்சம்பவத்திற்காக பெரும்பெரும் உலகத்தலைகள் எல்லாம் பிரான்சுடன் கைகோர்த்து நின்று, பேரணி சென்று அந்த சம்பவத்தை ஒரு காட்டுமிராண்டித்தனமான சம்பவமாக வர்ணித்து, அதனை வண்மையாகக் கண்டித்து, இத்தகைய தாக்குதல்களுக்கு காரணமான பயங்கரவாதத்தை தாம் பிரான்ஸிய மக்களுடன் தோலோடு தோல் நின்று எதிர்கொள்வோம் என சூலுரைத்ததை நீங்கள் இன்னும் மறந்திருக்க மாட்டீர்கள்!

இரு வளைகுடா யுத்தங்களினாலும், ஐ.நா பாதுகாப்பு சபையின் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக விதிக்கப்பட்ட கடுமையான பொருளாதாரத் தடையினாலும் 5 இலட்சத்திற்கும் அதிகமான உயிர்களை ஏற்கனவே பரிகொடுத்திருந்த ஈராக்கின் மீது, அங்கே மனிதப்பேரழிவுக்கான ஆயுதங்கள் இருப்பதாகக் கதை புணைந்து அமெரிக்க - ஆங்கிலப்படைகள் படையெடுத்ததும், அதனை ஏனையோர்கள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததையும் நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம்!

எனினும் இன்று மியன்மாரின் என்ன நடக்கின்றது? அங்கே பயங்கரவாதத்திற்கு பாடப்புத்தக விளக்கமாக, கொத்து கொத்தான கொலைகளும், சித்திரவதைகளும், கொடூரமான கற்பழிப்புகளும் கண்ணுக்கு முன்னே இடம்பெற்று வருகின்ற போது கூட கிழக்கிலும் மேற்கிலும் உள்ள உலகத்தலைமைகள் முண்டியடித்து முன்வந்து இது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை என்றோ, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கு எதிரான தாக்குதல் என்றோ, பயங்கரவாதத்தின் உச்சகட்டம் என்றோ பறை சாட்டவில்லையே!

இத்தலைவர்கள் எவரும் வீதிக்கு வந்து, ஒன்றாகக் கைகோர்த்து நின்று, பேரணி சென்று இத்தகைய பயங்கரவாத்தை தடுத்து நிறுத்த திடசங்கற்பம் பூணவில்லையே! ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு தத்தமது நாடுகளில் அபயமளிக்க தயார் என்றோ அல்லது மியன்மார் அரசுக்கு எதிராக கூட்டிணைந்து போராடத்தயார் என்றோ சூலுரைக்கவில்லையே!

ஐ.நாவின் கூற்றுப்படியே அங்கே நடப்பது இனச்சுத்திகரிப்பென்றால், அங்கே நடப்பது இனப்படுகொலைகள் என்றால் இந்த நேரத்தில் மாத்திரம் பொருளாதாரத் தடைகளுக்கு அவசியமில்லையா? குறைந்தது மியன்மார் மீது தடை விதிப்பதற்கான ஒரு முன்மொழிவைத்தானும் ஐ.நா ஏன் இன்னும் பிரேரிக்கவில்லை?

இந்த நேரத்தில் மாத்திரம் ஏன் அமெரிக்க-ஆங்கிலப் படைகளின் அல்லது பயங்கரவாத்திற்கு எதிரான சர்வதேச இராணுவக் கூட்டணிகளின் இராணுவத் தலையீடுகள் இடம்பெறவில்லை?

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற எவ்வித வேறுபாடுமின்றி ஆயிரக்கணக்கான அப்பாவி ரோஹிங்கியா முஸ்லிம்கள் பௌத்தப் பயங்கரவாதிகளின் கைகளினால் கண்மூடித்தனமாக படுகொலை செய்யப்பட்ட காட்சிகளை அணுவணுவாக அவதானித்து வந்த சர்வதேச ஊடகங்கள் எவையும், 'பௌத்தமதம்' ஒரு பயங்கரவாத மதம் என்றோ அல்லது 'பௌத்தர்கள்' உலகமகா தீவிரவாதிகள் என்றோ அல்லது பௌத்தர்கள் மனிதகுலத்திற்கும் எதிரான பாரிய அச்சுறுத்தல் என்றோ ஏன் செய்திகள் வெளியிடவில்லை?

முழு உலகினதும் இந்த இரட்டை நிலைப்பாட்டுக்கு அடிப்படைக் காரணம் என்ன என்பதை உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

சரி, எமது அவலங்கள் இன்றுவரை தீர்க்கப்படாமல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து செல்வதற்கான காரணம் என்ன? எமது தலைமைகளும், முழு உம்மத்தும் என்ன செய்து கொண்டிருக்கிறது?

துரதிஷ்டவசமாக முதுகெழும்பற்ற முஸ்லிம் உலகத்தலைமைகள் உம்மத்தின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடம் மண்டியிட்டு காத்திருப்பதே அல்லது காத்திருப்பது போல் நடிப்பதே பாரம்பரியமாக மாறிவிட்டது. எனினும் ஐக்கிய நாடுகள் சபையோ ஒவ்வொரு முறையும் உம்மத்தின் முதுகில் குத்தியதும், துரோகமிழைத்ததுமே வரலாறு என்பதை நன்றாக உணர்ந்திருந்தும் கூட அதனையே உம்மத்தின் முன் அவர்கள் தீர்வாக முன் வைக்கிறார்கள். அல்லாஹ்(சுபு) யூதர்களையும், கிருஸ்தவர்களையும் உங்களது உற்ற தோழர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனக் கண்டிப்பாக கட்டளையிட்டிருந்தும் கூட  அமெரிக்கா, பிரித்தானியா, ரஸ்யா, இஸ்ரேல், சீனா அல்லது இந்தியா போன்ற இஸ்லாத்தின் தீவிர எதிரி நாடுகளையே எமது தலைவர்கள் தமது உற்ற நண்பர்களாகவும், பாதுகாவலர்களாகவும் எடுத்துக்கொண்டுள்ளனர். இந்நிலை தொடரும் வரை எவ்வாறு நாம் எமது அவலங்களிலிருந்து மீள்வது?

எமது தலைமைகளில் இன்னுமொரு சாரார் இருக்கின்றனர். அவர்கள் உலகமகா நடிகர்கள். ஒஸ்கார் விருதுக்கு மேல் ஒரு விருதை இவர்களுக்காக மாத்திரம் தயார்படுத்த வேண்டும். இத்தகைய கட்போர்ட் வீரர்களினதும், கதை மன்னர்களினதும் முதலைக்கண்ணீர் இரசாயனக் குண்டுகளை விட ஆபத்தானவை. உம்மத்தின் ஒரு சிறந்த பகுதியினர் இந்த கானல் நீர் கதாநாயகர்களின் பின்னால் செல்லும் வரையும் உம்மத்திற்கு விமோசம் கிடைக்காது. எனவே அது குறித்தும் உம்மத் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

எனவே ரோஹிங்கியா முஸ்லிம்களுக்காக நீழிக்கண்ணீர் வடிக்கின்ற முஸ்லிம் தலைமைகள் மீதும், மேற்குலகத் தலைவர்களின் வெற்று வாக்குறுதிகள் மீதும், ஐ.நாவின் கபட நாடங்களின் மீதும், குறிப்பாக ஆங் சான் சூகி தனது பாதுகாப்புப்படையினர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக நியமிப்பதாகச் சொல்லும் 'தேசிய விசாரணைக்கொமிஷன் - National enquiry commission' மீதும், ரோஹிங்கிய முஸ்லிம்களை வங்கதேசத்திலிருந்து திருப்பி அழைப்பதற்கான 'அடையாள உறுதிப்படுத்தல் பொறிமுறை 'Verification process' மீதும் நம்பிக்கை வைத்து முட்டாளாகாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மாறாக முஸ்லிம்கள் தமது விழிகளை அகலமாகத் திறந்து வைத்த நிலையில் அல்லாஹ(சுபு)வின் மீதும், அவனது வாக்குறுதியின் மீதும் மாத்திரமே முழுமையாக நம்பிக்கை வைக்க வேண்டும்.

وَمَنْ يَتق الله يجْعَلْ لَهُ مَخْرَجاً

எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.(65:2)

அல்லாஹ்(சுபு)வின் வாக்குறுதிக்கு இணங்க இந்த உம்மத் மிகச் சீக்கிரத்தில் இரண்டாவது கிலாஃபா அர்ராஷிதாவை இந்த உலகில் நிலை நாட்டும். அந்த அல்லாஹ்(சுபு)வின் அரசு அதன் வலிமைமிக்க இராணுவத்தை உலகின் எல்லா மூலைகளுக்கும் அனுப்பி அடக்குமுறைக்குட்பட்ட அனைத்து மனிதர்களையும் விடுவிக்கும். அப்போது ரோஹிங்கியா முஸ்லிம்கள் மாத்திரமல்லாது, சிரியா, ஈராக், உய்குர், செச்னியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, பலஸ்தீன் மற்றும் காஷ்மீர் போன்ற அனைத்து பிராந்திய முஸ்லிம்களும் கொடிய குஃப்பார்களின் கரங்களிலிருந்து அந்த பிராந்தியங்கள் உள்ளடங்களாக மீட்கப்படுவார்கள். அது வரையில் ஆழ்ந்த அரசியல் விழிப்புணர்வுடனும், அசைக்க முடியாத தவக்குலுடனும் நாம் நிலைகுழையாமல் பயணிக்க வேண்டும் என்பதே உம்மத்தின் அதியுயர் கடப்பாடாகும். இன்ஷா அல்லாஹ்!

 
 

துருக்கிய - இஸ்ரேலிய உறவு: மீண்டும் தேன்நிலவு!

செய்திப்பார்வை 16 பிப்ரவரி 2017

இரு நாட்டிலும் நிலவிய குழப்ப நிலையால் துருக்கிக்கும் - இஸ்ரேலுக்கும் இடையில் 2010ஆம் ஆண்டு தொடக்கம் இடைநிறுத்தப்பட்டிருந்த உறவுகள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டிருப்பதுடன் அரசியல் கலந்தாலோசனைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. " பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும், பாதுகாப்பிற்கும் துருக்கிக்கும் - இஸ்ரேலுக்கும் இடையிலான நல்லுறவின் முக்கியத்துவத்தை இரு தரப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளன." என இரு நாட்டுப் பிரதிநிதிகளும் அங்காராவில் இடம்பெற்ற கூட்டங்களில் உடன்பட்டுள்ளனர் என இராஜதத்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி அல் ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

வியாக்யானம்:

கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி அங்காராவிலே துருக்கி மற்றும் இஸ்ரேலினது வெளி விவகார அமைச்சின் செயலகங்களுக்கிடையிலான 15ஆவது சுற்று அரசியல் கலந்தாலோசனைகள் இடம்பெற்றன. அதன் அடிப்படையில் 1987ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வரும் பேச்சுக்கள் சில வருடங்களாக தடைப்பட்டு இருந்தாலும், கடந்த 6 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட இராஜ தந்திர முயற்சிகளின் காரணமாக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. முதலில், மாவி மர்மரா சம்பவத்திற்கு பிறகு துருக்கிக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான உறவுகள் நிறுத்தப்பட்டன என்ற பிரச்சாரத்தை நேர்மையான அரசியல் அவதானிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் அக்காலப்பிரிவிலும் சாதனை படைத்திருந்தன என்பதையும் மறுக்கவும் மாட்டார்கள். எனவே உறவுகள் தற்போதுதான் உயிர்ப்படைந்திருக்கி;ன்ற என்ற தோற்றப்பாடு உண்மையில் போலியானதாகம்.

" இஸ்ரேலுடனான துருக்கியின் உறவை இயல்புப்படுத்துவது பிராந்திய நலனுக்கு உகந்ததாகும்" என்ற ஜனாதிபதி அர்துகானின் அறிவிப்பைத் தொடர்ந்து இஸ்ரேலும் அந்தக் கருத்துடன் தானும் ஒத்துப்போவதாகத் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து ஏகேபி கட்சியின் பேச்சாளர் ஒமர் ச்சேலிக் "இஸ்ரேலிய அரசும், அதன் மக்களும் துருக்கியின் நண்பர்கள்" என வெட்கம் கெட்டுப்போய் கூறியிருந்தார்.

எனினும் துருக்கிய மக்கள் இந்த வஞ்சக ஆட்சியாளர்களின் கூற்றுக்களிலிருந்து மிகவும் தூரமானவர்கள் என்பதால் இந்தக் கூற்றுக்கள் துருக்கிக்குள் சர்ச்சையை கிளப்பியும் விட்டிருந்தன. உண்மையில் "இஸ்ரேல்" என்ற இந்த யூத சியோனிச அலகு தீவிரவாத ஆக்கிரமிப்பு அரசாகும். 1967 அல்லது 1948 ஆம் ஆண்டு எல்லைக்கள் எனக் கூறப்படுகின்ற எதுவும் சட்ட பூர்வமானவையோ, நியாய பூர்வமானவையோ அல்ல. மேலும் கொடூரமான இந்த சியோனிச அலகு ஒருபோதும் முஸ்லிம்களின் நண்பனாய் இருந்ததுமில்லை. இருக்கப்போவதுமில்லை. மாறாக இந்த சியோனிச அரசு மத்திய கிழக்கையும், முஸ்லிம் உலகையும் பீடித்திருக்கும் இழிவான புற்றாகும். அது வேருடன் பிடிங்கப்பட்டு வரலாற்றின் புதை குழிக்குள் மீண்டும் துளிர்விடாத வகையில் புதைக்கப்பட வேண்டியது என்பதே உண்மையாகும்.

அல்லாஹ்(சுபு) தனது திருமறையில் கூறுகிறான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَتَّخِذُواْ الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاء بَعْضُهُمْ أَوْلِيَاء بَعْضٍ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللّهَ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ

முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான். (5:51)

ஜுன் 2016 இல் துருக்கிக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கருத்தொருமிப்பு ஏற்பட்டு ஆறு மாதங்களுக்கு அவை அமூல்படுத்தப்பட்டது. இந்த காலப்பிரிவில் மாபி மர்மரா சர்ச்சையும் அர்துகானின் அரசியல் அழுத்தங்களினால் தளர்த்தப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையில் இயல்பு நிலையை தோற்றுவிப்பதில் நெருடலாக இருந்த ஒரேயொரு தடையும் நீக்கப்பட்டது. சியோனிச அரசு 20 மில்லியன் டொர்களை மாபி மர்மரா சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடுபத்திற்கு வழங்கிய போதும் அதனை அந்தக் கண்ணியமிக்க குடும்பங்கள் ஏற்க மறுத்ததால் அந்த நிதி தற்போது துருக்கிய அரச வங்கியில் தேங்கிக் கிடக்கிறது.

தற்போது நடந்து முடிந்திருக்கும் கலந்தாலோசனையில் சில முக்கிய தலைப்புக்கள் பேசப்பட்டிருந்தன. "விசேடமாக சக்தி வளங்கள், பொருளாதாரம், கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான விடயங்களில் கூட்டுறவு குறித்தும், அரசியல் கலந்தாலோசனைகளில் குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடல் பிராந்தியங்களில் களநிலை வளர்ச்சி தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன." மேலும் "பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும், பாதுகாப்பிற்கும் துருக்கிக்கும் - இஸ்ரேலுக்கும் இடையிலான நல்லுறவின் முக்கியத்துவத்தை இரு தரப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளன."

இந்த கலந்தாலோசனை இடம்பெற்ற மறுதினம் துருக்கிய வெளி விவகார அமைச்சு "ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனிய பிரதேசங்களில் மேலதிகமாக 3000 சட்ட விரோத குடியேற்றங்களை அமைப்பதற்கான அனுமதியை இஸ்ரேலிய அரசாங்கம் வழங்கியிருப்பதற்கு நாம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என அறிக்கை வெளியிட்டிருந்தது.

எமது புனித பூமியை ஆக்கிரமித்து, எமது உம்மத்தின் மண்டை ஓடுகளின் மீது அமைக்கப்பட்டுள்ள இழிந்த சியோனிச அரசுடன் அமர்ந்து பேசுவது என்பதே மூடத்தனமான ஒரு காரியமாக இருக்கின்ற போது அந்த இழிந்தவர்களுடன் நாம் நெருக்கமாக வைத்திருக்கும் உறவுதான் பிராத்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு அவசியமானது எனக் கூறுவது முஸ்லிம் உம்மத்திற்கு செய்கின்ற மாபெரும் துரோகமாகும்.

மேலும் ஒரு பக்கத்தில் மிக நெருக்கமான அரசியல், பொருளாதார உறவுகளை வைத்துக்கொண்டு மறு பக்கத்தில் சட்டவிரோத குடியேற்றத்திற்கு கண்டனம் தெரிவிப்பது என்பது கேலிக்கிடமானதாகும். மேலும் சியோசின அரசு என்பதற்கே எவ்வித சட்ட அங்கீகாரமும் இல்லாதபோது அவர்களின் ஒரு செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்ற சாதாரண தர்க்கம் கூட புரியாதது போல நடிப்பவர்கள் இவர்கள்.

எனவே இந்த 15ஆவது கலந்தாலோசனைக் கூட்டமும் மென்மேலும் இஸ்ரேலுக்கு பலத்தையும், இருப்பையும் உறுதிப்படுத்துவதுடன், துருக்கி, பலஸ்தீன் உட்பட முழுப்பிராந்தியத்தையும் பீதியில் ஆழ்த்தும் என்பதே யதார்த்தமாகும்.

 

 
 

பக்கம் 1 / 6