காஸா படுகொலைகளை எவ்வாறு தடுத்து நிறுத்துவது?

ஆய்வு 05 ஆகஸ்ட் 2014

காஸாவில் கொத்துக்கொத்தாக முஸ்லிம்கள் கொன்றொழிக்கப்படுவதை முழு உலகும் வேடிக்கை பார்த்து வருகிறது.

சியோனிச ஆக்கிரமிப்பாளர்களின் இந்த நரவேட்டைக்கு சர்வதேச வல்லரசுகள் அமோக உத்துழைப்பு வழங்குவதும், பக்கச்சார்பான ஊடக யூத்தம் முடுக்கிவிடப்பட்டுள்ளதும் உலக மக்களை இன்னும் கையறு நிலைக்கு தள்ளியூள்ளன.

 

 

உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் தாம் ஒரு உம்மத்தின் அங்கம் என்பதை உளத்தூய்மையூடனும், அளப்பரிய அன்புடனும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். காஸா மக்களுக்கு பெருந்தொகையான சதக்காக்களை வாரி வாரி இரைக்கிறார்கள். இஸ்ரேலிய பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இஸ்ரேலிய பொருட்களை பகீஸ்கரிக்கும் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். காஸா முஸ்லிம்களுக்காக யாரேனும் உதவ மாட்டார்களா என நாற்திசைகளிலும் கூக்குரல் விடுக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபைக்கு முறையிடுகிறார்கள், மேற்குலக அரசுகளை கூட அழுத்தம் கொடுத்து உதவிக்கு வரும்படி மன்றாடி நிற்கிறார்கள். எனினும் இஸ்ரேலிய தாக்குதல்கள் ஈவிரக்கமின்றி மேன்மேலும் கோரமடைந்து வருவதையூம், அதற்கு தொடர்ந்தும் மேற்குலகின் ஆதரவூக்கரம் நீட்டப்படுவதையூம் தவிர வேறு எதையூம் எம்மால் காண முடியவில்லை.

 

இந்நிலையில் எவ்வாறு காஸாப் படுகொலைகளை உண்மையில் தடுத்து நிறுத்தலாம் என்பது குறித்து நாம் ஆராய்வதென்றால் சில முக்கிய விடயங்களை ஆழமாக புரிந்து கொள்ளவேண்டும்.

 

1. காஸாவூக்கெதிராக இஸ்ரேல் தொடுத்திருக்கும் பிரமாண்டான இராணுவ முன்னெடுப்பை இன்னுமொரு இராணுவ முன்னெடுப்பால் மாத்திரமே முகம்கொடுக்க முடியூம்.

 

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்திற்குளிருந்து போராடி வருகின்ற ஹமாஸ் போன்ற போராட்டக்குழுக்கள் அர்ப்பணிப்புடனும், உண்மையான விசுவாசத்துடன் போராடினாலும் கூட அப்போராட்டங்களால் பலஸ்தீனத்தை முழுமையாக ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கவோ, அல்லது இத்தகைய இராணுவ அத்துமீறல்களை முற்றாக தடுத்து நிறுத்தவோ முடியாது என்ற யதார்த்தத்தை நாம் உணர வேண்டும்.

 

பிரமாண்டமான இராணுவங்களை வளர்த்து போசித்து அவற்றிற்கு நவீன ஆயூத அணிகளங்களால் வருடா வருடம் அலங்காரித்து வருகின்ற எமது முஸ்லிம் அரசுகளின் இராணுவங்கள் அவற்றின் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு இடக்கின்றன. காஸாவின் எல்லையிலுள்ள எகிப்த்திய இராணுவம் மட்டும் சுமார் 4.5 இலட்சம் பயிற்றப்பட்ட படைவீரர்களையூம், 220 இற்கும் மேற்பட்ட எப்16 பைய்டர் ஜெட்களையூம் கொண்டுள்ளது. இதைப்போலவே துருக்கி, பாகிஸ்தான் மற்றும் ஏனைய முஸ்லிம் நாடுகளிடம் கணிசமான இராணுவ பலம் எத்தகைய பிரயோசனமுமின்றி முடக்கபட்டு கிடப்பதை நாம் காண்கிறோம். இந்த நாடுகளிலெல்லாம் வாழும் முஸ்லிம்கள் காஸா மக்களின் படுகொலைகளை தடுத்து நிறுத்துமாறு அவலக்குரல் எழுப்பும் நிலையிலும் கூட இந்த  முஸ்லிம் அரசுகள் இஸ்ரேலிய சியோனிச அரசின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தாது தாக்குதல்களுக்கு தொடர்ந்தும் பச்சைக்கொடி காட்டி வருகின்றன.

 

2. முஸ்லிம் உலகில் கணிசமான அரசியல், இராணுவ, பொருளாதார பலம் புதையூண்டு கிடக்கிறது. இத்தகைய பலங்கள் இன்றுவரை முஸ்லிம் உம்மத்தின் நல் வாழ்விற்காக பயன்படுத்தப்படவில்லை. உதாரணமாக துருக்கி, எகிப்த்து மற்றும் ஜோர்தான் போன்ற நாடுகள் இஸ்ரெலுடன் காணப்படும் இராணுவ, இராஜதந்திர, வர்த்தக உடன்படிக்கைகளை ரத்துச் செய்வதினூடாகவோ, அல்லது சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகள் தமது எண்ணெய் வளத்தை ஆயூதமாக பயன்படுத்துவதினூடாகவோ இஸ்ரேலை பெட்டிப்பாம்பாக அடக்க முடியூம்.

 

கேவலம், ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது?

 

எகிப்த்தில் சிஸியின் அரசு: பிராந்தியத்தில் ஆகப்பெரிய இராணுவத்தையூம், காஸாவூடன் நேரடியாக எல்லையையூம் பகிர்ந்து கொள்ளும் எகிப்த்திய அரசு காஸாவூக்கும், எகிப்த்துக்கும் இடையிலுள்ள ரபா கடவையை இழுத்து மூடி அதனூடாக உடனடி மனிதாபிமான உதவிகள் நுழைவதையூம் தடுத்து, இஸ்ரேலிய தாக்குதல்களின் கோரம் தாங்காமல் காஸாவிலிருந்து தப்பிப்பிழைக்கும் மக்களையூம் எகிப்த்துக்குள் நுழைய விடாமல் தடுக்கும் வேலையை மாத்திரம் கன கச்சிதமாக செய்து வருகிறது. இது போதாதற்கு எகிப்த்திய அரசின் சில ஊடகங்கள் நெதன்யாகுவின் படுகொலைகளையை நியாயப்படுத்தும் பாத்திரத்தையூம் செய்து வருகின்றன.

 

அர்துகானின் துருக்கிய அரசு: அவ்வப்போது பிடிப்பேன், கிழிப்பேன் என்று சவால் அறிக்கைகளை விடுவதைத்தவிர எத்தகைய ஆண்மைத்தனமான நடவடிக்கைகளையூம் அது செய்யவில்லை. மாறாக வர்த்தக, விவசாய, கல்வி மற்றும் இராணுவ துறைகளில் சுமார் 80 இற்கு மேற்பட்ட ஓத்துழைப்பு ஒப்பந்தங்களை இன்றுவரை துருக்கி இஸ்ரேலுடன் பேணி வருகின்றது. துருக்கி மாத்திரம் இஸ்ரேலுடன் இராஜ தந்திர உறவூகளை முற்றாக ரத்துச் செய்யூமானால் அது இஸ்ரேலை மூச்சுத்திணர வைத்துவிடும். எனினும் துருக்கி அதனை அன்றும் செய்யவில்லை. இன்றும் செய்ய முன்வரவில்லை.

 

சவூதி அரேபியா மற்றும் வளைகுடா அரசுகள்: பில்லியன் கணக்கான எண்ணெய்ப் பணத்தில் இராணுவத்தளபாடங்களை மேற்குலகிடம் போட்டிபோட்டு கொள்வனவூ செய்யூம் இந்நாடுகள் அவற்றை முஸ்லிம்களையூம், இஸ்லாத்தையூம் பாதுகாப்பதற்கு பயன்படுத்தாது கண்காட்சிப்பொருட்களாக மாத்திரம் பயன்படுத்துகிறார்கள். இந்நாடுகளில் குவிந்து கிடக்கும் செல்வங்களின் மிகச்சொற்ப பகுதி கூட காஸாவின் அனைத்து மனிதாபிமான தேவைகளையூம் நிறைவூ செய்ய போதுமானதாக இருக்கும் நிலையில், இன்றும் அவற்றை பொதுமக்கள் தரும் தர்மங்களினூடாகவே நிறைவூ செய்ய வேண்டிய நிலை தொடர்கின்றது. சுருக்கமாகச்சொல்லப்போனால் இவர்கள் மனம் வைத்தார்களானால் போராட்டத்தின் திசையை தலைகீழாகப் புரட்டி விடலாம்.

 

மேலும் சொல்லப்போனால் ஜோர்தான் இன்றும் இஸ்ரேலுடன் 20க்கும் மேற்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை பேணி வருகின்றது. ஈரானைப்பற்றி விவாதிப்பதே விரயமானது. ஏனெனில் அதற்கு சிரியாவில் மக்களை கொல்லும் பஷாரின் கொலை இயந்திரத்திற்கு எண்ணெய் ஊற்றவே நேரமிருக்கிறது. பாகிஸ்தானோ உலகில் மிகவூம் பலமிக்க முஸ்லிம் இராணுவத்தை வைத்திருந்தாலும் அது அதன் எல்லையோரத்தில் வாழும் ஏழை முஸ்லிம்களை கொல்வதற்கு மாத்திரமே தனது பலத்தை பெருமையோடு பிரயோகிக்கிறது.

 

3. தூய்மையான இஸ்லாமிய தலைமைத்துவத்தின் உடனடித்தேவை உணரப்பட வேண்டும்.

 

முஸ்லிம் உம்மத்தின் இராணுவ, அரசியல், பொருளாதார பலத்தை ஒரு மையத்தில் குவிப்பதற்கு தூய்மையான இஸ்லாமிய தலைமைத்துவம் ஒன்றினாலேயே முடியூம். அதற்கு பிராந்தியத்தில் இஸ்ரேலின் உண்மையான பாதுகாவலர்களாக விளங்கும் நயவஞ்சகத்தனமான, கொடுங்கோல் முஸ்லிம் அரசுகள் வீழ்த்தப்பட்டு அதற்கு பகரமாக கிலாஃபா அர் ராஸிதா மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும்.

 

4. அனைத்து முஸ்லிம்களும் ஒரு உம்மத்தாக எழுந்து நிற்க வேண்டும்.

 

நாம் காஸா முஸ்லிம்கள் சார்பாக உறுதியாக ஓர் அணியாக எழுந்து நிற்பதுடன், அடக்கப்பட்ட அவர்களின் குரலாக உலகெங்கும் ஒலிக்க வேண்டும். அவர்களுக்காக குரல் கொடுப்பதும், உதவிக்கரம் நீட்டுவதும், அவர்களுக்கு சிறிதளவேனும் தூரோகமிழைக்காமல் செயற்படுவதும் எமக்கு இஸ்லாம் வலியூறுத்தும் மார்க்கக்கடமையாகும்;. “ ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரராவார். அவர் மற்ற முஸ்லிமுக்கு துரோகமிழைக்க மாட்டார், கைவிட மாட்டார்."

 

தேசிய எல்லைகளைக்கடந்து முஸ்லிம்கள் எங்கெல்லாம் அல்லற்படுகிறார்களோ அவர்களின் உதவிக்கு முன்வருகின்றவர்களை தீவிரவாதிகளாக, அடிப்படைவாதிகளாக சித்தரிக்கும் அரச மற்றும் ஊடக முன்னெடுப்புக்களை பல நாடுகளில் நாம் காண்கின்றோம். குறிப்பாக இஸ்ரேல் சியோனிச அரசுக்கு எதிராக செயற்படும்போது யூத எதிர்ப்பாளர்களாக முஸ்லிம்களை சித்தரிக்கும் கயவர்களையூம் நாம் காண்கிறோம். சவால்கள் பாரியதாக இருந்தாலும் அவற்றையூம் தாண்டி நாம் எமது இஸ்லாமிய உறவூகளுக்காக தொடர்ந்தும் போராடவேண்டும். சதகாக்களைச் செய்ய வேண்டும். பொது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டும். பலஸ்தீனத்தில் இடம்பெறும் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, பச்சை புளுகுகளை பரப்பிவரும் ஊடகங்களின் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். உண்மையில் காஸாவின் நிலை என்ன, அங்கு தொடரும் கொலைக்களத்தின் உண்மை நிலவரம் என்ன என்பதை மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும். அதேநேரத்தில் நாம் செய்கின்ற இத்தகைய நல்ல செயற்பாடுகள் காஸாவில் இடம்பெறும் மனிதப்படுகொலைகளையோ அல்லது தாக்குதல்களையோ தடுத்து நிறுத்தும் ஆளுமையை கொண்டவையல்ல என்பதையூம் நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். எனவே எமது இந்தச்செயற்பாடுகள் பலஸ்தீனத்திற்கான நிரந்தரத்தீர்வினை நோக்கிய போராட்டத்துடன் சமாந்தரமாக செய்யப்படும்போதே நாம் செய்யூம் உதவிகள் அர்த்தமுள்ளதாக அமையூம்.

 

5. அல்லாஹ்(சுபு) எங்கிருந்து உதவியைப்பெறக்கூடாது என்று எம்மை கட்டளையிட்டிருக்கிறானோ அங்கிருந்து நாம் எந்நிலையிலும் உதவி பெறக்கூடாது.

 

ஒரு புறம் நாம் அல்லாஹ்(சுபு) உதவி எப்போது வரும் என சுஜுதில் விழுந்து அழுது மன்றாடுகின்றோம். மறுபுறம் இஸ்லாத்தின் தெளிவான எதிரிகளின் சந்நிதானத்தில் கையேந்தி நிற்கின்றோம். யார் முதலாம் உலகப்போரில் பலஸ்தீனத்தை ஆக்கிரமித்தார்களோ, யார் அதனை சியோனிச இயக்கத்திற்கு தாரைவார்த்தார்களோ அத்தகைய பிரித்தானியாவிடம் உதவி தேடுவதாக இருக்கலாம், அல்லது வேறெந்தவொரு நாடும் செய்யாத இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை இஸ்ரேலுக்கு தொடர்ந்தும் செய்துவரும் அமரிக்க அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக இருக்கலாம் அல்லது பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக்கி, அங்கு தொடரும் படுகொலைகளையூம் அட்டூழியங்களையூம் நிறுவனமயப்படுத்திய ஐ.நா சபையிடம் கோரிக்கை விடுவதாக இருக்கலாம்…இவை அனைத்து முஸ்லிம் உம்மத்தை முட்டாளாக்க மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் என்பதை நாம் ஆழமாக உணர வேண்டும். இவை பலஸ்தீனப் பிரச்சனையை மென்மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் நிலையையே தோற்றுவிக்கும் என்பதிலும், அல்லாஹ்(சுபு) தூய உதவி எம்மை வந்தடைய பெரும் தடைக்கல்லாகவே அமையூம் என்பதிலும் எமக்கு சந்தேகமிருக்கலாகாது.

 

மேற்குறிப்பிட்ட யதார்த்தங்களை புரிந்து கொண்ட நிலையில் சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள் எவ்வாறு காஸா முஸ்லிம்களுக்கு உதவ முடியூம் என்பதை சுருக்கமாகக் கூறினால்…

 

உண்மையில் காஸாவின் களநிலையை மாற்றியமைப்பதென்றால், பலஸ்தீனத்தை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுப்பதென்றால் அது பலஸ்தீனத்தை அயல்நாடாகக் கொண்ட வலிமைமிக்க முஸ்லிம் நாடுகளால் மாத்திரமே முடியூம். இந்த நிதர்சன தீர்வூக்காக இயங்குவதற்கு எம்மைப்போன்று ஏனைய நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் அழுத்தங்களை கொடுப்பவர்களாக, அதற்காக பரப்புரை செய்பவர்களாக மாற வேண்டும். இவ்வாறு முஸ்லிம் உலகிலுள்ள இராணுவத்தை ஒன்று திரட்டுவதாக இருந்தாலும் சரி, அரசியல் பொருளாதார வலிமையை ஒன்று குவிப்பதாக இருந்தாலும் சரி, அது தூய்மையான இஸ்லாமிய தலைமைத்துவமான கிலாஃபாவால் மாத்திரமே சாத்தியப்படும் என்ற செய்தியை நாம் பிரச்சாரப்படுத்த வேண்டும்.

 

முஸ்லிம் அறபுலகின் ஆட்சியாளர்கள் சியோனிச இஸ்ரேலுடன் இணைந்து முஸ்லிம் உம்மத்திற்கு செய்யூம் கொடுமையையூம், துரோகத்தையூம் மக்கள் மன்றத்தில் வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும்.

 

எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டபோதிலும் எமது உம்மத்தின் அங்கமான காஸா முஸ்லிம்களின் நியாயமான போராட்டத்திற்கு குரல் கொடுப்பவர்களாக நாம் மாற வேண்டும்.

 

காஸாவில் இடம்பெற்று வருகின்ற கொடூரங்கள் குறித்த விழிப்புணர்வை எமக்கு நெருக்கமானவர்கள் தொடக்கம் சமூகத்தின் அனைத்து மட்டங்களுக்கும் நாம் காவிச்செல்ல வேண்டும்.

 

இஸ்ரேலினதும், அதன் நெருங்கிய ஆதரவாளர்களான மேற்குலகினதும் முகத்திரையைக் கிழிக்கும் நடவடிக்கைகளிலும், அவர்களின் தீய திட்டங்களை அம்பலப்படுத்தும் செயற்பாடுகளிலும் நாம் ஈடுபட வேண்டும்.

 

வெளிப்படையான, மற்றும் மறைமுகமான இஸ்லாத்தின் எதிரிகளிடமிருந்து உதவி கோரும் செயல்களில் நாமும் ஈடுபடாது, அறியாமையால் அவற்றில் ஈடுபட நினைக்கும் ஏனைய முஸ்லிம்களும் ஈடுபடாத விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

 

நாம் அல்லாஹ்(சுபு) உதவியில் மாத்திரமே முழுமையாக நம்பிக்கை வைக்க வேண்டும். எமது பள்ளிவாசல்களிலே குத்பா பிரசங்கங்களினூடாகவூம், கலந்துரையாடல்களினூடாகவூம் காஸாவிற்கான சரியான தீர்வை உலமாக்கள் பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் உற்சாகப்படுத்த வேண்டும். தமது பிரார்த்தனைகளில் காஸாவின் மீட்சிக்கும், முழு அஸ்ஸாம் நிலப்பரப்பின் மீட்சிக்கும் தொடர்ந்தும் அல்லாஹ்(சுபு) பிராத்திப்பதற்கு தூண்டவேண்டும்.

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ

 

மேலும் உமது ‘ரப்’ கூறுகிறான், என்னை அழையூங்கள்- நான் பதிலளிக்கக் கூடியவனாக இருக்கின்றேன்.(40:60)

 

தொடர்புடைய பிரசுரங்கள் :

» மறுமலர்ச்சிக்காக போராடுவோம்!

  ஒரு முஸ்லிம் எவ்வாறு மறுமலர்ச்சிக்காக போராடுவது? முதலில் அவர் இஸ்லாமிய சித்தாந்தத்தை...

» முதலாளித்துவத்தின் தலைவிதி

    ரியல்எஸ்டேட் விவகாரத்தில் வெடித்துக் கிளம்பிய பொருளாதார நெருக்கடி அமெரிக்காவின்...

» கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும்

    கிலாஃபா முற்றாக அழிக்கப்பட்டு 85 வருடங்களையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் இன்றைய...

உங்கள் கருத்தை இணைக்க


Security code
Refresh